அத்தியாயம் 17
அவளின் உதட்டை உயிரால் உறிஞ்சிக் கொண்டிருந்தவனின் கைகளோ, அவளின் மேனியை அங்கு, அங்குலமாக அளந்துக் கொண்டிருந்தது..
அவனின் அத்துமீறலில் துடித்துப் போனாள் யாதிரா..
“ப்ளீஸ்.. விடுங்க என்னை..” என அவனிடமிருந்து, விடுபட முயன்ற கணம், அவளின் சட்டையை பற்றி இழுக்க, அதுவோ சர்ரென்று கிழிந்துப் போனது..
அதைப் பார்த்த யாதிராவிற்கோ சுர்ரென்று கோபம் எகிறியது.. கோபத்துடன் அவனைப் பார்க்க,
“ஏன்டி, ஒரு நல்ல சட்டைக் கூட வாங்கி வச்சிக்க மாட்டீயா, இப்படி லேசா இழுத்ததுக்கே கிழிஞ்சிடுச்சி..” என அவளை ஏறிட்டுப் பார்த்தவனின் கண்களோ ரத்தமென சிவந்துப் போனது..
ஆடை விலகியதால், அவளின் காயங்கள் அனைத்தும் அவன் கண்களுக்கு விருந்தாகியது..
பெண்ணவள் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் அவன் கண் முன்னே பளீச்சென பல்லைக் காட்டியது..
அவளின் தோளைப் அழுத்தமாக பற்றினான்..
யாதிராவின் முகம் சுருங்கியது..
“என்னடி பண்ணி வச்சிருக்க?.. இது என்னது?.. உடம்பெல்லாம் காயமா இருக்கு?.. எப்படி வந்திச்சு..” என்றான் கடுமையாக,
“விடுங்க என்னை.. என்னை விடுங்கன்னு சொல்றேன்ல..” என வேகமாக அவனை விட்டுப் பிரிந்தவள், கட்டிலை விட்டு இறங்கினாள்..
“நில்லு யாதிராஆஆ..” என்றான் கர்ஜனையாக,
சட்டென்று நின்றவளை வேகமாக தன்னை நோக்கி திருப்பினான்..
உடம்பை ரணமாக்கி வைத்திருந்தாள்..
அவளின் காயத்தில் சில இடங்களில் ரத்தத்திட்டுக்கள் இருந்தது..
அதைப் பார்த்தவனின் உள்ளம் வெகுவாக காயப்பட்டுப் போனது..
“ஏன்..” என்பது போல், அவள் கண்ணைப் பார்க்க..
“உன் தொடுகை.. எனக்கு ரணம் மட்டுமே..” என்று தான் அவள் நின்றிருந்தாள்..
கண்களாலேயே ஒருவரை அடித்து வீழ்த்த முடியுமா?.. வீழ்த்திருந்தாள் ஆறடி ஆண்மகனை..
“சோ. நான் உன்னைத் தொட்டதுக்கு நீ கொடுத்த தண்டனை இது?..” என்றவனின் முகம் இறுகி, தேகம் இறுகியது..
மெளனமாக நின்றாள் யாதிரா.. அவளையே இமைக்காமல் பார்த்தான் சயந்தன்..
“நான் தொட்ட உன் உடம்புக்கு தண்டனைக் கொடுத்திட்ட.. உன்னைத் தொட்ட என் கைக்கு.. நான் தண்டனைக் கொடுக்க வேண்டாம்?..” என்றவனை கண்கள் இடுங்க ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள் யாதிரா..
அவன் கண்களில் மலையளவு காதல்.. அவள் மீது மட்டும்..
“எனக்கு நானே தண்டனை கொடுத்திட்டா, அது சரியா வராது..” என்றவன், பேசிக் கொண்டே யாதிராவின் பின்புறமாக வந்து நின்றான்..
தன்னை உரசியபடி வந்து நின்றவனைக் கண்டு அதிர்ந்து பார்த்தாள் யாதிரா..
“என்னஹ்?..” என்பதற்கு முன்பாகவே, தன் கையில் எப்பொழுதும் பாதுகாப்பிற்காக பெல்ட்டில் வைத்திருக்கும் நவீனரக கத்தியை கையிடுத்தவன்.. அவள் கையில் வைத்தான்..
