அத்தியாயம் 16
குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி..
அவளுக்கு மனதே ஆறவில்லை.. என்னென்ன வார்த்தை சொல்லிவிட்டான்..
காலையில் சயந்தன் முதலில் வந்தது இங்கு தான்..
இரவெல்லாம் ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல், அலைந்து ஓய்ந்து திரிந்தவன். காலையில் வந்து சோபாவில் தொப்பென்று அமரந்தான்..
அவன் வந்தது தெரிந்ததும் அஞ்சலி கிச்சனுக்குள் ஒளிந்துக் கொள்ள.. மறு சோபாவில் உட்கார்ந்திருந்தது என்னவோ கெளதம் மட்டும் தான்..
“அப்பா..” என்றான் சோம்பலான குரலில்,
மகனின் சோர்வு பெற்றவருக்கும் ஏதோ செய்தது..
“ம்ம்..” என்றார்..
“ரொம்ப டயர்டா இருக்கு.. தலை வேற விண்விண்ணுன்னு வலிக்குது.. யாதிராவை வரச் சொல்லுங்க..” என்றவனைக் கண்டு, அப்படியே யூ டர்ன் கிச்சனை எட்டிப் பார்த்தார் கெளதம்..
நேற்று யாதிராவை மல்லியின் வீட்டில் விட்டு விட்டு வந்து பெருமை அடித்தவர் அல்லவா அஞ்சலி..
அதை நினைத்தவர், சிறு கலக்கத்துடன் எட்டிப் பார்க்க, அஞ்சலியோ கிச்சன் சுவரில் தன்னை பாதியாக மறைத்தபடி,
“யோவ்வ்வ்.. வெறுவாக்கெட்ட மனுசா திரும்பிப் பார்க்காதய்யா.. திரும்பு..” என வாய்க்குள்ளேயே முணுமுணுக்க..
“அஞ்சு, உன் புள்ள உன்னைக் கூப்பிடுறான் பாரு..” என சத்தமாக கத்தியே அழைத்தார்..
“போட்டுக் கொடுத்துட்டாரே..” என பம்மியபடி கிச்சனுக்குள் இருந்து வெளியே எட்டிப் பார்த்தார் அஞ்சலி..
ஏற்கனவே தலைவலியில் இருந்தவனுக்கு, அஞ்சலியின் பம்மல் எதுவும் தோணவில்லை..
“ம்மா.. ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு ரூம்க்கு எடுத்துட்டு வா..” என யாதிராவின் அறை இருக்கும் பக்கமாக சென்றான்..
“அங்க.. எங்கடா போர்ர்றற?..” என்றார் அஞ்சலி நடுங்கிய குரலில்,
“எப்படியும் யாதிரா என் ரூம்ல தூங்கியிருக்க மாட்டா. அதான் அவ ரூம்க்குப் போறேன்..”
“அவ அங்கேயும் இல்லை..” என்றார் பட்டென்று..
“அங்கேயும் இல்லைன்னா.. என் ரூம்லையா தூங்குறா?..” என்றான் ஆசை ததும்பும் குரலில்,
“அங்கேயும் இல்லை..” என்றார் சற்று பயத்துடன்..
“அங்கேயும் தூங்கலை.. இங்கேயும் தூங்கலைன்னா, அப்போ..” என்றவன் மஹாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே,
“சித்தி ரூம்ல தூங்குறாளா?..” என்றான்..
“அது.. நான்..” என இழுத்த மகாலெட்சுமியின் பிசிறு தட்டிய குரலை இப்பொழுது தான் கவனித்தான்..
கண்கள் கூர்மையானது அவனுக்கு..
“யாதிரா எங்கே?..” என்றான் அஞ்சலியை கூர்ந்து பார்த்தபடி,
‘இன்னைக்கு அஞ்சலி, மூஞ்செலி மாதிரி நசுங்கப் போகுது..’ என மனதுக்குள் நினைத்த கெளதம் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார்..
தவறு செய்த அறியா பிள்ளையைப் போன்று அவள் முழிக்க.. அவளின் கள்ள முழியில் கவிழ்ந்தே போனார் கெளதம்..
