அத்தியாயம் 12.1
கிரு… உனக்கு விசிட்டராம்..!” என்றப்படி வந்தான் விக்ரம்.
“எனக்கா? வாய்ப்பில்ல மேன்.. ஒருவேளை கிரணுக்கா இருக்கலாம். பேரை மாத்தி சொல்லி இருக்காங்க போல.. எதுக்கும் நீ அவனையே அனுப்பிவிடு..! டோண்ட் டிஸ்டர்ப் மீ மேன்” அவளுக்கு ஆர்டர் கொடுத்த வேலையில் கவனமாக இருந்து கொண்டு அவனை திரும்பியும் பார்க்காமல் பேசிய கிருத்தியின் தலையில் லேசாக தட்டிய விக்ரம்,
“தெளிவா தான் சொன்னாங்க கிருத்தினா. கிரண் கிடையாது..!” என்றான்.
“ஓவர் நைட்டுல ஓவர்ஆல் அமெரிக்காவுக்கும் நான்தான் செப்புங்குற மாதிரி சமைக்காத.. என்ன தேடி எல்லாம் யாரும் வர மாட்டாங்க. நானலாம் வீட்டுல தண்ணீ தெளிச்சு தொரத்தி விடப்பட்ட கேஸ்” என்றால் கிரண் அவன் செய்தவற்றை ஓவனில் வைத்தபடி..!
“ஓவரா வேலை செஞ்சு எல்லா நல்ல பெயரையும் நீயே வாங்கிட்டு போகணும் இல்ல கிருத்தி செல்லம்.. எங்களுக்கும் கொஞ்சம் அந்த பெயரை கொடுக்கலாம் தப்பில்ல தப்பில்ல..!” என்றாள் மேனகா சிரிப்பாக..
“ரெண்டே ரெண்டு ஐட்டம் தான் உங்களோடு கூட செஞ்சு நல்ல பெயர் வாங்கினேன். அது பொறுக்குல உங்களுக்கு நீங்க எல்லாம் பிரண்ட்ஸா? அதுக்குன்னு டெய்லி என்ன ஓட்டாதீங்க டா டேய்ஸ்” என்று தான் செய்தவற்றை அழகாக பிரசன்ட் செய்துவிட்டு,
“இத டேபிள் நம்பர் 25க்கு அனுப்பிடு விக்ரம்” என்றாள்.
“வொர்க்கிங் டைம் முடியுற மாதிரி தான இருக்கு. அதுக்குள்ள யாரு வந்தா? அப்படி எல்லாம் எங்க வீட்ல யாரும் வர மாட்டாங்களே? ஒருவேளை அம்மாவுக்கு எதுவும் இருக்குமோ?” என்று புலம்பியப்படி தான் வெளியே வந்தாள் கிருத்தி.
அந்த பிரபல ரெஸ்டாரன்டுக்கான லோகோ தாங்கிய யூனிபார்மை அணிந்தபடி, போட்டிருந்த ஏர்போனை கழட்டி வைத்துவிட்டு தலையில் இருந்து கேப்பையும் அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு வரவேற்பறையை நோக்கி வந்தவள், அங்கிருந்து பெண்ணிடம் ஆங்கிலத்தில் “என்னை பார்க்க வந்த கெஸ்ட் யாரு? எங்க?” என்று கேட்டு லேசாக முறுவலிக்க.. அந்த பெண்ணும் வற்றாத புன்னகையோடு “சீ தேர்.. ஹீ இஸ்..!” என்று அவனைக் காட்டினாள்.
“எவன் அவன்??” என்று திரும்பியவள் கண்டிப்பாக அங்கே வாகீஸனை எதிர்பார்க்கவே இல்லை..!!
அவனும் ஒற்றை காலை ஊணியப்படி மறு காலை குறுக்காக சாய்வாக வைத்து இரு பாக்கெட்டிலும் கைவிட்டபடி, எப்பொழுதும் போல குறுக்கே லேப்டாப் பேக் மாட்டியிருக்க.. தலையை செய்து அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான் “ஹாய் லயா..!” என்ற உற்சாக குரலோடு…!!
‘முன்னெல்லாம் இவன் சிரிக்க மாட்டானா? வாய தொறந்து பேச மாட்டானா?’ என்று தம்பியிடம் புலம்பிய நாட்கள் எல்லாம் போய்.. இப்பொழுது ‘அச்சோ கடவுளே..! என்ன இவன் இப்படி சிரிக்கிறான்? அதுவும் இத்தனை வசீகரமாய்?’ என்று தொண்டைக்குழ யில்எச்சில் விழுங்க அவனைப் பார்த்தாள் கிருத்தி.
