Share:
Notifications
Clear all

காதல் சகி 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 198
Thread starter  

 

25

 

வித்யாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். விரிந்த விழியும்.. பிளந்த வாயும் அப்படியே நிலைத்து இருக்க.. ஜெர்ரி சென்ற பின்னும் மூடிய வாயில் கதவையும் தாமரையின் பெட் ரூம் கதவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

 

இதுவரை தாமரைச்செல்வியை அறிந்த வகையில் ஆண்களிடம் அனாவசிய பேச்சு கூட இருக்காது. அவளுக்கு கல்யாணம் முடிவாகியுள்ளது என்று அவள் தவறவிட்ட வார்த்தைகளில் இருந்து தான் அறிந்து கொண்டாள் வித்யா. அப்படி இருக்க ஜெர்ரி கூட எப்படி இப்படி?

 

'ஜஸ்ட் லைக் தட்!' என்று வாழ்க்கையை இலகுவாக எடுத்துப் போகும் பெண்ணல்ல தாமரை! பழகுவதில் அளவு வைத்திருக்கும் அவள் இந்த மாதிரி பழக்கத்தை எல்லாம் கனவில் கூட செய்ய மாட்டாள். ஆனாலும் என் கண்கள் பார்த்ததே.. இரண்டு கண்களும் வெகு ஜோராக பார்த்ததே.. ஜெர்ரி தாமரை அறையிலிருந்து வெளிவந்ததை..

 

 

அப்போதுதான் வேலை முடித்து வந்த வித்யாவுக்கு இருந்த சோர்வில் ஒருவேளை நாம் கனவு காண்கிறோம் என்று மீண்டும் குழப்பமாக இருந்தது. இதற்கும் தாமரையின் அறைக்கு சென்று பார்ப்போமா? என்று இரண்டு எட்டுகள் எடுத்து வைத்தவள் கதவை நெருங்கிய தருணம் இதெல்லாம் தப்பு.. அதைவிட அவள் எந்த கோலத்தில் இருக்கிறாளோ என்று நினைக்க.. மனது திக்கென்றது.

 

 

இதற்குமுன் சிலசமயம் அதிகாலையில் இவள் தன் ஊருக்கு கிளம்பி செல்லும்போது தாமரை ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருப்பாள். கதவை திறந்து உள்ளே சென்று அவளிடம் கூறி விட்டு தான் செல்வாள் வித்யா.

 

ஆனால் இன்று ஏதோ ஒரு தயக்கம்! வேண்டாம் இதை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தன் அறைக்கு சென்றுவிட்டாள் வித்யா.

 

வழக்கமான நேரத்தில் எழுந்த தாமரை, ஹாலில் அமர்ந்து காபி கலந்து குடித்து கொண்டிருந்தாள். மனமோ நேற்று இரவு நடந்த இனிய கனவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. அது நினைவு என்று அறியாமல்… தெரியாமல்..

அவளை பொறுத்த வரையில்..

அப்போது தாமரையின் அழகிய இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது.

 

நல்லவேளை நம் நாயகன் இங்கு இல்லை.. இருந்திருந்தால் அவள் சிரிக்கும் இதழ்களை அவன் வசமாக்கி இருப்பான் என்பதில் ஐயமில்லை!!

 

அலுவலகத்தில் தனது டீம் லீடரின் வரவுக்காக காத்திருந்தது தாமரைச்செல்வி இருந்த குழு. 

 

"நம்ம பாஸ் குரு.. டைரக்டர் ஜெர்ரி ரூமுக்குள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சே.. அப்படி என்ன பெரிய டிஸ்கஷன்?" என்று நிஷா கேட்க..

 

 

"இதுவரை நாம் செய்த வேலைகளை பற்றிய டிஸ்கஷன் தான்! நாம் செய்த எரர்ஸ் எல்லாவற்றையும் டைரக்டர் சுட்டிக்காட்டி.. அவர் தரும் அனேக வெகு மதிப்புகளையும் நமக்காக தாங்கி பொறுப்பவர் நம் குரு அல்லவா?" என்று நாடக மொழியில் பேசினாள் ப்ரீத்தி..

 

"நமக்கு வாய்த்த டீம் லீடர் மிகவும் திறமைசாலி!!" என்று மற்றொருவன் கலாய்க்க.. இப்படியாக அவர்களின் நேரம் சென்று கொண்டிருந்தது.

