மித்ரா கூறியதை கேட்டு அவளது அருகில் நெருங்கி வந்த மயூரி, மித்ராவின் கன்னத்தில் அறைந்து, “என்னடி என்னோட புருஷனை ரொம்ப உரிமையா அவர்ன்னு சொல்ற.. அவர் என் புருஷன்.. அவரை நெருங்க முயற்சி பண்ணேனா உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்.. உனக்கு ஊர்ல வேற ஆம்பளையே கிடைக்காத மாதிரி என் புருஷனை மயக்க சுத்திட்டு இருக்க… உனக்கு வெக்கமா இல்லையா.. பணத்துக்காக தானே என் புருஷனை மயக்க பின்னாடியே சுத்துனா..” என்று மித்ராவை கேவலமாக பேசி அவளை வார்த்தையால் வதைத்து ரணத்தை அதிகப்படுத்தி கொண்டிருந்தாள் மயூரி....
இவர்கள் சொல்லுவதை அனைத்தையும் கேட்டு விட்டு ஜடமாக நிற்பதுக்கு பதிலாக இப்போது பூமி பிளந்து தன்னை உள்ளிழுத்து கொள்ளாதோ என்று நினைத்து கொண்டாள்.. ஆனால் மறு நிமிடம் எதையோ நினைத்து தான் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்கு தோன்றியது.. தன்னை நம்பி இருக்கும் பெற்றோர் மற்றும் மற்ற இருவருக்காக தான் கண்டிப்பாக வாழ வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்து கொண்டாள்…. ஆனாலும் அவளும் ரத்தம், சதையுள்ள பெண் தானே ரோபோ இல்லையே.. மயூரியின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு அனலில் இட்ட புழு போல் துடித்து கொண்டிருந்தாள் மித்ரா...
அனைவரும் அவளை பார்த்து கேவலமாக பேசி கொண்டிருந்ததில் அவமானத்தில் கூனி குறுகி போனாள்.. அவள் உள்ளுக்குள் படும் வேதனை அவள் மட்டுமே அறிந்தது..
பார்வதி மயூரியிடம் ஏதோ கூற வருவதை பார்த்த ராகவேந்திரன், மனைவியை பார்த்து கண்களால் ஏதோ கூறி மிரட்டி அமைதியாக அமர வைத்தார்.. பார்வதியும் எதுவும் செய்ய முடியாமல் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமல் தனது பேத்தியை தூக்கி கொண்டு மித்ராவை பாவமாக பார்த்த படியே கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தார்…
ராகவேந்திரன், மகேஸ்வரி, மயூரி மூவரும் மித்ராவை பார்த்து ஏளனமாக சிரித்து கொண்டிருந்தனர்…
மித்ரா அவர்கள் தன்னை காயப்படுத்த தாக்கப்படும் சொல்லம்புகளால் இதயம் கூர் கத்தியை வைத்து தாக்கியது போல் வலித்தும் அவள் அவர்கள் முன்னால் கூனி குறுகி பொறுமையாக நிற்க ஒரே காரணம் அர்ஷித் யாதவனுக்காக மட்டுமே.. அவளால் இங்கிருந்து செல்ல முயன்றாலும் அவளால் செல்ல முடியாது… எந்த பிரச்சனை வந்தாலும் அந்த வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று அவளின் மீது உயிரையே வைத்திருந்த ஒருவருக்கு சத்தியம் செய்து வாக்கு கொடுத்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர்கள் இவ்வளவு அவமானப்படுத்தி கேவலமாக பேசியும் அமைதியாக நின்றிருக்கிறாள்…
ராகவேந்திரன் அங்கிருந்த அனைவரையும் போக கூறி விட்டு அவர்கள் நகர்ந்ததும் நேராக மித்ராவின் அருகில் அவளிடம் மிரட்டும் தோணியில் ஏதோ கூறினார்.. பயந்து போன மித்ரா எதை பற்றியும் யோசிக்காமல் அவரது காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டாள்..
முடிந்த மட்டும் அவளை வார்த்தையால் வதைத்து காயப்படுத்தினர் ராகவேந்திரன், மகேஸ்வரி, மயூரி மூவரும்..
சில நிமிடங்களுக்கு பிறகு ராகவேந்திரன், மகேஸ்வரி, மயூரி மூவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவர்களுக்குள் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருந்தனர்.. மித்ரா அங்கிருந்து தளர்ந்த நடையுடன் நகர்ந்து சென்றாள்.. அவளது தலைமூடி முழுவதும் கலைந்து, இரு கன்னங்களும் சிவந்து வீங்கி போயிருந்தது… அழுதழுது கண்கள் இரண்டும் சிவந்து முகம் வெளிறி காணப்பட்டது.. மெதுவாக நடந்து பார்வதியின் அருகில் சென்றாள்… அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.. அவர் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தவள் நீரை வைத்து முகத்தை நன்றாக கழுவினாள்.. நீர் துளிகள் முகத்தில் பட்டதும் கன்னத்தில் எரிச்சல் ஏற்பட்டது… பல்லை கடித்து வலியை பொறுத்து கொண்டாள்…
மித்ரா தனது மனதில் எல்லாம் சரியாகும் என்று தன்னை தானே தேற்றி கொண்டிருந்தாள்.. அர்ஷித்திற்காக கடவுளிடம் மனதிற்குள் வேண்டி கொண்டிருந்தாள்..
