Share:
Notifications
Clear all

காமன் 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 268
Thread starter  

காமன் 21

 

 

 

லிப்ஸ்டிக் போடாத அவளின் ஈர இதழ்.. அதிலும் தண்ணீர் குடித்ததில் இன்னும் பளபளத்து அவனை பாடாய் படுத்த, க்ளாஸை வாங்காமல் அவனின் கை அவளின் இடையை அழுத்தி பிடித்தது.

 

 

 

என்ன நடக்கிறது என்று அவள் உணர்வதற்குள், காமன் ரதியின் பன்னீர் ரோஜா நிற இதழை அழுத்தி முத்தமிட அவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் அகண்டு விரிந்தது.

 

 

 

அவள் மூச்சற்று நிற்க..

 

அவனின் கைகளோ அவளின் இடையை கசக்க..

 

அவள் மூச்சு விட முடியாமல் வாயை திறக்க…

 

அவனோ அவளின் மேல் உதட்டை சப்பி இழுக்க..

 

அவள் கையில் இருந்த க்ளாஸ் தரையில் விழுந்து சத்தத்தை எழுப்ப..

 

 

 

அந்த சத்தத்தில் தன்னிலை மீண்டவள், முழு பலத்தோடு அவனை தள்ளிவிட்டு அருகிலுள்ள குளியலறைக்குள் ஓடினாள்.

 

 

 

சுய நினைவுக்கு திரும்பியவனோ, “ஓ மை காட்…. ஸாரி கேட்க போயிட்டு இப்படியா… ச்சே…” என்ற குற்ற உணர்ச்சி அவனை பாடாய் படுத்த, வீட்டை விட்டு வெளியேறினான்.

 

 

 

அவளோ இன்னும் சமையலறையில் தான் இருந்தாள். மனம் அங்கு இங்கு என்று அலைந்தாலும் கைகள் இரவு உணவை இருவருக்காகவும் தயாரித்தன..!

 

 

 

மணி பத்தை நெருங்கி விட்டது. காமன் வரவே இல்லை. “எங்க போனாரு இவரு? இன்னும் காணல? ஒரு வேளை.. வேற பொண்ண தேடிட்டு போயிட்டாரோ?” அந்த நினைவு அவளுக்கு ஒருவித வருத்தத்தை கொடுத்தது.

 

 

 

ரதி தவித்து போனாள். அவள் பல முறை ஃபோனில் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. கண் கலங்க வாசலையே பார்த்திருந்தாள்.

 

 

 

வெகு நேரம் கழித்தே அவளது செல்போன் இப்பொழுது ஒலித்தது. அவனின்றி வேறு யாரு?

 

 

 

“ரியலி சாரி ரதி... நான் உன்னை மிஸ் யூஸ் பண்ண நினைக்கல.. பட்.. என்னையும் மீறி.. அப்படி நடந்துடிச்சு” என்று அவன் வருந்த..

 

 

 

“என்னால புரிஞ்சுக்க முடியுது சார்.. பட் இப்போ நான் வீட்டுக்கு போகணும். நேரம் வேற ஆயிட்டு. பசிக்குது வேற..” என்றாள் ரதி.

 

 

 

“சாப்பிடலையா நீ? ஸாரி… ஸாரி…” என்றவன் பத்து நிமிடத்தில் திரும்ப வர, இருவரும் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவிக்க,

 

 

 

“சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சார்” என்று அவள் மெதுவாக கூற

 

 

 

அவனோ “இல்ல வேணாம்.. போகலாம் வா.. உனக்கு டைம் ஆயிடுச்சு” என்று கிளம்பினான்.

 

 

 

அவனின் கையை அழுத்தி பிடித்தவள், “சாப்பிட்டு வாங்க சார் டயம் இருக்குது. பத்து நிமிஷத்துல ஒன்னும் ஆகாது..” என்றாள்.

 

 

 

அவள் பிடித்த அடுத்த நொடி, “ஜில்” என்று இருந்த அவனது உடல், “ஜிவ்” என்று சூடு ஏற ஆரம்பித்தது. அவன் மெதுவாக மீண்டும் அமர, அவன் கையை விட்டாள்.

 

 

 

“இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சிட்டு இருக்க மாட்டாளா?” என்று அவன் மனம் ஏங்கியது.

 

 

 

“நீயும் சாப்பிடு..!” என்று அவள் புறம் உணவினை அவன் நகர்த்தி வைக்க, ரதியோ அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

 

 

 

“இல்ல வீட்ல ராகவ் காத்திருப்பான்” என்றாள் மெலிதாக..!

 

 

 

“அவனுக்கு போன் பண்ணி சொல்லிடு.. இங்கே என் கூட சாப்பிட்டு வரேன்னு” என்றவனின் அழுத்தமான வார்த்தையில்.. அவளது கைகள் தானாக ராகவ்வுக்கு அழைத்தது.