 

இவற்றையெல்லாம் மில்லிமீட்டர் சிரிப்பை இதழ்களில் தவழவிட்டப்படி பார்த்துக்கொண்டு அமைதியாக தான் இருந்தாள் தாமரைச்செல்வி.

 

ஜெர்ரியின் அறையிலிருந்து வெளி வந்த குருவின் முகம் சோர்ந்து தான் போயிருந்தது. கிட்டத்தட்ட காலை ஒன்பது மணிக்கு அந்த அறைக்குள் நுழைந்தவன், பதினொரு மணி போல தான் வெளியே வருகிறான். அவன் கீழுள்ள மூணு சீனியர் கிரேட் நபர்களும், அவரக்ளுக்கு கீழ் இருக்கும் இரண்டு நபர்கள் என்று மொத்தம் 9 நபர்களின் பர்பாமன்ஸை இரண்டு மணி நேரம் சும்மா பிச்சு பிச்சு அவ்வளவு நுணுக்கமாக பார்த்திருந்தான் ஜெர்ரி.

 

 

இவ்ளோ நாட்களில் ஜெர்ரி பற்றி அறிந்திருந்த குருவும் அவர்களது வேலையை இரண்டு மூன்று முறை சரிபார்த்து தவறுகளை எல்லாம் சரி செய்து தான் எடுத்து சென்றான். அப்பவும் ஆங்காங்கே அவன் கண்ணில் படாத எரர்களையெல்லாம் கண்டுபிடித்து அவன் கூற.. வியர்வை வழிந்து ஓடியது குருவுக்கு அந்த ஏசி அறையிலும். ஒரு வழியாக வெளியே வந்தவனை அவனது டீம் மெம்பர்கள் சூழ்ந்து கொள்ள..

 

 

"நாட் பேட் கைஸ்!! ஆனால் அங்கங்க ஒன்னு ரெண்டு சில்லி எர்ரஸ் இருக்கு. வீ ஹாவ் டூ மினிமைஸ் தட் டூ!" என்றவன் மற்ற இருவரிடமும் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி விட்டு தாமரை இடம் திரும்பி பார்க்க அவளோ அவன் முகத்தை பார்த்திருக்க "தாமரை யுவர்ஸ் இஸ் 100% ஆக்குரசி.. கீப் இட் அப்!!" என்று வாழ்த்தினான்.

 

 

அவள் புன்னகையோடு தலையாட்ட "ஏன் பாஸ் இந்த இரண்டு மூன்று ஏரர் கண்டுபிடிச்சி செல்வதற்கு 2 மணி நேரம் ஆச்சா?" என்று ப்ரீத்தி விழி விரிய அவனிடம் கேட்க..

 

"பின்ன கண்ணுல விளக்கெண்ணை ஊற்றினு சொல்லுவோம்ல ஒரு பழமொழி.. அந்த மாதிரி இல்ல பார்த்தாரு மனுசன்.. நாலு டீம்ல நம் மட்டும்தான் இப்போதைக்கு பெஸ்டா இருக்கு! இதையே நாம் மெயின்டன் பண்ணனும்" என்று அவன் கூற, "எத பாஸ்?? அந்த சில்லி எர்ர்ஸையும் சேர்த்தா??" என்று நிஷா கேட்க..

 

"தெய்வமே!! என்னுடைய அப்ரைசல் மட்டுமல்ல உங்களுடைய அப்ரைசலும் இந்த ப்ராஜக்ட் வைத்து தான் இருக்கு. அதனால உங்க விளையாட்டுத்தனத்தை எல்லாம் ஓரமா கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு.. பீ சீரியஸ் மக்களே!!" என்று அவன் கை கூப்ப..

 

ஒருவனோ முகத்தை உர்ரென்னு வைத்துக் கொண்டு "இவ்வளவு சீரியஸ் போதுமா பாஸ்" என்க..

 

"பாஸ்.. ஏதாவது கோணி பை இருந்தா கொடுங்க.. மூட்டை கட்டி வைக்க.." என்று ஒருத்தி கேட்க..

 

"அப்படியே ஆகட்டும் பக்தா!!" என்று ஒருத்தி அவனை ஆசீர்வாதம் பண்ண..