கடவுளிடம் யாருக்காக வேண்டுதல் வைத்து கொண்டிருக்கிறாளோ அவனே அவளை அணுவணுவாக சித்ரவதை செய்ய போகிறான் என்று அறியாமல் போனாள் அப்பாவி பேதை பெண் மித்ரதேவிகா..
நேரம் நகர ஆரம்பித்தது… அங்கம்மாள் பாட்டி மற்றும் வர்மன் தாத்தாவையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் அர்ஜுனன், மதிமாறன் இருவரும்..
எட்டு மணி நேரத்திற்கு பிறகு மெதுவாக தனது கண்களை திறந்தான் அர்ஷித் யாதவன்.. அவனை பரிசோதித்த மருத்துவர்.. அவனிடம் சில கேள்விகளை கேட்டார்.. அதற்கு அவன் பதிலை கூறினான்..
மருத்துவர் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அறைக்குள் வரவழைத்து அவன் மூன்று வருட நினைவை இழந்து விட்டான் என்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு ஒவ்வொருவரை காட்டி அவனது பதிலை கேட்டார்.. அவனும் அனைவரை பற்றியும் மெதுவாக கூறினான்.
ஒவ்வொருவராக பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, தம்பி, அத்தை, மாமா… என எல்லாரையும் காட்டி விட்டு டாக்டர் ஏதோ கேட்க முற்படும் போது மயூரியை அழைத்து வந்து அவனது முன்னால் நிறுத்தினார் ராகவேந்திரன், அவளை ஒரு பார்வை பார்த்தான் கண்கள் கலங்கி அழுத தடம் தெரிய நின்றிருந்தாள்.. பட்டுப்புடவை கட்டி, கழுத்தில் தங்கத்தாலி, நெற்றி வகுட்டில் குங்குமம் என நின்றிருந்தவளை புரியாமல் பார்த்தவன், “மயூ.. உனக்கு எப்போ திருமணம் நடந்தது… பொறுப்பான குடும்ப பொண்ணாகிட்ட போல…” என்று கேட்டான்.
அப்போது ராகவேந்திரன், “அர்ஷித் உனக்கும் மயூரிக்கும் தான் கல்யாணம் நடந்தது.. இப்போ உனக்கு ஒன்றரை வயசுல பெண் குழந்தை இருக்கா..” என்று கூறினார்.. அவர் கூறியதை கேட்டு யோசித்து பார்த்தவனுக்கு எதுவும் நினைவில் வரவில்லை… அவன் யோசிப்பதை பார்த்த ராகவேந்திரன் தனது மனைவி கையில் இருந்த குழந்தையை வாங்கி அவன் படுத்திருந்த கட்டிலில் குழந்தையை அமர வைத்தார்.. குழந்தையும் தந்தையின் கையை இறுக்கமாக பற்றி கொண்டாள்..
குழந்தையின் பிஞ்சு ஸ்பரிசம் பட்டதும் தனது குழந்தை என்ற உணர்வு தோன்றியது.. குழந்தையை மெதுவாக அணைத்து கொண்டான்…
அங்கே நின்றிருந்த மித்ராவை காட்டி யாரென வினவினான்.. மயூரி, “அவ வேலைக்காரி மாமா..” என்று வேகமாக பதில் கூறினாள்..
அவள் கூறியதை கேட்ட மித்ராவின் கண்கள் கலங்கி போனது.. அதை அர்ஷித்தின் இதயத்திலும் தாளமுடியாத வலி ஏற்பட்டது..
