7
கன்னத்தில் இடியென விழுந்த அடியில் நிலை தடுமாறி பெட்டில் விழுந்தவனுக்கு பொறி தட்டி, கண்கள் கலங்கி நாலாக தெரிந்தது எல்லாம் இப்போது ஒன்றாக தெரிந்தது.
"வாவ்.. வாட் அ மிராக்கிள்!! அமேசிங் அடி!!" என்று கன்னத்தை பற்றிக் கொண்டு புகழ்ந்தவன் நிமிர்ந்து பார்க்கும் போது அவள் அங்கே இல்லை.
ஒற்றை அடியில் அனைத்தும் ஒற்றாக தெரிந்த விநோதம் என்னவோ?? என்று யோசித்தபடியே தூங்கிவிட்டான் ஜெர்ரிக்.
அடி வாங்கியவன் என்னவோ நிம்மதியாக தூங்கி விட.. அடித்தவள் தான் படபடப்புடனும் உறக்கமின்றியும் தவித்தாள். ஏற்கனவே குற்ற உணர்வில் உழன்றவள், இப்போது அவனின் இந்த நட்பு நம்மை எங்கு கொண்டு போய் விடுமோ என்று பதறவே தொடங்கி இருந்தது அவளுக்கு மனம்.
மறுநாள் காலை மெதுவாக கண்ணைத் திறந்தவனுக்கு இடது கன்னம் சுள்ளென்று வலித்தது. மெதுவாக தடவி பார்க்கும் போது எரிந்தது. அப்பொழுதுதான் நிழல்களாக தாமரை அவனை தாங்கி தாங்கி அழைத்து கொண்டு வந்ததும்.. கதவை திறந்து உள்ளே வந்ததும்.. இவன் அவளுக்கு முத்தம் கொடுத்ததும்.. அதற்கு பதில் அவள் செம்மையாக கொடுத்ததும்.. டாட்டாய்ஸ் காயில் சுற்றாமலேயே நிழல் படங்களாக அவன் கண்முன்னே விரிய மெதுவாக சிரித்துக் கொண்டான்.
"ஆள பார்க்க பூனை மாதிரி இருந்தாலும்.. அடி இடி மாதிரி இருக்கு" என்று புலம்பினான்.
ஜஸ்ட் ஒரு நன்றிக்காக கிஸ் பண்ணுனதுக்கு இப்படி ஒரு அறையா?! என்று கைகளால் கன்னத்தை வருடியவாறு கண்ணாடி முன் நின்றவன் சற்று திகைத்து தான் போனான். அவனது கன்னம் பூரி போல் உப்பி இருக்க.. அதில் அவளின் மூன்று விரல்களின் தடங்கள் செந்நிற கோடுகளாக தெரிந்தது.
அர்னால்டு மாதிரி இருந்தவனை மூன்று கோடு போட்ட அணில் குட்டியாக மாற்றி விட்டாள்.
காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவன் திரும்பவும் மீண்டும் உடை அணியும் போது கண்ணாடியை பார்க்க.. இப்போது மெல்லிய கோபம் அவனுள். 'அப்படி என்ன ஒரு முத்தம் கொடுக்கிறதுல எல்லாம் அவளோட கற்பு போய்விடுமானு பயப்படுற சில்லி கேர்ள்!! கட்டுப்பட்டி?!' என்று திரும்பவும் திட்டியவன், காலை உணவை இரண்டு பிரெட் ஸ்லைஸ், முட்டை ஆம்லெட்டோடு முடித்துக் கொண்டான்.
மெல்ல அறைக் கதவைத் திறந்தவனுக்கு குளிர்ந்த பனி காற்று சில்லென்று வீச.. அறைக் கதவை மூடிவிட்டு இரு கைகளையும் நன்றாக தேய்த்துக் கொண்டான் சூடு பறக்க..
"இந்த வருடம் நல்ல குளிர்.." என்று தனுக்குள் பேசிக்கொண்டே வந்தவனுக்கு அப்போது தான் புரிந்தது, அவன் தூங்கும் போது ஹீட்டர் போட்டு இருந்ததை.. "பயபுள்ள அடிச்சா கூட குளிருல நடுங்கி செத்துருவானு ஹீட்டர் போட்டுட்டு போய் இருக்கா.. அவளுக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருக்கும் போல" என்று தாமரையை நினைத்து சிரித்துக் கொண்டவன் அவளை சென்று பார்த்து விட்டு வந்தால் என்ன? என்று தோன்ற மேலே ஒரு ஜெர்கினை மாட்டிக்கொண்டு அவள் வீட்டை நோக்கி சென்றான்.
