1
அதிகாலை வேளையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது… மருத்துவமனையில் வேலைப்பார்க்கும் திறமை மிகுந்த மருத்துவர்கள் அனைவரும் நேற்று இரவில் இருந்தே அவசர சிகிட்சை பிரிவில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆடவனுக்கு சிகிட்சை அளிப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்..
நேற்று இரவு நேரம் காரில் வந்து கொண்டிருந்தான் நாயகன் அர்ஷித் யாதவன்… அவனின் காரின் மீது எதிர்ப்புறம் வந்து கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.. அர்ஷித் லாரி கட்டுப்பாட்டை இழந்து தனது காரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதை பார்த்தவன் சுதாரிப்பதற்கு முன் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நடந்தது..
லாரி வேகமாக காரில் மோதியதில் கார் சாலையில் தூக்கி வீசப்பட்டு உருண்டு அங்கிருந்த மரத்தில் மோதியது.. அதில் அர்ஷித்தின் தலையில் பலமாக அடிப்பட்டது.. தலையில் அடிப்பட்டதில் மயங்கினான்..
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இல்லாமல் நான்கு வழி சாலைக்கு அருகில் விபத்து நடந்ததால் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அர்ஷித்தை தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவனது தந்தை ராகவேந்திரனுக்கு போனில் அழைத்து தகவல் கூறினர்..
ஆர்ஷித் யாதவனின் குடும்பத்தை பற்றி தஞ்சாவூரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.. தஞ்சாவூரில் பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம்.. அவனது தாத்தா வர்மன் தனது கடின உழைப்பால் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.. நல்ல மனிதர்.. ஊரில் உள்ள மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்… ஊர்த்தலைவரும் அவரே… வர்மன் குரூப்ஸ் மற்றும் வர்மன் குடும்பத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை.. வர்மனின் மனைவி அங்கம்மாள்.. கணவன் போல் ஊர் மக்களின் மீது அதிகளவு பாசம் வைத்திருப்பவர்.. வர்மன் - அங்கம்மாள் முதிர் தம்பதியினருக்கு குடும்பம் என்றாலே உயிர்…
வர்மன் - அங்கம்மாள் தாம்பதியினருக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் ராகவேந்திரன், இளையவள் மகேஸ்வரி… ராகவேந்திரன் சற்று முரட்டுத்தனம் நிறைந்தவர்.. தான் வைத்தது மட்டுமே சட்டம் என்று குடும்பத்தினரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவர்.. அவர் சொல்லை முதியவர்களான வர்மன், அங்கம்மாள் இருவராலும் கூட மீற முடியாது… ராகவேந்திரனை பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்..
ராகவேந்திரனின் மனைவி பார்வதி… குடும்பத்தை பொறுப்பாக வழி நடத்தும் குடும்பத்தலைவி… கணவனுக்கு பயந்திருக்கும் அப்பாவி.. ராகவேந்திரனும் மனைவி மீது அதிகளவு காதலை வைத்திருக்கிறார்.. ஆனால் அதை ஒரு நாளும் வெளிப்படுத்தியது இல்லை.. ராகவேந்திரன் - பார்வதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் அர்ஷித் யாதவன், இளையவன் அர்ஜுனன்..
மகேஸ்வரி… அவளது கணவர் மதிமாறன்.. மகேஸ்வரி.. மகேஸ்வரி - மதிமாறன் தம்பதியினருக்கு ஒரே மகள் மயூரி…
மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகும் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க முடியாது என்று கணவரிடம் அடம்பிடித்து தனது பெற்றோர் வீட்டிலையே தனது கணவன் மற்றும் மகளுடன் வாழ்கிறார்..
அர்ஷித் யாதவன்.. தனது சொந்த உழைப்பால் நகைக்கடையை நடத்தி வருகிறான்.. அவனது நகைக்கடை தஞ்சாவூர் மட்டுமல்ல.. தமிழ்நாடு மற்றும் இந்தியா அவனது நகைக்கடை கிளைகள் உள்ளது.. வெளிநாடுகளிலும் அவனது நகைக்கடை கிளைகள் உள்ளது… அவனது கடைகளில் செய்யும் நகைகளுக்கு மார்க்கெட்டில் தனி டிமாண்ட் உண்டு.. பல கண்ணை கவரும் டிசைன்கள்.. நகைகளில் சிறு கற்கள் வைத்து மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டிருக்கும்.. சில நகைகளை அவனே வடிவமைத்திருக்கிறான்.. அவன் பார்த்து பார்த்து வடிவமைத்த நகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.. அர்ஷித் வடிவமைக்கும் அனைத்து நகைகளையும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வைக்க மாட்டான்.. விழாக்காலங்களில் மட்டுமே அவன் வடிவமைத்த நகைகளை விற்பனைக்கு வைப்பார்கள்.. அந்த நேரத்தில் மற்ற நாட்களை விட அதிக லாபம் கிடைக்கும்…
மருத்துவமனையின் அவசர சிகிக்சை பிரிவிற்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து மகளின் நிலையை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தார் அர்ஷித் யாதவனின் அன்னை பார்வதி..
அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று தொலைவில் நின்று போலீஸ் அதிகாரிகளுடன் ஏதோ தீவிரமாக உரையாடி கொண்டிருந்தார்.. அர்ஷித் யாதவனின் தந்தை ராகவேந்திரன்..
ராகவேந்திரன் சற்று கோபமான குரலில், “யார் இதை பண்ணதுன்னு கண்டுப்பிடிச்சிட்டிங்களா.. என்னோட பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்குனா யாரையும் சும்மா விட மாட்டேன்.. எவ்வளவு தைரியம் இருந்தா என் பையனை ஆக்சிடென்ட் பண்ணி கொலை பண்ண முயற்சி பண்ணி இருப்பாங்க..” என்று கோபமாக கர்ஜித்து கொண்டிருந்தார்..
அவரது கோபத்தை கண்டு சில நிமிடங்கள் பயத்தில் அமைதியாக நின்றிருந்த காவல்துறை மேலதிகாரிகள், “சார்.. உங்க பையனை யாரும் திட்டம் போட்டு கொலை பண்ண முயற்சி பண்ணல.. இது எதிர்பாராதவிதமா நடந்த விபத்து மட்டும் தான்.. எதிர்பக்கம் வந்திட்டு இருந்த லாரி திடிர்னு கட்டுப்பாட்டை இழந்து தான் உங்க பையனோட கார்ல மோதி விபத்து நடந்திருக்கு.. லாரி ஓட்டிட்டு வந்த டிரைவர் ஸ்பாட்டிலேயே இறந்திட்டார்.. நாங்க அங்கிருந்த கேமரா வீடியோவை பார்த்தோம்.. இது விபத்து தான் சார்… நீங்க இவ்வளவு ஆணித்தரமா விபத்து இல்லை கொலை முயற்சின்னு சொல்றதுனால உங்க பையன் கண் முழிச்சதுக்கு அப்புறம் அவர் கிட்ட விசாரிக்கிறோம்.. அவர் கண் முழிச்சதும் இன்போர்ம் பண்ணுங்க…” என்று கூறி விட்டு கிளம்ப தயாரானார்கள்..
அவர்களிடம் ராகவேந்திரன், என் பையன் ரொம்ப சீரியஸ்சான கண்டிஷன்ல இருக்கான்… அவனை பிழைக்க வைக்கிறதே கஷ்டம்ன்னு சொல்லிருக்காங்க.. அவன் பிழைக்கணும்னு தான் நாங்க தவம் இருக்கிறோம்.. நான் கொடுத்த கம்பளைண்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன்.. பையனுக்கு நடந்தது விபத்தாவே இருக்கட்டும்.. இது பத்தி விசாரிச்சு அவனை கஷ்டப்படுத்த வேணாம்.. எனக்கு என் பையன் பழைய மாதிரி திருப்பி கிடைச்சாலே போதும்.. விபத்து நடந்து மயக்கத்தில இருந்த பையனை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்து எனக்கு பெரிய உதவி பண்ணிருக்கீங்க… உங்க உதவியை எப்பவும் மறக்க மாட்டேன்.. ரொம்ப நன்றி.. நீங்க கிளம்புங்க..” என்று கூறி காவல்துறை அதிகாரிகளை அனுப்பி வைத்தார் ராகவேந்திரன்.
சில மணி நேரத்திற்கு பிறகு அவசர சிகிட்சை பிரிவு அறையை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் அருகில் சென்றார் ராகவேந்திரன்..
மருத்துவர், சார்… உங்க பையனை போராடி காப்பாத்திட்டோம்.. பத்து நிமிஷம் லேட்டா கொண்டு வந்திருந்தாலும் அவரை காப்பாத்த முடிஞ்சிருக்காது…. உங்க பையன் இப்போ நல்லா இருக்கார்… அவரோட பின் தலையில அடிப்பட்டதில ஏற்பட்ட பாதிப்பை சர்ஜரி பண்ணி சரி பண்ணிட்டோம்… ஆனா ஒரு பிரச்சனை ஸ்கேன் பண்ணி பார்த்ததுல அவரோட மூளையில நினைவுகளை சேகரிச்சு வச்சிருக்க பகுதி பாதிப்படைஞ்சிருக்கு அதனால அவர் கடந்தக்கால நினைவுகளை இழக்க வாய்ப்பிருக்கு.. எத்தனை நாள், எத்தனை மாசம், எத்தனை வருஷம்னு தெரியல.. அவர் கண் முழிச்சா தான் தெரியும்… இப்போ மயக்கத்தில இருக்கார்.. எட்டு மணி நேரத்துக்கு அப்புறம் அவர் கண் முழிச்சிடுவார்… இருபத்தி நான்கு மணி நேரம் அவர் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.. இரண்டு மணி நேரத்தில ரூமுக்கு மாத்துவேன்.. அதுக்கப்புறம் போய் அவரை தொந்தரவு பண்ணாம ஒவ்வொருத்தரா போய் பாருங்க…” என்று கூறி விட்டு சென்றார் மருத்துவர்..
