அத்தியாயம் 15
அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்த யாதிராவிற்கு தான் கண்டது கனவு என அறிவதற்கே சில நிமிடங்கள் பிடித்தது..
குப்பென வேர்த்தது அவள் உடல்.. சுற்றி முற்றிப் பார்த்தாள்..
அறையில் சயந்தன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.. ஆனால் அவனின் மூச்சுக்காற்றே தன் உடல் முழுவதும் பரவியிருப்பதை போன்ற பிரம்மை தோன்றியது..
அவன் முத்தமிட்ட ஈர நினைவுகள் இன்னும் அவளை விட்டு அகலாமல் இருந்தது..
நேராக எழுந்து ஆளுயுர கண்ணாடியின் முன்பாக நின்றவள், வேகமாக தன் கழுத்தை ஆராய்ந்துப் பார்த்தாள்..
அவன் முத்தமிட்டதற்கு, தான் உருகியது ஞாபகத்திற்கு வந்தது..
அவனின் பல் தடம் தன்னில் பதிந்திருக்கிறதா என ஆராய்ச்சியாக பார்த்தாள்.. அப்படி எதுவும் இல்லை.. கனவில் நடந்ததற்கு நிஜத்தில் ஆதாரங்கள் என்றும் இருப்பதில்லையே..
“மணி எத்தனை?..” என கடிகாரத்தைப் பார்த்தாள்.. மணி ஏழு என கா
ட்டியது..
“இவ்வளவு நேரமாகிடுச்சா?..” என நினைத்தபடி, மெல்ல எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.. சுத்தமாக இருந்தது அறை..
அதனுள் இருந்த ஹீட்டரை ஆன் பண்ணியவள், கண்களை மூட, அவளின் கண்ணுக்குள் வந்து நின்றான் சயந்தன்..
பட்டென்று கண்களை திறந்தாள்..
படபடவென இமைகள் அடித்துக் கொண்டது..
அவன் நேற்றிரவு முத்தமிட்ட காட்சி மீண்டும் மீண்டும், நினைவுகளில் வந்துக் கொண்டிருந்தது..
இதயமோ அவனின் அருகாமையை தேடியதோ?..
“ஏன் இந்த உணர்வு, இந்த உணர்வுக்குப் பேர் என்ன?.. அவன் தொடுகைக்கு நான் உருகிறேனா?..
நினைத்துப் பார்க்கவே குமட்டியது..
ஆனால் கனவில் அத்தனையும் நடந்ததே..
அவன் கொடுத்த ஈர முத்தத்திற்கு பதில் முத்தம் கொடுத்தாளே..
அவள் அங்கம் தொடும் அவன் கைகளுக்கு இசைந்துக் கொடுத்தாளே..
அவனின் நெருக்கத்திற்கு சிணுங்கினாள்..
அவன் தன்னை கொள்ளையிட்ட போது, அவனை மொத்தமாக தனக்குள் தாங்கிக் கொண்டாளே..
அதை நினைக்கும் போதே சொல்லொண்ணா உணர்வு அவளை தாக்க ஆரம்பித்தது..
அப்படி ஒரு கனவு, தனக்கு ஏன் வந்தது?..
தான் இவ்வளவு கீழ்த்தரமான பொண்ணா?.. என அவளுக்குள்ளேயே ஒரு கலிவிரக்கம் தோன்ற ஆரம்பித்தது..
ஒரு ஆணின் தாெடுகைக்கு உருகியிருக்கிறோம்.. அண்ணன் உறவு கொண்டவனின் தொடுதலை நான் ரசித்திருக்கிறேன் என்றால், எந்தளவிற்கு நான் தரம் தாழ்ந்தவள்..
ஒரு வேளை என் உடல், ஓர் ஆணின் தொடுகைக்கு ஏங்கி நிற்கிறதா?.. அவ்வளவு கேவலமானவளா நான்?.. என அவளுக்குள்ளேயே உழன்றுக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. வேகமாக தன் வலது கரத்தை தூக்கினாள்..
தன் இடது பக்க தோள்பட்டையில் அழுத்தில் கோடு போன்ற கீறலாக போட்டாள்.. அவளின் கைவிரல் நகங்கள் அழுத்தமாக கீறியது..
ரத்தம் கசிந்து, தோள் கிழிந்து எரிய ஆரம்பித்தது..
அவள் மனவலிக்கு முன்பாக இது ஒன்றுமே இல்லாததைப் போன்று தோன்றியது..
தோல் எரிந்து காயம் கொடுத்த வலியை இதழ் கடித்துப் பொறுத்தாள்..
“நான் கேவலமானவ.. அதுனால தான் அவன் தொடுகையை ரசிச்சிருக்கேன்.” என அவளுக்கு, அவளே தண்டனை கொடுத்தாள்..
யாரும் பார்க்க முடியாத இடத்தில், தன் நகங்களால் அழுத்தமாக கீறினாள்.. கழுத்து, மார்பு, இடை என அனைத்து இடங்களிலும் கீறிய பின்பு தான், அவளால் தன் வலியில் இருந்து சிறிது வெளிவர முடிந்தது..
