மயக்கம் 9
சனிக்கிழமை மாலை போலவே கிருத்தியின் நண்பர்கள் படை அவள் வீட்டை வந்தடைந்தது..!!
வேலனுக்கு குணாவைப் போல கிருத்திக்கு நெருங்கிய தோழிகள் யாரும் கிடையாது. அதிலும் பெண் பிள்ளையை ஜாக்கிரதையோடு தான் கையாளுவார் சிவகாமி.
ஏனென்றால் கிருத்திக்கு வாயும் கையும் கொஞ்சம் நீளம்..!
அதுவும் தந்தையைப் பற்றி பேசி கூடவே அவள் அம்மாவையும் தப்பாக கதைத்து
“உங்க அம்மாவுக்கு உங்க அப்பாவ இழுத்து பிடிக்க தெரியல?
“புருஷனை முந்தானைல முடிஞ்சு வைக்க வேண்டாமா?”
“உங்க அப்பா ஒரேடியா உங்க அம்மாவ கை கழுவிட்டாரா இல்ல அப்பப்போ வந்து போறாரா?”
என்று உறவுகளோ நண்பர்கள் கூட்டமோ ஏளனமாக எதுவும் பேசினால் இவள் பதிலுக்கு பதில் அவர்களைப் பற்றி ஏகத்தாளமாக பேசிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
அதனால் நெருங்கிய தோழியர் என்று யாரும் கிடையாது அவளுக்கு.
தோழியர் வீட்டுக்கு என்று எங்கும் சென்றதும் கிடையாது கிருத்தி.
அதேபோல அறியாதவர்களை சட்டென்று வீட்டுக்குள்ளும் அனுமதித்து விடமாட்டார் சிவகாமி. எல்லாம் கடந்த கால கசப்பான அனுபவங்களில் பெற்றதுதான்..!!
இப்பொழுது மகளும் சம்பாதிக்கத் தொடங்கி விட்டாள். நல்லது கெட்டது அவளும் பார்த்து பழகி புரிந்து அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? எவ்வளவு நாளைக்கு தான் தன் சிறகுகள்ளேயே அவர்களைப் போற்றி பாதுகாக்க முடியும்? என்று தான் இம்முறை அனுமதித்தார்.
அதுவும் இல்லாமல் மகளின் இந்த சிறு வெற்றியையும் அவர் கொண்டாட விரும்பினார்..!!
தந்தை இல்லாமல் தந்தையை ஸ்தானத்தையும் தானே வகித்து குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்கள் ஒரு வெற்றியை காணும் போது அடையும் உலகை தனி தான் அல்லவா?
வாழ்க்கை பல கசப்பான அனுபவங்களை அவருக்கு கொடுத்திருந்தாலும் அன்பான அனுசரணையான இரு மக்களை அவருக்கு கொடுத்து இருக்கிறதை எண்ணி மகிழ்ந்து பூரித்து போனார் சிவகாமி.
அன்று பவனன் திட்டியதற்கு பதிலடியாக மம்பட்டியான் பாடலை இவள் போட்டு அலற விட்டு அவன் கோபத்தை கிளறி விட்டாலும்.. இரவில் தூக்கம் வராமல் உலாத்தியவளின் கண்களில் அமைதியாக அழுத்தமாக அவன் அமர்ந்திருப்பது பட..
ஏதோ ஒன்று அவள் உள்ளத்தை தாக்கியது..! அவன் பால் ஈர்த்தது..! அவன் அருகில் சென்று அமர உந்தியது..!
அந்த அது அவளையே அவனிடம் கண்டது தான் போலும்..!!
தந்தையின் துரோகத்தால் ஏற்படும் வலிகளையும் ரணங்களையும் எதிர்கொள்ளும் அவமானங்களையும் தாங்கிக்க முடியாமல், வெகு நேரம் சிறு குழந்தையாக இருக்கும் போது வீறிட்டு அழுவாள் கதறுவாள் கிருத்தி..!
