காமன் 20
முன் எப்படியோ இப்போது ரதியின் மனதில் கதிர்காமன் பற்றிய நல்லெண்ணம் ஆழமாய் பதிந்து இருக்க… கூடவே மனதின் மர்ம பெட்டகத்தில் அவன் மீதான ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்தது பெண்ணவளுக்கு..!
பெண்ணவள் நெஞ்சம் திடுக்கிட்டது அவனது முத்தத்தில்..!
ஆனாலும்.. ஏதோ ஒரு ஓரம் அதனை விரும்பத்தான் செய்தது..!
இவனின் செய்கையில் அவள் மனம் தடுமாறியது உண்மை..!
தன்னை பார்த்து புன்னகைக்கிறான்.. கண் சிமிட்டி கதைக்கிறான்.. அன்பாய் மனதை தொடுமாறு பேசுகிறான்.. இதில் அவன் அறியாதது இவளின் நெஞ்ச குளத்தில் சிறிய கல்லை வீசி விட்டான் அவனின் நடவடிக்கைகளால் என்று..!
இங்கே காதல் சொல்லப்படவில்லை உணர்த்தப்படவும் இல்லை அவன் மீதான நினைப்பை அவளிடம் விதைத்து விட்டான் மெதுவாய்..! ஆழமாய்…!
சில ஹீரோயிக் பெர்ஃபார்மன்ஸ்.. பெண்கள் தாங்களே தங்களை முன் உவந்து கொடுக்க வந்தாலும் தள்ளி நிற்கும் பாங்கு.. முகத்தில் இருந்து கீழிறங்காத பார்வை.. எப்பொழுதும் பெண்ணின் பாதுகாப்பில் இருக்கும் கவனம்.. இதெல்லாம் காலம் காலமாக ஒரு பெண்ணால் ஈர்க்கப்படும் குணங்கள் ஆணவன் மீது..!!
‘காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறாது’ என்பது போல சில விஷயங்கள் எப்போதும் பெண்களின மனதில் ஆழமாக பதிந்து விடும். அதுபோலத்தான் இம்மாதிரியான ஆண்களின் குணங்களும்..!
பெண்களின் மனதில் ஒரு ஈர்ப்பையும் சலனத்தையும் உண்டு பண்ணும்…!
கதிர்காமன் ஒரு காமன் என்று ரதிக்கு தெளிவாக தெரியும். ஆனால் விருப்பமில்லாத பெண் மீது அவன் விரல்கள் கூட படாது என்கிற உண்மை இத்தனை நாட்களுக்குள் அவள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள்..!
அதிலும்.. அவன் பெரும் காமூகனாக இருந்தால் பெரும்பாலான இரவுகளை வீட்டில் அதற்கான பெண்களை அழைத்துக்கொண்டு வந்து கழித்திருப்பான்..! கூடி களித்திருப்பான்..!
அல்லது வீட்டைத் தவிர வேறு இடங்கள் இல்லையா என இது போல செயல்களுக்கு?
சில நாட்களாக அதுபோல அவன் நடவடிக்கைகளில் அவள் எந்த மாற்றத்தையும் காணவில்லை..!
எங்கேயும் இவன் சென்றதாக இவளுக்கு தெரியவில்லை..!
இவள் வேலைக்கு சேர்ந்த நாட்களில் சீக்கிரமே வந்து விடுகிறான். அதிலும் மிகப் பொறுப்பாக ரதியை கொண்டு போய் வீட்டில் விட்டு விடுகிறான். இது போன்ற குணங்களால் அவன் பால் ஈர்க்கப்பட்டாள் என்பது உண்மை..!!
இன்று.. அவள் தானாய் ஏதோ சொல்ல வாய் எடுக்க.. அவன் தவறுதலாய் அவளின் வாயில் முத்தம் கொடுக்க..
அதிலிருந்து மீளவே முடியாமல் உறைந்து போனாள் பேதை..!
அவளை விடுவித்தவன் அவளை ஏற இறங்க பார்த்தான்.
அவன் பார்வையின் பொருளோ அன்று வேண்டாம் என்றவள் இன்று தானாக வேண்டும் என்று வந்து விட்டதாய் நினைத்தான்..!
“ராங் ப்ரோ. இட்ஸ் வெரி ராங் ப்ரோ..” என்று மனதுக்குள் திடுக்கிட்டாள் அவனின் பார்வையில் பாவை..!
