Share:
Notifications
Clear all

மயக்கம் 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

மயக்கம் 10

 

“வாட்? என்ன சொல்லுறாய் நீ?” என்று புரியாமல் எதிரே நிற்கும் கிருத்திலயாவைப் பார்த்தான் வாகீஸன் திரிபுரபவனன்.

 

“தமிழ்ல தானே சொல்றேன்? உங்களுக்கு புரியலையா? நேத்திக்கு நீங்க என்னை என்ன செஞ்சீங்க?” என்று ஒவ்வொரு வார்த்தையாக அவள் அழுத்தம் திருத்தமாக கேட்க.. சற்றே உதட்டை உள்ளே மடித்து கடித்து விழிகளை இடுக்கி அவளை பார்த்தான் திரிபுரபவனன். 

 

“அபத்தமா இப்படிக் கதைச்சிட்டு, எண்ட முன்னால வந்து நிற்காத. எப்பவும் ஒரே மாதிரி இருப்பேன்ன எண்டு நினைக்காதே..! பேசாம போயிடு!” என்றான் கொஞ்சம் தண்மையாகத்தான்..!

 

“ஓ ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேனா? என்ன செஞ்சுருவீங்க? என்ன செஞ்சிடுவீங்க நீங்க என்னை?” என்று கோபத்தோடு குரலை உயர்த்தியவள், அவன் முன்னை நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நின்றவளின் கோலம்.. ஆணவனுக்கு அவஸ்தை ஆக இருந்தது..

 

ஏனெனில் இன்னும் அவள் காலையில் எழுந்து குளிக்க கூட இல்லை. இரவெல்லாம் நேற்று நடந்த நண்பர்கள் கூட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. அவர்களோடு மென் புன்னகையோடு அமர்ந்திருந்த வாகீஸன் முகமும் வர.. அவனைப் பற்றி சிந்தனை அப்படியே தறிகட்டு ஓடி காலையில் நடந்த நிகழ்வில் நின்றது. 

 

அதுவும் இடையோடு அவளை இறுக்க அணைத்து ஒரு சுழற்றி சுழற்றி கீழே நிற்க வைத்துவிட்டு அவன் பாட்டுக்கு சென்றது.. அதுவும் செல்லும்போது அந்த கற்றை மீசையோடு கூடிய அழுத்தமான முரட்டு உதடு அவளின் மென்மையான கன்னத்தை மெலிதாக தீட்டிச் சென்றதும்… இப்பொழுது நினைத்தாலும் சிலிர்த்தது அவள் உடம்பு..!!

 

விடிந்ததும் பல் துலக்கியதும் முதல் வேலையாக அவள் சென்ற நின்றதோ திரிபுரபவனன் வீட்டு முன்னேதான்..!

 

அவனும் அப்பொழுதுதான் எழுந்து உடற்பயிற்சி முடித்து வேர்க்க விறுவிறுக்க நின்று இருந்தான். ஆனால் அதெல்லாம் அவள் கவனத்திலேயே படவில்லை..!

 

இடையில் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து அவனின் வெற்று உடம்பில் வியர்வை துளிகள் வழியே நின்றிருந்தவனின் கோலம் நிச்சயமாக கிரேக்க கடவுளின் சிற்பத்தை போலவே இருந்தது. 

 

அத்தனை கன கச்சிதமாக தனது உடலை பேணிப் பாதுகாத்து வைத்திருந்தான் திரிபுரபவனன்.

 

திண்ணென்ற புஜங்களும்.. திம்மென்ற விடைத்த மார்பும்..

குறுகிய இடையும் என..

பார்ப்பவர்கள் பார்த்து கொண்டே இருக்கும் அளவுக்கு ஆணழகன் போட்டிக்கு வந்தவன் போல நின்றிருந்தான்.

 

ஆனால் அது எதுவுமே கிருத்தியின் கண்களுக்கு படவில்லை..! புத்திக்கும் புலப்படவில்லை..!!

 

அவனின் வெற்று மார்போ… வியர்வை துளிகள் மின்ன நிற்கும் கோலமோ.. ம்ஹீம்…!!