மனைவிக்கு துரோகம் இழைத்திருந்தாலும் மகள் மீது அவர் கொண்ட பிரியம் உண்மையானது. அன்பும் பாசமாய் வளர்த்து பெண்ணை சட்டென்று அவர் பிரிந்து செல்ல.. அதை தாங்க முடியாமல் அதே சமயம் அவரின் தப்பை ஜீரணிக்க முடியாமல் தவித்து பல நாட்களாக அவ்வப்போது ஜூரத்தில் விழுந்து விடுவாள் கிருத்தி. சிவகாமி தான் அவளை போற்றி பாதுகாப்பார்.
ஆனால் சிவகாமியின் தொடர் அறிவுறுத்தலால் அறிவுரைகளால் அதனை மாற்றி.. அதனை கடந்து சென்ற பழகிக் கொண்டாலும், சில சமயம் அவள் வருத்தும் கணங்களை கடக்க முடியாமல் தவிக்கும்போது அவள் துணைக்கென்று நிற்பது பாடல்களை தான்..!!
அவளுதை போல ஏதோ ஒரு வலி இவனை அழுத்துகிறது.. ஏதோ சொல்ல முடியாத ரணம் இவனை அனைவரிடமிருந்தும் தள்ளி வைக்கிறது.. எல்லோரிடமும் இயல்பாக பழக்கவிடாமல் ஏதோ ஒரு இழப்பு இவனை இழுத்துப் பிடிக்கிறது.. அது என்னவென்று கிருத்திக்கு தெரியவில்லை?
ஆனாலும்.. அன்று அவளுக்கு அவன் துணையாய் அமர்ந்தது போல இவளும் அன்று துணையாய் அமர்ந்திருந்தாள்.
பவனன் அவளை திரும்பி பார்த்தாலும் அவனும் ஏதும் கேட்கவில்லை..! இவளும் எதுவும் பேசவில்லை..!!!
வெகு நேரம் அமர்ந்திருந்தவன் கிருத்தி அவ்வப்போது கண்களை தேய்த்துக்கொண்டு தூக்கத்தை விரட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, தன்னால் அவள் தூக்கம் கெட வேண்டாம் என்று அமைதியாக இவன் உள்ளே சென்றுவிட்டான்.
செல்லும் அவனை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவள் ஒரு தோள் குலுக்களோடு இவளும் வீட்டுக்குள் வந்துவிட்டாள்.
மறுநாள் காலை இவள் வேலைக்கு கிளம்பும் முன் அவன் வீட்டில் தான் சென்று நின்றாள்.
நேற்று போல் கோபம் கொண்டு பேசாமல்.. வாட் என்று கடித்து துப்பாமல்… அமைதியாக அழுத்தமாக அவளைப் பார்த்தவாறு மார்புக்கு குறுக்காக போட்டிருந்த லேப்டாப் பேக்கை பிடித்தபடி வேலைக்கு தயாராகி நின்று இருந்தான் திரிபுரபவனன்.
அந்த அழுத்தமே ‘நானாக கேட்க மாட்டேன் நீயே சொல்.!’ என்று அடமாய் தெரிய.. ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்தவளை நெற்றி சுருங்கப் பார்த்தான் அவன்.
“ஆக்சுவலி அன்னைக்கு நான் வந்தது.. நீங்க செஞ்சு கொடுத்த பிரசன்டேஷனுக்கு தேங்க்ஸ் சொல்லத்தான்” என்றதும் அவனும் தோள் குழுக்களோடு சரி என்பதாய் கூறி நகர முயல..
“வெயிட்.. வெயிட்..! அது மட்டும் இல்ல அந்த ப்ரெசெண்டேஷனால எனக்கு நல்ல ரெகக்னிஷன் அப்கோர்ஸ் என் டிஸ்ஸூனாலும் தான்.. நாளைக்கு எங்க வீட்ல என் பிரண்ட்ஸ்க்கு ஒரு சின்ன டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். நீங்க கண்டிப்பா வரணும்.. ஒரு சின்ன தாங்கஸ்க்விங்..”. என்றவளை பார்த்து,
“ஹௌவ் தாட்ஃபுல்..! பட் நோ நீட்..!” என்றவன் அவளை இடிப்பது போல முன்னால் வர..