 

 

இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க அஸ்வினோ மிகத்தீவிரமாக மேலே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று அந்த இடம் அமைதியாக எல்லோரும் அவனை பார்த்து "அங்கே என்ன தெரிகிறது அமைச்சரே!!" என்று கோரஸாக கேட்க…

 

"அது இல்லையடா அப்ரஸண்டுகளா.. பெஸ்ட் டீமான நமக்கு.. அதாவது நம்ம குருவுக்கே இரண்டு மணி நேரம் அர்ச்சனை என்றால்.. மற்ற மூன்று டீம்களின் நிலையை நினைத்து பார்த்தேன்னாஆஆ.." என்று கூற அங்கு அனைவரும் முதலில் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின்பு கொல்லென்று சிரித்தனர்.

 

கலகலப்பும் சிரிப்புமாக அவர்களின் குழு ஆக்கியிருந்தது அந்த இடத்தை!! இம்முறை தாமரையின் இதழ்கள் மில்லி மீட்டரிலிருந்து சென்டிமீட்டரை தத்தெடுத்தது புன்னகைக்க..

 

 

கேஃப்ட்டேரியாவை நோக்கி சென்ற 

ஜெர்ரியின் பார்வை இவர்களை கடந்து சென்றபோது, அவனது கண்களோ புன்னகையில் மலரிந்திருந்த தாமரையின் இதழ்களிலே அழுத்தமாக பதிந்து விட்டு சென்றது.

 

இப்படியாக இவர்கள் குழுவாக வேலை செய்வதும் அவ்வப்போது தங்களுக்குள்ளேயே சார்ஜ் ஏற்றிக் கொள்வது போல சிரித்து மகிழ்ந்து கொள்வதுமாக சென்றிருந்தது அவர்களது நாட்கள்.

 

 அதன்பின் ஜெர்ரி தாமரையின் வீட்டுக்கெல்லாம் செல்லவே இல்லை. சில சமயம் இரவு வேலை முடிந்து அதிகாலை வித்யா வீட்டுக்கு வரும்போது அவன் வந்து சென்று இருப்பானோ என்று குறுகுறுப்புடன் தேடுவாள். ஆனால் அவன் வந்து சென்றதற்கான தடையுமே இருக்காது. உண்மையில் அவன் வந்திருந்தால் அல்லவா?

 

 

அன்று நடந்தது கனவா நனவா என்று புரியாமலேயே சுற்றிக் கொண்டிருந்தாள் வித்யா தாமரையிடம் கேட்க பயந்து.. அவளது வேலையும் பகல் நேரமாக மாறி இருந்தது.

 

இப்பொழுது இருவருக்குமே பகல் நேர வேலைதான் என்பதால் காலை உணவு ஒன்றாகவே உண்டு கேபில் ஒன்றாகவே செல்வார்கள். சில சமயம் மதிய உணவு உண்ணும் போது பார்த்துக்கொண்டால் கையசைத்து சிரிப்புடன் கடந்து விடுவார்கள். சில சமயங்களில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டும் சாப்பிடுவார்கள்.

 

இன்று அவர்கள் டீமோடு தான் அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி. வித்யாவுக்கும் இன்று பகல் நேர வேலை என்பதால் மதிய உணவு இருவருக்குமே இன்று இவள்தான் வழக்கம் போல உணவு தயாரித்தாள். பிஸ்மில்லாபாத் காலையில் செய்யும் போதே அவளுக்கு ஸ்டீபனின் நினைவுதான்…

 

 

இந்த ஆறு மாத காலத்தில் இவளின் பிஸ்மில்லாபாத்தை இவளை விட அதிகம் உண்டவன் அவன்தானே?! இப்போது இந்த 15 நாட்களாக வேற டீமில் இருந்தாலும் அவ்வப்போது எதிர்கொள்ளும்போது சிறு சிரிப்புடன் நின்று ஓரிரு வார்த்தை பேசிவிட்டு தான் செல்வான்.

