உயிரே 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 325
Thread starter  

14

 

தன் பெருத்த உடலை கொண்டு குனிய முடியாமல் குனிந்து தட்டை எடுத்து வடிவு நிமிரும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட.. சாதுவான பிள்ளையாக மனைவியை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் வீரா.

 

"இவனை..!!" என்று அவள் பல்லை கடிக்க..

 

"ஏன்மா டீ கொஞ்சம் சூடா கொடுக்க கூடாதா?" என்றான் வீரா அன்னையிடம் குறைப்பட்டுக் கொண்டே..

 

"ஏன் ராசா.. டீ அந்த புள்ள தானே குடிச்சுச்சி.. சூடா இருக்கா இல்லையானு உனக்கு எப்படி தெரியும்?" என்று வெள்ளந்தியாக அம்மா கேட்க..

 

புறை ஏறாத குறையாக அமர்ந்திருந்தாள் அஸ்திரா..

அதேசமயம் "பதில சொல்லு மாப்புள்ள" என்று கண்களில் ஒரு எகத்தாளம்..

 

"அது.. அது வந்து.. ஆங்.. சூடு இல்லேன்னா இவ ஒரு டம்பளர் டீயையும் ஒரே வாயிலே ஊத்திடாளே.. சூடா இருந்தா கொஞ்சம் கொஞ்சமா ஊதி தானே குடிப்பா!?" என்று இவன் கேட்ட நியாயத்தில்.. 

 

"அப்படியும் இருக்குமோ?" என்று யோசித்த வடிவும் "இரு ஆத்தா நான் கொஞ்சம் சூடா டீ போட்டு எடுத்துட்டு வந்து தாரேன்" என்று மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தார் வடிவாம்பாள்.

 

"என்னது திரும்பவும் முதல்ல இருந்தா??" என்று அலறினாள் அஸ்திரா.

 

அவளின் புலம்பலும்.. முக பாவனைகளிலும் வாய் விட்டு சிரித்தான் வீரா. "ஒழுங்கா அப்பவே எனக்கு நீயி ஊட்டி விட்டுயிருந்தீனா இந்த நிலைமை வந்திருக்குமா? சொல்லு டி பொண்டாட்டி!! அனுபவி!!" என்றவன், "சரி.. சரி.. வடைய ஊட்டு பார்ப்போம் மாமனுக்கு. பச்சைமிளகாய சேர்த்து வச்ச அம்மா இருக்காங்கனு கூட பார்க்க மாட்டேன் இழுத்து வச்சு உன் எச்சிலால் என் காரத்தை குறைச்சுக்குவேன்" என்றவனை பயத்துடன் பார்த்தவாறு பார்த்து பார்த்து ஊட்டி விட்டாள் வடையை.

 

"ஆடு டா.. ஆடு! இப்போ உன்னோட நேரம் எனக்குன்னு ஒரு நேரம் வரும் இல்ல.. அப்ப இருக்கு உனக்கு!" என்று பற்களுக்கிடையே அவள் வார்த்தைகளை கடித்துத் துப்ப..

 

"சச்சே.‌.. நானேல்லாம் உன்னைய மாதிரி கிடையாது. மடியில் உட்காரவைச்சே ஊட்டிவிடுவேன். அது விரல்கள் கொண்டு இருந்தாலும் சரி இல்லை என் இதழ்கள் கொண்டு இருந்தாலும் சரி" என்றவனது அழுத்தமான சற்று கருமை ஏறியே உதட்டை இரு விரல்களால் அவன் தொட்டுக் காட்டிட.. 

 

சற்று முன்பும் அந்த இதழ்கள் தன் இதழ்களை கவ்வி கடித்து டீயை உறிஞ்சியதை நினைத்தவளுக்கு சட்டென்று உடம்பு சிலிர்த்து அடங்கியது.