சட்டென்று பதிறி விலகி படியில் தடுமாறியவளை இடையோடு பிடித்தவனை அவள் உடையோடு கோர்த்துக் கொள்ள…
அவளின் கழுத்து அருகே அவனின் முகம் நெருங்கி இருக்க.. இவளின் அந்தரங்கள் அருகே அவனின் கருபுற்கள் போல லேசாய் தாடி அடர்ந்த தாடை..
ஒரு நிமிடம்.. ஒரு முழு நிமிடம் இருவரும் அதிர்ந்து அடுத்தவர் அணைப்பிலேயே நின்றிருந்தனர்.
சட்டு என்று நினைவுக்கு திரும்பியவன் அவளை இன்னும் தன்னோடு இழுத்து இடையோடு இறுக அணைத்து ஒரு சுழற்று சுழற்றி சுற்றி படியை விட்டு கீழே இறக்கி விட்டான்.
“என்னடா நடந்ததுச்சு இப்போ?” என்று அவள் சுதாரிக்கும் முன் விரைந்து சென்றவனின் இதழ்களோ அவளின் கன்னத்தை மெலிதாய் மிக மிக மெல்லியதாய் தீண்டி விட்டுச் சென்றது..!!
ஆனால் அதை உணரும் நிலையில் பெண் இல்லை..!
“என்ன செஞ்சான் இப்போ? இறுக்கி பிடிச்சான்.. சுழட்டுனான்.. சுத்துனான்.. டபக்குனு படிக்கு கீழே இறக்கி விட்டுட்டான்.. நாம அவ்வளவு வெயிட்லெஸ்ஸாவா இருக்கோம்?” என்று தன் புஜத்தை தூக்கி தனது சதைகளை தொட்டு தொட்டு ஆராய்ந்து பார்த்தாள்.
அப்புறம் ஒரு சுற்று சுற்றி இடையையும் சுற்றிப் பார்த்தாள்.
“ஆமா நிஜமாகவே கொஞ்சம் வெயிட் குறைஞ்சிடுட்டேன் போல” என்று தன் போல பேசிக்கொண்டு வேலைக்கு சென்றாள்.
அங்கே ரெஸ்டாரண்டிலும் அவளது நண்பர்கள் கூட்டம் “ஹேய் கிருத்தி ஏமாற்றி விட மாட்டியே?
“அந்த ரெண்டு டிஷும் கண்டிப்பாக செஞ்சு தரணும் இல்ல அவ்வளவுதான்..!” என்று மாறி மாறி அவளை மிரட்டிக் கொண்டும் அன்பால் அதட்டிக் கொண்டு இருக்க.. அனைத்துக்கும் ஒரு விரிந்த புன்னகையோடு தலையாட்டி பேசிக் கொண்டிருந்தாள் கிருத்திலயா..!!
மாலை இவள் வீட்டுக்கு வரும் பொழுதே அவள் நண்பர்களும் வந்துவிட, கீழே கேட்டு சத்தத்தில் மாடியில் அந்த வேப்பமர நிழலில் நின்று எட்டிப் பார்த்தவனுக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஏக யோசனைகள்..!!
ஒரு மனம் போ என்று உந்த.. மறுமணம் வேண்டாம் என்று மறுக்க இருக் கொல்லி எறும்பை தவித்து நின்றவனை வேலன் அழைக்க வந்தான்.
“இப்ப இல்ல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..!” என்று அவனை கீழே அனுப்பி விட்டான் பவனன்.
முதல் நாளே அந்த இரண்டு ஸ்பெஷலான இனிப்பு வகைகளுக்கு தேவையானவற்றையெல்லாம் அவள் தயாராகி வைத்து விட, வந்தவுடன் அந்த வேலையை முடித்து விட்டாள்.
