Share:
Notifications
Clear all

மயக்கம் 11.2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 290
Thread starter  

அத்தியாயம் 11.2

 

“மை ஸ்வீட் சில்லா..!” என்று கொஞ்சியது மனம்.

 

நேற்று இரவு தனக்காக அமர்ந்திருந்தாள்.. அதுவும் நண்பர்களுக்காக அத்தனை வேலை செய்து தூக்க கலக்கத்திலும் பெரும் களைப்பிலும் கண்ணைத் துடைத்து துடைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்த விதமே.. அவனை இன்னும் அவளுள் விழச் செய்தது. 

 

மனதில் முகிழ்த்த அந்த புது வித உணர்வை என்னவென்று அவனால் வரையறுக்க முடியவில்லை. ஆனால் மனது முழுக்க கிருத்தியும் அவளது நினைவுகளும் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவளை நினைக்கும் போதே அவன் கை முடிகளும் கழுத்தில் உள்ள பூனை முடிகளும் சட்டென்று நிமிர்ந்து கொள்வதைப் போல தோன்ற.. இந்த புது அவஸ்தையை தாங்க முடியாமல் கையால் சிகையை கோதி.. பிடறியை தடவி.. பின் கழுத்தை நீவி என்று ஏகப்பட்ட அலம்பல் செய்து கொண்டே அவன் வேலைக்கு கிளம்பி நிற்க… அவளோ அவன் வீட்டு வாயிலில் வந்து நின்றாள்.

 

 

அதிலும் காலையில் வந்து இவனையும்.. அவள் அழைக்க.. அவளை அணைத்து “ரொம்ப தாங்க்ஸ் டி சில்லா..! நேற்றைய இரவுக்கு” என்று கூற விழையும் கைகளையும் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு குறுக்கே இருந்த லேப்டாப் பேக்கை இறுக்கமாகப் பற்றி இருந்தான்.

 

ஆனாலும் அவள் பேசிய விதம்.. அவளது சோபையான காலை அழகு.. அவனை ஏதாவது செய் டா என்று உந்த.. 

 

‘அவளை லேசாக பரிசித்தால்.. கூட போதும் எனக்கு..’ என்று ஆழ்மனம் அவனை பாடாய்ப்படுத்த.. அதன் விளைவு நடக்கும் போது அவள் ஏதோ குறுக்க வந்ததால் தூக்கி ஓரமா வைத்தது போல இடையோடு அணைத்து ஒரு சுழற்றி சுழற்றி கீழே வைத்தவனுக்கு, அவளது அழகுமுகம் கண்ணுக்கு அருகே விருந்து அளிக்க எதார்த்தமாக நடப்பது போல தான் அவளை லேசாக பதார்த்தம் பண்ணி விட்டு கிளம்பி இருந்தான். 

 

அவளை பரிசித்த அந்த நொடியில் இருந்து

யாருக்குமே அவளை கொடுக்கக்கூடாது என்றும்.. இனி அவள் கண்களில் இருந்து ஒரு துளி நீர் கூட விழக் கூடாது என்றும் என்னென்னவோ ஞாபகங்கள் அவனை கூட்டிக்கொண்டு சென்றது அவளுக்குள்!!

 

லயா..!! லயா..!!

எங்கும் லயா!!

எதிலும் லயா!!

விதவிதமான ஸ்வரங்களில்.. 

விதவித ஆலாபனைகளில் லயமாய் லாளிதமாய் அவனுள் லயித்து விட்டாள் லயா.

 

அவனுக்குள் சிலிர்த்தான்!!

அவனுக்குள்ளேயே சிரித்தான்!!

 

வானவில் போன்று அவன் முகத்தில் தோன்றிய இந்த  வண்ண ஜாலங்களுக்கு சொந்தக்காரி அவள் ஒருத்தியே.. அவள் கிருத்தி!!

 

அன்று இரவு உணவுக்கு அவள் அழைத்தாலும் இவனுக்கும் செல்ல தயக்கமாக இருந்தது. காலையில் நடந்ததை எங்கணம் அவளிடம் நியாயப்படுத்துவது என்று..!!

 

அவன் செய்தது தவறு என்று புரிந்தது அவனுக்கு. அதனால் தயக்கத்தோடு அவன் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த வேப்பமர மாடி திண்டிலேயே அமர்ந்திருந்தான்.

 

சிவகாமியே வந்து அவனை அழைக்க வேறு வழி இல்லாமல் தான் சென்று இருந்தான்.

 

ஆனால்.. அவளை பார்க்கும் முன்..

 

மனம் திக்திக் என்று திகைக்க..

இதயம் லப்டப் லப்டப் என்று 

ஏகமாய் துடிக்க..

நரம்புகளில் எல்லாம் ஏதோ பாய்ந்து பதைபதைக்க..

எப்படி.. எப்படி அவளை எதிர்க்கொள்ள என்று வியர்த்து வழிந்து நின்றான்.

 

தனக்குள்ளே ஏக சமாதானம்!!

தனக்குள்ளே அநேக ஒத்திகை!!

தனக்குத்தானே அவ்வளவு தைரியம்!!

என்று‌ ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டு அவளை காண செல்லும் முன் தனக்குள்ளே பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான்.. அவளிடம் என்ன பேச வேண்டும் என்று!!

 

ஆனால் இவனிடம் சாதாரணமாக பேசியவள் அனைவருக்கும் அறிமுகம் செய்ய.. அதிர்ந்து நின்றது என்னவோ வாகீஸன் தான்..!!

 

அதிலும் அன்று இரவு அவள் நண்பர்களோடு பழகிய விதம்  அவனைக் கவர்ந்தது. 