 

போதாத குறைக்கு வடிவாம்பாள் திரும்பவும் டீயை கொண்டு வந்து வைக்க.. அவள் பாவம் முகத்தோடு இருவரையும் பார்க்க.. "போனா போகுது டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நீ குடி!" என்றான்.

 

மருமகளின் திருதிரு விழியை கண்ட வடிவாம்பாள் ஏதோ மகன் திருகுதாளம் பண்ணுகிறான் என்று புரிய சிரித்துக்கொண்டே மீண்டும் பழையபடி வாசலில் சென்று அமர்ந்து கொண்டார்.

 

இம்முறை இவன் எங்கே குடிக்கும்போது பறித்துக் குடித்து விடுவானோ என்ற பயத்தில் சற்று சூடாக இருந்ததை அவசரமாக அவள் சூட்டோடு வாயில் வைத்து விட.. அது உதட்டையும நாக்கையும் பதம் பார்க்க "ஸ்ஸ்ஸ்ஆஆஆ..!!" என்று அலறினாள்.

 

"நான்தான் குடிக்க மாட்டேன்னு சொன்னேன் தானடி.. உனக்கு என்னடி இவ்வளவு அவசரம்!" என்று மனைவியை கடிந்து கொண்டே பிரிட்ஜை திறந்து அதில் இருந்த ஐஸ் கட்டியை எடுத்து வந்து அவளிடம் கொடுக்காமல் தானே அவளது உதட்டிலும் நாவிலும் வைத்தான்.

 

"ஒழுங்கா காட்டுடி.. ஆட்டாத! நாக்கை நல்லா வெளிய நீட்டு.." என்று அவ்வப்போது இவன் அதட்டல் போட.. அதற்கு அவள் "ஸ்ஸ்ஸ்ஆஆஆ.. 'போதும் வலிக்குது!' 'எரியுது விடுங்க!' என்று சிணுங்க..

 

அதே சமயம் கோவில் போயிட்டு வருகிறேன் என்று ஊர் சுற்றி விட்டு வந்த தர்மாவும் கோதையும் உள்ளே நுழைந்தனர். இவர்கள் வாயிலிலிருந்து வரும் பொழுது உள்ளே டைனிங் டேபிளில் அவர்களுக்கு அஸ்திராவின் முதுகு மட்டுமே தெரிந்தது. அவள் முன்னால் நெருங்கி அமர்ந்தவாறு வீராவின் உருவமும் பாதியாக தெரிய.. 

 

தர்மாவின் மூளைக்குள் எல்லாம் இஸ்கு இஸ்கே…

 

கோதையோ "பட்டப் பகலுல.. நட்டநடு கூடத்துல.." என்று முகம் சுளிக்க..

 

இப்பொழுதுதான் நண்பனின் வாழ்வு ஏதோ மலர்ந்திருக்கிறது. இவர்களெல்லாம் பேசி பேசியே அவனை வாழ விடாமல் செய்து விடுவார்கள் போல.. என்று கடுப்புடன் மனைவியை பார்த்தவன் "என்னடி? உனக்கு வேணும்னா என்கிட்ட கேட்க வேண்டியதானே!! எதுக்கு அவுகள பார்க்குற நீயி? உனக்காக இந்த அய்த்தான் ரெடி" என்று சட்டென்று மனைவி புறம் திரும்பி அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு இச்சு வைத்தான்.

 

"என்ன விட்டு கோயிலுக்கு தேன் போயிட்டு வந்தான்.. பிரசாதமாக வாங்கிட்டு வந்தானா தெரியலையே? புளியோதரை சூப்பரா இருக்குமே?" என்று மகனை பின்தொடர்ந்து வந்த யோகலட்சுமியின் கண்களில் தர்மாவின் நச்சென்று இச் விழ..

 

"அடியாத்தே..!!" என்று வாயை பிளந்து நெஞ்சை பிடித்து நின்றார் யோகம்..