அதற்குள் சிவகாமியும் அவருக்கு தெரிந்த வகையில் வெஜிடபிள் புலாவும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட.. கிருத்தி வந்து தான் சிக்கன் கிரேவி தனியாகவும் பன்னீர் பட்டர் மசாலாவும் செய்து வைத்தாள்.
வேலன் குணாவையும் அழைத்து இருந்தான். ஓரளவு அனைத்து வேலையும் முடித்து இவளும் தன்னை ரெஃப்ரெஷ் செய்து வந்தாள்.
அவ்வப்போது அவள் நண்பர்களுக்கு ஜூஸ் நொறுக்குத்தீனி என்று பார்த்துக் கொண்டான் வேலன் நல்ல தம்பியாய்..!
கிருத்தி நண்பர்களிடத்தோடு சிறிது நேரம் கதையளந்து விட்டு “கைஸ் சாப்பிடலாமா? இங்க கூடத்தில் இருக்கிற சோஃபாவ அப்படி கொஞ்சம் ஓரமா நிகர்த்தி போட்டுட்டு இப்படியே உட்கார்ந்து எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கிருத்தி கேட்க.. அனைவரும் அதற்கு ஒப்புதலாக தலையசைத்தனர்.
“ஆமாம்பா இப்படி நம்மளே நமக்கு நாமே சர்வ் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்”
“கீழே உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது இல்ல?” என்று ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை பேசிக்கொண்டே விருப்பத்தை பகிர்ந்து கொண்டே வேலையை செய்ய தொடங்கினர்
இவர்கள் இந்த பணியில் இருக்க அம்மாவை கண்காட்டி அழைத்து மேலே கை காட்டினாள் கிருத்தி. அவர் புரிந்தது என்பது போல தலையாட்டி பவனை அழைக்கச் சென்றார்.
அவரை கண்டதும் தயக்கத்தோடு “அத்த.. அது.. நான் எதுக்கு வேணாமே?” என்று தயங்கவனை விடாப்படியாக அழைத்து வந்தார் சிவகாமி.
அதற்குள் எல்லா உணவுகளையும் பொதுவில் வைத்து நாம இப்படி நாமளே போட்டு சாப்பிட்டுக்கலாம் என்று சுற்றிலும் தடுக்கை(பந்தி பாய்) விரித்து வைத்திருந்தனர்.
“ஹாய் காய்ஸ் இவங்க பேரு வாகீஸ திரிப்புரபவனன்..!” என்றதும் எல்லோரும் “ஓ அவரைப் போல பேரும் இவ்வளவு லெந்தியா இருக்கே?” என்று வியப்போடு அவனை பார்த்தனர்.
“சார் வந்து ஐடியில் வேலை பார்க்கிறாங்க.. அன்னைக்கு பிரசன்டேஷன் என்னோடது எல்லாம் செஞ்சு கொடுத்தது சார்தான். சோ ஹாப் த கிரெடிட் அவரோடது தான்..” என்று கிருத்தி கூறியதும் மெல்லிய கைத்தட்டலோடு,
“வாவ் சூப்பர் சார்.. நிஜமாவே உங்க பிரசன்டேஷன் அவ்வளவு நல்லா இருந்துச்சு”
“இப்பதான தெரியுது இந்த குட்டி பிசாசு எப்படி ஜெயிச்சானு?” என்று மாற்றி மாற்றி கிருத்தியை ஓட்டுவதும் பவனரை பாராட்டுவதாக இருந்தனர்.
அவர்கள் இப்படி பேசியதும் பவனனுக்கும் புதிதாக மற்றவர் முன் இருக்கும் சங்கடம் தவிர்க்கப்பட்டு சகஜமாக பேசவிடனும், ஒரு சின்ன புன்னகையோடு அவர்களோடு அமர்ந்து உண்டான்.
இனிப்பு வகைகளை அவனுக்கு பரிமாற அதற்கு முன்னே தடுத்தவன் “இல்ல நான் இனிப்பு சாப்பிடுவதில்லை..!” என்றான்.