 

 

இன்று உணவைத் திறந்து அதை ஸ்டீபன் யோசனையோடு இருக்க.. சட்டென்று அவள் கையில் இருந்து பிடுங்கப்பட்ட டிபன் பாக்சை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விழுந்தான் ஸ்டீபன் சிறு சிரிப்புடன்…

 

 

அவளையும் பார்க்கவில்லை. அங்கே மற்றவர்களின் கவனிக்கவில்லை அவள் டிபன் பாக்சை மூக்கருகே வைத்து அதன் மணத்தை இழுத்து சுவாசித்தவன், "ம்ம்ம்மம்… செம வாசனை.. அது என்னவோ தாமரையுடன் பிஸ்மில்லாபாத்தில் தான் அப்படி ஒரு வாசனை வருது…

ப்ப்டீன் டேஸ் ஆச்சு… இதை சாப்பிட்டு" என்றவன் அவளிடமிருந்த ஸ்பூனை எதிர்பாராமல்.. கைகளாலேயே ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தான் ஸ்டீபன்.

 

இவனைப்பற்றி தெரியுமாதலால் மெல்லிய சிரிப்பு மட்டுமே தாமரை இடத்தில்.. அருகிலிருந்தவர்கள் அவனை வித்தியாசமாக பார்க்க.. தாமரை தான் எதையும் யாரையும் கண்டு கொள்ள மாட்டாளே! இவன்தான் பதிலளித்தான் அவர்களுக்கு..

 

 

"ஹாய்.. டியர்ஸ்… நான் ஸ்டீபன் தாமரையோட போன பிராஜக்டிலே இருந்தவன். அவர்களுடைய பிஸ்மில்லாபாத்துக்கு நான் அடிமை! அநியாயமா அவங்கள பிரிச்சு இந்த டீம்ல போட்டு என் வயித்துல அடிச்சுட்டாங்க.. அதான் பதினைந்து நாளுக்கு அப்புறம் ஆசை ஆசையா சாப்பிட்டுட்டு இருக்கேன். யாரும் கண்ணு வைக்காதீங்க ப்ளீஸ்!! ஒரு வாய் கூட தர முடியாது" என்று அவனது பேச்சில் அவர்களும் சிரித்துவிட்டு, "அவங்க சாப்பாட்டை வாங்கி நீங்க சாப்பிட்டீங்கன்னா தாமரை என்ன பண்ணுவாங்க?" என்று நிஷா கேட்க..

 

 

அவன் தன்னுடைய கேரியரை முன்னால் திறந்து வைத்தான். "பாருங்க சிக்கன் பிரியாணி! அதுவும் பாய் அம்மாவோட ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி!! ஒருவாய் சாப்பிட சொல்லுங்க.. சாப்பிடவே மாட்டாங்க‌. நீங்க வேணா ஷேர் பண்ணிக்கோங்க" என்று அவர்கள் பக்கம் தள்ள.. டிபன் பாக்ஸ் திறந்து எனக்கு ஒரு கை.. உனக்கு ஒரு கை என்று அடுத்த ஒரே நிமிடத்தில் அந்த டிபன் பாக்ஸ் காலியானது.

 

"சூப்பர்ருரூஊஊ"

 

"செம டேஸ்ட்!!"

 

 "வாவ் அவ்வளவு ருசி!!" 

 

"பாய் வீட்டு பிரியாணின்னா.. பாய் வீட்டில் பிரியாணி தான்!!"

 

என்றும் பாராட்டுகள் வேறு!!

 

"ஆமா.. ஸ்டீபன் உங்க பேரு கிறிஸ்டின் பேரு மாதிரி இருக்கு.. அப்புறம் என்ன பாய் வீட்டு பிரியாணின்னு சொல்றீங்க?" என்று நிஷா கேட்க, "எங்க அம்மா முஸ்லீம் அப்பா கிறிஸ்டியன்!!" என்றவன் வெகு மும்முரமாக பிஸ்மில்லாபாத்திலேயே கையும் வாயுமாக இருந்தான்.

 

 

இந்த சேதி புதிது தாமரைக்கு.. "அச்சோ.. தாமரை இப்போ உங்களுக்கு சாப்பாடு? எங்களதை ஷேர் பண்ணுகிறீர்களா?" என்று அஸ்வின் கேட்க.. "இட்ஸ் ஓகே!!" என்று அவள் கூறும் முன், அங்கே இருந்த கேஃப்டேரியா ஆட்கள் அவள் முன்னே சாப்பாடு வைத்து விட்டு செல்ல, தாமரைக்கு உணவு வந்துவிட அவரவர் தங்கள் உணவில் கவனம் செலுத்தினர்.