 

அதோடு நில்லாமல் "அண்ணனே ஆனாலும் நாம இருப்பது தெரியாம அவேன் பொண்டாட்டி கூட ஜல்சா பண்ணா.. நாமலும் பண்ணக்கூடாதுனு சட்டம் இல்லையே கோதை!" என்ற அவன் மீண்டும் அவளது முகத்தில் முத்த ஊர்வலம் போக.. 

 

"அய்யோ.. அய்த்தான் விடுக.. நடுக்கூடத்தில் நின்னு என்ன பண்றீக?" என்றவள் வெட்கப்பட்டுக்கொண்டே தங்கள் அறைக்கு ஓடிவிட்டாள்.

 

தர்மாவேம் தலையை ஆட்டிவிட்டு "டேய் மச்சான்!!" என்று குரல் கொடுத்துக்கொண்டு வீராவை நோக்கி சென்றான்.

 

அந்தோ பாவம் யோகலட்சுமி சிலை என்ன அப்படியே நின்றார் வாயை திறந்தவாறு.. 

 

சீக்கிரம் யாராவது கூட்டிட்டு போய் வேப்பிலை அடிங்கப்பா..

 

"வாடா.. நல்லவனே என்ன அதிசயமா இருக்கு யேன் தங்கச்சிய கோயில் குளத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போய் இருக்க" என்று தர்மாவை பார்த்து வீரா கேட்க.. அந்த இடைப்பட்ட சந்தர்ப்பத்தில் அஸ்திரா அடுக்களைக்குள் நுழைந்து இருந்தாள்.

 

போகும் அஸ்திராவை பார்த்தபடி வீரா அருகில் உட்கார்ந்திருந்தவன் "உனக்கு என்ன ராசா.. நீயி எல்லாம் இருந்த இடத்தில் இருந்து எல்லாம் முடிச்சுக்குவ.. யேன் நலமா அப்படியா இருக்கு? முதல்ல உன் தங்கச்சி சரி கட்டுவதே பெரிய வேலை.. அதுக்கு அப்புறம் காவல் பூதம் மாதிரி இருக்கிற யேன் அம்மாவா சரி கட்டணும்.." என்று பெருமூச்சு விட்டவனை பார்த்து வீரா சிரிக்க.

 

"சிரிக்காத.. மச்சான். கடுப்பா வருது எனக்கு" என்றான்.

 

இப்படியாக இருவரும் ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளியே சென்றிருந்த சற்குணமும் நாச்சிமுத்துவும் வந்தனர். வந்த இருவர் முகத்திலும் அவ்வளவு இறுக்கம்!!

 

"என்னாச்சு?" என்று மச்சானும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தங்கள் தந்தைகளை நோக்கி சென்றனர்.

 

"என்னாச்சுப்பா?" என்று எதிரில் நின்று மகனை பார்த்த சற்குணம் "உட்காருயா!" என்று அவனை உட்கார சொன்னவர் தர்மாவிடம் "நீயும் உட்காரு தர்மா" என்றான்.

 

பெரும்பாலும் சற்குணத்தின் முன்னால் வீராவும் தர்மாவும் அப்படி பொத்தாம் பொதுவாக எல்லாம் அமர்ந்து விடமாட்டார்கள். இன்று அவரை அமர சொல்கிறார் என்றால் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை வரப்போகிறது என்று யோசித்தவன் அமைதியாக அமரவும், அவன் அருகில் அமர்ந்து கொண்டான் தர்மா!!

 

ஆனால் வீராவின் பார்வை தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கத்தை அவதானித்தபடி இருந்தது.

 

"சொல்லுக ஐயா..!" என்றவனின் குரலில் இருந்த அழுத்தமும் கம்பீரமும் எதையும் நான் தாங்குவேன் என்று இருக்க..