“சார் டையட்ல இருப்பாங்க போல பாரு எவ்ளோ பிட்டா வெச்சிருக்காங்க உடம்ப? நீயும் தான் இருக்கியே.. குண்டு பூசணி” என்று பக்கத்தில் இருக்கும் நண்பனை கிருத்தியின் தோழிகள் லேசாக அடிக்க..
“அத நீங்க சொல்லாதீங்க ஒட்டடைக்குச்சிகளா?” என்று அவன் திருப்பி வார..
அங்கு இன்னும் வெடித்து சிரித்தனர் அனைத்தையும் மென் புன்னகையோடு பார்த்திருந்தான் பவனன்.
வெகு நாளைக்கு பிறகு இப்படி நண்பர்களோடு கலந்து அளவளாவாவிடினும் அங்கு இருப்பதே சற்று மனதுக்கு இதமாக இருந்தது அவனுக்கு.
பின்னர் ஒரு வழியாக டின்னர் முடித்து அவரவர் வீட்டுக்கு திரும்பினர்.
அன்றைய நாள் மிக நன்றாக சென்றதாய் உணர்ந்தாள் கிருத்தி.
முக்கியமாக எப்பொழுதும் உர்ரென்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் பவனன் கூட முகத்தை இலகுவாக வைத்து அவ்வப்போது சிரித்தான்.
வெண்பற்கள் தெரிய அகலமாக சிரிக்காவிடினும் மெல்ல இதழ்களை விரித்து அவன் சிரித்ததும்.. அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் அவள் நண்பர்களோடு பேசியதும் கிருத்திக்கு மனம் இதமாக இருந்தது.
‘இந்த இறுக்கிய முகத்துக்கு பின்னாடியும் அவர்களுக்கு இன்னொரு முகம் இருக்கும் போலவே? அப்படி ஒன்னும் இன்ட்ரோவெட்டா தெரியல.
எல்லாரோடையும் சிரிச்சு ஒன்னு ரெண்டு வார்த்தை பேசினாரு.. பின்ன ஏன் இப்படி எப்ப பார்த்தாலும் வீட்டுக்குள்ள அடைந்து இருக்காரு? ஒருவேளை அவங்க ஊர் மாதிரி அவருக்கு இங்கே பிரண்ட்ஸ் கிடைக்கலையோ? இனிமே நாமாவது அவர்கிட்ட கொஞ்சம் நல்லா நடந்துக்கணும்..! பாவம் நாடு விட்டு நாடு வந்திருக்கிற மனுஷன்.. கொஞ்சம் நல்ல மனுஷன் தான்..!” என்று அவனுக்காக வருத்தப்பட்டாள்.
பின் மீண்டும் படுக்கையில் படுத்தவாறே அந்த நாளை திருப்பி கண்முன்னே ஓட்டி பார்க்க..
அப்பொழுதுதான் காலையில் அவன் அவளை இறுக்க இடையோடு அணைத்து சுற்றி சுழற்றி கீழே நிறுத்தியதும்…. போகிற போக்கில் அவனது கற்றை மீசையோடு இருந்த முரட்டு அதரங்கள் அவள் கன்னத்தை மென்மையாய் தீண்டிச் சென்றது நினைவுக்கு வர..
குப்பென்று வியர்த்துப் போனது பெண்ணவளுக்கு…!
“அடப்பாவி வாகீஸா.. போகிற போகல புள்ளைக்கு கிஸ் குடுத்து இருக்க டா நீ?” என்று இரு கைகளாலும் வாயை பொத்திக் கொண்டவள் கன்னங்களோ இப்பொழுது சிவந்திருந்தது.
கோபத்திலா? வெட்கத்திலா?
மறுநாள் அதையே அவ
னிடம் கேட்டு நின்றாள்.
“எப்படி நீங்க என்ன கிஸ் பண்ணலாம்?” என்று..!
அவனோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவளை குழப்பமாக பார்த்து இருந்தான்.
தொடரும்…