 

 

 

“ராகவ்.. நான் இங்க சாப்பிட்டேன் நீ சாப்பிட்டுடு. கொஞ்சம் வர லேட் ஆகும்” என்று மெல்லிய குரலில் தம்பியிடம் கூறினாள்.

 

 

 

இத்தனை நாட்களில் ரதியின் பாதுகாப்பை பற்றி ராகவ்வுக்கு கவலையில்லை. “கண்டிப்பாக அக்காவை லாயர் சார் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விடுவார்” என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

 

 

 

ஏதேனும் முக்கியமான வேலையாக இருக்கும் என்று நினைத்தவன் “நான் பார்த்துக்கிறேன் நீ பத்திரமா வா” என்று விட்டு வைத்து விட்டான்.

 

 

 

இருவராலும் சாப்பிட முடியவில்லை. ஏதோ தடுத்தது..! ஏதோ அலைகழித்தது..! அரை குறையாக சாப்பிட்டு விட்டு எழுந்தார்கள்.

 

 

 

என்ன நடக்கின்றது என்று உணர முடியாத நிலையில் இருந்தாள் ரதி.

 

 

 

மெல்ல எழுந்து பதுமை போல பாத்திரங்களை எல்லாம் சமையலறை சிங்கில் போட்டு அவள் கழுவ ஆரம்பிக்க..

 

 

 

பின்னால் இருந்து வேகமாக அணைத்த காமனின் உதடுகளோ அவளின் பின்னங்கழுத்தில் அநேக முத்தங்களை வைத்தன..

 

 

 

அத்தனை வேகம் அவனிடம். ரதி அவனிடம் இருந்து விடு பட முயன்றாள்.. ஆனால் முடியவில்லை. அவளும் உணர்வின் பிடியில் தானே இருந்தாள்.

 

 

 

அவளை தன் புறம் திருப்பியவனோ அவள் இதழ்களை முற்றுகையிட.. கைகளோ அவள் இடையை பற்றி தன்னுடன் இறுக்கிக்கொண்டது. அவனுக்கோ கரை புரண்ட மோகம். அவள் இதழ் தரும் போதையும் அவள் உடலின் மென்மையும் அவனை வெறி பிடிக்க வைத்தது. இத்தனை ஆண்டுகளில் எந்த பெண்ணிடமும் பெருக்கெடுக்காத உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து இருந்தாள் பெண்ணவள்.

 

 

 

முத்தமிட்டபடி அவளை சுவரில் சாய்த்தவன் அவளின் வெண் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவளால் பேச முடியவில்லை.. ஆனாலும் அவள் உதடுகள் “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேணாமே.. வேணாமே” என்று முணுமுணுக்க.. அது அவன் காதில் கேட்டால் தானே? ஏனெனில் அந்த குரல் அவளுக்கே கேட்கவில்லை..!

 

 

 

அவளை திருப்பி கூந்தலை ஒதுக்கியவன் முதுகில் குட்டி குட்டி முத்தங்களை தந்தவாறு “ரதி.. ஐ நீட் யூ ரைட் நௌ. டோண்ட் ரெஸிஸ்ட்“ என்றவன் அவள் டாப்ஸை ஒதுக்கி தோள்பட்டையில் வலிக்க கடிக்க..

 

 

 

“ம்ஹா..” அவ்வளவு தான் அவள் செத்து பிழைத்தாள். மெல்லினமும் வல்லினமுமாய் அவனின் முத்தங்கள் அவளுள்ளும் மோகத் தீ பற்ற வைக்க..

 

 

 

இருவரின் உடல்களும் சிக்கி முக்கி கற்களாய் மோதிக் கொண்டு தீரா தாகத்தையும் முடியா மோகத்தையும் ஏற்படுத்தியது..!

 

 

 

அவளை இரு கைகளில் ஏந்தியவன்.. மஞ்சத்தை தஞ்சம் அடைய செல்ல..

 

கூச்சமுற்றவள் சங்கடத்துடன் அவனின் விழிகளை பார்க்க.. அங்கே அவன் விழிகள் சொன்ன செய்தியில் நாணமுற்று அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

 

 

 

மெல்ல மஞ்சத்தில் அவளை விட.. அவளது கண்களோ காதலிலும் தன்னவன் மேல் தாபத்திலும் கலந்து பொங்க.. சட்டென்று அவனது முகத்தை தன்னை நோக்கி இழுத்தவள்.. அவளவன் அதரங்களில் மென்மையாக முத்தமிட்டாள்.

 

 

 

முதன்முறையாக அவளாக கொடுக்கும் முத்தம்.. முதல் முத்தம்.. உயிர் வரை இனித்தது அவனுக்கு..

