யட்சன் 3

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 2 days ago
Messages: 6
Thread starter  

அத்தியாயம்: 3

 

சென்னையின் விவிஐபிகள் வாழும் ஏரியா. அங்கிருந்த வீடுகளிலேயே…. வீடுகளா இல்லை இல்லை மாளிகை போன்று இருந்த அந்த வீடுகளிலேயே பெரியது அந்த வீடு தான். அந்த கால பாரம்பரியமும் இந்த கால நாகரிகமும் கலந்து இருந்தது அந்த மூன்று அடுக்கு பரந்து விரிந்த வீடு.

 

"கலா.. கலா…" என்று நடு ஹாலில் நின்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தார் ரங்கராஜன்.

 

"என்னங்க? என்ன ஆச்சு?" என்று வேகமாக கையில் பூக்கூடையோடு தோட்டத்தில் இருந்து வந்தார் கலாவதி.

 

"என்ன ஆச்சா? அங்க பாரு…" என்று அவர் நீட்டிய இடத்தில் மலர்ந்த சிரிப்போடு இருந்தனர் மணிகண்டராஜன் அருகில் அவரது மனைவி வேதவதி. புகைப்படத்தில்…

 

ஒன்றும் புரியாமல் கணவனை பார்த்தார் கலாவதி. காரணம் சற்று நேரத்துக்கு முன்பு தான் அவரே அந்தப் படத்தை துடைத்து விளக்கு எல்லாம் தன் கையாலே கழுவி ஏற்றி வைத்தார். எதற்காக கணவர் சத்தம் போடுகிறார் என்று புரியாமல் பார்த்தார்.

 

"என்ன முழிக்கிற கலா? இப்ப மணி என்ன ஆச்சு?" என்று கோபத்தோடு அவர் வினவ… "எட்டு மணி ஆச்சுங்க" என்றார் இன்னும் கணவனின் கோபத்திற்கு காரணம் புரியாமல்.

 

"எட்டு மணி ஆச்சா? என் தம்பி படத்துக்கு இத்தனூண்டு பூ கூட நீ வைக்கல! என்ன வீட்ல வேலை செய்றேன்னு தெரியல… எல்லாத்துக்கும் வேலை ஆட்கள் இருக்காங்க… ஆனா இதை நீ மட்டும் தான் பார்க்கணும்னு சொல்லி இருக்கேனா? இல்லையா?" ஏகத்துக்கும் மனைவியை கடிந்தார்.

 

அவரின் கோபம் அப்போது தான் புரிய "இல்லிங்க இன்னைக்கு சித்து தான் அவ கையாலேயே மாலை கட்டி போடணும்னு சொன்னா.. இன்னிக்கு வேதா ஓட பிறந்தநாள் இல்லையா?" என்றதும் கண்கள் கலங்க தம்பி மனைவியையும் தம்பியையும் பார்த்தார் ரங்கராஜன்.

 

சென்ற ஆண்டு வரை இதே வீட்டில் குதூக்கலமா ஒற்றுமையாக இருந்தது அவர்களது குடும்பம், இன்று தம்பியையும் தம்பி மனைவியையும் பிரிந்து வருத்தத்தில் துவண்டு போயிருக்கின்றனர்.

 

"சித்துமா எங்க?" என்று அவர் மென்மையாக கேட்டார்.

 

"காலையிலேயே தேவி போன் பண்ணி இருந்தா… அவளிடம் பேசிக்கொண்டு மாலை கட்டுறேன்னு அங்க வெளியில தாழ்வாரத்துல இருக்கா… இதோ அவளுக்கு தான் இன்னும் பூ பறிச்சிட்டு எடுத்துட்டு போறேன்" என்றார்.

 

தேவி என்று அவர்கள் அழைப்பது அவர்களது  மகள் தாத்ரி தேவியை. மூத்தது ஆகாஷ் என்ற ஒரு மகன் உண்டு அவர்களுக்கு.

 

தற்போது அவன் சிங்கப்பூரில் கட்டடக் கலையின் சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக இரண்டு மாத காலம் சென்றிருக்கிறான். ரங்கராஜன் மணிகண்டராஜன் சேர்ந்து ஆரம்பித்தது தான் அவர்களது ராஜன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். அதை இப்பொழுது நடத்துவது ரங்கராஜனும் ஆகாஷூம் தான்.

 

தேவி என்ற பெயரை கேட்டதுமே அவர் முகத்தில் ஒவ்வாத தன்மை. 'எத்தனையோ மாப்பிளைகளை அவர்கள் இனத்தில் சமூகத்தில் பார்த்தும் அத்தனையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு… அந்த தெலுங்கு காரனப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே' என்று அவருக்கு கோபம். 

 

அதைவிட அவரின் மாப்பிள்ளையாகப்பட்டவனை கண்டாலே தொழில் துறையில் அனைவருக்கும் ஒரு நடுக்கம் இருக்க.. எப்படி மாப்பிள்ளை என்று அழைத்து மரியாதையாக பேச முடியும் அவரால். பார்த்து பார்த்து ஒற்றை பெண்ணாக செல்லம் கொடுத்து வளர்த்து இப்படி கொண்டு போய் ஒரு அரக்கன் கையில் கொடுத்து விட்டோமே என்று தான் அவரது கவலை.

 

அதனால் சற்றென்று மகளிடமும் பேசாமல், தன் கோபத்தை இந்த மூன்று மாத காலமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

 

"சித்துமா.. சித்து.." என்று அழைத்துக் கொண்டே வந்தார் கலாவதி.

 

"ஹாங்.. பெரியம்மா" என்று சிரித்தவள் வீடியோ காலில் இருந்த அக்காவை காண்பித்து "அக்கா கூட பேசிட்டு இருக்கேன்" என்ற தான் கட்டிய மாலையைக் காட்ட "சூப்பர் டா தங்கம்" என்று கன்னம் தட்டி பாராட்டினார்.