‘ஐ ஆம் கம்மிங்..!’ என்பது போல சைகை செய்தப்படி, அவளை நெருங்கியவன்,
“போலாமா லயா?” என்று உரிமையாய் கேட்டு நின்றவனை முறைக்க முடியாமல், கண்டனமாக பார்த்து “நா அப்பவே சொல்லிட்டேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் கிடையாதுனு. ஏன் வேலை செய்ற இடத்தில் வந்து டிஸ்டர்ப் பண்ணுறிங்க” என்று முகத்தை புன்னகைத்தப்படியே வைத்து வார்த்தைகளை கடித்து துப்பினாள் கிருத்தி.
“அதெப்படி லயா? நாம தான் லிப் டூ லிப் அக்ரீமெண்ட் போட்டு இருக்கோமே..!” என்றவன் அவனது கற்றை மீசை கீழே இருந்த இளஞ்சிவப்பு நிற உதட்டை நுனி நாக்கால் வருடி காட்ட…
‘ஆம்பள நீ.. உனக்கு ஏன்டா லிப்ஸ் இவ்வளவு பிங்க்கா இருக்கு?’ என்று நினைத்தவள் தன் போல தன் உதட்டையும் நாவினால் வருடி பார்க்க..
“நோ.. நோ… லயா.. தட்ஸ் மை பார்ப்பர்ட்டி..! நான் வேற ரொம்ப ஷை டைப்.. பப்ளிக்கா இப்படி பண்ணி என்ன டெம்ப்ட் பண்ணாதே டா ப்ளீஸ்..! ஆல்ரெடி லிப் டு லிப் அக்ரீமெண்ட் வேறு ஆன்கோயிங்ல இருக்கு..!” என்று முன்னால் குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தான்.. பல காலம் பழகிய காதலனாய்..!
எட்டி நின்று பார்ப்பவர்களுக்கு ஏதோ காதலர்கள் தங்களுக்குள் ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொள்வது போலவே தோன்றும்..!
“எதே லிப் டூ லிப் அக்ரீமெண்டடா?” என்று நெஞ்சில் கை வைத்து திகைத்தாள்.
“எஸ்..!! நீ என் பர்சனல் கேர்ள் ப்ரண்டா இருக்கணும்னு அன்னைக்கு ரெண்டு பேரும் லிப்ல சைன் பண்ணுனோமே மறந்துட்டியா லயா? ஷல் ஐ ரிமைண்ட் யூ?” என்றவன் மீண்டும் அவனது மேல் இதழை நுனி நாக்கால் வருட..
“ஷட் அப்..! நான் தான் அப்பவே சொன்னேன்ல நமக்குள்ள எதுவும் கிடையாதுனு. ஏதோ அக்கம் பக்கம் பாக்காம தெரியாம சத்தமா பேசிட்டேன். அதுக்குன்னு இப்படி வந்து நான் வேலை செய்ற இடத்துல வந்து நிப்பீங்களா? இதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் இனிமேல் என்னை தேடி வரக்கூடாது. என்கிட்ட இப்படி பிஹவ் பண்ண கூடாது..!” என்றாள் பற்களை கடித்துக்கொண்டு..
“என்ன லயா நீ இப்படி சொல்லிட்ட? அன்னைக்கு நீ பேசுனது அந்த ஆன்ட்டி கேட்டாங்க இல்லையா? இன்னைக்கு காலையில கூட நான் ஆபீஸ் வரும்போது ‘என்ன வாகீஸா.. என்ன சொல்லுது கிருத்தி?’ அப்படின்னு என்னை கிட்ட கேக்குறாங்க..! பாரு அவங்களுக்கு அவ்வளவு கான்ஃபிடன்ஸ் நம்மள மேல..! நம்ம லவ்வர்ஸூனு..! அந்த கான்ஃபிடன்ஸ் ஏன் லயா உனக்கு வரமாட்டேங்குது உன் மேல?” என்று ஆச்சரியமாய் கேட்டவனின் தலையில் நங்கு நங்கு என்ற கொட்டலாமா என்று தோன்றியது அவளுக்கு.
ஆனாலும்.. இருக்கும் இடத்தை பொறுத்து கையை அடக்கி முஷ்டியை இறுக்கமாக மூடிக்கொண்டவளின் நகங்களோ அவள் உள்ளங்கையை பதம் பார்த்தது..!!
“ஒரு அளவுக்கு தான் என்கிட்டயும் பொறுமை ஸ்டாக் இருக்கும் மிஸ்டர் வாகீஸன்..! டோண்ட் ஆங்கிரி மீ..!” என்றவள் கோபத்தில் கொந்தளிக்க கூற..