 

அவளோ அவன் முன்னே நெஞ்சை விடைத்து நிற்கும் அழகில்.. அவளுக்கு முன் அவள் மென்மைகள் இரவு உடையில் அவனின் கண்களுக்கு விருந்துப் படைத்தன..!!

 

“என்னைப் பார்..! என் அழகைப் பார்..!” வந்து நிற்பவளைக்கண்டு உதட்டை கடித்தான் வாகீஸன்.

 

தன்முனை தன்னை சீண்டி அவளையும் சீண்ட செய்யுமாறு நிற்கும் இவளை என்னதான் செய்வது என்று உதட்டை கடித்து முழித்தவன் சிகையை கோதிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தான்.

 

ஆனாலும் அவளோ விடுவாதியில்லை அவனை..!!

 

“ம்ம்ம்.. சொல்லுங்க.. கேட்கிறேன் இல்ல? எப்படி நீங்க அப்படி என்ன பண்ணலாம்? நீங்க என்னை மத்த பொண்ணுங்களை போலனு நினைச்சீங்களா? நான் கிருத்திகாக்கும்..!” என்று இன்னும் நெஞ்சை நிமிர்த்தி எகிறி எகிரி அவனிடம் பேசினாள்.

 

இவர்கள் மாடியில் இருந்து ஒரு வீடு தள்ளி அடுத்த வீடு மொட்டை மாடியில் சுவாரசியமாக இவர்களை பார்த்துக்கொண்டு துணி காயப்படுவது போல ஒரு பெண்மணக உலாத்திக் கொண்டு இருந்தார்

 

அதனைக் கண்டவன் இவளையும் பார்த்து “நீ முதல்ல உண்ட வீட்டுக்கு போ..!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

 

அவளோ என்னவோ அவளை அவன் கற்பழிக்கும் முயன்ற அளவுக்கு குற்றம் சாட்டினாள்.

 

சில வினாடிகள் அவளையும் ஒரு வீடு தள்ளி மொட்டை மாடியில் நின்றிருக்கும் பெண்மணியையும் பார்த்தவன், அடுத்த நிமிடம் அன்று செய்தது போலவே.. இடையூடு அவளை இறுக்க அணைத்து அப்படியே தன் வீட்டுக்குள் தூக்கி வைத்து கதவை மூடி தாழிட்டான். 

 

ஒரே ஒரு வினாடி தான் அந்த பெண்மணி அங்கே குனிந்து துணியை எடுக்கும் நேரத்தில்.. இவன் இதை செய்து முடித்திருக்க.. அந்தப் பெண்மணியும் சுவாரசியமான விஷயத்தை தவறவிட்டதாய் சுற்று மட்டும் இவர்களை தேடி விட்டு மற்ற துணிகளை காய போட்டார்.

 

அதிர்ந்து அவனை பார்த்தவளின் விழிகளோ இன்னும் இன்னும் விரிய.. அந்த கண்களை பார்த்தவனுக்கு அழியென தன்னை அதனுள் இழுக்கிறாளோ இவள்? என்று எண்ணம் தோன்றும் அளவுக்கு இருந்தது அவளின் பார்வை.. கிருத்தியின் பார்வை..!!

 

இன்னும் பயத்தில் இருந்து அவள் மீளவில்லை… அதினினும் இன்னும் அவனின் இறுகிய அணைப்பில் தான் இருந்தாள். கதவோடு கதவாக அவளை சாய்த்து இடையோடு இறுக்கிப் பிடித்திருந்தவனின் இறுக்கத்தில் மட்டுமல்ல அவனின் நெருக்கத்திலும் பெண்ணவள் பயந்து நின்றாள்.

