Share:
Notifications
Clear all

காதல் சகி 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

8

 

தாமரையை சாரி சொல்ல வைப்பதற்காக இரண்டு நாட்களாக அவளை பார்வையால் துரத்தி யோசனையாக சுத்திக் கொண்டிருந்தான் ஜெர்ரிக். 

 

 

தாமரையும் கண்டும் காணாமல் இருந்தாள். அவளுக்கும் ஒரு சின்ன சுவாரசியம் இப்போது கண்களில்.. நீ எப்படி சாரி சொல்ல வைக்கிற பார்க்கறேன் என்று!!

 

 

இருவருக்குள்ளும் ஒரு கண்ணாமூச்சி நாடகம்!! அவர்களே அறியாமல் ஒருவரை ஒருவர் ஈர்த்துக் கொள்ளத் தொடங்கினர் காந்தங்களை போல.. காந்தத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதில் ஒன்று ஈர்க்கும்!! மற்றொன்று விலக்கும்!! அதுபோலதான் மனிதர்களிடமும் பல பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தினால் நாம ஈர்க்கப்பட்டாலும் அவர்களின் மற்ற பக்கங்களால் விலகி இருக்கவே தோன்றும்!!

 

 

இப்பொழுது தாமரைக்கும் அவனின் இந்த சிறுபிள்ளைத்தனமாக சவால் விடும் முகம் சற்று சுவாரசியத்தை அளிக்க.. அவளே அறியாமல் ஈர்க்கப்பட்டு கொண்டிருந்தாள் ஜெர்ரிக் பக்கம்!!

 

 

அதனால் அவளும் அவன் பார்க்கும் நேரம் சாரி சொல்வது உதட்டை குவிப்பதும்.. பின்பு சாதாரணம் போல பேசி விட்டு வேறு வேலை பார்ப்பதுமாய் அவனை சீண்டினாள். அது ஒரு சுவாரசியத்தை கொடுத்தது தாமரைக்கு.

 

 

அன்று வெள்ளிக்கிழமை வேலையை முடித்தவுடன் வழக்கம் போல இருவரும் ஒரே ட்ரெயினில் சென்றாலும், அவள் அமர்ந்த சீட்டுக்கு எதிரே நின்றபடி மேலே கம்பியை பிடித்துக்கொண்டு பார்க்காதது போல அவளைப் பார்த்தவன் அடிக்கடி தன் சிகையை கோதிக் கொண்டான், மீசைக்குள் அதக்கிய சிரிப்பை அடக்கியப்படி..

 

 

தன் கை விரல்களை கோர்த்தவாறு அமர்ந்திருந்தவள் அவ்வப்போது அவளின் விரல்களில் கண் பதிப்பதும், பின்பு கண்களை மட்டும் நிமிர்த்தி அவனை நோட்டம் விடுவதாகவே இருந்தாள். வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் அவளை பின் தொடர்ந்தவன், எதுவும் பேசவில்லை என்றாலும் அவனது உடல் மொழியும் நடையும் அவளிடம் அந்தரங்கமாக பேசிக்கொண்டே தான் வந்தது. என்றும் இல்லா புன்சிரிப்பு முகத்தில் தவழ, தாமரையும் விழிகளை மட்டும் உருட்டி பின்னால் வருபவனை பார்த்தவாறு அமைதியாக சென்று கொண்டிருந்தாள்.

 

அவள் வீட்டை நெருங்கியவுடன் ஒரு நொடி தாமதித்தவன், பின் வழக்கம்போல் தனது நடையை தொடர, இவளோ முற்றிலுமாக தன்னிலிருந்து விடுபட்டு அவனை நோக்கி "ஜெர்ரிக்!!" என்று அழைத்து இருந்தாள்.

 

 

அவனும் நடையை ஒரு நிமிடம் தாமதித்து பாக்கெட்டில் கையை விட்டப்படியே மெதுவாக திரும்பியவன் ஒற்றை விரலை தன் பக்கம் திருப்பி 'என்னையா?' என்பது போல புருவம் உயர்த்தி கேட்க..