 

 

தாமரை கூட ஸ்டீபன் தான் அவளுக்கு ஆர்டர் செய்து இருக்கிறான் என்று நினைத்து தன் உணவில் அவள் கவனம் கொண்டாள். ஸ்டீபனோ, தாமரை தான் இங்கிருந்தே வரவழைத்து இருக்கிறாள் போல என்று அவனும் உணவில் கவனம் செலுத்தி விட.. தள்ளி இருந்து இவர்களை பார்த்த வண்ணம் உண்டு கொண்டிருந்த ஜெர்ரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 

 

"அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் தவறு இல்லை அதே நேரம் தன் வயிற்றை பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? இவளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை! அது என்ன பதினைந்து நாள் கூட அவள் சமைத்த சாப்பாடு சாப்பிடாமல் இருக்க முடியாதோ அவனுக்கு?" பொரிந்து கொண்டே.. எதிரிலிருந்த தயிர் சாதத்தை உள்ளே தள்ளி கொண்டு இருந்தான். அவனுக்கு இங்குள்ள காரம் அவ்வளவாக ஒத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் தயிர் சாதம்தான் மதியம் அவனுடைய தேர்வு..

 

இன்று எப்படியாவது இவளை பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு தான் மதிய உணவை முடித்து கொண்டு சென்றவனின் பார்வை இப்போது அவள் பக்கம் திரும்பவே இல்லை..

 

 

மாலை மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது. எப்போதும் கேப்லேயே வந்து விட மாட்டாள் தாமரை. அவ்வப்போது பயணிகளோடு பயணிகளாக பஸ்ஸில் வருவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் இருக்கும் அதே தனிமை கேப்பில் தொடர வேண்டுமா என்ற எண்ணம்??

 

 

அவளது அந்த அரை மணி நேர பயணம் சென்னையின் டிராபிகல் 45 நிமிடங்கள் ஆகும். சில நேரம் ஒரு மணி நேரம் ஆகலாம். அவ்வளவு நேரத்தில் தன்னை சுற்றி நடக்கும் சிறு சிறு விஷயங்களையும்.. தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களையும்.. தன் அருகில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களையும்.. ஆவலாக பார்த்து மனதுக்குள் தேக்கி வைப்பாள் தாமரை..

 

 

அன்று இவள் வித்யாவிடம் கையாட்டுவிட்டு பஸ்ஸிலேயே தனது பயணத்தைத் தொடர, இவளோடு பேச வேண்டும் என்று வந்த ஜெர்ரிக்கு அவள் கேபில் செல்லவில்லை என்று தெரிந்தவுடன் சப்பென்று ஆனது. அவ்வப்போது அவளது பஸ் பயணத்தை இவனும் அறிவான் தான். ஏசி இல்லாத காரிலேயே செல்ல முடியாத அவனால் திறந்தவெளி ஏசியான நம் பேரூந்து பயணத்தை அனுபவிக்க முடியுமா என்ன? இவளுக்கு முன்னே சென்று அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காத்திருந்தான்..

 

 

நிதானமாக தனது ஒரு மணி நேர பயணத்தை முடித்துக் கொண்டு ஆங்காங்கே நடைபாதையில் கடை வைத்திருக்கும் பாட்டிகளிடமும் மற்றவர்களிடமும் காய்கறி பழங்களையும் தேவையான அளவு வாங்கிக்கொண்டு தனது வீட்டை நோக்கி மெல்ல நடைபெற்றுக் கொண்டு வந்தாள் தாமரை. தன் காரில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெர்ரி..

 

 

படிக்கட்டில் எல்லாம் சட்டென்று ஏறி விடமாட்டாள் தாமரை.. அனைவரிடமும் செயற்கையாக புன்னகை சிந்தி பட்டணத்து நாகரீகமாக தேனொழுக பேச எல்லாம் அவளால் முடியாது பெரும்பாலும் லிப்டில் தான் அவளது ஜாகை…

 

லிஃப்ட் நெருங்கும் சமயம் "டாம்!!" என்று அவனது அழுத்தமான அழைப்பில் திரும்பிப்பார்க்க இறுகிய முகத்தோடு இருந்தவனை யோசனையோடு பார்த்தாள்.

