Share:
Notifications
Clear all

காதல் சகி 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

2

 

அனைவரும் தங்களது மேனேஜர் ஜேம்ஸை பாவமாக பார்க்க.. எதற்காக அந்த பார்வை என்று புரியாத அவருக்கு? ஏன் அவருக்குமே இப்போது சற்று ஓய்வு தேவைப்பட்டது தான்.

 

"ஹாஃப்னவர் ப்ரேக் கைஸ்" என்ற விட்டு தன் அறையை நோக்கி அவர் சென்றுவிட்டார்.

 

 

வாஸ் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது அனைவருக்கும். ஐந்து நிமிடம் அப்படியே அவரவர்கள் சீட்டில் இளைபாறியவர்கள் அடுத்த நிமிடம் கேஃபிடேரியாவை நோக்கித்தான் ஓடினார்கள்.

 

 

அனைவரும் சென்றவுடன் மெல்லிய புன்னகையுடன் ரெக்ஸினை பார்த்தவாறு இவளும் கேப்டெரியாவுக்கு செல்ல, அங்கே வழக்கம்போல தாமரை கிரீன் டீயுடனும், ரெக்ஸி காஃபிசினோவுடன் அமர, "அப்பாடி ஒரு மாசம் நிம்மதியாக இருக்கலாம் ட்டாமரைய்" என்று அவள் மீண்டும் கடித்துத் துப்ப..

 

இரண்டு கையையும் மேலே தூக்கிய தாமரை "நீ வழக்கமாக கூப்பிடுவது போலவே கூப்பிடு. இப்படி என் பேரை கொலை பண்ணாத!!" என்று கூறியவளை பார்த்து கலகலவென சிரித்து ரெக்ஸி.

 

 

அவளின் சிரிப்பைத் தான் பொறாமையாக பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. ஆம்!! பொறாமையே தான்!!

 

 

எது எதுக்கோ பொறாமைப்படும் இந்த உலகத்தில் ஒருவரின் மனதார சிரிப்பை கண்டு பொறாமைப்படுகிறாள் என்றால், அவள் மனதளவில் எவ்வளவு வலிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும். 

 

 

அதையும் மென்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த தாமரையை பார்த்த ரெக்ஸி "யுவர் ஸ்மைல் லுக் லைக் மோனோலிசா ஆர்ட் டாம்" என்றாள்.

 

 

"அடுத்த ஒரு 20 டேஸ் நாம நிம்மதியா இருக்கலாம் அப்டேட்.. கோட்.. இப்படி எதுவும் இல்லாமல்" என்று அவள் கூற..

 

 

"ரொம்ப எல்லாம் கனவு காணாதே பெஸ்ட் ஆஃப் பெர்சனைதான் செலக்ட் பண்ண சொல்லி இருக்கார் செபாஸ்டியன்" என்று லேசாக அவளை வாரினாள் தாமரை.

 

 

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழகிய பார்பி டால் போல் அமர்ந்த ரெக்ஸியை பார்த்தவளுக்கு பாவமாக இருக்க "டோன்ட் ஒரி ரெக்ஸி.. நீயும் இருப்ப" என்று ஆறுதல் படுத்தினாள்.

 

 

அதன்பின் வேலை அவர்களை இழுத்துக்கொள்ள வழக்கம் போல கணிப்பொறி என்ற இயந்திரத்தோடு இவளும் ஒரு இயந்திரமாய் மாறி, தன் கவனம் சிதறாமல் இருந்தவளை பார்த்து இப்போது ரெக்ஸிக்கு தான் பொறாமை!!

 

வழக்கம் போல இருவரும் அவர்களது வீட்டிற்கு செல்ல ரயில்நிலையத்தை அடைய, அவளிடமிருந்து பதில் வராது என்று தெரிந்தும் எப்பொழுதும் கேட்கும் கேள்வியை கேட்டாள் ரெக்ஸி.

 

 

"நீ ஏன் இப்படி ஸ்ட்ரெஸா.. எதையோ இழந்தவ மாதிரி சிரக்கவே மாட்டேங்குற டாம்" தன் மேல் உள்ள அன்பினால் தான் கேட்கிறாள் என்று தெரிந்தும் அதை மென்னகையோடு அவளை அணைத்து விடுவித்தவள் "சீ யூ டுமாரோ" என்றவாறு, அங்கு வந்து நின்ற அவளது ஏரியாவிற்கு செல்லும் ரயிலில் ஏறி சென்றாள்.

 

 

வீட்டுக்கு சென்றவள் அந்த குளிரிலும் கீஷரை போட்டுவிட்டு சுத்தம் செய்து உடைகளை சேகரித்து வைத்தாள். வாரத்திற்கு ஒரு முறை பொதுவாக உள்ள லாண்டெரிக்கு சென்று தான் துவைத்து எடுத்து வருவாள். 

