Share:
Notifications
Clear all

காதல் சகி 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

1

சாப்ட்வேர் உலகின் கனவு நகரமான சான் பிரான்சிஸ்கோ... 

 

தன் ஒற்றை படுக்கை அறை வீட்டிலிருந்து ஜன்னல்கள் ஊடே குளிர்கால உறைந்த பனியடர்ந்த பிரதேசங்களை தான்‌ பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்!!

 

அவள் என்றால் அவளுக்கென்று பெயரில்லையா?? 

 

சுயமாக இல்லை!! அடுத்தவர்கள் அவளை கூப்பிடுவதற்காக மட்டுமே அது பயன்படுகிறது. அடுத்தவர்களுக்காக?? ஆம்!! பெயர் மட்டுமல்ல அவள்‌ வாழ்க்கை கூட அடுத்தவர்களுக்காக தான்!!

 

 

பெயர் என்றால் அடுத்தவர்கள் கூப்பிட தானே?? கூப்பிட என்றாலும் அந்தப் பெயரே அவளுக்கு அந்நியமான தான் தெரியும். உள்ளம் உருகி அவள் பெயரை‌ எப்போதோ கேட்ட ஞாபகம்!! அதன் பிறகு பெரும்பாலும் அவளது பெயர் "ஏய்.. சிறுக்கி மவளே!!", "ஓடுகாலிக்கு பொறந்தவளே!!" என்ற பெயர்கள் தான் அதிகம்!! 

 

 

பள்ளி கல்லூரிகளில் அவளது பெயரை யாரேனும் கூப்பிட்டால் கூட சட்டென்று திரும்பி பார்க்க மாட்டாள். அவள் பெயரை கூட மறந்திருந்தாள். பாடத்தை மனப்பாடம் செய்ததை விட அவளது பெயரை மனணம் செய்த நாட்களே கல்லூரி காலத்தில் அதிகம்!!

 

 

"ச்சே.. காலங்காத்தாலேயே என்ன இது ஒரே சோக கீதம்??" என்று தலையை குலுக்கிக் கொண்டவள், தனக்குப் பிடித்த இளையராஜா சிம்பனியை செல்லில் ஒலிக்க விட்டபடி தனது காலை கடன்களை முடித்து தயாரானாள். 

ப்ரட் டோஸ்டும், முட்டை ஆம்லேட்டும் கொஞ்சமாக பல தானியங்களால் அரைத்த மாவில் போரிட்ஜ் அவ்வளோ தான் அவளது காலை உணவு.. இந்தியன்-அமெரிக்கன் ஸ்டைலில்..

 

பனிமூட்டம் அதிகம் இருந்த காரணத்தினால் வெளியில் செல்லும் முன் முழுதாக தன்னை குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள மூடியபடி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு வெளியில் நடந்தாள்.

 

15 நிமிட நடையில் தான் அருகில் இருக்கும் பாதாள ரயில் நிலையம். அவளது பழக்கமான நேரம் தான் ஆனாலும் இந்த இந்தக் குளிர் அவளுக்கு இன்னும் பழகவில்லை.. வேக நடை போட்டு ரயில் நிலையத்தை அடைந்து இருந்தாள்.

 

அரை மணி நேரம் ஆகும் அவளுக்கான இடத்தை அடைய.. அதற்குள் அவளைப் பற்றிய ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்!!

 

நிற்க.. அவள் தாமரை செல்வி!! அழகிய தமிழ் பெயர். அழகு பெயரில் மட்டுமில்லாமல் அதனை தன் கட்டுடலில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருந்தாள். எந்த பாகத்தை வர்ணிக்க எதை விட? தனஞ்ஜெயன் வில்லென வளைந்த அடர் புருவமா?? அதன்கீழ் சற்றே நீண்டு மேலே ஏறிய கயல்களை போல அவளது நீள விழிகளா? கூரான மூக்கா அல்லது அதற்கு அழகு சேர்க்கும் ஒற்றைக்கல் மூக்குத்தியா?? பார்க்கும் விழிகள் அனைத்தும் பதியும் அவளது செம்பருத்தி இதழ்களா? சுருள் முடியும் அல்லாது கோர முடியும் அல்லாது அலை அலைகளாய் முதுகு வரை பரந்து இருக்கும் கருங்கேசமா?? எல்லாவற்றையும் விட இந்திய பெண்களுக்கு என்றே இருக்கும் கோதுமை நிறத்தில் மின்னும் பால் தேகமா?? இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.. 

 

 

ஆனால் அவளது அழகு என்னவோ அவளே அறியப்படாத ஒன்று!! எப்பொழுதும் ஆழ்ந்த அமைதி!!

சட்டென்று அனைவரிடமிருந்தும் இவளை தனித்துக் காட்டும்!!

 

 

இப்படி ஆழ்கடல் அமைதி என யாராலும் கணிக்க முடியாத.. யாராலும் அணுக முடியாத ஒருத்தி தான் நம் நாயகி!!