இனி அவனை தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று தான் நினைத்தாள்..
அவனை விட்டு விலகி வாழ வேண்டுமென்று தானே இவ்வளவு தூரம் தாய், தந்தையை பிரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்..
அவனின் நினைவுகள் இப்படித் தன்னை வதைக்கும் என அவள் கனவில் கூட நினைத்ததில்லையே..
அவள் ஆழ் மனதில் என்ன இருக்கிறதோ?. அது தானே கனவில் தோன்றும் என்பதை அக்கணம் அறியவில்லை..
குளித்து முடித்து வெளியே வந்தாள்.. கண்ணாடி முன்பாக நின்றவளுக்கு, தன் கழுத்தில் கிடந்த தாலி உறுத்தியது..
மாட்டுக்கு மூக்கணாங்கயிறைப் போன்று, அவள் கழுத்தில் இந்த தாலி தேவையில்லாமல் கிடந்தது..
ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவளின் கண்கள் அகல விரிந்தது..
அங்கு விடாது கருப்பு போன்று, சோபாவில் கம்பீரமாக அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தான் சயந்தன்..
நேற்று அணிந்த அதே பட்டு வேஷ்டி, பட்டு சட்டை.. மாற்றாமல் அப்படியே இருந்தான்..
இதயம் திக் திக் என அடித்துக் கொண்டது அவளுக்கு,
அவனை பார்க்க பிடிக்காமல் அறைக்குள் செல்ல திரும்பினாள்..
“அப்படியே திரும்புனா எப்படி பொண்டாட்டி?..” என்ற கணீர்க்குரல் அவள் செவிப்பறையில் வந்து விழ, பட்டென்று திரும்பினாள்..
“கீழே வாங்க பொண்டாட்டி.. நேத்து கிளம்புன புருஷன், இன்னைக்கு வந்திருக்கானே.. அவனை வெந்நீ வச்சி குளிப்பாட்டி, அவனுக்குத் தேவையானதை செஞ்சு, தூங்க வைக்கணும்ங்கிற பொறுப்பு உனக்கு இருக்கா?..” என்றான் படு கேஷூவலாக,
கேட்டுக் கொண்டிருந்த யாதிராவிற்குத் தான் பற்றிக் கொண்டது..
“இவன் குளிக்க நான் வெந்நீ வைக்கணுமா?.. குளிச்சா குளி.. இல்லைன்னா நாறு..” என மனம் வேறு ஒரு பக்கம் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தது..
“அப்புறம் என்ன பொண்டாட்டி, நேத்து நான் இல்லாம நல்லா தூங்குன போல..” என்றவன் அங்கு சோபாவில் பம்மியபடி அமர்ந்திருந்த பையனை பார்த்தான்..
அவன் அபிஜித்.. 9வது படிக்கிறான்..
மல்லியின் பையன்..
“டேய்ய்ய். மச்சான்..” என்றான் சயந்தன்..
அவன் குரலில், வேகமாக நிமிர்ந்துப் பார்த்தான் அபிஜித்..
“நானும், உன் அக்காவும்.. கொஞ்சம் பெர்சனலா பேசப் போறோம்.. நீ ரூம்க்குப் போறீயா?..” என்றான் சற்று காட்டமாக,
அவனையும், அவன் அருகில் நின்றிருந்த யாதிராவையும் ஒரு பார்வை பார்த்த அபிஜித்,
“அவ எனக்கு அக்காவும் இல்லை.. நான் உங்களுக்கு மச்சானும் இல்லை.. நீங்க ரெண்டு பேரும், எங்க அம்மாவோட கெஸ்ட்.. அதை மறந்துடாதிங்க.. என்னை யாராவது அதிகாரம் பண்ணா, எனக்கு சுத்தமா பிடிக்காது.. மைண்ட் இட்..” என சயந்தனை விட காட்டமாக சொல்லிவிட்டு தன்னறைக்குள் சென்று கதவை அடைத்தான் அபிஜித்..
“பாரேன்.. பையன் எவ்வளவு தெளிவா இருக்கான்னு?.. நீயும் இருக்கீயே?.. தத்தி.. ஒவ்வொன்னையும் சொல்லிக் கொடுத்து முடியலை டி..” என அவளை உதடுகள் திட்டிக் கொண்டிருக்க, கைகளோ அவளை இழுத்து மடியில் அமர வைத்தது..
“என்ன பண்றீங்க?..” என அவன் மடியில் இருந்து எழ முயற்சி செய்தாள்..
“ம்ஹூம்.. சிறிதும் அவளால் எழுந்துக் கொள்ள முடியவில்லை..
“ஏய்ய்.. அசையாம இரு டி.. ஏடாகூடாம ஏதாவது பண்ணா, அப்புறம் ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை..” என்றவனின் பூடகமான பேச்சை புருவம் சுருக்கிப் பார்த்தாள் யாதிரா..