சிறு புன்னகை கூட எட்டிப் பார்த்தது உதட்டோரம்..
“அது.. நான்.” என அஞ்சலி பயத்தில் படபடக்க,
“அவளை நான் தான் என் ப்ரண்ட் வீட்டுக்கு அனுப்பி வச்சேன்..” என்றார் கெளதம், தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக..
சட்டென திரும்பி தன் தந்தையை திரும்பிப் பார்த்து முறைத்தவன்,
“என்ன பொண்டாட்டிக்கு கூஜா தூக்குறீங்களா?..” சிடுசிடுவென எரிந்து விழுந்தான்.
“அப்படியும் வச்சிக்கோ.. என் பொண்டாட்டி.. நான் கூஜாவும் தூக்குவேன்.. இல்லை அவளையும் தூக்குவேன்.. உனக்கென்ன டா வந்தது?..”
“நீங்க உங்க பொண்டாட்டியை என்னவும் பண்ணுங்க, யாரு கேட்கப் போறா?.. என் பொண்டாட்டியை எதுக்கு உங்க பொண்டாட்டி ஒளிச்சு வச்சாங்க..” என்றான் சற்று காட்டமாக,
“நான் தான்..” என கெளதம் ஏதோ சொல்ல வர,
“டாட்.. அம்மாவுக்கு நீங்க பேச வர்றது, உங்க முகத்துலேயே தெரியுது.. ப்ளீஸ் ஸ்டாப்.. நான் ஒன்னும் குழந்தை கிடையாது..”
“ஆமா, ஆமா.. விட்டா யாதிராவுக்கு குழந்தையே கொடுத்திருப்பான்..” என தன்னை மறந்து வாய் விட்ட அஞ்சலியை திரும்பிப் பார்த்து ஏகத்துக்கும் முறைத்தவன்,
“என் பொண்டாட்டிக்குத் தானே குழந்தைக் கொடுக்கிறேன்.. அதுல ஒன்னும் தப்பில்லையே?..” என்றான் சயந்தன் கடுமையாக,
“மைனர் பொண்ணுக்கு குழந்தைக் கொடுத்தா, கண்டிப்பா தப்புதான்..”
“குழந்தைக் கொடுப்பேன்னு தான் சொன்னேன்.. இப்பவே கொடுப்பேன்னு சொன்னேனா?..”
“அப்போ என் பொண்ணுக்கூட வாழ மாட்ட தானே?..” என கேட்ட மஹாவைப் பார்க்கவே சற்று பாவமாக இருந்தது மற்றவர்களுக்கு..
ஆனால் சயந்தனுக்கு, அய்யோ பாவம் அதெல்லாம் வரவில்லை..
“சித்தி நான் குழந்தை வேண்டாம்னு தான் சொன்னேன்.. வாழ மாட்டேன்னு சொல்லலையே?..”
“நான் இதுவரைக்கும், உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை சயந்தா.. ஆனா இப்போ என் பொண்ணுக்காக கேட்கிறேன்.. எந்த ஒரு அம்மாவும், தன் பொண்ணு வாழணும்னு தான் நினைப்பா.. என் பொண்ணோட நீ வாழ்ந்திடாதா சயந்தா.. அவ மேல நீ ஏற்படுத்தின கறையையே நாங்க இன்னும் துடைக்கலை.. அதுக்குள்ள நீ தீராத வலியைக் கொடுத்துடாதே..” என கண்ணீர் மல்க நின்றவரை ஆழமாக ஒரு பார்வைப் பார்த்தவன்,
“உங்க மேல சத்தியமா, நான் உங்க பொண்ணோட வாழமாட்டேன்..” என்றான் உறுதியாக,
மஹாவிற்கோ அப்பாடா என்று இருந்தது..
“ஆனா உங்க பொண்ணை தொடாம இருக்க மாட்டேன்..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் அனைவரும்..
“ஏய்ய்ய். என்ன எல்லாரையும் சுத்தல்ல விடுறீயா?.. அப்படியும் இல்லைங்குற, இப்படியும் இல்லைங்குற” என்றார் கெளதம் சற்று காட்டமாக..