அவர்கள் நண்பர்கள் தான் ஆனால் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும்.. செய்யும் அனைத்திற்கும் சரி என்றோ ஆமாம் என்று தலையாட்டியோ ஜிஞ்ஜாங் போடவில்லை அவள்.

 

இல்லை இது இப்படித்தான் என்று அவர்களுக்குமே எடுத்துரைத்தாள்.

 

அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்.. உடனே “ஓகே லெட்ஸ் செஞ்ச த டாபிக்” என்று இலகுவாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். 

 

“என்ன மேக்கு டா இவ..!” என்றபடி தான் பார்த்திருந்தான். 

 

நேற்று காலையில் செய்ததற்கு மாலையில் கூட அதை பற்றி யோசிக்காமல் அவள் சுற்றிக்கொண்டு. அவனையும் உபசரித்து.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க “சில்லா மறந்துட்டா போல” என்று இவன் சிரித்துக் கொண்டான். 

 

ஆனால் இன்று காலை தூங்கி எழுந்தவுடன் வந்து நிற்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

 

அதிலும் அவளின் கோலம் என்னைப் பார் என் அழகைப் பார் என்று அவன் கண்களுக்கு விருந்தாயின..!!

 

அவன் சொல்லும் வார்த்தைகளும் அவன் கண்கள் பேசிய அதன் அர்த்தங்களும் அவளுக்கு புரிந்தும் புரியாமல் இருக்க..!!

 

“பொண்ணு வேஷத்துல இருக்குற நீ ஆம்பளைன்னு சொன்னேன்” என்று கண்ணடித்து சிரித்தவனை கண்டவளுக்கு அத்தனை ஆத்திரம் மிகுந்தது.

 

அதுவும் இப்படி தன்னை கேலிப்படுத்தும் தம்பியை அடிப்பது போலவே அவனை எட்டி பட்டு பட்டு என்று திம்ஸ் கட்டை போல இருக்கும் அவன் புஜத்திலேயே அடித்தாள். 

 

“ஹே.. சில்லா.. காம் டவுன்… காம் டவுன்…!” என்று சிரித்துக் கொண்டே அவன் தடுத்தான். ஏதோ ஐந்து வயது சிறுமியை நடத்துவது போலவே அவன் அவளை நடத்த.. இன்னும் கோபம் அவளுக்கு உச்சந்தலைக்கு ஏறியது. 

 

இன்னும் அவளின் வேகத்தையும் கோபத்தையும் கூட்ட… அடிகள் பட் பட் என்று அவன் புஜத்தில் பட..

 

மனதிற்க்கினியவள் தான்.. ஆனாலும் அவளின் அடி வலித்தது.

 

“சரியான வசம்பி டி நீ” என்று சிரித்துக் கொண்டான்.

 

அவளின் அடிகள் சுக அடிகள் என்றாலும் அவள் கைகளை தடுப்பது போல அவன் கைகளை வைத்துக் கொண்டு அவன் லேசாக அமர்ந்திருந்த மேஜை பின்னால் சரிந்தான்.

 

ஏற்கனவே அவன் நன்கு உயரம் இவளை விட.. இதில் மேஜையில் வேறு அமர்ந்து பின்னால் சாய்ந்தான், அவளுக்கு கை எட்டி அடிக்க கஷ்டமாக இருந்தது. 

 

ஆனாலும் அவன் பேசியது அவன் செய்தது என்று அவளின் கோபத்தை ஏற்றி இருக்கு “இனி ஒருபோதும் என்னிடம் நீ இப்படி நடக்கவே கூடாது..!” என்பதாய் விடாமல் அடித்தாள்.

 

முன்னால் குனிந்து அவனை அடித்தாள். அந்த விளையாட்டு சில நொடிகள் தொடர்ந்தது.

 

அவனுக்கு அது விளையாட்டு தான்.. அவனின் சில்லாவோடு காலையில் சில்லென்று விளையாட்டு..! 

 

அவன் காதல் கொண்ட ஆடவன், அவள் அவனின் காதலி.. அவளிடம் உரைக்கவில்லை என்றாலும் காதலி காதலி தான்..!

 

இத்தனை தூரம் அவள் நெருங்க வந்திருக்க.. அதுவும் அவனின் வெற்று உடம்பிவ் அவளது தேகம் உரச… காதல் கொள்ளும் முன் காமம் கொண்டால் என்ன என்று மோகம் கொண்ட மனது பித்து பிடித்து கேட்க…

 

இனியும் அவளை நெருங்க விட்டால்… அது அடியே ஆகினும்… அது சரி வராது என்று புரிந்தவன்,

சட்டென  அவள் இடையை இறுக்கிப் பிடித்தான். அவளை தள்ளி நிறுத்த தான் பார்த்தான். அவளோ அடுத்த நொடியே அவன் மேல் சரிந்து விழுந்தாள். எந்த முயற்சியும் செய்யாமலே இருவரின் உதடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டன.. !! உரசிக் கொண்டன…! விழிகளோ விரிந்து விலங்கிட்டு கொண்டன…!!

 

அவன் மேல் சாய்ந்தவளின் உதடுகள் அவன் உதடுகளைத் தொட்டுக் கொண்டிருந்தது. இன்னும்.. இருவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..!! இந்த முத்தமிடலை எதிர்ப்பார்க்க வில்லை..!!

 

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்தது அவன் காதல் மனம்..! ஆனாலும் அவள் உதடுகளை முத்தமிட பயந்தான். அவளோ அதிர்வில் உதடுகளை விலக்காமல் அப்படியே வைத்துக் கொண்டி

க்க.. அவன் உதடுகள்.. அவளின் மெல்லிய வெல்வெட் உதடுகளைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தது..!!

 

தொடரும்…

 

This thread was modified 17 hours ago by Jiya Janavi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top