“என்னப் பார்க்குற?.. இப்போ தான் உன் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன்.. உன்னை மூணு மாசம் தொட மாட்டேன்னு..” என்றதும், யாதிராவின் மனதில் சிறு பாரம் நீங்கிய உணர்வு..
“தொடமாட்டானா.. அப்பாடா.. பெரும் நிம்மதி..”
இவனின் தொடுகையை நினைத்து தானே, தான் பயந்தது..
இனி மூன்று மாதம் அதற்கு என்ட் கார்டு என்ற நினைப்பே அவளின் முகத்தில் ஒரு வித பொலிவைக் கொண்டு வந்தது..
“எப்போ சொன்னீங்க?..” என்றாள், அவன் செய்த சத்தியத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில்,
“ஏன் அதை தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?.. போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாடி..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள் யாத்ரா..
இது அடுத்தவர் வீடு.. இதில் இவ்வளவு உரிமையாக கேட்கும் இவனை என்ன செய்வது?.. என அறியாமல் அவள் முழிக்க,
“அத்தை.. அத்தை..” என்றான் உரிமையாக,
அவனின் சத்தத்தில் கிச்சனுக்குள் இருந்து ஓடி வந்தார் மல்லி..
“காலையில என்ன சமைச்சிருக்கீங்க?..” என்றவனைக் கண்டு அரண்டு விட்டார்..
போலீஸ் யூனிபார்மில் இருந்தவனின் மடியில் இருந்தாள் யாதிரா..
அதைப் பார்த்ததுமே தெரிந்துக் கொண்டாள்.. இவன் அஞ்சலியின் பையன் என்று..
“பொங்கலும், வேர்க்கடலை சட்னியும்..”
“நல்ல காம்பினேசன் தான்.. சாப்பிட்டா நல்லா தூக்கம் வருது.. நீங்க எடுத்து வைங்க.. நான் ப்ரெஸ் அப் ஆகிட்டு வர்றேன்..” என்றவன், ஒரு கணம் தயங்கி,
“ஆமா, இங்கே லூங்கி ஏதாவது வச்சிருக்கீங்க?..” என்றவனைக் கண்டு மேலும் அதிர்ந்தாள் யாதிரா..
உண்மையாவே மறுவீடு வந்த மாப்பிள்ளை போல் அதிகாரம் பண்ணிக் கொண்டிருப்பவனைக் கண்டு எச்சில் விழுங்கினாள் யாதிரா..
“என்ன பண்றீங்க?..” என்றாள் சிறு குரலில்,
“உன்னைப் பார்க்க வந்த அவசரத்துல டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலை டி.. இப்படியே மனுசன் தூங்க முடியுமா சொல்லு?..” நேற்று உடுத்தியிருந்த பட்டு வேஷ்டி, பட்டு சட்டை..
நிச்சயமாக இதில் தூங்க முடியாது என்பது அவளுக்கத் தெரியும்..
“இது ஒன்னும் நம்ம வீடு இல்லை..” என யாதிரா, ஏதோ சொல்லும் போதே..
“இருங்க தம்பி.. என் வீட்டுக்கார்க்கு வருஷா வருஷம் சாமி கும்பிடும் போது வேஷ்டி சட்டை எடுத்து வைப்பேன்.. இருங்க எடுத்துட்டு வர்றேன்..” என்றவர் உள்ளே செல்ல.. யாதிராவிற்கோ கோபம், கோபமாக வந்தது..
அடுத்தவர்கள் வீட்டில் அமர்ந்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுகிறானே என எரிச்சலாக இருக்க,
“நீங்க பண்றது எல்லாம் எரிச்சலா இருக்கு?..”
“எரிச்சலா இருந்தா, தண்ணீ குடி..” என்று விட்டு திரும்பிட, அங்கு சந்தனமல்லி, புது வேட்டி.. புது சட்டையுடன் வந்தார்..
“இது வீட்டுக்குப் போடுறது தான் தம்பி.. உடுத்திக்கிட்டா கம்பர்ட்டபிளா தான் இருக்கும்.. சட்டை சைஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..” என்று விட்டு அவர் உள்ளேச் செல்ல,
“உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?.. இது அவுங்க வீடு.. இப்போ நீங்க நடந்துக்கிறதுல அவுங்க கொஞ்சம் அன் கம்பர்ட்டபிளா பீல் பண்றாங்க..” என்றவள் ஏதோ சொல்லிக் கொண்டேயிருக்க,
“ரூம் எங்கே இருக்குன்னு காட்டு டி.. வளவள, கொளகொளன்னு பேசிட்டு இருக்க?..” என சிடுசிடுத்துக் கொண்டே யாதிராவையும் தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தவன்,
அவள் சுதாரிக்கும் முன்பாகவே
அவளின் அரும்பிதழ் அவன் அதரமோடு கலந்து உறவாடிக் கொண்டிருந்தது..
அவள் எச்சில் சுகமாகியது.. காதல் என்னும் மந்திரத்தால்..