டாக்டர் அங்கிருந்து நகர்ந்ததும் தனது போனை எடுத்த ராகவேந்திரன் தனது தங்கை மகேஸ்வரிக்கு அழைத்து அர்ஷித்திற்கு விபத்து நடந்த விஷயத்தை கூறி அவனது தற்போதைய நிலையை பற்றியும் விளக்கமாக கூறியவர் அங்கிருந்து நகர்ந்து சில விஷயங்களை மெதுவாக கூறியவர், மகா.. அர்ஷித்தோட பொண்டாட்டி மயூரி கிட்ட பொறுமையா ஆர்ஷித்தோட நிலைமையை எடுத்து சொல்லி அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திடு.. வரும்போது அந்த வேலைக்காரி மித்ராவையும் கூட்டிட்டு வா.. நான் சொன்னதை அவ கிட்ட தெளிவா சொல்லிட்டு கூட்டிட்டு வாங்க.. அவ சின்ன கேப் கிடைச்சாலும் நாடகமாடி என் பையனை அவ பக்கம் திருப்ப பார்ப்பா.. அப்புறம் ரித்துகுட்டியையும் கூட்டிட்டு வந்திடு..” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தவர் யாருக்கோ போன் செய்து சில கட்டளைகள் இட்டு விட்டு அழைப்பை துண்டித்தவர் நேராக மனைவியின் அருகில் சென்று அவரிடம் மிரட்டும் தோணியில் ஏதோ கூறினார்… பார்வதியும் வேறு வழி இல்லாமல் அவர் கூறியதற்கு பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தார்.. அவரால் மறுத்து பேசவும் முடியவில்லை.. அதே நேரம் அவர் கூறியதற்கு சம்மதமும் கூற முடியவில்லை.. தொண்டை குழியில் ஏதோ அடைத்தது போல் இருந்தது… மகனை நினைத்து அழுது கொண்டிருந்தவர் இன்னொரு ஜீவனை நினைத்து மௌனமாக கண்ணீர் வடித்தார்…
அரை மணி நேரத்திற்கு பிறகு அழுதபடியே மருத்துவமனைக்குள் வந்தாள் மயூரி.. அவளை கைதாங்கலாக அழைத்து கொண்டு வந்தார் அவளது அன்னை மகேஸ்வரி.. இருவரும் மெதுவாக நடந்து அழுது கொண்டிருந்த பார்வதியின் அருகில் அமர்ந்தனர்…
அவர்களுக்கு பின்னால் தூங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை ரிதன்யாவை தூக்கி கொண்டு வந்தால் நாயகி மித்ரதேவிகா…. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெறுமையான முகத்துடன் குழந்தையை தட்டி கொடுத்த படியே தளர்ந்த நடையுடன் வந்தாள்..
அவளை பார்த்ததும் ராகவேந்திரனின் முகம் கோபத்தில் சிவந்தது.. அவளது அருகில் வந்தவர் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அவளது கையில் இருந்து பிடுங்கி விட்டு குழந்தையை தனது மனைவி பார்வதியின் மடியில் கிடத்தி விட்டு மித்ராவின் கன்னத்தில் “பளார்” என அறைந்தவர்.. “உன்னை யாரு டி இங்க வர சொன்னது.. என் பையனை பணத்துக்காக உன்னோட அழகை காட்டி மயக்க பார்த்த.. அவன் உன்னை திரும்பி பார்க்கலைன்னு.. என்னோட மருமகளை அதாவது அவனோட பொண்டாட்டி மயூரியை அவன்கிட்ட தப்பானவளா காட்ட முயற்சி பண்ண.. நீ சொன்னதை என் பையன் நம்பாம இருந்ததும் அவனை கொலை பண்ணவும் துணிஞ்சிட்டேல.. அவன் பிழைச்சிட்டான்னு தெரிஞ்சதும் ஹாஸ்பிடல்ல வந்து நாடகமாடலாம்னு நினைச்சிட்டு வந்தியா..” என்று மித்ராவிடம் கோபமாக கத்தி கொண்டிருந்தார்.. அவர் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் மித்ராவை கேவலமாக பார்த்து தங்களுக்குள் ஏதேதோ பேசி கொண்டிருந்தனர்..
அவர் கேட்ட கேள்வியில் துடித்து போனாள் மித்ரா அவளது இதயம் சுக்குநூறாக உடைந்தது.. கண்கள் கலங்கி கண்ணீர் வழிய தயா
ராக இருந்தது.. உதட்டை கடித்து கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள், “நான் அவரை கொலை பண்ண முயற்சி பண்ணுவேனா…” என்று குரல் தழுதழுக்க கேட்டாள்..
தொடரும்…🥺❤️