ரைட்டு.. வான்டட்டா போய் வாங்கி கட்டிக்க போறான்!!
குளிருக்கு இதமாக இரு கைகளையும் அவனுடைய டிராக் ஃபைண்டல் விட்டபடி சென்றான். அவள் வீட்டு கதவை தட்ட.. வெகுநேரம் வரை எந்தவித பதிலும் இல்லாமல் போக.. 'ஒருவேளை இன்று விடுமுறை என்பதால் தூங்குகிறாளோ? போய்விடாலாமா? ஒரு எட்டு வைத்து திரும்பியவன், அவ சரியான லாக் புக் அப்படியெல்லாம் இருக்க மாட்டா.. ஒருமுறை ட்ரை செய்யவோம். பதில் இல்லையென்றால் திரும்ப சென்று விடலாம்' என்று அவன் கதவை தட்ட கை வைத்த அதே நேரம்.. கதவு திறக்கப்பட பார்த்தவளுக்கு அவன் அடிப்பது போலவே தெரிந்தது.
தாமரை அதிர்ந்து அவனையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்தவள்,
'நேற்று நாம் அடித்ததுக்கு இன்று நம்மை அடிக்க வந்துட்டான் போல' என்று நினைத்து, முகத்தை உடலோடு குறுக்கிக் கொண்டு பயந்த விழிகளோடு அவனை பார்த்தாள். அந்த விழிகளில் என்ன கண்டானோ? தூக்கிய கையை கீழே இறக்கி அவளை தான் அழுத்தமாக பார்த்தான்.
அவளை பார்த்துக்கொண்டே இவன் முன்னே வர.. அவளோ பின்னே பயந்தவாரே சென்றாள். ஒரு கட்டத்தில் அங்கிருந்து குட்டி டைனிங் டேபிளில் தட்டி அவள் நிற்க.. இவனும் நெருக்கமாக நெருங்கி அவளை கூர்ந்து பார்த்தான்.
மெல்ல அவள் முகம் நோக்கி குனிய தாமரை முகமோ வியர்த்து வழிந்தது
அந்த குளிரிலும்.. பற்றாக்குறைக்கு இதயம் அதிவேக குதிரையென ஓட கண்களிரண்டும் பயத்தில் சாசர் போல விரிய..
இதழ்கள் இரண்டும் தொட்டுவிடும் தூர நெருக்கத்தில் வந்தவன், சட்டென்று திரும்பி தனது கன்னத்தை அவளிடம் காட்டினான்.
"என்னது இது? ம்ம்ம்.. ஜெஸ்ட் ஒரு நன்றிக்காக உன் கன்னத்துல கிஸ் பண்ணினா?? அதுக்கு இப்படியா பதில் வெல்கம் பண்றது. இது வரைக்கும் என்னை யாரும் இந்த மாதிரி அடித்தது கூட இல்லை. பாரு! பாரு! நல்லா பாரு!! எப்படி ரெட்டீஸ்ஸா இருக்கு பாரு!!" என்று கோபமாக பேசியப்படியே காட்ட..
அந்த சிவந்து வீங்கி போன கன்னமும் மூன்று கோடுகளாக தெரிந்து தடங்களும் அவளுக்கு பழைய நினைவுகளை ஊட்ட.. சட்டென்று தலையசைத்து அதிலிருந்து மீண்டவள், அவன் புறம் திரும்பி "சாரி!!" என்று மெலிதாக முணுமுணுத்தாள்.
"அப்படி என்ன ஒரு கிஸ்ல உன் கற்பு போய்விடும்??" என்று அவன் கேட்க..
அதுவரை கொஞ்சம் அதிகமாக நடந்து கொண்டோமோ என்று பயத்தில் இருந்தவள், இந்த கேள்வியில் அவை அனைத்தும் தவிடு பொடியாக அவனை கோபமாக பார்த்தாள்.
"உங்களுக்கு வேணா இந்த மாதிரி கட்டிப் பிடிக்கிறது கிஸ் அடிக்கிறது இதெல்லாம் சகஜமாக இருக்கலாம் ஆனால்.. எனக்கு.. எங்க கல்ச்சர்ல பிறந்து வளர்ந்த எனக்கெல்லாம் அது சாதாரணம் கிடையாது. இன்னொரு தடவை இந்த மாதிரி எல்லாம் என் கிட்ட நெருங்க முயற்சி பண்ணுனீங்க??" என்றவள் அவனின் அடுத்த கன்னத்தையும் குறிப்பாக பார்க்க..