இது என்ன?.. என்பதற்கு முன்பாகவே, அவளை தன்னை நோக்கி சுழற்றி எடுத்தவன், அவள் கைக்கு மேல் தன் கையை வைத்தவள், கத்தியைக் கொண்டு ஆழமாக தன் உடலில் ஆங்காங்கே கிழித்து விட்டான்..
“நான் தானடி உன்னோட பிரச்சினை.. என்னைக் கொன்னுடு..” என்றவன், கண்ணிமைக்கும் நொடியில் அவன் நெஞ்சில் அழுத்தமாக அவனே குத்தி விட்டான்..
அவனின் ரத்தத்துளிகள் அவள் முகமெங்கும் பட்டுத் தெறிக்க.. பெண்ணவள் அசையவே இல்லை.. அப்படியே நின்றிருந்தாள்..
இமைகள் அசைய மறுக்க, பெண்ணவளின் கருவிழிகளில் இருந்து கண்ணீர் வந்தது..
சத்தியமாக அவனின் இந்த பரிணாமத்தை அவள் எதிர்பார்க்கவில்லை..
அவளின் உடல் நடுங்கியது.. அதையும் துல்லியமாக உணர்ந்தான் அவன்..
ஆனால் அவன் அருகில் கூட அவள் செல்லவில்லை..
அசைவற்று அப்படியே நின்றிருந்தவனைப் பாரக்க, பார்க்க, இவனுக்கு வலித்தது..
“அவ்வளவு தானா டி, நான் உனக்கு?..” என புலம்பிக் கொண்டே, விறுவிறுவென வெளியேறினான்..
அப்பொழுது தான் சமையலை முடித்து விட்டு, ஹால் சோபாவில் வந்தமர்ந்த சந்தனமல்லி சயந்தனை அதிர்ந்துப் பார்த்தாள்..
அவன் உடலெங்கும் ரத்தத்துளிகளில் மல்லிக்கு மயக்கம் வருவதைப் போல் இருந்தது..
“அய்யோ.. தம்பி ரத்தம்..” என கத்தியவளின் பேச்சு..” அப்படியே காற்றில் கரைந்துப் போனது..
அவன் வீட்டை விட்டுச் சென்றதுமே அஞ்சலிக்கு அழைத்து, அனைத்தையும் கூறிவிட்டாள் மல்லி..
துடித்துப் போனார் அஞ்சலி..
விறுவிறுவென காரை எடுத்துக் கொண்டவன் அழைத்தது என்னவோ ப்ரணவ்விற்குத் தான்..
இவன் நடத்திய கூத்தில் இரண்டு நாட்களாக தூங்காமல், இன்று தான் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தார்..
அதையும் கெடுக்க போன் பண்ணி விட்டான்..
“சொல்லுடா?..” என்றார் தூக்க கலக்கத்தில்,
“யோவ்வ்வ்.. மாமா, என்னய்யா பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க?.. புருஷன்காரன் நெஞ்சுல கத்தியை எடுத்து குத்துறானே, கொஞ்சமாவது அழுதுக் கரைய வேண்டாம்.. கல்லு மாதிரி பார்த்துட்டு நிற்கிறா?.. செத்தா சாவுங்கிற மாதிரி.. நல்லா வளர்த்துக்கிறீங்க டா புள்ளைய..” என்றவனின் பேச்சு அவருக்கு சுத்தமாக புரியவில்ைல..
“யாரு, கல்லு மாதிரி நிற்கிறா?.. நாங்க யாரை வளர்த்தோம்?.. ஆமா யார் நெஞ்சுல கத்தி குத்துனது?..” என்றார் புரியாமல்,
அவரே அய்யோ பாவம்.. இரண்டு நாள் தூங்குவோம் என வந்திருக்க, அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக போனில் அழைத்து விட்டான்.. இனி அவர் தூங்கிய மாதிரி தான்..
“அதான் உன் அக்கா பொண்ணு..”
“யாரு நெஞ்சுல குத்துன?..”
“நான் தான்யா, கோபத்துல நெஞ்சுல குத்திட்டேன்.. பாவிய்ய்ய்.. வலிச்சுத் தொலையுது.. சிக்கீரம் எஸ்.ஆர். ஹாஸ்பிட்டல் வந்து சேர்..” என சொல்லிக் கொண்டே மருத்துவமனையில் காரை நிறுத்தினான்..
காரை விட்டு இறங்கப் போனவன், ஒரு கணம் நிறுத்தி, மருத்துவமனையைப் பார்க்க. ஆடி மாத கூழ் ஊத்துவதைப் போன்று, அவ்வளவு கூட்டம் ஹாஸ்பிட்டலில்..
