தூகை 44

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 306
Thread starter  

44

 

இன்று..

 

 

“இப்படி நைட்டு முழுசும் தூங்காம கண்ணு முழிச்சு நிலாவ வெறிச்சு வெறிச்சு வச்சு பாத்துட்டு இருந்தா நீங்க நல்லவன் ஆயிட்டீங்கன்னு அர்த்தமா?” என்று கேட்ட மனைவியின் குரலை அந்நேரம் எதிர்பார்க்காமல் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் ஆதவ் நிரஞ்சன்.

 

சகோதரிகள் வந்து சென்ற பின் பிரேமாவின் முகம் மிகவும் வாடி இருந்தது. 

 

“உங்களுக்கு இங்க இருக்க பிடிக்கலையா மா? வசதி படலையா? உங்க பொண்ணுங்க சொன்ன மாதிரி அந்த வீட்டுக்கு போய்டுறீங்களா?” என்று மகன் கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவர்,

 

“அவ்ளோ பெரிய வீட்டுல தனியா இருக்க தான்டா எனக்கு கஷ்டமா இருக்கும் ஆதவா.. இங்கே இல்ல. எப்படி இன்னும் கொஞ்ச நாள் அடுத்த பேரனோ பேத்தியோ வந்துருவாங்க.. எனக்கு நேரம் சரியா ஓடிடும்” என்று சிரித்தார்.

 

“என் கவலை அது இல்ல..! ஆரம்பத்தில இருந்தே மகளுங்க மருமக கிட்ட ஒரு பிணைப்பை சுமூக தன்மையை ஏற்படுத்தி இருக்கனும் நான் தப்பு பண்ணிட்டேன். இப்ப அத நினைச்சு வருத்தப்படுறேன்” என்றதும் அன்னையை ஆச்சரியமாக பார்த்தான் நிரஞ்சன்.

 

“உண்மைதானே ஆதவா.. வதனி உன்னை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு வரும்போது வெறும் கையோட வந்தா‌‌.. சீர் செனத்தி இல்லாம வந்தா.. போட்டோ உடுப்போட வந்தா.. அப்படி இப்படின்னு நான் ஆயிரம் காரணம் அடுக்கினேன் அவள குத்தம் சொல்ல..! ஆனா.. எனக்கு ஒன்னு தான் அவ தான் பார்த்தா.. நாளைக்கு என் புள்ளைங்களுக்கு பிறந்த வீடான அவ தானு அப்ப நான் மறந்துட்டேன்.. இந்த புத்திக்கு தெரியல.. இப்ப புரியும்போது என் சொல் பேச்ச இவளுங்க கேட்க மாட்டேங்கிறாங்க.. இது எங்க போய் முடிய போகுதோ?” என்று பெரும் மூச்சு விட்டார்‌.

 

“அம்மா இதுக்கா கவலைப்பட்டீங்க இதெல்லாம் ஒரு விஷயமா? எந்த வீட்ல இந்த மாதிரி பஞ்சாயத்து இல்லாம இருக்கு சொல்லுங்க? வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.. ஆர்த்தி நிர்மலாவையோ அவங்க பிள்ளைகளையோ எப்பொழுதும் நாங்க விட்டுட மாட்டோம். நீங்க கவலைப்படாதீங்க..!” என்று மனைவியையும் கூட்டு சேர்த்துக் கொண்டான்.

 

மறுபடி இல்லை என்ற தலையசைத்தவர் “எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியும். என் வருத்தம் எல்லாம் நீங்க விட்டுட மாட்டீங்கன்னு இல்லை. அவளுங்க வாயை விட்டுடுவாளங்களேனு தான்” என்றார் வார்த்தைகளில் வருத்தம் இழையோட..

 

“என்னம்மா ஏதாவது சொன்னாங்களா? என்னம்மா பிரச்சனை?” என்று இப்பொழுது தாயின் அருகே அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக் கொண்டான். 

 

அப்பொழுதுதான் உணர்ந்தான் பிரேமாவின் கைகள் அப்படி நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஏதோ பயத்தை கட்டுப்படுத்துவது போல அமர்ந்திருக்கிறார் என்று புரிந்தது.

 

‘இதுவும் பிரச்சனை பெரிசோ?’ என்று நினைத்தவன் “ஏம்மா உங்க கை இப்படி நடுங்குது? என்ன ஆச்சுமா?” என்று பரிதவிப்போடு கேட்டான்.

 

இதற்கு மேல் மகனிடமும் மறக்கக்கூடாது கூறித்தான் ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தவர், 

 

“அது.. அது.. வந்து.. அவளுங்க ரெண்டு பேரும் வந்து.. வதனிய.. தப்பா பேசுறாங்க” என்றார். அதற்குள் அவருக்கு வியர்த்தே விட்டது.

 

“என்னம்மா சொல்றீங்க?” என்று அவன் அதிர்ந்து கேட்க..

 

“அது உன்னோட வதனி சண்டை போட்டு அவ தனியா வந்துட்டாளா.. கிட்டத்தட்ட ரெண்டு மூணு மாசம் இருக்குமா?” என்றதும் ஆம் என்று தலை அசைத்தான் நிரஞ்சன் எதுவோ புரிவது போல..