 

"இப்படி ஒரு நாளாவது என்னை கொஞ்சி  பேசி இருக்கியாமா நீ? எப்போதுமே உனக்கு உன் தங்கச்சி பொண்ணுனா தான் ரொம்ப பிரியம்" என்று விளையாட்டாக சொல்வது போல சற்று கோபமாகவே கூறினாள் தாத்ரி.

 

கலாவதியின் தங்கை தான் வேதவதி. அக்கா தங்கை இருவரும் அண்ணன் தம்பியை மணந்து கொண்டு ஒரே  குடும்பத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒற்றுமையாக தான் குடும்பம் நடத்தினர். அதுவும் வேதவதிக்கு 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல்  பிறகு பிறந்தவள் சித்ரலேகா.

 

"ஏன் உன் சித்தி இருந்த வரை நீ தான் அவக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்த.. இப்போ நான் அவளை கொஞ்சறுது ஒன்னும் தப்பு இல்லையே… அதுவுமில்லாம எல்லா பொண்ணுங்களுக்கும் அம்மா வீட்ல இருக்குற வரைக்கும் தான் இந்த கொஞ்சல் எல்லாம். புருஷன் வீட்டுக்கு போனா இந்த மாதிரி வீடியோ கால்ல தான் பேச முடியும்" என்று பெரு மூச்சை விட்டார்.

 

திரும்பவும் தன் கல்யாண பேச்சு என்றால் பேச்சு விபரீதமாக செல்லும் என்பதை புரிந்து கொண்ட தாத்ரி "நான் போய் அவரைப் பார்க்கிறேன் மா. இன்னைக்கு சித்தி பொறந்தநாள் இவ ஏதாவது மனசுல நினைச்சுட்டு இருப்பானு தான் இவ்வளவு சீக்கிரம் போன் பண்ணேன்" என்று போனை வைத்து விட்டால் தாத்ரி.

 

மகளின் இந்த பொறுப்பை கண்டு வியந்து போனார் கலாவதி. 'பரவாயில்ல கல்யாணம் தன் மகளை சற்று மாற்றி தான் இருக்கிறது' ஒரு பெருமை அவரிடம்.

 

அது என்னவோ உண்மை. பிறந்து வீட்டில் இளவரசியாக வளர்க்கப்படும் பெண்கள் புகுந்த வீடு சென்றவுடன், அது ஒரு பொறுப்பு தானாக வந்து விடுகிறது.

 

என்ன காதல் திருமணம் செய்து கொண்டாள் என்று கொஞ்சம் பெண்ணின் மீது லேசான வருத்தம் உண்டு. ஆனாலும் பெண்ணை பிரிந்த இந்த மூன்று மாதத்தில் அதெல்லாம் காணாமல் போய்விட்டது. கண்களில் துளித்த கண்ணீரை அவர் துடைத்துக் கொள்ள.. 

 

"பெரியம்மா எல்லாம் சரியாக போகும்" என்று அவர் கையைப் பிடித்து சித்ரலேகா ஆறுதல் சொல்ல.. 

 

"சீக்கிரம் சரியா போகணும் குட்டி. அதுவும் உங்க அக்காவுக்கு ஒரு குட்டி வந்து அவங்க தாத்தா மூஞ்சில எட்டி உதைச்சா தான் அவர் சரியா வருவார் போல" என்று தன் கையில் இருந்த பூக்கூடையில் உள்ள பூக்களையும் அவளிடம் கொடுக்க அழகாக கொடுத்து பெரும் மாலையாக்கி இருந்தாள் சித்திரலேகா.

 

பேரைப் போலவே சித்திரங்கள் என்றால் அத்தனை லாவண்யமாக அவள் கை வரைந்து விடும். கண்களால் பார்த்ததை அத்தனை தாவீதமாக வரைந்து விடுவாள் அவள்.

 

இவர்கள் வீட்டில் உள்ள அனைவருமே கட்டுமான துறையில் இருக்க.. அதுவும் அழகான கலைகளை படைப்பதில் பேர் பெற்ற சித்ரலேகாவை இன்டீரியர் டிசைன் படிக்க வைத்திருந்தார்கள். இப்பொழுது ஆறு மாதமாக இவளும் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறாள்.

 

"சீக்கிரம் சீக்கிரம் சித்துமா உங்க அப்பா அங்க கொதித்துக்கிட்டு இருக்கார். இன்னும் தம்பி போட்டோவுக்கு மாலையை காணோம்னு.. நீ தான் மாலை தொடுத்துட்டு இருக்குன்னு சொல்லி இருக்கேன்" என்றதும் நன்றாக சிரித்துக் கொண்டவளின் கலங்கிய கண்களுடன் "போன என் கூட இருந்தாங்க இரண்டு பேரும்.. பெரியம்மா" என்று கலங்கினாள்.

 

"நான் இருக்கேன் இல்லடா" என்றதும் அவளும் ஆதரவாக அவர தோள் சாய்ந்தாள்.

 

"சீக்கிரமே இவளுக்கு நம்ம சொந்தத்துல இல்ல நம்ம ஊர்லயே ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடணும் இவளாவது என் கண்ணுக்கு முன்னாலேயே இருக்கணும்" என்று தம்பி படத்துக்கு மாலை போட்டு கண் மூடி நின்றிருந்த சித்ராவை பார்த்து திடமாக நினைத்துக் கொண்டார்

ரங்கராஜன். அவரின் திடத்தை எல்லாம் உடைத்துவி

ட்டு ஒருவன் இவளை அள்ளிக் கொண்டு போகப் போகிறான் என்று தெரிந்தால்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top