“பேசாம நம்ம யாதுக்குட்டியை டாக்டராக்கிடணும்.. கல்லாப்பெட்டியை திறந்து காசை எல்லாம் அள்ளிடணும் ப்பா.. எம்புட்டுக் கூட்டம்..”
“இப்படியே போனா அவ்வளவு தான்.. இன்னைக்கு மீடியாவுக்கு நாமளே தீனி போட்ட மாதிரி ஆகிடும்..” என்றவன், வேகமாக தன் காருக்குள் எப்பொழுதும் வைத்திருக்கும், வேறு ஒரு சட்டையை எடுத்து மாற்றினான்..
நல்ல வேளையாக அது சிவப்பு நிற சட்டையாக இருந்தது.. வெளியே தெரிவதற்குள் டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று விறுவிறுவென ரிசஷ்பசனல் கூட நிற்காமல் உள்ளே சென்று விட்டான்..
வழக்கமாக அவர்கள் பாரக்கும் ஹாஸ்பிட்டல் என்பதால் அவனுக்கு சற்று சலுகை அதிகம் தான்..
“டாக்டர்..சுஜா..” என எழுதிய அறையை தட்டினான்..
“உள்ளே வா..” என்றாள் சுஜா..
“என்னடா ஒரே ரத்தக்கிளறியா வந்திருக்க போல?..” என்றவளின் பார்வை, நெஞ்சில் வடிந்த ரத்தத்தில் இருந்தது..
“என்னத்த சொல்லுறது?.. நேத்துக் கல்யாணம் பண்ணேன், இன்னைக்கு என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டா என் பொண்டாட்டி.. இந்த பொம்பிளைங்களே இப்படித்தான் போல.. வந்து சிக்கீரம் பாரு.. வலிச்சித் தொலையுது..” என்றவன், டேபிளியில் சாய்ந்துக் கொள்ள..
“உனக்கிருக்கிற வாய்க்கு, நடந்த ஐசியூவுல வந்துப் படு..” என்றாள் சுஜா..
அவள் செல்லும் வழியிலேயே நர்ஸ்க்கு அழைத்து, ஐசியூவை ரெடி பண்ணச் சொன்னாள்..
அதில் படுத்து சில கணங்களில் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது..
அவ்வளவு மயக்கத்திலும் அவன் உச்சரித்த ஒரே பெயர், **** மட்டுமே..
“யார் பேர் இது?..” என சுஜா நினைத்துக் கொண்டாலும், எதுவும் கேட்கவில்லை..
அவனுக்கு மருந்துப் போட்டு கட்டுப் போட்டு மயக்கத்தில் கிடத்தியிருக்க, “என் புள்ள.. என் புள்ள” என கலங்கிய விழிகளுடன் அங்கு வந்து சேர்ந்தார் அஞ்சலி..
கண்ணை மூடி படுக்கையில் கிடந்தவனைப் பார்க்க, பார்க்க, அப்படியொரு அழுகை வந்தது அவருக்கு..
“கண்ணாஆஆ.. கண்ணாஆஅ.. அய்யோ என் புள்ள..” என அழுது அரற்றியவரின் கண்ணீர்க் குரலில், பேய் போல கண்களை விரித்தான் சயந்தன்..
“எதுக்கு ம்மா, இப்படி காதுக்குள்ள ஒப்பாரி வைக்கிற?.. நான் இன்னும் சாகலை..” என சிடுசிடுத்தவனைக் கண்டு எச்சில் விழுங்கியவர்,
ஏன்டா இப்படி மூஞ்சியைத் தூக்குற?.. உனக்காகத் தானே அழுவுறேன்.. எப்படி இருந்த நீ, இப்போ இப்படி வந்துக் கிடக்குற?.
“நான் கேட்டேனா, எனக்காக நீ அழுன்னு.. தயவுசெஞ்சு என்னைத் தூங்க விடு..” என பேசிக் கொண்டே, திரும்பிட, அங்கு கதவின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தாள் யாதிரா..
அவளின் கண்களில் சிறிதும் கலக்கமில்லை.. சிறிதும் கவலையில்லை.. ஒரு துளிக் கண்ணீர் கூட இல்லை..
அவளும் ஒரு ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்திருந்தாளே..