 

அவள் அருகே நெருங்கியவன் "அப்புறம் எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்றான்.

 

"வாட்???"

 

"அதான் கல்யாணம் மா.. ஊர் கூட்டி கோவில உன் சங்கு கழுத்தில் தாலி கட்டி உங்கள் முறைப்படி செய்தாலும் ஓகே.. இல்லை சர்ச்சில் மோதிரம் மாற்றி எங்கள் முறைப்படி செய்தாலும் ஓகே.." என்றவனின் விரல்கள் அவளது கழுத்திலும் அவனது இதழ்கள் அவளது விரல்களிலும் கோலமிட்டன.

 

அவன் சொன்ன விதத்தில் இனிய கற்பனைகள் பிறந்தாலும், "நடக்காத ஒன்று மிஸ்டர் ஜெர்ரி. விலகி போங்க என் வழியில் இருந்து!!" என்றாள் அழுத்தமாக!!

 

"ஆஹான்.. போவேனே உன்னை தூக்கி கிட்டு என் வழியில்!! ஒரு வாரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள உன் முடிவு தெரியனும் எனக்கு!! இல்லன்னா.. ஜெர்ரியின் வழியில் அவனது முடிவுகள் ஹனி! ரெடி ஃபார் தட்!!" என்றவனின் கண்களில் வழிந்த காதலும் அழுத்தமும் அவளை அசைத்து தான் பார்த்தது.

 

அதற்குள் லிஃப்ட் வந்துவிட.. லிப்டுக்குள் இருவர் மட்டுமே!! எப்பொழுதும் போல எதுவும் லிட்டில் கூட்டம் இருப்பது போல அவளை உரசிக்கொண்டே நின்றிருந்தான் ஜெர்ரி. வெளியில் இருந்த குளுமைக்கும் அவன் உடம்பின் வெப்பத்திற்கு இதமாய்.. அவன் மார்பில் சாய்ந்து தன் ரணங்களை கூறி அழுது ஆறுதல் தேட துடித்தது அவளது மனம்.

 

ச்ச்ச.. என்ன இது!! என்று தன்னையே திட்டியவள் கைகளை மூடி இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.

 

இதுநாள் வரை அவன் எங்கே அந்த வீட்டில் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியவே தெரியாது! இன்று தனக்கு பின்னால் நடந்து வருபவனை விசித்திரமாக பார்த்தாள் அவள்.

 

 "நம்மைத் தாண்டி போவானாக்கும்!" என்று இவள் வீட்டைத் திறக்க, போன் பேசிக் கொண்டே வந்தவன் ஒரு நொடி தாமதிக்க.. இவள் உள்ளே சொல்லும்பொழுது பின்னாடி வந்து கதவை சாத்தியவன் போனை வலது கையால் பாக்கெட்டில் போட்டு கொண்டே.. இடது கையால் கதவைத் தாழிட, அவள் பயத்துடன் விழி விரித்து அவனை பார்த்தாள்.

 

அவள் வாயோ ஜோன் நோ.. நோ.. என்று முணுமுணுக்க..

 

அவன் முகத்தில் மென்மையும் காதலும் போட்டி போட இரு கைகளை விரித்து அவளை நோக்கி நீட்டியவன் "இவ்வளவு பெரிய சிக்ஸ் பேக் எதற்கு வச்சிருக்கேன் ஹனி? உன்னுடைய அனைத்து ரணத்தையும் இதில் சாய்ந்து தாராளமா சொல்லலாம் டா.. நான் உன் ஜோன் தானே?" என்று அவ்வளவு காதலில் குழைந்து வந்த அவனது குரலில், அவளது கண்களிலிருந்து கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வர...

 

 

சட்டென்று அவனை நோக்கி தன் தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து வந்தவள், இறுக்கி அணைத்தாள் அவனை. அவனது விரிந்த மார்பில் அவளது முகத்தை புதைத்து இருந்தாள் விசிம்பலுடன்!!

 

 

அவள் அணைப்பில்.. 

ன்பின் ஆதுரமும்..  

காதலின் பரிதவிப்பும்..

வலிக்கான தேடலும்..

தன்னவன் என்ற பெரும் நிம்மதியும்

இருப்பதை கண்டவன், 

 

"என்‌ ஹனி!!" என்று இறுக்க அணைத்தான்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top