 

"இருக்கிறது இங்க ரெண்டு பேரு தான். நீங்களும் நானும் தான்!! என் பேரு ஜெர்ரிக் இல்லை" என்றாள் கைகளைக் கட்டியபடி கதவோரம் சாய்ந்து கொண்டே.. 

 

"ஸ்மார்ட்!!" என்று அவளைப் பார்த்தவன் புருவத்தை உயர்த்தி 'சொல்லு' என்பது போல அவளை மாதிரியே சுவற்றில் சாய்ந்து கொண்டு பாக்கெட்டில் இரண்டு கைகளை விட்டுப்படி நின்றிருந்தான்.

 

"காபி கேட்?!" என்று அவள் முணுமுணுத்தாள்.

 

"நான் கேட் இல்லை" என்று சிரித்தவன், அவளை நோக்கி கையை நீட்டி, அவளை தான் கேட் என்றான், தாமரை முணுமுணுத்தை சரியாக கேட்டப்படி..

 

"அதுவும் பைஃட்டிங் கேட்!!" என்று அவன் கூறி வம்பிழுக்க, இரண்டு நாட்களாக அவனை படுத்தியது போதும் என்று சாரி கூறிவிடலாம் என எண்ணி தான் அவனை அழைத்தது தாமரை. ஆனால் மீண்டும் அவன் வம்பிழுக்க அதில் பழையப்படி கோபம் கொண்டு 'போ.. போ.. உனக்கெல்லாம் சாரி கிடையாது' அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அவள் வீட்டின் உள்ளே நுழைய..

 

 

"ஹேய் டாம்.. எதுக்கு என்னை கூப்பிட்ட? ஒன்னுமே சொல்லாம இப்ப நீ பாட்டுக்கு உள்ள போற?" என்று இவனும் சற்று எரிச்சலுடன் கேட்க..

 

 

"ம்ம்ம்.. குட் நைட் சொல்லத்தான் கூப்பிட்டேன். குட் நைட்!!" என்று வேகமாக கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே சென்றே விட்டாள்.

 

 

அவளின் அந்த கோபத்தை ரசித்தாலும் முகத்தில் அறைந்தார் போல கதவை சாத்தியது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்த, வேகமாக சென்று அவள் வீட்டின் கதவை தட்டினான்.

 

 

ஜெர்ரிக் சென்றிருப்பான் என்று நினைத்து இவள் அறைக்குள் செல்ல.. கதவு வேகமாக தட்டுவதை பார்த்து அதிர்ந்து வந்து திறக்க.. அங்கே அவளை முறைத்துக் கொண்டு நின்றவனை பார்த்ததும் கொஞ்சம் பக்கென்று தான் ஆனது.

 

"என்ன??" என்று இவள் திக்கி திணறி கேட்க..

 

"நீ குட்நைட் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்ல.. அதுக்குத்தான்" என்றவன், அவன் மூச்சுக்காற்று இவள் முகத்தில் வீசும் அளவு நெருக்கத்தில் நின்று "குட் நைட்!!" என்று கூறியவன், "என் கிட்ட ப்ளே பண்ணாத டாம். எப்பவுமே டாம் அண்ட் ஜெர்ரில.. ஜெர்ரி தான் ஜெயிக்கும்!! நாளைக்கு நீ சாரி சொல்லுற.. சொல்ல வைப்பேன்" என்று சவால் விட்டவன் அறியவில்லை.. சாரி பூரி எல்லாம் மறந்து அவளின் காதலுக்காக.. அந்த ஒற்றை வார்த்தைக்காக தவம் கிடக்க போகிறான் என்று!!