“சார்.. நான் சொல்ல வந்ததே வேறு.. என்னை.. என்னையும் என் ப்ரண்ட் ரத்னாவையும் ஜூனியர்ஸா சேர்த்துப்பீங்களானு கேட்க வந்தேன்” என்றவளின் வார்த்தையில் அவன் ஒன்றும் குற்றம் செய்தவன் போல வருத்தப்படவில்லை.
மாறாக குறுகுறு பார்வையோடு “சொல்ல வந்த வார்த்தைகளை ஒழுங்கா சொல்லி இருக்கணும் இல்லைனா.. இப்படி தான் ஆகும். பாதி பாதி மென்னு முழுங்குவியா? இட்ஸ் நாட் மை ஃபால்ட்.” என்று அவன் தோளை குலுக்கிச் செல்ல… அவளுக்கோ அவனின் இந்த பரிமாணத்தில் “உனக்கு இது தேவை தான் ரதி” என்று சமையலறைக்குள் நுழைந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.
சட்டென அவன் குரல்..
“ஆமா.. எப்ப பார்த்தாலும் சுடிதாரிலேயே சுத்திட்டு இருக்கியே.. ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்லையா உனக்கு?” என்று கேட்டான், போனவன் திரும்பி வந்து..
திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள்,
“அது... இதுதான் சார் ரொம்ப கம்ஃப்போர்ட்டா இருக்கு எனக்கு” என்றவள் சமையலறையில் உணவு தயாரிப்பதற்காக அங்கும் இங்கும் நடந்தாள்.
அவள் நடைக்கு ஏற்ப பின்னழகு மேடுகள் ஏறி இறங்க.. காமன் அவனின் பார்வை மோகனமாய் மாற..
“ம்ம்ம்.. இந்த ட்ரஸூம் நச்சுனுதான் இருக்கு உனக்கு” என்றான் கண் சிமிட்டி..!
நடந்தவள் நின்று அதிர்ச்சியில் பார்க்க.. ஏற்கனவே அவன் கொடுத்த முத்தத்தால் அவள் நிலை தடுமாறி இருக்க, இப்பொழுது அவன் பேச்சு வேறு வழிச் செல்வதை கண்டு மனதுக்குள் திடுக்கிட்டாள்.
ஆனாலும்.. அவன் சற்றே வரம்பு மீறி பேசுவதாய் பட அவனை முறைத்தாள்.
‘நீ எதை சொல்லுறேன்னு தெரியும்டா.. கண்ணை நொண்டிருவேன்…!’ என்று மனதில் நினைத்துக் கொண்டு
அவனை முறைக்க, அவனோ அவள் முறைப்பைக் கண்டு சிரித்தவன்,
“உன்னோட ஃபேஸ் ரொம்ப ஃபிரெஷ்ஷா இருக்கே இன்னைக்கு… வாட் த ரீஸன்?” என்றவன் சமையலறைக்குள் நுழைந்தான்.
இதற்குப் முன் எந்த பெண்ணோடும் இவ்வாறெல்லாம் அவன் பேசியது கிடையாது. அவர்கள் வேலை செய்யும் பொழுது இவன் இடையிட்டு இப்படி நடந்துக் கொண்டதும் கிடையாது.
ஆக.. அனைத்துக்கு முதல் முறை என்று ஒன்று உண்டு அல்லவா?
“எதுக்கு ஐஸ் வைக்குறீங்க…” என்று அவள் உதட்டை சிலுப்பிய படி இடியாப்பம் பிழிய துவங்கினாள். ஆனால் அவளால் அந்த இடியாப்ப உரலை பிழிய முடியாமல் தடுமாற..
ஒரு நக்கல் சிரிப்புடன் அவள் கையில் இருந்த இடியாப்ப கட்டையை வாங்கி சர சரவென பிழிந்தான் காமன்.
“பரவாயில்லையே இந்த வேலையெல்லாம் இவருக்கு தெரியுமா?” என்று அவள் வாய்க்குள் முணுமுணுக்க..
“என்ன முணுமுணுக்குற?” என்று கேட்டவனை கண்டு, கன்னக் கொடுப்புக்குள் சிரித்தவள்,
“பராவாயில்ல.. உங்களால ஈஸியா பிழிய முடியுது. பராக்கிரமசாலி தான் சார் நீங்க” என்று அவள் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.
“என் பராக்கிரமத்தை பார்க்குறியா?” என்று இடியாப்பம் புழிந்துக் கொண்டிருந்தவன் விசுக்கென்று அவள் தொடையை சுற்றி வளைத்து தூக்கி ஒரு சுழற்று சுழற்ற..