அவன் காதிலோ வடிவேல் ‘வாடா மாப்பிள்ளை.. வாழைப்பழ தோட்டத்தில்..’ பாடலில் இடையில் வந்து பாடுவதைப் போலவே கேட்டு வைக்க.. இதழ் பிரிக்காமல் சிரித்தான்.. ஆனால் அதற்கும் சேர்த்து அவன் விழிகள் அத்தனை சிரித்தன..!
“யூ.. யூ..! வேணாம்..!” என்றவள் ஒற்றை விரலை அவன் புறம் நீட்டி..
“பட்..! எனக்கு வேணுமே நீ மிர்ஸஸ் வாகீஸனா?” என்று அந்த ஒற்றை விரலோடு தன் விரலைக் கோர்த்துக் கொண்டான்..
பெரும் காதலாய்..
நனி நேசமாய்..
வளர் மோனமாய்…!!
“உங்களுக்கு ரொம்ப முத்தி போச்சு கீழ்பாக்கத்துக்கு உங்கள புடிச்சி தள்ளிவிட போறேன் இல்லையான்னு பாருங்க.?”
“வித் ப்ளஷர்.. அங்க நீயும் எனீ கூட வருவேன்னா..?” என்று அவன் தோள்களை ஸ்டைலாக குலுக்கி அவளை காதலாக பார்க்க..
இதுவரை முகத்தில் இழுத்து பிடித்து வைத்திருந்த போலி சிரிப்புகளை எல்லாம் தொலைத்து விட்டு முகத்தை இறுக்கமாக வைத்து “தயவு செய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க மிஸ்டர் வாகீஸன். இந்த காதல் கத்தரிக்காய் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை அதற்கு மேல் ஆம்பளைங்க.. உங்க மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல.. இல்ல..!” என்றவளின் கண்களில் அத்தனை ரணங்கள் இன்னும் ஆறாமல்..!!
“ஏன் ஏன் நம்பிக்கை இல்லை ஆம்பளைங்க மேல? எனக்கு சரியான காரணம் சொல்லு..!” என்று வம்படியாய் நின்றான் வாகீஸன்..!
“ம்ப்ச்.. அதெல்லாம் சொல்ல முடியாது நீங்க கிளம்புங்க இங்க இருந்து..” வெடித்தாள் அவள்.
“இப்படி எல்லாம் சப்ப காரணம் காட்டி என்னை நீ உன் வாழ்க்கையில் இருந்தே விரட்டி விடவே முடியாது..! இதுல எங்க இருந்து இந்த ரெஸ்டாரண்டில் இருந்து விரட்ட? எனக்கும் தான் பொண்ணுங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்துச்சு.. ஆனா எப்போ.. உன்ன பழக ஆரம்பிச்சாலும் அப்பத்தில் இருந்து எல்லாம் மாறிடுச்சு..!” என்றான் கண்கள் மட்டுமல்ல முகமும் காதலில் மின்ன..!
அதற்குள் அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் இவர்களை பார்த்தபடி செல்ல, லாபியில் இருந்து சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தாலும், மற்றவர் கண்கள் இவர்கள் மேல் படு சுவாரசியமாக பட்டுச் செல்வதை உணர்ந்தாள் கிருத்தி.
“என்ன கிருத்தி? ம்ம்ம்.. ம்ம்ம்ம்???” என்று அவர்கள் கண்களாலேயே கேட்டுவிட்டு செல்ல.. இனி நின்று அவர்களின் கற்பனைகளுக்கு தீனி போட முடியாது என்று முடிவெடுத்தவள்,
“வெயிட் பண்ணுங்க.. வொர்க் முடிச்சுட்டு வரேன்..!” என்று விடுவிடுவென்று உள்ளறைக்கு சென்றாள்.
செல்லும் அவளை கண்களில் காதலை தேக்கியப்படி.. அதில் சற்றே விஷமத்தை கலந்தபடி நின்று ரசித்து இருந்தான் வாகீஸன்..!
அதுவும் அவன் நினைவுகள் எல்லாம் அன்று அவளுக்கு முத்தமிட்ட கணத்திலேயே சுழன்று கொண்டிருந்தது.
முத்தம்…! ஒற்றே ஒற்றை முத்தம்…!
மொத்தமாய் இந்த சில்லா
என்னை அவளுள் விழுங்கி விட்டாள்…!
என்று பெருமூச்சு விட்டான்..!!
மயக்க வருவான்...