 

"அந்தப் பையன் சஞ்சயன் இறந்துபோனான்ல தம்பி.. அதை விசாரிக்க போலீஸ் வராங்க போல ஊருக்குள்ள.. எட்டு ஊரு ஆளுங்களும் நம்ம பஞ்சாயத்துக்கு கட்டப்பட்டு இருந்தாலும்.. இது கொலைனு சந்தேகப்படுவதால.. போலீஸ் விசாரணையை தொடங்க போகுது!" என்று யோசனையோடு மகனைப் பார்த்தார்.

 

"நீங்க பயப்படுறீகலா ஐயா?" என்று இவன் கேட்க..

 

"என்ன மருமகனே இப்படி கேட்டுட்டிக.. ஐயா என்ன பயந்தாரியா? அவரை எதிர்த்து நிற்க தான் இங்கன யாரும் இருக்காங்களா என்ன?" என்று தோளில் கிடந்த துண்டை உதறிய நாச்சிமுத்து பார்த்து சிரித்த வீரா..

 

"உட்காருங்க மாமா!! எதுக்கு இவ்ளோ கோபப்படுதீக?" என்று புன்னகையோடு கேட்டவன் "உங்க ஐயா சிங்கம் தேன். அதுல எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அந்த சிங்கம் பயப்புடுறது அவருக்காக அல்ல.. அவர் மகனுக்காக!!" என்று தந்தையின் நாடியை சரியாகப் பிடித்து படித்த மகனை வழக்கம்போல பெருமையுடன் பார்த்தார். ஆனால் அதே கண்களில் வலியும் தெரிந்தது.

 

அவர் காலுக்கு அருகே முட்டி போட்டு அமர்ந்தவன் கைகளை தனது இடது கையால் பற்றிக்கொண்டு "யேன் மேல நம்பிக்கை இல்லையா ஐயா?" என்றவன் கேட்க..

 

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா" என்று அவன் தலையை ஆதரவாக தடவியவர் "பஞ்சாயத்துலனா.. உன்னைய பத்தி எல்லாருக்கும் தெரியும். அது எட்டு ஊரு பஞ்சாயத்தா இருந்தாலும் சரி.. உன் மேல நாக்கு மேல பல்ல போட்டு எவனும் பேச மாட்டான். ஆனா இப்ப வந்திருக்கிறது போலீஸ்!! அவங்களுக்கு ஒன்னும் தெரியாது! உன் குணத்தையும் தெரியாது! அவங்க சட்டத்துக்கு தேவை சாட்சியும் சந்தர்ப்பம் மட்டும் தேன். அதை யார் வேணாலும் போலியா திருச்சி சொல்ல முடியும்? என்றவரின் பார்வை உள்ளே இவர்கள் பேசுவதை தூணுக்குப் பின் நின்று கேட்டுக் கொண்டிருந்த அஸ்திராயாவை நோக்கி சென்றது.

 

இவனும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் "அதே சட்டத்துக்கும் தேவ உண்மை தான் ஐயா. என்னைக்கும் உண்மதேன் ஜெயிக்கும். கோர்ட்ல கூட எழுதியாருப்பாங்களே 'வாய்மையே வெல்லும்னு'.. என்னதான் யேன் மேல பழிய கொட்டினாலும் உண்மை எவ்வளவு நாளைக்கு தூங்கும்? சொல்லுக என்றவன்.. "எவன் வர்றானு தான் நானும் பார்க்கிறேனே!" என்று வழக்கம்போல இடது கையால் மீசையை முறுக்கிக்கொண்டு மாடிக்கு சென்ற மகனை பார்த்தவருக்கு முன்பிருந்த இறுக்கம் இப்போது இல்லை.

 

"என் மகன்.. வீர நெடுமாற பாண்டியன்!!" என்ற பெருமையும் கர்வமும் அதில் மிளிர்ந்தது!!

 

காவல்துறை உங்கள் நண்பன் என்ற

அதிகாரத்தில் அரிதாரத்தில் அந்த ஊருக்குள் நுழைந்தது குள்ள நரி ஒன்று!!

 

 

தீருமோ தாகம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top