 

பெரிதாக ஒன்றும் சமைத்துக் கொள்ளவில்லை. மதியம் கேண்டினில் எது பிடித்ததோ அதை வாங்கிக் கொள்வாள். இப்பொழுது தான் வாங்கி வந்திருந்த காய்கறிகள் எல்லாம் போட்டு சப்ஜி மாதிரி செய்து மூன்று சப்பாத்திகளை இட்டு சாப்பிட்டவள் தனது அந்த சிறிய ஒற்றை வீட்டிலேயே உலாத்திக் கொண்டிருந்தாள்.

 

காலையிலிருந்து செய்த வேலை எல்லாம் அவள் கண்ணை சொக்க வைத்து தூக்கத்திற்கு அழைக்க.. அதெல்லாம் விரட்டி கண்ணைத் துடைத்துக்கொண்டு எங்கே அமர்ந்தால் தூங்கி விடுவோமோ? என்று அங்கிருந்த போனை பார்த்தபடியே நடைபெற்றுக் கொண்டிருந்தாள்.

 

 

அவள் நினைத்தபடியே மிஸ் கால் வந்தது. வேறு யார்? அவளுக்கு என்று நிச்சயம் செய்து வைத்திருக்கும் மகேஷ் தான். அவள் பின்னால் ஒரு வருடம் சுற்றி சுற்றி வந்து தனது காதலை சொல்லி, அவள் மறுக்க மறுக்க.. தன் வீட்டினரோடு வந்து பேசி சம்மதிக்க வைத்திருந்தான்.

 

பிடித்தம் இல்லாத பிடித்தம்!! 

ஆனால் திருமணம் மூன்றாண்டுகளுக்கு கழித்து என்று பேசி வைத்திருந்தார்கள். ஏனென்றால் அவனுக்கு இருக்கும் ஒரு தங்கையை அவன் கரை சேர்க்க வேண்டுமாம்!! அதேபோல் இவளுக்கு கீழே இருக்கும் தம்பி தங்கைளுக்கு அந்த மூன்று வருடத்திற்குள் சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமாம்.

 

அதன்பின்.. இவர்கள் வாழ்க்கை வியாபாரமாய் சில பல கணக்கு வழக்குகள். அதுவும் இவளுக்கு அவள் பணி செய்யும் இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க, முதலில் முடியாது என்று மறுத்தவளை வம்படியாக அனுப்பி வைத்ததே அவன் தான். ஏனென்றால் இங்கே கிடைக்கும் மாத சம்பளத்தை விட அங்கே கிடைப்பது இரண்டு மடங்கு அதிகம்!!

 

 

அவன் போட்ட மூன்று வருட கணக்குகளை தாண்டியும் இதில் சம்பாதித்து விடலாமே!! 

 

 

'பெக்கர்ஸ் ஆர் நாட் சூச்சர்ஸ்!!' என்ற வழக்குக்கேற்ப, அவளுக்கு இந்த வாழ்க்கையே அவளால் தேர்ந்தெடுக்க முடியாது என்கிற போது மற்றதை மட்டும் அவளால் என்ன செய்திருக்க முடியும்?

 

 

இதோ அவனது மிஸ் காலுக்ககாகத் தான் காத்திருக்கிறாள்.. ஏனென்றால் இவளுக்குத்தான் சம்பாத்தியம் அதிகமாயிற்றே.. அதனால் இவளே செய்தால் என்ன குறைந்து விடுவாள்? ஆனால் நேரம் மட்டும் அவனுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ.. வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் மட்டுமே கொடுப்பான். சில நேரங்களில் அது 10 11 கடந்து நள்ளிரவு 12 மணி கூட ஆகலாம்.

 

 

இன்று என்னவோ சற்று நல்ல நேரத்தில் 11 மணி போல் வந்து விட்டது அவனது மிஸ் கால். மீண்டும் கால் செய்து அவனுக்கு ஆமாம் சாமி போட்டு படுக்க 12 ஆனது. அதன் பிறகு வழக்கம் போல அவளது காலை டியூப்மேட்டில்..

 

இப்படியாக ஒரு வாரம் ஓடி விட, இவர்கள் அறுபது ஊழியர்களில் இருந்து ஐந்து நபர்கள் பெஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டு ட்ரைனிங்காக அனுப்பப்பட்டனர். அதில் தாமரை ரெக்ஸியுடன் சேர்ந்து இன்னும் மூன்று ஆண்கள். 

 

 

திங்கட்கிழமை ஆரம்பமாகிறது அந்த ட்ரைனிங்.. இவர்கள் வேலை செய்யும் அதே கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் இந்த டிரைனிங் ப்ரோக்ராம்.