“இப்போ உங்க பிரச்சினை தான் என்ன?..” என்றான் சயந்தன் கடுமையாக,
“நீதான் பிரச்சினை.. நீ மட்டும் தான் பிரச்சினை..” என்றார் அஞ்சலி..
“மம்மி.. பார்க்க டம்மியா இருந்துட்டு. என் பொண்டாட்டியை ஒளிச்சி வச்சிட்டல்ல.. இன்னும் அரை மணி நேரத்துல அவ எங்கே இருக்கான்னு நான் கண்டுபிடிக்கிறேன்..” என்ற சயந்தனை பார்த்து கோணலாக சிரித்தார் அஞ்சலி..
“உன்னால கண்டே பிடிக்க முடியாது மை சன்.. அந்த மாதிரி ஒரு இடத்துல ஒளிச்சி வச்சிருக்கேன்..” என சொல்லி முடித்து விட்டு சோபாவில் அப்படியொரு தோரணையாக அமர்ந்தார் அஞ்சலி..
அமர்ந்தது மட்டுமா மிதப்பாக கெளதமை ஒரு பார்வை பார்த்தவர், “அவன் ஏழு மலை, ஏழு கடல் தாண்டுனாலும் கண்டிப்பா யாதிராவைக் கண்டு பிடிக்க முடியாது..” என சொல்லி முடிக்கவில்லை..
“பேரு சந்தனமல்லி.. ஹஸ்பென்ட் உயிரோட இல்லை.. உன்னோட உயிர்த்தோழி.. ஒரே ஒரு பையன்.. இப்போ தான் ரீசண்டா ஆக்சிடெண்ட் ஒன்னு ஆச்சி.. உயிர் பொழைச்சி வந்தான்.. அவுங்க வீட்டுல தான் யாதிரா இருக்கா..” என கடகடவென ஒப்பித்தவனைக் கண்டு, ஆவென வாயைப் பிளந்தார் அஞ்சலி..
“ஏப்புட்றா..” என்பதை போல் அவர் பார்க்க,
“ஏன் மம்மி, இவ்வளவு டம்மியா இருக்க?.. அன்னைக்கு நான் தானே உன்னை உன் ப்ரண்ட் வீட்டுல விட்டுட்டுப் போனேன்.. எனக்குத் தெரியாதா?.. அது யாருன்னு..” என்றவனைக் கண்டு திருதிருவென முழித்தார் அஞ்சலி..
“என் பொண்டாட்டியை அழைச்சிட்டு வந்ததுக்கப்புறம் உனக்கு இருக்கு தாயே.. என்னை பேய் மாதிரி அலைய வைக்கிறல்ல..” என சிடுசிடுத்துக் கொண்டே, பட்டு வேஷ்டி பட்டுச்சட்டை மாற்றக்கூட இல்லாமல், வேகமாக அங்கிருந்து வெளியேறினான்..
அவனின் பின்னால் வெளியேறப் போனார் அஞ்சலி..
“ஏய்ய்ய். மஹா வா டி போகலாம்..” என்ற அஞ்சலியின் முன்பாக இரு கைககளை விரித்தபடி வந்து நின்றான் கெளதம்..
கெளதமைப் பார்த்து பேய் முழி முழித்தாள் அஞ்சலி..
“நேத்து யாதிரா எங்கேன்னு கேட்டதுக்கு என்ன டி சொன்ன?..”
“என்னஹ் சொன்னேன்?..” என்றாள் தடுமாறிய குரலில்.
“என் பொண்ணை பாதுகாக்க எனக்குத் தெரியாதா?.. அந்த சயந்தனுக்குத் தெரியாத இடத்துல நான் ஒளிச்சி வச்சிருக்கேன்.. அவனால கண்டு பிடிக்க முடியாது..” என பம்மியபடி சொன்னவரைக் கண்டு, இல்லை எனும் விதமாய் தலையாட்டிய கெளதம்,
“கடைசியா ஒன்னு சொன்னீயே.. அதை திரும்பச் சொல்லு..”