“ஆஆஆ.. அய்யய்யோ அய்யய்யோ… ஒத்துக்கிறேன்.. நீங்க பலசாலி பீமன் தான்..! இறக்கி விடுங்க… சார்.. தலையெல்லாம் சுத்துது சார்..” என்று அவள் துள்ள, அவளின் இடுப்பை அழுத்தமாக பிடித்தான் கதிர்காமன்.
அவள் துள்ள துள்ள..
இவன் அழுத்திப் பிடிக்க பிடிக்க.. சுடிதார் டாப்ஸ் மேலே ஏற.. காமனின் தாடியுடனான முகம் அவளின் உடையில்லா இடையின் வளவளப்பை சோதிக்க..
ரதியின் உடலில் கரண்ட் பாய்வது போல் ஓர் உணர்வு.
இடையின் மேல் இருந்த அவனின் தலையை அவள் அழுத்த.. அவளின் கூந்தலுக்குள் அவன் விரல்கள் அழுந்தப் புதைந்தது.
“சார்.. சார்.... ப்ளீஸ் விடுங்க…” என்று கிசுகிசுத்த குரலில் ரதி சிணுங்க, மெதுவாக அவளை இறக்கி விட்டான்.
மார்பு ஏறி இறங்க பெரு மூச்சு விட்டவளோ, அவனால் கிளர்ந்து எழுந்த அந்த உணர்வு அலைகளை தாங்க முடியாமல் சப்போரட்டுக்காக சமையலறை திட்டின் விளிம்பை இரு கைகளால் இறுகப் பற்றி நின்றாள்.
கதிர்காமனோ காமனாய் முறுவலித்தவன் மெல்ல குனிந்து ஒரு கண்ணால் அவளை பார்த்தவாறு அடுப்பில் சிகரெட்டை பற்ற வைத்த படி பால்கனிக்கு வந்தான்.
அவளுக்கு மட்டுமல்ல அவனுக்குமே கடந்த சில நாட்களாக அவளால் ஏற்பட்ட அந்த மோகத் தீ உள்ளுக்குள் பற்றி எரிந்துக் கொண்டுதான் இருந்தது..!
அவளை அணைத்தாலின்றி.. அது அணையாது..!!
அவளை கலவிக் கொள்ளாது.. அது தணியாது..!!
ஆனாலும் தன்னை நம்பி தன் வீட்டில் இருக்கும் அவளிடம் எந்த உணர்வுகளையும் காட்டாமல் மிக சாதாரணமாகத்தான் இருப்பது பாகீதர ப்ரயத்தனமாக இருந்தது. வேறு வழியின்றி நல்லவனாக நடித்துக் கொண்டிருந்தான்.
அவளுடனான நேரத்தை கழிக்கவே வெகு சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து வருபவன், அவளைத்தானே அவள் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வந்தான். அவளுடனான அந்த சிறு கணத்தை கூட அவன் தவற விட விரும்பவில்லை..!
அவள் மீதான எண்ணங்களின் மொத்த வடிவம் தான் என்ன? என்பது அவனுக்கு புரியவில்லை. புரிந்துக் கொள்ளவும் அவன் முயலவில்லை..!
அவளையின்றி வேறொரு பெண்ணையும் அவனால் இந்த இடைப்பட்ட காலத்தில் தொட முடியவில்லை..!
‘ச்சீ.. என்ன கருமம்டா இது’ என்றபடி தான் யோசித்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர்காமன்.
அவன் கையில் இருந்த சிகரெட் கரைய துவங்கியது. உதட்டில் வைக்க மறந்தான். “எனக்கு மட்டும் தான் இப்படி ஒரு ஃபீலிங்ஸ்ஆஆ.. இல்லை அவளுக்குமா? என்னை தப்பாக நினைத்து இருப்பாளோ? எதுக்கும் ஒரு சாரி கேட்டுடுவோம்” என்று எண்ணிய படி, மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தான்.
அவன் விட்ட இடத்திலே ரதி நகராமல் விறைத்து நின்றிருந்தாள். அவன் வருவதை பார்த்தவள், தண்ணீரை எடுத்து மட மடவென குடிக்க.. அவன் அவள் எதிரே வந்து நின்றான். அவன் கண்களை பார்க்காமல் க்ளாஸை அவனிடம் நீட்டினாள்.
தொடரும்..