அவன் எவ்வளவு யோசித்தும் எதுவும் நினைவிற்கு வரவில்லை.. தனக்கும், மயூரிக்கும் திருமணம் நடந்ததை அவனால் நம்ப முடியவில்லை.. ஆனால் குழந்தை ரிதன்யாவை பார்த்ததும் அவனுக்கு அவர்கள் கூறியதை நம்ப தோன்றியது.. அவனை உரித்து வைத்தது போல் அவனின் மினி ஜெராக்ஸ்சாக அல்லவா இருக்கிறாள் அவனது செல்ல குட்டி இளவரசி…
மித்ராவை பார்த்தான் அர்ஷித் அவளை பார்த்ததும் மனதில் இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.. ஆனால் காரணம் மட்டும் அவனுக்கு புரியவில்லை.. தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. குழந்தையும் இருக்கிறது.. மனைவிக்கு துரோகம் செய்ய கூடாது என்று மனதில் நினைத்து கொண்டவனுக்கு தன் மீதே கோபம் ஏற்பட்டது.. தனது கோபத்தை தனக்கு யார் மீது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டதோ அவள் மீதே தனது கோபத்தை காட்ட மித்ராவிடம், “பேமிலி மெம்பெர்ஸ் இருக்க இடத்தில வேலைக்காரி உனக்கு இங்க என்ன வேலை…?? பேமிலி மெம்பெர்ஸ் பேசிட்டு இருக்கும் போது அந்த இடத்தை விட்டு போகணும்னு கூட உனக்கு தெரியாதா.. மரியாதையா ரூமை விட்டு வெளியே போ..” என்று கோபமாக கூறினான்.. அவன் கூறியதை கேட்டு வேகமாக அழுதபடியே வெளியேறினாள் மித்ரா.. அவளது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது…
தனது மனைவியான மயூரி மீது கூட தோன்றாத ஈர்ப்பும், இனம்புரியாத உணர்வும் மித்ரா மீது தோன்ற காரணம் என்னவென புரியாமல் குழம்பி தவித்தான்…
அவள் வெளியே செல்ல செல்ல தனது உயிரை யாரோ பிடிங்கி செல்வது போல் அவனுக்கு வலித்தது.. செல்லும் அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் கன்னத்தில் சப்பென்று தனது பிஞ்சு கரத்தால் தந்தையை அடித்தால் ரித்துக்குட்டி.. மகள் தன்னை அடித்ததும் அவளை பார்த்தான்.. அவளோ உதட்டை பிதுக்கி அழ தயாராகி கொண்டிருந்தாள்..
மகளை தூக்கி மடியில் வைக்க கையை நீட்டினான் அர்ஷித் அவனது கையை தனது பிஞ்சு கையால் தட்டி விட்டு கத்தி அழ ஆரம்பித்தாள் குட்டி மழலை..
மகளின் அழுகையில் பதறி போன அர்ஷித் அவளை தூக்க முயற்சி செய்தான்.. தந்தையிடம் செல்லாமல் அவனது கையை தட்டி விட்டு கொண்டு அடம்பிடித்தால் குட்டி மழலை… மகளின் அழுகையை பார்த்ததும் அவனால் தாங்க முடியவில்லை.. அவனுக்கும் கண்கள் கலங்கியது.. மகளை எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றும் அவனால் மகளின் அழுகையை நிறுத்த முடியவில்லை…
அர்ஷித்தின் குட்டி இளவரசியின் அழுகை அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை..
குழந்தை அழுவதை பார்த்த மயூரி மெதுவாக குழந்தையை தூக்க வந்தாள்.. அவளது புடவையை ஒரு கையால் பிடித்து இழுத்து அவளது தலைமுடியை இன்னொரு கையால் பிடித்து இழுத்து அவளது கன்னத்தில் தனது பிஞ்சு கையால் அடித்தது.. அவளும் குழந்தையிடம் இருந்து போராடி விடுபட்டு அங்கிருந்து நகர்ந்து நின்று கொண்டாள்..
அங்கம்மாள், வர்மன் தம்பதியினர் தங்களது கொள்ளு பேத்தியின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.. அவர்களின் முயற்சியும் தோல்வியே ரித்துக்குட்டி யாருக்கும் அசைந்து கொடுக்கவில்லை…
ராகவேந்திரனும் பேத்தியை தூக்கி அவளது அழுகையை நிறுத்த அவளது அருகில் சென்றார்.. குட்டி அவரது வெள்ளை தாடியை பிடித்து இழுத்து அவரது கன்னத்திலும் சப்பென்று அடித்தாள்.. அவரும் அங்கிருந்து நகர்ந்தார் பேத்தியின் அழுகையை இன்னும் அதிகரிக்க வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து நகர்ந்தார்..
பார்வதியும் பேத்தியின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தார்.. அவருக்கு பேத்தியின் நிலையை நினைத்து வேதனையாக இருந்தது.. அவள் எதற்க்காக இப்படி அழுகிறாள் என்பது அர்ஷித்தை தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது..
அர்ஜுனன் குட்டியின் அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் கூறினான்.. விம்மி விம்மி அழுது கொண்டிருந்த குழந்தை சித்தப்பாவின் பேச்சை கேட்டு அவனிடம் தாவி சென்றாள்.. அவளை தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியேறினான்..
அங்கிருந்த அனைவரும் அவனை தடுக்கவில்லை.. எந்த கேள்வியும் கேட்கவில்லை… அவர்களுக்கு குழந்தை அழுகையை நிறுத்தினால் போதும்…
குழந்தை ரிதன்யாவை தூக்கி கொண்டு வெளியே சென்ற அர்ஜுனன் சில நிமிடங்களுக்கு பிறகு அறைக்குள் வந்தான்.. குழந்தை அவனது கழுத்தை காட்டி கொண்டு தோளில் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்…
அர்ஜுனனின் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த குழந்தையை பார்த்த பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்..
தொடரும்…🥺❤️