 

அதில் அவனது உணர்வுகளை தட்டி எழுப்பி மோகம் கொள்ள செய்ய.. மெல்ல மெல்ல ஆடைகள் விடுதலை வாங்க.. பல்லவன் சிற்பமென தன் முன்னால் இருந்தவளின் அழகை ரசித்தான் அவன்.

 

 

 

ஆனால் அவனுக்கு ரதியவளின் அழகிய ரகசியங்களை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை.. உதடுகளில் காதலின் விளைவால் வந்த சிவப்பு.. அவள் முகத்திலோ மன்னவனின் செயலால் மோகப் புன்னகை.. இளஞ்சிவப்பு சங்கு கழுத்தில் தேனாய் வியர்வை துளிகள் ஓட.. அவை சென்று விழுந்த இடத்தினை பார்த்தவனின் இதழ்களை நா வருட.. நிமிர்ந்த ஆலய கோபுரமாக நின்ற மென்மைகளை அவன் கைகள் சோதனையிட.. ஆலிலை வயிற்றில் இருக்கும் நாபி சுழியை, கைகளோடு இதழ்கள் பின் தொடர.. அவனின் சரசங்கள் எண்ணிலடங்காமல் செல்ல பாவையவள் சுகத்தில் முனகினாள்.

 

 

 

ஆடவன் தன் உதடுகளால் அவள் பெண்மை எனும் பக்கங்களில் கவி எழுத.. கவிக்கு அணி சேர்க்க கைகளும்.. நாவும் துணைக்குச் செல்ல.. இந்த முப்படைகளின் தாக்குதலில் மலரினியின் தேகம் செங்காந்தள் என மலர.. உதட்டினால் தீட்டிய பக்கங்களை நாவினால் சரி பார்க்க.. தகித்து துடித்து போனாள் பெண்ணவள். மன்னவன் செயலில் கொலுசு சிணுங்கலுக்கு போட்டியாக பாவையின் செல்ல சிணுங்கல் கேட்க.. அதற்கு ஆடவன் அந்தரங்கமாக பதிலளிக்க.. காதலும் காமமும் மோகமும் அங்கே ஆட்கொண்டது.

 

 

 

இரவு நேரம்.. !! மழை மேகங்களுக்கு இப்போதுதான் காதல் வந்ததை போல.. மிகவும் மெல்லிசான ஊசித் தூறல்களை பூமி மீது தூவிக் கொண்டிருந்தது..!

 

 

 

இடி.. மின்னல்.. காற்று என்று எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத மிகவும் அமைதியான மழை.. !!

 

 

 

”போலாமா ரதி.. ??” இரவின் மெல்லிய தூறலுக்கு இதமாக அவனுடன் அணைந்தப்படி வந்தாள் ரதி.

 

 

 

அவனின் பக்கம் சரிந்து அவன் தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள். அவளது பெண் வாசமும்.. கூந்தலின் மணமும்.. அவனின் சுவாசத்தில் கலந்து.. அவன் மூளையை சுறுசுறுவென குடைந்தது.

 

 

 

அவளிடமிருந்து வீசிய அந்த நறுமணம் கிளர்ச்சியை இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்க.. அவளோ அதனை அறியாமல் அவன் இடது பக்கம் மார்போடு அணைந்தாள்.

 

 

 

அவளின் மெத்தென்ற மார்பின் ஸ்பரிசம் அவனுக்குள் அனலடிக்க வைத்தது.. !!

 

 

 

அவள் தோளை மெல்ல அழுத்தியபடி, “நீ என் ஜூனியரா இருக்கணும்னு ஆசைப்பட்டல.. நாளைல இருந்து ஆபீஸூக்கு வந்துடு..! அப்புறம் ஆபீஸ் முடிஞ்சு ரெண்டு பேருமே சேர்ந்து வீட்டுக்கு வரலாம்..! இந்த ஆஃபர் இன்னியோட முடியறது இல்ல.. இனி.. லைப் லாங் ஆஃபரா வச்சுக்கலாம்” என்றதும் அதுவரை ஒரு மோன நிலையில் அவன் மீது உள்ள மயக்கத்தில் மயங்கி இறங்கி இருந்தவளின் மீது அடர் அமிலத்தை வீசுவது போல உணர்ந்தவள், சட்டென அதிர்ந்து பிரிந்து அவனை பார்த்தாள்.

 

 

 

அதே நேரம் அவள் வீடும் வந்திருக்க.. இவ்வளவு நாட்களாக ஒரு பையோடு கிளம்பி விடுபவன், இன்று அவளை இழுத்து இதழணைத்தே விடுவித்து பை சொல்லிச் சென்றான்…!

 

 

 

அவளோ அவன் சொன்ன பொருளின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவராமல்..‌ மீளா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..!

 

 

 

தொடரும்...


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top