 

 

ஞாயிறு அன்று வழக்கம் போல தனது துணிகளை எடுத்து பொதுவாக இருக்கும் அந்த லாண்டரியில் துவைக்க சென்றாள் தாமரை. இவ்வளவு என்று பணம் செலுத்திவிட்டு தன் துணியை துவைத்து உலர வைத்து எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் வாங்கி வைத்து செய்வதை விட இவளுக்கு இதில் சற்று குறைவுதான். அந்த உரிமையாளர் லிசா இவளைப் பார்த்து புன்னகை புரிய இவளும் புன்னகையோடு, தனது துணிகளை துவைக்க அந்த மெஷினில் போட்டு விட்டு காத்திருந்தாள்.

 

பொதுவாக அன்றைக்கு கூட்டம் அதிகமாக சில சமயம் இருக்கும். அதனால் இவள் மதியம் போல் தான் வருவாள். 

 

 

லிசா அவளை பார்த்துக்க சொல்லி விட்டு மதிய உணவு சாப்பிட சென்றுவிட இவள் மட்டுமே தனித்து இருந்த நேரம்.

 

 

அப்போது கதவை திறந்து கொண்டு வேகமாக வந்த நெடியவன் ஒருவன் அங்கு இருப்பவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவசரமாக தனது உடைகளை கழட்டினான். தனது பாக்ஸரோடு நின்று கொண்டு, "எக்ஸ்கியூஸ் மீ.. ஐ நீட் டூ வாஸ் வெரி அர்ஜென்ட்லி" என்று அவள் முன்னே சுவாதீனமாக நின்று கேட்க அவளுக்கு அவனை திரும்ப பார்க்க முடியாமல் கண்களை வேகமாக திருப்பி கொண்டு..

 

 

"டோண்ட் யூ ஹாவ் மேனர்ஸ்?" என்று பற்களை கடித்துக் கொண்டு கடுப்புடன் வினவ..

 

"ஏன்? நான் என்ன நைட் ஷேர் பண்ணிக்கலாமா என்றா கேட்டேன்? ஜஸ்ட் வாஸ் பண்றதுக்கு தானே கேட்டேன்?" என்று கேலி குரலில் அவன் கேட்க.. அதில் ஆத்திரம் கொண்டு அவள் திரும்பவும் லிசா வந்தவர் என்னவென்று விசாரிக்க, அவரிடம் ஏதோ பேசிக் கொண்டே தன் உடைகளை கொடுத்தான்.

 

அடுத்து அங்கிருந்த அரை மணி நேரமும் அவனை திரும்பிப் பார்க்காமல் இவள் முகத்தை திரும்பிக்கொண்டு அமர்ந்திருக்க.. அவனோ வெகு சுவாரசியமாக இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

 

 

திங்கட்கிழமை காலை மொத்த அமெரிக்காவிலுள்ள இவர்களது கம்பெனி சார்பில் அங்கே குழுமியிருந்தனர் 50 பேர் கொண்ட ட்ரெயினிங் குழு.

 

 

வழக்கம்போல செபாஸ்டியன் முன்னுரிமை வழங்கி விட்டு இன்று சீக்கிரமாக சென்றுவிட... 

 

இந்த ட்ரெய்னிங்கில் அவர்களுக்கு ஹெட் ஆக இருக்கும் பீட்டர்.. "உங்க எல்லாரையும் இரண்டு பேர் கொண்ட குழுவாகப் பிரிக்கப் போகிறேன். இந்த ட்ரெய்னிங் முடிகிற வரைக்கும் அவங்க தான் உங்களுடைய பார்ட்னர்" என்று கூற..

 

 

ரெக்ஸியும் தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டை பிதுக்கி கொண்டனர். யார் வந்த மாட்ட போகிறார்களோ? என்று..

 

ஒரு பெரிய ஜாடியில் 25 பேரின் பெயர் போடப்பட, பெயர் எழுதாத மற்றவர்களை அழைத்து அந்த ஜாடியில் உள்ள பெயரை எடுக்க சொன்னார்கள். தாமரை முறை வந்தவுடன், அவள் பெயரை சற்று வாசிக்க சிரமப்பட்டவன் "ஓ வாட்டவெர்.. ஐ கால் யூ டாம்.." என்றவன், அவளை எடுக்க சொல்ல, தாமரை எடுத்துக்கொடுக்க பீட்டர் வாசித்தவன் சிரித்தான்.

 

 

"இட்ஸ் ஜெர்ரி.. வாவ்!! வாட் அ ப்பேர்!! டாம் அண்ட் ஜெர்ரி!!" என்று கூறி சிலாகிக்க..

 

அவளை நோக்கி வந்தவனையே இமை தட்டாமல் பார்த்திருந்தாள் தாமரை.

 

 

அதே அதே.. அந்த லாண்டரியில் பார்த்த நெடியவனே!!

 

ஜெர்ரிக் ஜோன்ஸ்!!

 

காதலாகுமா?? டாம் அண்ட் ஜெர்ரி??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top