 

“இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குறை சொல்லும் போது நான் தான் சொன்னேன். வதனி கர்ப்பமா இருக்கா.. கொஞ்ச நாள் அவங்க கூட தான் இருப்பேன். அப்ப சொல்றாளுங்க.. வந்து.. வந்து.. வதனி.. அவதான் ஆத விட்டு தனியாக வந்திட்டாளே அப்புறம் எப்படி குழந்தைனு?” என்று ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறிவிட்டார். 

 

மகள்கள்தான் ஆனாலும் மருமகளை பற்றி தப்பாக பேசியதும் அந்த தாயுள்ளம் தவித்தது. என்ன இருந்தாலும் மகள் மருமகள் தாண்டி அவரும் ஒரு பெண் அல்லவா? 

 

அதனால் “என்னடி உளறீங்க இரண்டு பேரும். ஏதாவது இட்டுக்கட்டி பேசுனீங்க.. நானே உங்கள தள்ளி வைச்சிடுவேன். ஏன் டி ஆர்த்தி உனக்கு ரெண்டு பொம்பள புள்ள இருக்க தானே இப்படித்தான் நாக்கு மேல பல்லு போட்டு பேசுவியா? இன்னொரு தடவை எம்மருமகள பத்தி ஏதாவது பேசினீங்க‌‌.. பேச நாக்கு இருக்காது”என்று கொதித்து விட்டார் பிரேமா. 

 

அவருக்கு ஆசையாக வளர்த்த ஒற்றை மகன் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து வந்தது தான் பெரும் குற்றம். அதிலும் ஒன்றுமில்லாமல் வதனி வந்தது சொந்தக்காரர்கள் முன் அவமானமாக்கியது இன்னும் குற்றமே தவிர.‌‌. பிடிக்காது என்று இல்லை. அவர் எனன சாடினாலும் திட்டினாலும் பொறுமையாக இருக்கும் மருமகள் அவருக்கு பிடித்தம் தான்.

 

அதைவிட பிடித்தமோ பிடித்தமோ இல்லையோ? ஒரு பெண்ணைப் பற்றி அபாண்டமாக பேசுவது தப்பல்லவா? பெரும் குற்றமல்லவா? என்று பதறியது பிரேமாவின் நெஞ்சு..!

 

இவையெல்லாம் அன்று ஆதவன் வெளியே சென்றவுடன் இவர்கள் மூவரும் பேசிக் கொண்டது. வதனியும் உள்ளறைக்கு கதவடைத்து சென்று விட்டதால் அவளும் அறியவில்லை. 

 

அம்மா கூறியதை ஒரு நிமிடம் ஏற்க முடியாமல் தவித்தவன் அடுத்த நிமிடம் வெகுண்டு எழுந்தான். 

 

“இப்பவே அவளுங்கக்கிட்ட கேட்டுட்டு வரேன் என்ன நெனச்சிட்டு இருக்காளுங்க? என்ன வேணாலும் பேசுவாளுங்களா என் பொண்டாட்டிய பத்தி. இனி அவளுங்க இரண்டு பேரும் எனக்கு கூட பொறந்தவங்களே கிடையாது” என்றவன் கைப்பற்றி அடக்கி அமர வைத்தார் பிரேமா.

 

“ஆதவா இது அவசரப்பட்டு பேசுற விஷயம் கிடையாது. நானே அவளுங்கள அடக்கி தான் அனுப்பி இருக்கேன்.. நீ போய் இப்படி பேசினா.. என்னன்னு கேட்டா.. அதுவும் சம்பந்த வீட்டுக்காரங்க கேட்டா.. அது இன்னும் பெரும் பிரச்சனையாகும். சும்மாவே நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறது ஏன் எதுக்குனு ஒரே கேலி கூத்தா ஓடுது. அதுல இதுவும் சேர்ந்து இன்னும் பிரச்சனையாகும். வேண்டாம்..! வதனி பெயர்தான் கெடும்..! ஏதோ மனஸ்தாபம் பிரிஞ்சு இருந்தீங்க இப்ப சேர்ந்துட்டீங்க அதோட விட்டுறு டா ஆதவா..” என்று இன்றைய சமூகத்தின் அவல நிலையை கூறி அதுவும் உறவினர்களின் நரம்பில்லா நாக்கு பேசும் வஞ்சனை வன்மச் சொற்களை எடுத்துக்காட்டி மகனை கட்டுப்படுத்தி இருந்தார் பிரேமா. 

 

அதையெல்லாம் நினைக்க நினைக்க அவனுக்கு இரவு தூக்கமே வரவில்லை. 

 

தான் செய்த ஒரு அனர்த்தத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நினைத்து அவனுக்கு அத்தனை பாரமாக இருந்தது மனது. 