 

அணைப்பை விலக்காமலே ஏற இறங்க ஒரு முறை பார்த்தவன், முகத்தை கடினமாக்கிக் கொண்டு, "வாட் யூ திங் அபோட் மீ... யூ இடியட்? வீட்டு வாசல்ல நின்னுகிட்டு அப்படி சத்தம் போட்டு என்னை கிஸ் பண்ணியான்னு நீ கேக்குற? சுத்தி உள்ளவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க என்னை பத்தி? நான் உன்னிடம் ஹாரஸ் பண்ண மாதிரி நினைக்க மாட்டாங்களா? கல்யாணம் பண்ண இருந்த பொண்ணுகிட்ட கண்ணியம் காட்டினவன் நான்! என்ன பத்தி ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை தப்பா வந்தாலும் என்னால் அதை கொஞ்சம் கூட பொறுக்க முடியாது!! இவ்வளவு பெரிய கம்பெனியில மேனேஜரா ஒர்க் பண்றேன். எனக்கு கீழ 20 மெம்பர்ஸ் வேலை பாக்குறாங்க.. இந்த இடத்துல ரொம்ப நாளா எந்த பிரச்சினை வராமல் நான் குடியிருக்கேன்.. காலங்காத்துல வந்து என் வீட்டு முன்னாடி நீ இப்படி பேசினா.. என்னை எப்படி பார்ப்பாங்க மத்த எல்லாரும்?" என்று கிருத்தியை ஒரு வாங்கு வாங்கியே விட்டான் திரிபுரபவனன்.. திரிபுவனத்தையே எரித்த சிவனாய்..!

 

“நீங்க.. உங்கள.. பார்த்து .. .. நான் தான்.. தப்பு நான் தான்.." என்று அவனை இவ்வளவு நெருக்கத்தால் கண்ட பயத்திலும் அவனின் கோபத்திலும் உள்ளே நடுங்க அவளுக்கு வார்த்தைகள் திக்கி திணறி வந்தன..!

 

 

“நீ வந்து பேசும்போது ஒரு வீடு தள்ளி இருக்கிற அந்த ஆன்ட்டி துணி காய போடுறது போல நம்மளையே பாக்குறாங்க.. இந்தப் பக்கம் பக்கத்து வீட்டு அக்கா அப்போ எட்டி எட்டி வந்து பார்த்துட்டு பார்த்துட்டு போறாங்க.. அதுவும் உனக்கு என்ன அப்படியே சொர்ணலதா வாய்ஸா? சொர்ணாக்கா மாதிரி குரல வைச்சிக்கிட்டு எப்படி நீங்க என்னை கிஸ் பண்ணலாம்னு இத்தனை பேரு முன்னால கேக்குற? ம்ம்ம்..!” என்றவனின் கடினமான வார்த்தைகளில் ஐ அம் சாரி என்றாள் கிருத்தி.

 

 

அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொன்ன தினுசை கண்டவனின் ரசனை மனம் வெளியே வர பார்க்க.. அதை தட்டி அடக்கி வைத்தவன் அவளை முறைத்துக் கொண்டே நின்றான் திரிபுரபவனன்.

 

ரசனை மணமா அவனிடமா? அதுவும் அவளை நினைத்தா?

 

ஆமே தான்..!! நேற்று இரவு அவன் கேட்காமலே.. அவன் சொல்லாமலே.. அவனுக்கு ஆறுதலாய் அவன் அருகே அவள் அமர்ந்த விதத்திலேயே.. அவனுள் மாயம் செய்து விட்டாள் பெண்ணவள்..!

 

அவன் பார்த்த மாத்திரத்தில் வித்தியாசமான பெண்தான் கிருத்தி..!!

 

ஆனாலும் காலங்காத்தால் இப்படி வந்து கத்தினால்? அவனும் என்னதான் செய்ய?

 

அவன் பேச பேச தான், தான் செய்த தவறின் வீரியம் அவளுக்கு புரிந்தது.

இப்போது அவன் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால்… அப்போது…

 

'அடப்பாவி.. அடப்பாவி.. வந்த புதுசுல பெரிய ருஷ்யசிங்கர் மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு எட்டி நின்னு கண்ணுல ஃபயர் போட்டுக்கிட்டு கண்ணாலேயே அத்தனை கதை பேசினான். நேத்திக்கு என்னன்னா கைய புடிச்சு இழுத்தான்.. லைட்டா என் கன்னத்துல இவன் லிப்ஸாவுல உரசிட்டு போனான்.. நியாயம் கேட்டு வந்தா.. இப்ப என்னவோ பெரிய உத்தமன் மாதிரி பேசுறானே?' என்று ஆவென்று வாய் பிளந்து நின்றவள் முன் அழுத்தமாக நின்றிருந்தவன் பிடி இன்னும் அழுத்தமாக இருக்கிறது அவளது இடையை!!