“பாதகத்தி மவ.. கல்லு மாதிரி நிக்கிறாளே.. இப்படியே பார்த்து, பார்த்து எனக்கு பாடை கட்டிருவா போல..” என முணுமுணுத்துக் கொண்டே முகத்தை திருப்பிக் கொண்டான்..
“அஞ்சலி..” என்றார் கெளதம் அழுத்தமாக,
“ம்ம்..” என்றவளுக்கு, கண்ணீர் நிற்பேனா என்றது..
“அழுது முடிச்சிட்டு வா.. அவன் கொஞ்ச நேரம் தூங்கட்டும்..” என அனைவரும் ஒவ்வொருவராக வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
அறையே சற்று நேரம் அமைதியாக இருந்தது..
“போய்த் தொலைஞ்சாங்க.. நான்சிங்கா அழுதழுதே என்னை டயர்டாக்கிருவாங்க போல..” என நினைத்துக் கொண்டே திரும்பியவனுக்கு, கைகளை கட்டியபடி அழுத்தமாக நின்றிருந்த யாதிராவைப் பார்க்க, பார்க்க கோபம் ஏகத்துக்கும் எகிறியது..
“என்னடி?.. இருக்கானா, செத்துட்டானான்னு பார்க்க நிக்கிறீயா?..”
“இல்லை..” என்பதை போல் தலையாட்டினாள்..
“அப்புறம் என்னத்துக்கு, இந்தப் பார்வை பார்க்கிற?..” என சிடுசிடுத்தான்..
“கரெக்டா அது எப்படி இதயத்துக்கு பக்கத்துல குத்தின.. ஒரு இன்ச் தள்ளிக் குத்தியிருக்க?.. டாக்டர் சொல்லிட்டுப் போறாங்க..”
“உன் கையில கத்தியை கொடுத்தா, கண்டிப்பா நீ என்னைக் கொன்னு போட்டுருவ?... அதான் நானே குத்திக்கிட்டேன்?..” என்றவனைப் பார்த்து சலிப்பாக தலையாட்டினாள் யாதிரா..
“ஏன்டி நிஜமாவே உனக்கு வலிக்கலையா?..”
“எனக்கு ஏன் வலிக்கணும்?.. ஒரு அண்ணாவா..”
“ஒரு மண்ணு விளக்கமும் எனக்கு வேண்டாம்.. வெளியே போ..” என்றான் எரிச்சலாக,
அவள் அறையை விட்டு வெளியேறப் போன சமயம்,
“இன்னும் ரெண்டு நாள்ல என்னோட குவாட்டர்ஸ்க்கு போகப்போறோம்.. ரெடியா இரு..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள் யாதிரா..
“தனியாவா?..” என்றாள் வாய் விட்டே,
“பின்னே.. ஒரு ஊரைக் கூப்பிட்டு கூட வச்சிப்போமோ?.. அந்த குவாட்டர்ஸ்ல நீ, நான் மட்டும் தான்.. நம்மளை தவிர வேற யாரும் அங்கே வரமாட்டாங்க.. வரவும் கூடாது..” என கடுமையாக சொன்னவன், முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டான்..
வெளியே அழுதுக் கொண்டிருந்த அஞ்சலியை சமாதானப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் கெளதம்..
“அழுகிறதை நிறுத்தித் தொலைடி.. உன் உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது..” என்றார் கெளதம் சலிப்பாக,
“உள்ளே இருக்கிறது என் பையன்..” என்றார், மூக்கைச் சிந்தியபடி,
“எனக்கு மட்டும் அப்போ அவன் பையன் இல்லையா?.. அமைதியா இரு டி..”
“உங்களுக்கென்ன கஷ்டம்.. வலிச்சிப் பெத்தா தானே தெரியும்..”
“ஊர் உலகத்துலையே நீ மட்டும் தான் வலிச்சிப் பெத்த.. மத்தவங்க எல்லாரும் வலிக்காம பெத்துட்டாங்க.. வந்துட்டா பெருசா பேச..” என சாடிக் கொண்டே திரும்பிட, இங்கு மஹாவை சந்தோஷ் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
“சுத்தம்.. குடும்பம் மொத்தமும் லூசா இருக்குங்க..” என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே யாதிரா வெளியே வந்தாள்..
சந்தனமல்லி சயந்தனைப் பார்க்க, வேகமாக ஹாஸ்பிட்டலுக்குள் நுழையும் கணம், அங்கு ப்ரணவ்வும் வேகமாக வந்தார்..