 

 

 

அன்றிரவு மகேஷ் வழக்கம்போல மிஸ்டு கால் கொடுப்பதற்கு பதில், 'தனக்கு முக்கிய வேலை இருப்பதாகவும் நாளை பேசுகிறேன்' என்று மெசேஜ் செய்து விட தாமரையின் அந்த மன நிலை மாறாமல் நன்றாகவே கழிந்தது இரவு அவளுக்கு.

 

 

மறுநாள் பார்ட்டி அருகிலுள்ள ஒரு கடற்கரையோர ரிசார்ட்டில் என்று பீட்டர் அறிவித்துவிட.. பார்ட்டி என்ற ஒற்றை சொல் போதுமே ஐடி ஊழியர்களுக்கு!! அவர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்!! வெறும் உணவோடு முடியாமல், அதையும் தாண்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இழுத்து சோசியல் ட்ரிங்க் என்ற குடியில் முடியும் பெரும்பாலும். இதில் விதிவிலக்கானவர்கள் சில பேர்!! இருந்தாலும் இன்று ஒரு நாள் மட்டும் என சிலர்.. நண்பனுக்கு கம்பெனிக்கு என்று சிலர்.. வெளிநாட்டில் குடித்தால் ஊரில் உள்ளவர்களுக்கு தெரியவா போகிறது என்று கள்ளத்தனமாக சிலர்.. ஓசியில் கிடைப்பதை விடவே கூடாது என்று சிலர்.. இப்படி சிலர் சிலராய் கூடி மொத்தமாக பலராய் நின்று குடிப்பது இப்பொழுது ட்ரெண்டிங்!!

 

 

சரி விடுங்க!! இந்த குடிமக்கள் எப்படியோ குடித்து விட்டு போகட்டும். நாம் நம் நாயகன் நாயகியை பார்ப்போம்..

 

 

இன்று டிரஸ் கோடி வெள்ளை என்று பீட்டர் முதல் நாளே அறிவித்து விட தாமரையிடம் வெள்ளை நிற சுடிதார் ஒன்றுமே இல்லை. பார்ட்டிக்கு புடவை கட்டி செல்வதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. வேறு வழியின்றி அவளிடமிருந்த ஆர்கன்சா வெள்ளைநிற புடவையை உடுத்திக் கொண்டு அதற்கு தோதாக முத்துமணிகளால் ஆனால் ஒற்றை பெரிய தோடு.. சங்கு கழுத்தில் வெண்ணிற முத்துமாலை ஒன்று மட்டும் அணிந்து.. முடியை மொத்தமாக தூக்கி பன் கொண்டையிட்டு ஆங்காங்கே சிறுசிறு கற்றைகளை வழிய விட்டு.. ஒப்பனை எதுவுமின்றி உதட்டு சாயத்தின் மேலே மெலிதாக ஒரு லிப் கிளாஸ்.. அவ்வளவுதான் தாமரையின் ஒப்பனை. ஆனால் அதீத ஒப்பனை இல்லாமலேயே இது அவளை வன தேவதையாக காட்டியது..

 

 

முந்தானையை ஒற்றையாக விட்டு கையில் சின்ன க்ளட்ச் உடன் அவள் மெல்ல நடந்து வர.. முந்தானை பின்பக்கமாக தரையில் தவழ்ந்து வந்தது அவளுக்கு இணையாக!! கூடவே கடற்கரை காற்றில் அவள் நடந்து வருவது ஏதோ ஒரு தேவதை பறந்து வருவது போலவே இருந்தது நமது ஜெர்ரிகின் கண்களுக்கு.

 

"ஏஞ்சல்!!" என்று மனதுக்குள் அவன் கூறிக்கொள்ள.. இப்போ தான் முதல் ரவுண்ட் உள்ளே போய் இருக்கு போல அவனுக்கு. அதனால ஒன்னும் தெரியல.. அடுத்தடுத்து ஆல்கஹால் உள்ளே போகும்

போது தான் தெரியும்.. அவள் தேவதையா இல்லை சந்திரமுகியா என்று!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top