 

அவளோ அவனையும் அவன் இறுக்கிப் பிடித்து இருந்த அவள் இடையையும் மாறி மாறி பார்த்து குறிப்பால் அவனுக்கு உணர்த்தினாள்.

 

அவன் அவளை அழுத்தமாக பார்த்து "உன்னை கடிச்சு முழுங்க எனக்கு ஐடியா இல்லை... கிருத்திலயா" என்ற அவனின் குரலில் சற்று நடுங்கினாள் பெண்..!

 

 

"ஐயோ சும்மா இருந்தவன சீண்டி விட்டுட்டோம் போலவே.. அவன் பாட்டுக்கு அவன் வேலைக்கு போயிருப்பான்.. நாம பாட்டுக்கு நாம் வேலைக்கு போய் இருந்திருக்கலாம். இப்போ இவன் சாப்பிடுற சாப்பாட்டுக்கு நம்மள சைட் டிஷா வச்சிட்டோன் போல... இப்போ என்ன பண்ண போறானோ?" என்று பதை பதைத்தவாறே நின்று இருந்தாள் கிருத்தி.

 

"ஆமாம்... வெளியில என்னை பத்தி என்ன பேசுன? திரும்ப சொல்லு.. சொல்லு..” என்று கேட்டவனை எச்சில் விழுங்க பார்த்தாள் கிருத்தி.

 

அவள் ஒன்றும் இல்லை என்று இருபக்கமும் தலையாட்டி கூற... அவளின் புஜத்தை பற்றி இழுத்து தன் வீட்டில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன்,

அவளை ஆழமாக பார்த்தவாறே அருகே சென்றான், அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் வெகு அருகே நின்று மேசையின் மேல் நுனியில் அமர்ந்தவாறு அவளை குனிந்து பார்த்தான்.

 

அவன் அருகே வந்ததற்கே அவளுக்கு படபடப்பாக இருக்க... தற்போது தன் அருகில் அமர்ந்து குனியவும் இன்னும் உள்ளுக்குள் படபடத்தது அவளுக்கு. அதையெல்லாம் அவனிடம் காண்பிக்காமல் தனது நைட் டிரஸ் நுனியை அவளது ஆள்காட்டி விரலில் சுற்றி சுற்றிக் கழட்டிக் கொண்டிருந்தாள். அதி படபடப்புடன் பெரும் பயத்துடன்..!

 

"சொல்லு லயா" என்று இன்னும் அவளை நெருங்கினான், குரலில் அத்தனை குழைவு!

 

“எது லயாவா?” என்று ஏகத்துக்கும் அதிர்ந்தால் கிருத்தி. 

 

“ம்ம்ம்.. அதுதானே உன் பெயர்? கிருத்திலயா.. எல்லோரும் உன்னை கிருத்தினு தானே கூப்பிடுறாங்க.. எனக்கு லயா தான் புடிச்சிருக்கு. இனி அப்படித்தான் கூப்பிடுவேன்” என்று அவள் காதருகே ஹஸ்கி வாய்ஸில் பேசியவனை கண்டவளுக்கு வேலியில் போன ஓணானை பிடித்து வேட்டியில் விட்டு விட்டோமோ என்ற நினைப்புதான் மேலோங்கி இருந்தது.

 

"சார்... பவனன் சார்.. தள்ளி... நில்லுங்க.. நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன் நீங்களும் அதை மறந்துடுங்க நானும் அதை மறந்துடுறேன். அம்மா தேடுவாங்க நான் போறேன்” என்று அவள் எழ முற்பட,

 

அவள் கையைப் பிடித்து இருக்கையில் அமர வைத்தவன், "அவ்வளவு சீக்கிரம் தப்பித்து செல்ல முடியாது லயா! போலாம் போலாம் மெதுவா போலாம். நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் வரணும்" என்று அவள் காதருகே கிசுகிசுக்க... அதில் உள்ளுக்குள் அவளுக்கு நடுங்கியது. அவனின் மூச்சுக்காற்றும்... காதோரம் மீசை உராய்வும் அவளுள் பயத்தை தோற்றுவித்தது.