 

டியூப்மேட் சொலீயூஷன்ஸ்.. இதுதான் தாமரை வேலை பார்க்கும் நிறுவனம். அமெரிக்காவில் முன்னணியில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. பல அலுவலகங்கள்.. மருத்தவமனைகள்.. பள்ளிகள்.. கல்லூரிகள்.. ஏன் காவல்துறை, நீதித்துறை என்று அவர்களுக்கு ஏற்ற மாதிரி சாப்ட்வேர்களை தயாரித்துக் கொடுப்பதும்.. புதிது புதிதாக இன்றைய காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி சாப்ட்வேர்களை தயாரிப்பதும்..  

அவுட்சோர்ஸ்களாக பல ப்ராஜெக்ட்களை செய்வதில் டியூப்மேட் தான் டாப்.

 

 

இப்படி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நாட்டின் பல்வேறு இடத்தில் உள்ள திறமையானவர்களை, பணத்தை வாரி இறைத்து தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்திருந்தது இந்நிறுவனம். அதில் தஞ்சாவூரை சேர்ந்த நம் தாமரைச் செல்வியும் ஒருத்தி. வேலை பார்ப்பது புதிது புதிதாக சாப்ட்வேர்களை டெவலப் செய்யும் பகுதியில்.

 

கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு மேல் பணியாற்றும் 10 மாடி கட்டிடம் அது!!

கட்டிடத்துக்கும் நுழைந்தவள் அவர்களது பகுதியான எட்டாம் மாடிக்கு நுழைந்தாள். அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாள் அவளது ஆஃபிஸ் மேட் மற்றும் அவளது ஒரே தோழியான ரெக்ஸி.. 

 

"ஹே.. ட்டாமரைய்.. கம் சூன். சடன் மீட்டிங் வித் டைரக்டர்" என்று அழைத்தவாறு அந்த மீட்டிங் ஹாலை நோக்கி சென்றாள்.

 

 

வழக்கம்போல தன் பெயரை கடித்து மென்று துப்பியதற்காக அவளைத் திட்ட வாயை திறத்த தாமரை, மீட்டிங் என்றவுடன் அவசர அவசரமாக தனது மேல் அங்கி எல்லாம் கழட்டி, அவளுக்கு என்று இருக்கும் லாக்கரில் வைத்துவிட்டு வேகமாக ரெக்ஸியோடு இணைந்து கொண்டாள் மீட்டிங்கில்..

 

இந்த நிறுவனத்தில் இது ஒரு பழக்கம். திடீர் திடீரென்று அந்த பகுதிக்கு உள்ள டீம் லீடர் ஊழியர்கள் மேனேஜர் டைரக்டர் இதுபோல சொல்லாமல் கொள்ளாமல் ஆப்பு வைக்க மீட்டிங் ஏற்பாடு செய்து விடுவார்கள். முன்னமே சொன்னால் இவர்கள் பக்காவாக தயாராகி விடுவார்கள் அல்லவா? பெரும்பாலும் இவர்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மிச்ச சொச்ச வேலை.. சோம்பி இருத்தல்.. இது மாதிரி இடங்களுக்கு இடமே இல்லாமல் வைத்துக் கொள்வார்கள். 

 

இரண்டு முறை மெமோ.. மூன்றாம் முறை ஃபயர்!!

 

இதுபோல் நல்ல சம்பளத்துடன் வேலை வேறு எங்கு கிடைக்கும்? அதனால் பெரும்பாலானவர்கள் தங்களை தாங்களே அப்டேட் ஆக வைத்துக் கொண்டாலும், எங்கையும் சில சோம்பேறிகள் இருக்கத்தானே உண்டு!! இந்த பணியிடம் என்பதும் ரயில் பயணம் மாதிரி தான்!! சில பேர் அடுத்தடுத்த இடத்தில் இறங்கி விட.. ஒரு சிலர்கள் மட்டுமே நீண்ட தூரம் பயணமாக இருக்கும்.

 

 

இன்னைக்கு யார் யாரெல்லாம் ஃபயரோ? என்று மனதில் ஒரு வித பயத்துடனே அந்த மீட்டிங் ஹால் அமைதியாக இருந்தது. 60 இன்ச் திரையில் பளீர் புன்னகையுடன் சற்று முன்னேறிய வழுக்கை இருந்தாலும் டாம் க்ரூஸின் சற்றேற குறைய தோற்றத்தோடு, வந்து தனது பேச்சை ஆரம்பித்தார் நாற்பத்தி ஐந்து வயது செபாஸ்டியன்.

 

 

எப்பொழுதும் போல தங்கள் நிறுவனத்தில் இவர்கள் பணியாற்ற, போன ஜென்மத்தில் மூட்டை மூட்டையாக புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று ஆரம்பித்து.. நிகழ்காலத்தில் கம்பெனி இவர்களுக்கு செய்யும் வசதிகளையும்.. இவர்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையையும்.. ஒரு இரண்டு பக்கத்துக்கு வாசித்து முடித்துவிட்டு, அதன்பின் இவர்களெல்லாம் கம்பெனி மீது எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று மேலும் ஒரு சிறப்புரையாற்றி முடித்தார் அவர்.