"ஓ.. அந்த கன்னத்திலும் அடிச்சிடிவியோ?" என்று நக்கலாக கேட்டான்.
"ஆமாம் இப்போ என்ன சொன்ன கல்ச்சர்?? எங்க கல்சர் உங்க கல்ச்சரை விட அப்படி என்ன தாழ்ந்து போச்சு. விகர்ப்பம் இல்லாமல் அன்போடு கட்டிப் பிடிக்கிறது.. அதே அன்போடு பாசத்தோடு கன்னத்தில் முத்தம் வைப்பதும்.. அப்படி ஒன்னும் கற்பு போற அளவுக்கு பெரிய விஷயமில்லை.
இந்தியன்ஸ் நிறைய பேர் கூட தான் அப்படி இருக்காங்க.. நீதான் ஏதோ பெரிய கல்ச்சர் கல்ச்சர்னு புலம்பிக்கிட்டு திரியுற" என்றான் ஆத்திரதோடு..
மனதில் கட்டிப்பெட்டி!! கட்டிப்பெட்டி!! என்று திட்டவும் செய்தான்.
"எது? கல்யாணம் ஆகாமலே ஒன்னா சேர்ந்து இருக்கிறது.. ஏதோ திங்ஸ் ஷேர் பண்ற மாதிரி பெட் ஷேர் பண்றது இதெல்லாமா?" என்று அவனுக்கு குறையாத ஆத்திரத்தோடு நக்கலாக கேட்கவளுக்கு தெரியவில்லை.. எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றி விட்டோம் என்று!!
"லிவ்விங் டுகெதர்ல நாங்க இருக்கும்போது எங்க பேரண்ட்ஸ் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு தான் இருப்போம். கல்யாணம் என்கிற கமிட்மெண்ட் இருந்தாலும்.. கமிட்மெண்ட் இல்லாமல் லிவிங் டுகதர் இருந்தாலும் நாங்க எப்பவும், எங்க பார்ட்னருக்கு உண்மையா தான் இருப்போம்.
அடுத்த பொண்ணை கூட பிரண்ட்லியா தான் பார்ப்போமே ஒழிய வல்கரா இல்ல.. ஆனா... பெரிய கல்ச்சர் கல்ச்சர்னு சொல்ற.. உங்க கல்ச்சர்ல கல்யாணம் பண்ணி வீட்ல வொய்ப் இருக்கும்போது கூட எத்தனை கீப் வச்சிருக்காங்கன்னு நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அப்புறம் என்ன சொன்ன? பெட் ஷேர் பத்தி??
இதுக்கு ஆன்சர் நானும் கொஞ்சம் கிரீனியா சொல்லிடுவேன்!!" என்று இதுவரை இல்லாத அளவு அவனின் ஆறடிக்கு உயர்ந்து நின்று ஆவேசமாக பேசியவனை கண்டு பதறி தான் போனாள் தாமரை.
"என்ன எல்லார்கிட்டயும் கேஷுவலா பிரெண்ட்லியா பழகுறதுனால என்னை அவ்வளவு இளப்பமா பிளேபாய் ரேஞ்சுக்கு கற்பனை எல்லாம் பண்ணி வச்சிருக்கியா?" என்று கேட்டவன் அவள் கண்களை உற்று நோக்கி விரல் நீட்டி பத்திரம் காட்டி விட்டு சென்றான்.
கதவருகே சென்றவன் மீண்டும் வேகமாக திரும்பி வந்து..
"நான் எப்போதும் இவ்வளவு அரகெண்டா ஹார்ஷா யார்கிட்டயும்.. குறிப்பா பெண்கள் கிட்ட நடந்து கிட்டதே கிடையாது" என்றவன், அவளது தாடையை அழுத்தமாக பற்றி "நேத்து நைட், ரைட் சிக்ல தானே கிஸ் பண்ணினேன்.. அம் ஐ ரைட்?" என்றவன் அழுத்தமாக அவளது இடது கன்னத்தில் கற்றை மீசை குத்த, அழுத்தமாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தான், "இனி என் வழியில வராதே.. என்னை அரக்கனா மாத்தாதே!!" என்று வேகமாக அவள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
இடி இடித்து பெருமழை பெய்து ஓய்ந்தது போல அமைதியாக இருந்தது தாமரையின் வீடு அப்போது.