 

"அதான் அப்பவே சொன்னேனே.." என்று கூறியவள் அவனை தள்ள முயற்சிக்க... அவளால் சிறிதும் முடியவில்லை. 

 

'இவன் என்ன இப்படி டீமான் மாதிரி இருக்கான். பாவம்... இவனை கட்டிக்க போறவள்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு கூட…' என்று அவள் எண்ணம் போகும் போக்கில் தன் தலையில் அடித்துக் கொண்டு எண்ணத்துக்கும் வாய்க்கும் பெரிய பூட்டாய் போட்டாள்.

 

‘கிருத்தி உன் வாய் தான் டி உனக்கு எதிரி. தயவு செய்து வாய மூடிட்டு நில்லு டி எரும.. ஏற்கனவே வாயை கொடுத்து தான் இப்போ வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிற. இனியும் வாய் திறந்த அவ்வளவுதான்..!’ என்று தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டாள்.

 

அவளையே தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன், "இப்பவும் ஏதோ... நினைச்ச... அம் ஐ ரைட்?" என்று அந்த மேசையின் நுனியில் இருந்து சற்றே உள் அடங்கி அமர்ந்து கைகளை அழுத்தமாக கட்டிக்கொண்டு அவளை தான் தீர்க்கமாக பார்த்தான்.

 

"அது... அது... நீங்க இப்படி உட்கார்ந்து இருக்கிறது... எனக்கு… எனக்கு அன்ஈசியா இருக்கு. அதை தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்" என்று அவள் சொல்ல மறுப்பாக தலையசைத்தவன், 

 

"இல்லை... பொய்!" என்றதும் உதடு கடித்து மேல் கண்ணால் அவனைப் பார்த்த அழகு அவனை கொள்ளை கொண்டது.

 

"ஆனா உன்னை இப்படியே விட எனக்கு மனம் முரண்டு பிடிக்குது. என்னை பேசின உனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் கொடுக்கணும்!" என்றான்.

 

'எது பனிஷ்மென்ட்டா? இதுக்கு போயா? அப்போ இவ்வளவு நேரம் நீ பண்ணிட்டு இருக்குற அராஜகத்திற்கு நான் என்ன பனிஷ்மென்ட் உனக்கு கொடுக்க?' என்று நினைக்க மட்டுமே முடிந்தது. இதையும் தெரிந்துக் கொண்டு இதுக்கும் ஏதாவது செய்யப் போறானோ என்று அமைதியாகவே அவனைப் பார்த்தாள் கிருத்தி.

 

அவளின் இயல்புக்கு இந்நேரம் இவன் பேசிய பேச்சுக்கு இரண்டு இழுப்பு இழுத்து விட்டு.. கீழே சென்றிருக்க முடியும். பின் சிவகாமிதேவியாரை யார் எதிர்கொள்வது? 

 

ஒன்றுவிட்ட.. இல்ல இல்ல.. ரெண்டு விட்ட வா? ஏதோ விட்ட அண்ணன் மகன் மீது ஏற்கனவே அதீத பாசம் ஆத்தாவுக்கு. இதில் நாமாக இப்படி பிரச்சினை பண்ணினோம்னு தெரிஞ்சுதோ.. அவன விட்டுட்டு ஆத்தா என் மேல தான் வந்து ஏறும் மாரியாத்தா..!’ என்று அந்த நினைப்பையே மனதுக்குள் புதைத்துக் கொண்டாள்.

 

 

"வெல்... உனக்கான பனிஷ்மென்ட் என்னனு முடிவு பண்றேன்" என்றவன் அந்த மேசையில் இருந்து எழுந்து எதிரே இருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்தவன், தாடையில் கை வைத்தவாறே அவளை பார்த்து,

 

“நீ என்ன என்னை பிளேம் பண்ணுன கிஸ் பண்ணுனேன் தானே? ம்ம் வாயைத் திறந்து சொல்லு?” என்று அவன் அதட்ட.. ஆமாம் என்று வேக வேகமாக தலையாட்டினாள் கிருத்தி.