 

அதிலும் மேகா பிள்ளை உண்டாக்கி இருக்கும் இந்த சமயத்தில் இந்த பேச்சுக்கள் அவளை இன்னும் தூண்டி விடுமே.. குழந்தையை ஏதும் செய்து விடுவாளோ? இல்லை இவ்வளவு மன உளைச்சல் தாங்க முடியாமல் அவள் ஏதேனும் செய்து கொள்வாளோ?” என்று நினைத்தவனுக்கு பொட்டு தூக்கம் கூட வராமல் வெளியில் உலாத்திக் கொண்டிருந்தான்.

 

 மீண்டும் குழந்தையின் ஞாபகம். “மேகா குழந்தையை பெத்துக்குவாளா இல்ல கலைக்க போறேனு மறுபடியும் ஏதாவது லூசு தனமா பண்ணுவாளா? ஆண்டவா..! என் தப்பால் என் குழந்தை பாதிக்கப்படாம காப்பாத்து..! எப்படி இருந்த என் வாழ்க்கை என்னோட தப்பால இப்படி மாறிடுச்சே..!” என்று தூக்கம் வராமல் அவர்கள் வீட்டு வராண்டாவில் நின்று இருளை வெறித்துக் கொண்டு இருந்தான் நிரஞ்சன்.

 

சட்டென்று இப்படி மேகவதனி வருவாள் என்றோ‌‌.. தன்னிடம் பேசுவாள் என்றோ‌.. அவன் எதிர்பார்க்கவில்லை.

 

“ம்ப்ச் இல்ல மேகா..! நான் நல்லவன் இல்லை தான். நானே ஒத்துக்குறேன். இன்னும் யாருகிட்ட ஒத்துக்க சொல்றியோ அவங்க கிட்டேயும் வந்து ஒத்துக்குவேன்” என்று அவன் தழைய..

 

“பேசுறது மட்டும் அப்படியே நல்லவனாட்டம். ஆனா.. செய்றது எல்லாம்..??” என்று அவள் கோபமாக பேச..

 

“ப்ளீஸ் மேகா.. நீ கோபப்படாத..! என்றதும் அவள் முறைக்க..

 

“இல்லை இல்லை.. நீ கோபப்பட்டு ஸ்ட்ரஸ் ஆனா உனக்கு தான் உடம்புக்கு முடியாம போகும். அதுக்காக தான் சொன்னேன்” என்றான்.

 

இருட்டில் அவனை முறைத்தாள். அவனோ அவளையே பார்த்தான்.

 

“நான் ஸ்ட்ரெஸ் ஆனா.. கோபப்பட்டா என் உடம்புக்கு பிரச்சனையா இல்ல என் வயித்துல இருக்குற உங்க குழந்தைக்கு பிரச்சனையா?” 

 

கண்டு கொண்டாளே..!

 

“எனக்கு ரெண்டு பேருமே முக்கியம் மேகா. ஆனால் குழந்தையை விட நீதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ப்ளீஸ் நீ ஸ்ட்ரெஸ் ஆகாத” என்று இன்னுமே தழைந்து பேசினான்.

 

”ஓஓ.. அப்ப நான் டிரஸ்சாக கூடாது இல்ல. சாரு என்ன பண்ண போறாரு அதுக்கு.. ?”

 

“நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிற சொல்லு. நான் அதை பண்றேன்..”

 

“நீ ஏன் கண்ணு முன்னால நிக்கிற தான் எனக்கு ஸ்ட்ரெஸ் ஆகுது. உன்னை பார்த்தாலே எனக்கு துரோகம் செஞ்ச.. நம்பிக்கை உடைஞ்சது ஞாபகம் வந்து, என்னை கோபம் கோபமா வருது. உன்ன பாக்கவே எனக்கு முதல்ல புடிக்கல..” என்றாள் அழுத்தம் திருத்தமாக..

 

இரு கைகளால் முகத்தை நன்கு அழுந்தத் துடைத்தவன்

 

”நாளைக்கு காலைல கிளம்பிருவேன். அப்படின்னு சொல்ல தான் எனக்கு ஆசை.. ஆனா உன்னை இந்த நிலைமையில் என்னால விட்டுட்டு போக முடியாது. கொஞ்ச நாள் என்னை பொறுத்து தான் ஆகணும் நீ” என்றான் தீர்மானமாக..

 

அவள் பேசவில்லை. ஒரு பெருமூச்சு விட்டாள். நிரஞ்சன் அவள் பக்கத்தில் நெருங்கி நின்று கையைப் பிடித்தான். அவளோ கையை உதற…

 

”உன்னை ரொம்ப ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல? சாரி.. மேகா.. சாரி மேகா.. சாரி..!!” மன்னிப்புக் கேட்டான்.

 

அவள் ஒன்றும் பேசவில்லை. ஏதோ யோசித்தபடி அமைதியாகவே இருந்தாள். மனைவியின் அருகில் வெகு அருகில் நிற்கிறான், வெகு நாட்கள் கழித்து, அதுவே அவனுக்கு போதாமானதாக இருக்க.. இந்த கொடுப்பினையும் கெடுத்துக் கொள்ள மனம் வராமல் “குட் நைட் மேகா.. வா தூங்கலாம்” என்று முன்னே நடந்தான்.

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top