அவன் செய்த செயலின் வீரியத்தை தாங்க முடியாமல் அந்த டைனிங் டேபிளுக்கு அடியில் குறுக்கி அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து அழுது தீர்த்தாள் தாமரை.
தன் வீட்டுக்கு வந்தவன் தன்னையே திட்டி கொண்டான். " உனக்கு அறவே இல்லை ஜெர்ரி!!". இப்படி எல்லாம் அவளிடம் நடந்து கொள்ளும் எண்ணமும் அவனுக்கு இல்லை. சாதாரணமாக பேசிவிட்டு இனி இது போல் நடக்காது என்று கூறி விட்டு வரலாம் என்றுதான் அவன் சென்றதே.. ஆனால் அவள் பேச.. பதிலுக்கு இவன் பேச.. என்று கடைசியாக என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று பிடரியை வருடிக் கொண்டன் அதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க மூச்சு முட்டுவது போல உணர்ந்து, தனது லாங்க் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.
இது ஒரு வசதி ஆண்களுக்கு.. ஆனா ஊனா என்றால் உடனே வெளியில் சென்று விடுவார்கள்!!
ஆனால் பெண்களுக்கு.. என்னதான் முட்டி முட்டி சண்டை போட்டாலும்.. கோபம் கொண்டு வெளியே எல்லாம் செல்ல மாட்டார்கள். அவர்களின் ஆஸ்தான இடமான அவர்களது அறையிலோ.. இல்லை கிச்சனிலோ தான் அடைந்து கொள்வார்கள்!!
மறுநாள் அலுவலகத்தில் இருவரும் பார்த்துக் கொண்டாலும் ஏதோ முன் ஜென்ம விரோதிகள் போலவே இருவரும் பார்வையை திருப்பிக் கொண்டனர்.
'எல்லாம் அவன் செய்திட்டு என்னவோ நான் தப்பு செய்த மாதிரி மூஞ்சிய தூக்கி வைச்சி கிட்டு திரியுறான்' என்று இவள் மனதுக்குள் அவனை போட்டு வறுத்து எடுக்க...
'கன்னத்துல நல்லா கோடு போட்டு வெச்சு இருக்கா.. இப்போ பாக்குறவங்களுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லனும். எவ்வளவுதான் அதுமேல கோட்டிங் போட்டாலும் லைட்டா அந்த மூணு கோடு தெரியுதே?? செய்யுறதை செய்திட்டு மூஞ்சிய பாரு, பாவமான பூனை மாதிரி.. சரியான சண்ட பூனை.. டாம்!! கட்டுப்பெட்டி!! கட்டுப்பெட்டி!!" என்று அவளை அவன் பொரித்தெடுக்க..
டாம் அண்ட் ஜெர்ரி இன் கேம் இனிதே தொடங்கியது. அதன் பின் அன்றைய டிரெய்னர்ஸ் அனைவரையும் பார்த்து "ஒன் வீக் முடிஞ்சிடுச்சு நீங்க உங்க ப்ராஜெக்ட் பற்றிய ஒரு ஐடியா ரெடி பண்ணி இருப்பீங்க. அதை ஒவ்வொருத்தரா இங்கே வந்து பகிர்ந்து கொள்ளலாம்" என்று கூற..
மீண்டும் இவர்களின் பார்வை ஒன்றை ஒன்று குற்றம் சொல்லிக்கொண்டு முட்டிக்கொண்டு நின்றது.
ஒவ்வொருத்தராக அவர்களது பிராஜக்ட் பற்றிய ஐடியாக்களை மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக வந்து அமர.. அவர்கள் முறை வந்த உடன் ஜெர்ரிக் நக்கலுடன் அவளைப் பார்த்தான்.
அவனது பார்வைக்கு சளைக்காமல் மறு பார்வை பார்த்தவளின் உதடுகள் சுழிய, அவன் எனன்வென்று யோசிக்கும் முன்னே மேலே ஏறியவள், அவர்கள் ப்ராஜெக்ட் என்று கூறி ஒன்றை விளக்க.. அங்கிருந்த டிரைனரும் பீட்டரும் "குட் டாம்" என்றதுடன், ஜெர்ரிகை பார்த்து "நீங்களும் ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லலாம் ஜெர்ரிக் ப்ராஜெக்ட் பற்றி" என்று அவனை அழைத்தார்கள்.