 

“யார கிஸ் பண்ணுவோம்? இந்த வயசுல..?” கேள்வி கேட்டவனை கண்டு அவளுக்கு புறுப்புறு என்று இருந்தது.

 

“ம்ம்.. அம்மாவுக்கு.. அப்புறம் அம்மாச்சிக்கு.. அப்பதாவுக்கு…” என்றவள் வரிசைக்கட்ட..

 

“ஹே.. ஸ்டாப் இட்..! நீ சொன்ன மாதிரி இண்டிமேட்டா யாருக்கு கொடுக்க முடியும் கேர்ள்பிரண்டுக்கு தானே?” என்றதும் மீண்டும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

 

 "சோ.‌.. ஃப்ரம் டுமாரோ ஆன்வோர்ட்ஸ்… நீ தான் எனக்கு பர்சனல் கேர்ள் ப்ரண்ட்.. அபிசியலா எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிற வர” என்றான்.

 

“எதே??

 

'பர்சனல் டிரைவர் கேள்விப்பட்டிருக்கேன். பர்சனல் செகரட்டரி கேள்விப்பட்டிருக்கேன். ஏன் பர்சனல் பாடி கார்டு கூட கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்னடா பர்சனல் கேர்ள் ப்ரண்ட்? அப்போ ஜென்ரலா வேற கேர்ள் பிரண்ட் வச்சிருப்பாங்களோ? ஆனாலும் உனக்கு ஏகத்துக்கும் திமிர்... நடத்து நடத்து..! முதல்ல இங்கிருந்து போறேண்டா அப்புறம் உனக்கு இருக்கு? அப்ப இந்த கிருத்தி யாரும் தெரியும் உனக்கு?’ என்று எள்ளலாக அவனை பார்த்தாள்‌ கிருத்தி.

 

"எஸ்... பர்சனல் கேர்ள் ப்ரண்ட்... லைக் லவ்வர்.. நான் எப்ப எல்லாம் எனக்கு கம்பெனி வேணுன்னு தோணுதோ.. அப்பலாம் நீ என் கூட இருக்கணும்" என்றான் அலட்சியமாக, அதே சமயம் அவளை கூர்ந்து பார்த்து அவனின் பார்வையில் இவள் மண்டைக்குள் மணி அடிக்க... பயப் பந்து தொண்டையை அடைக்க... கைகள் தந்தியடிக்க... 

 

‘சும்மா விளையாட்டுக்கு சொல்றான்னு பார்த்தா நெஜமாவே கேட்கிறான்?’ என்று தடுமாறியவள்

 

"யாரு... யாரு... பர்சனல் கேர்ள் ப்ரண்ட்?" என்று அதிர்வுடன் கேட்டாள்.

 

"யார் இருக்கா என்கூட" என்றான் கூலாக...

 

"நானும்... நீங்களும்..." என்று வார்த்தைகள் அவளுக்கு தந்தி அடிக்க...

 

"ஸோ... நைஸ்" என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

 

"நானா?!" என்றவளின் குரல் வெளி வர மறுக்க...

 

"ஸோ... ஸ்வீட்..." என்று பாராட்டு பத்திரம் வேறு..

 

அவள் அதிர்ச்சியில் எகிறி குதிக்க காத்திருக்கும் தன் இதயத்தை இடது கையால் அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.

 

"ஆண்டவா..! புதுசு புதுசா ஏதோ சொல்றானே? என்ன செய்ய?" என்று அவளுக்கு கண்கள் இங்கும் அங்கும் அலைப்புற்றது.

 

அவளையே கண் இசைக்காமல் பார்த்திருந்தான் திரிபுரபவனன்! 

 

இரையை விழுங்க துடிக்கும் வேங்கையின் உறுதியும்.. வேட்கையும் அதில் தெரிந்தது. 

 

உதட்டில் விஷம புன்னகை…!!

 

 

தொடரும்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top