 

 

அதற்கே அங்குள்ளவர்களுக்கு எல்லாம் காலையில் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி, அடுத்து சாப்பாட்டை கேட்டு வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது அந்த செபாஸ்டியன் அடுத்து சிலரை ஆன் தி ஸ்பாட் கேள்வி கேட்டு திணறடித்து கொண்டிருந்தார். 

 

 

'இன்னைக்கு யார் யாருக்கு எல்லாம் ஏழரையோ?' என்று மனதில் திகிலுடன் தன்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற நபர்களை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரெக்ஸியும் தாமரையும். 

 

ஒருவழியாக செபாஸ்டின் ஆடிய 20 20 கிரிக்கெட்டில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் டக் அவுட் ஆக.. இரண்டு விக்கெட்டுகள் முக்கி முக்கி ரன் அவுட் ஆகாமல் தப்பிக்க.. நான்கைந்து விக்கெட்டுகள் சிக்ஸராக விளாசி தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ள.. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மேனேஜருக்கு வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

 

 

பொதுவான மீட்டிங் முடித்து தனியறையில் தனி மீட்டிங் வைத்து பேசியே கொள்வானே.. என்று அவ்வளவு பயம் மேனேஜரான ஜேம்ஸூக்கு.

சில விக்கெட்டுகள் கேள்வி கேட்காமலேயே அவுட்டாகும் நிலைமையில் தள்ளப்பட்டனர். அதில் இரண்டு டீம் லீடர்களும் அடக்கம்!! அருகில் டீமில் உள்ள நபர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றால் மாட்ட போது அவர்களும் தானே!!

 

 

இப்படியாக ஒரு இரண்டு மணிநேரத்தை கலக்கு கலக்கு என்று கலக்கி அடுத்தது வந்தது தாமரையின் முறை.

 

 

செபாஸ்டியனுக்கு இந்தியர்களை கண்டாலே ஒரு ஆச்சரியம்!! எந்த இடத்திலும் பொருந்திப்போகும் அவர்களது பாங்கு. ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக அவருடைய கேள்விக்கணைகளை எல்லாம் தன் பதில்களால் தகர்த்து கொண்டிருந்தாள் தாமரை!!

 

அமைதியாக அதே நேரம் அழுத்தம் திருத்தமான முறையில்.. பிழையில்லாமல் அவள் அளிக்கும் பதிலில் சற்று அசந்து தான் போனார் செபாஸ்டியன்!! நம்ம தலை டோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட்டால் அவள் அசத்த, பாகிஸ்தான் பவுலர் கணக்காக அவரது முகம் மாறினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் "குட்!" என்பதோடு முடித்துக் கொண்டார்.

 

 

மீண்டும் ஒரு அரை மணி நேரம் பேச்சு பேச பேச அனைவருமே உண்மைகள் சோர்ந்து தான் போனார்கள். 

 

 

"ஜேம்ஸ் உங்களின் டீம் மற்ற டீமோட கம்பேர் பண்ணும்போது ஃபார் பெட்டர். ஆனாலும் இன்னும் அவர்களை அப்டேட்ஸ் பண்ணிக்க வேண்டும். கூடவே ஒரு இரண்டு மணி நேரம் மீட்டிங்கே இவங்க எல்லாரும் இவ்வளவு சோர்ந்து போயிருட்டாங்க.. ஐ டிண்ட் எக்பெக்ட் திஸ்?" என்று ஜேம்ஸ் ஒரு வாரு வாங்கிவிட..

 

 

இடையிடையே அவர் சொன்ன "நாட் லைக் தட் சார்", "வீ வில்", "அவர் மேட்ஸ் ஆர் வொன்டர்ஃபுல் கைஸ்" என்ற பருப்பு எல்லாம் செபாஸ்டினிடம் வேகவேயில்லை.

 

 

பின் அவரே.. "நெக்ஸ்ட் வீக் ஒரு ரெக்ரேஷன் ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன் அதுவும் நம்ம ஆபீஸ்ல.. உங்க டீம்ல இருந்து பெஸ்ட் பெர்சன்ஸை செலக்ட் பண்ணுங்க. அதே மாதிரி நம்ம மற்ற யூஎஸ் ப்ரான்ச் இருந்து பெஸ்ட் பெர்சன்ஸ் அனுப்புவாங்க. அவங்களுக்கு மட்டும் சில அப்டேட்ஸ் கூடவே ரெக்ரேஷன் ட்ரைனிங் ப்ரோக்ராம் எல்லாம் இருக்கும். டூ டேஸ்ல எனக்கு அந்த லிஸ்ட் வேணும்" என்று விட்டு.. மீண்டும் எல்லாரையும் பார்த்து "ஹாப்பி டே!!" என்று வழக்கமான அவரது டிரேட்

மார்க் சிரிப்புடன் அந்த திரை மறைந்துபோக.. "அப்பாடா!!" என்று பெருமூச்சு விட்டது மொத்த டீமும்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top