“ஹான்.. கடைசியா என்ன சொன்னேன்.. மறந்துப் போச்சே?..” என்றார் தலையை சொறிந்தபடி,
“அதுஎப்படி மறக்கும்?.. ஹான் திரும்பச் சொல்லுடி..” என அஞ்சலியின் காதைப் பிடித்து திருகினார் கெளதம்..
“ஆஹ்.. வலிக்குது.. வலிக்குது.. சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்.. ஆம்பிளைங்க எல்லாம் நீங்க எதுக்கு தெண்டமா இருக்கீங்கன்னு சொன்னேன்..” என்றவரைக் கண்டு தீயாய் முறைத்தார் கெளதம்..
“ஏன்டி யாதிராவைக் காப்பாத்துறேன்.. காப்பாத்துறேன்னு சொல்லி.. இப்போ கிளியை தூக்கி டைனோசர் கையில கொடுத்துருக்க?..”
“நம்ம பையனையா, டைனோசர்னு செொல்றீங்க?..”
“நம்ம பையன் இல்லை.. உன் பையன்..
“ஆமா, இவர் இல்லாம தான் நான் பெத்தேன் பாரு..” என முணுமுணுத்துக் கொண்டே சென்றார் அஞ்சலி..
“இப்போ என்ன அண்ணா பண்றது?..”
“இனி என்ன பண்றது?.. அதான் மூணு மாசம் தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கானே, பார்ப்போம்..”
“அப்போ என் பொண்ணு கதி..”
“முதல்ல உன் கேஸ் என்னாச்சின்னு பாரு?..”
“அதெல்லாம் நேத்தே அவன் எல்லாத்தையும் க்ளீயர் பண்ணிட்டான்.. என் ப்ரண்ட், அவனோட கள்ள நோட்டு கேங்க் எல்லாத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சிட்டான்.. அவுங்க எல்லாரும் உண்மையைச் சொன்னதுனால நான் தப்பிச்சிட்டேன்..”
“இதுக்கப்புறமாவது, சூதாட்டம்.. அது இதுன்னு போகாம இருக்கிற வழியைப் பாரு..” என கண்டித்து விட்டு அறைக்குள் செல்ல, அங்கு அஞ்சலி காற்றில் எதையோ வரைந்துக் கொண்டிருந்தார்..
“என்னடிப் பண்ற?..” என்றார் தன் சட்டை பட்டனைக் கழற்றிக் கொண்டே,
“இல்லை.. எனக்கு ஒரு சந்தேகம்?.. கேட்கவா?..”
“கேட்டுத் தொலை.. வேண்டாம்னா மட்டும் விடவா போற?..”
“நம்ம பையன்..” என சொல்ல வந்தவர், சட்டென்று இடை நிறுத்தி, “இல்லை.. இல்லை என் பையன்.. என் பையன் அங்கேப் போயிருக்கான்..”
“ஆமா போயிருக்கான்.. அதுக்கென்ன இப்போ?..” என சிடுசிடுத்தார்..
“இல்லை போன இடத்துல..”
“போன இடத்துல..” என இழுத்தார் கெளதம்..
“ஒரு வேளை சயந்தன் சத்தியத்தை மீறிட்டானா?..” என சொல்லி முடிக்கவில்லை.. தன் அக்கினிக் கண்களால் தீயாய் முறைத்தவர்,
“உன் பையனுக்கு வார்த்தை சுத்தம் டி..” என்ற கெளதமை ஆச்சர்யமாக பார்த்தாள் அஞ்சலி..
“என்னடி அப்படிப் பார்க்குற?..”
“இல்லை சயந்தனை பாராட்டுறீங்களே, அதான் பார்த்தேன்..”
“பாராட்டலை.. அவன் செஞ்சதை சொன்னேன்..” என்றார்..
அவர்களின் பாராட்டுக்களின் படைத்தலைவன்,
யாதிராவின் உதட்டை உறிஞ்சி உயிரைக் குடித்துக் கொண்டிருந்தான்..