அவனுக்கு தெரிந்தால் அல்லவா சொல்ல??
தாமரை மாட்டினியா? என்பது போல அவனை கண்களில் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றாள். மேடை ஏறியவன், அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. "எல்லா விஷயத்தையும் நாங்க இங்கே சொன்னால், அப்புறம் எங்க ப்ராஜக்ட்க்கான கோட்ஸ் வேற யாராவது யூஸ் பண்ணிட்டாங்க என்ன பண்றது பீட்டர்?" என்று கேட்டவனின் சமயோஜித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை தாமரையால்!!
"டாம்!! இந்த அளவுக்கு நீங்கள் விளக்கி இருக்க தேவையே கிடையாது. ஜஸ்ட் ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லியிருந்தால் போதும். எப்படியும் ப்ராஜெக்ட் முடித்தவுடன் அதை பற்றி பிரசெண்டேஷன் கொடுக்க தானே போறோம்" என்று அவளுக்கும் சேர்த்து குட்டு வைத்து விட்டு தன் இடத்திற்கு வந்து அமர்ந்தவன் பார்வை அவளை பார்த்து நக்கலடித்தது, என்னை அவ்வளோ சீக்கிரம் மாட்டிவிட முடியாது என்று!!
அடுத்த இரண்டு மூன்று நாட்களும் இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக சாரி சாரி டாம் அண்ட் ஜெர்ரி ஆக பார்வையாலேயே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அன்று தாமரையும் ரெக்ஸியும் காஃபிடேரியாவில் மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, அவர்களை கடந்து சென்று ஜெர்ரிக்கை பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தாள் தாமரை. அவன் சென்று அமர்ந்த பின்னும் அவளின் பார்வை தொடர்வதை பார்த்த ரெக்ஸி..
"என்னாச்சு டாம்? ஜெர்ரிக்கை அப்படி ஒரு பார்வை பார்க்கிறாய்?" என்று நக்கல் அடிக்க..
எங்கே அவள் தன்னை தவறாக புரிந்து கொண்டாளோ என்று பயந்து "சீச்சீ எனக்கு அவன் மேல எந்த தாட்.. இன்ட்ரஸ்ட் இல்லை" என்று கூறியவள் தன் முன்னே இருந்த பாஸ்தாவை அளந்து கொண்டிருந்தாள்.
"ஹா.. ஹா.. நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட டாம்" என்று வாய் விட்டு சிரித்தாள் ரெக்ஸி. அவளின் சிரிப்பில் காஃபிடேரியாவில் இருந்த அனைவரும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு தங்கள் வேலையில் ஈடுபட.. அருகில் இருந்த தாமரை அவள் கையை தட்டி தட்டி "போதும்!! போதும் ரெக்ஸி!! ரொம்ப சிரிக்காத!! எல்லாரும் நம்மளைத்தான் பார்க்கிறார்கள்" என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இவள் கடிய..
"சாரி டாம்!! என்னால சிரிக்காம இருக்கவே முடியல" என்று மீண்டும் சிரித்தாள்.
சட்டென்று முகம் வாட அமைதியாக அமர்ந்திருந்த தாமரையைப் பார்த்து "சும்மா சொன்னேன் டாம். இதை போய் சீரியஸ்ஸா எடுத்துப்பியா?" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றாள் ரெக்ஸி.
"நான் ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்றேன்னா ரெக்ஸி!!" என்று ஸ்பூனால் சாப்பாட்டை அளந்து கொண்டே தாமரை கேட்க.. அதில் ரெக்ஸிக்கு மனம் என்னவோ போல் ஆனது.
"அப்படி இல்ல டாம். ஒவ்வொருத்தவங்க மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும் இல்லையா? கூடவே அவங்க வளர்ந்த சூழ்நிலை தான் அவங்க பார்க்கிற விஷயத்தை அவர்களுக்கு புரிய வைக்கும். சரியா?" என்று அவளை தேற்றியவள், "சரி சொல்லு.. உனக்கும் ஜெர்ரிக்கும் என்ன பிரச்சனை? என்று கரெக்டாக அவள் பாய்ண்டை பிடிக்க..
அதற்கு மேல் எதையும் மறக்க விரும்பாத தாமரை அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள். கூறிவிட்டு தப்பு செய்த பிள்ளை போல் அவளை பார்க்க.. "நிஜமாவே நீ எந்த மாதிரி சுவிட்ச்வேஷன்ல வளர்ந்தேன்னு எனக்கு தெரியல டாம். நீ எதையும் என்கிட்ட இதுவரை பகிர்ந்தது கிடையாது. ஆனா என்னால ஒன்றை மட்டும் நிச்சயமாக கூற முடியும். ஜெர்ரிக் உன்னை முதன் முதலில் முத்தமிட்டதில் எந்தவித உள் அர்த்தமோ.. அனர்த்தமோ இல்லை.. நீ செய்த உதவிக்கு அவர் தாங்க் பண்ணி இருக்கார். தட்ஸ் ஆல்!!" என்று விளக்கினாள்.
"ஆனால் இது எல்லாம் எனக்கு பழக்கமில்லை ரெக்ஸி!!" என்று அவள் கூற..
"நீ அதை பொறுமையா அவர்கிட்ட சொல்லி இருக்கலாம். அடுத்த முறை கண்டிப்பா உன்கிட்ட அவர் எல்லை தாண்டி இருக்க மாட்டார். நீயே வீணா அவனை சுரண்டி விட்டுட்ட.." என்றாள்.
"விடு டாம். உனக்கு தெரியல தானே" என்று ரெக்ஸி கூற இருவரும் தங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் தங்கள் டெஸ்கில் அமர..
அவ்வப்போது தன்னை திரும்பி திரும்பி பார்த்து டிரெய்னிஙை கவனித்துக் கொண்டிருந்த தாமரையை, அவன் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் அவன் கீழ் உதடோ மீசைக்கு அடியில் சிரிப்பில் குலுங்கியது.
மறுநாள் காலை.. வெள்ளிக்கிழமை.. அன்று இவர்கள் செல்லும் போது லிப்ட் கூட்டம் ஆக இருக்க, முதலில் ஏறிய தாமரையின் முன் நின்றான் ஜெர்ரிக். கூட்டத்தில் இருந்து காப்பது போல, லிஃப்டில் ஜெர்ரிக்கின் கை சிறையில் மாட்டிக் கொண்டாள் தாமரை.
அவளின் அந்த கஸ்தூரி மஞ்சள் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தவன், "கேளு டாம்" என்றான் கிறங்கிய குரலில்..
"என்..ன.. என்ன.." தந்தி அடித்தது தாமரையின் குரல்.
"சாரி தான்!! நேற்றிலிருந்து என்கிட்ட சாரி சொல்லணும் நீ துடிக்கிறது எனக்கு தெரியுது. அதை தான் கேளு" என்றான் இரு கைகளாலும் அவளை சிறைப்பிடித்து.
நேற்று ரெக்ஸியின் பேச்சை கேட்டு அவனை அறைந்தது தவறுதான் என்று வருந்தி மன்னிப்பு கேட்கத்தான் நினைத்தாள் தாமரை. ஆனால் அதை அவன் தெரிந்துகொண்டு, இன்று கேளு என்று சொன்னவனிடம், சாரி கேட்க அவளது அந்த ஈகோ தடை செய்தது.
போடா.. முடியாது என்ற முக பாவனையில் தாமரை!!
கேட்டே ஆகவேண்டும் என்ற தோரணையில் ஜெர்ரிக்!!
அதற்குள் அவர்கள் தளம் வந்துவிட, ஒவ்வொருவராக இறங்க அவன் மார்பில் தன் முழங்கையால் ஒரு இடி இடித்தவள், உதடுகளை வளைத்து சுழித்து அவனிடம் காட்டி விட்டு சென்று விட்டாள்.
வளைந்து சுழித்த அந்த செவ்விதழ்களை விழுங்கும் ஆவேசமே வந்ததது ஜெர்ரிக்கு!!
"இரு டாம் உன்னை சாரி சொல்ல வைக்கிறேன்!!" என்று மனதுக்குள் சபதம் எடுத்தவன், அடுத்த வந்த சனிக்கிழமை பார்ட்டி முடித்து.. தண்ணீரில் மிதந்து
கொண்டு,
"ப்பா!! இந்த டாம்மை கரெக்ட் பண்ண.. அதாம் பா.. லவ் பண்ண ஐடியா சொல்லு" என்று தன் தந்தையும் தமிழருமான அரங்கநாதன் ஜோன்ஸிடம் புலம்பிக் கொண்டிருந்தான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
