அத்தியாயம் 12.2
ஏய் கிருத்தி? உனக்கு விசிட்டரா? யாரு?” கேட்டபடி வந்தாள் சனா..
‘என்ன என்று சொல்வேன்? பொய்யும் சொல்ல இயலாது வெளிய வந்து பார்த்தால் வாகீஸனை கண்டுபிடித்தால் ஓட்டி எடுத்து விடுவார்கள்..! என்ன சொல்லி தப்பிக்கலாம்?’ யோசித்தவள்,
“அதுவா.. எங்க வீட்டு மாடியில் கூடி இருக்கிறாரே வாகீஸன், அன்னைக்கு உங்களுக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ல.. அவரு தான் வந்திருக்கார். அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை எங்க அம்மாவோட டிஸ்டன்ஸ் ரிலேஷன் வேறயா? அம்மாவோட ஒர்க் முடிச்சிட்டு வரும்போது ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வர சொன்னாங்க..! அதான் வந்திருக்காரு. அவர கூட்டிட்டு போகணும்” என்றாள் ஏதோ செய்தி வாசிப்பது போல சுவாரசியமின்றி..!
“அந்த ஹேண்ட்ஸம் மா?” என்று சனா வாயில் மட்டுமல்ல கண்களிலும் ஜொள்ளு ஊற்றியபடி “வேணும்னா நீவொர்க்கு கன்டினியூ பண்ணு.. நான் கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்றாள்.
“உன் கூட கோர்த்துவிட எனக்கு கொள்ள ஆசைதான். ஆனா அந்த பக்கி பைய உன் கூட வரணுமே?” என்றாள் மெதுவாக..!
“என்னடி பொலம்புற?”
“எனக்கு மட்டும் அவர கூட்டிட்டு ஹாஸ்பிடல் சுத்த ஆசையா டி? எனக்கு ஹாஸ்பிடல் ஸ்மெல்லே ஒத்துக்காது. ஜூரம் வந்தா கூட எங்க அம்மா போட்டுக் கொடுக்கிற கசாயம் எவ்வளவு கசப்பா இருந்தாலும் அதை குடிச்சுட்டு கம்முனு இழுத்து போத்திக்கிட்டு படுத்து இருப்பேன். என் கரகம் இப்ப ஹாஸ்பிடல் போகணும்?” என்றாள் அலுத்துகொண்டே..!
“ஏன்? அவங்க வீட்ல யாரும் இல்லையா?”
“அவரு நாடு விட்டு நாடு பறந்து வந்திருக்கிற பட்சி டி. இவரு தனியா வேற இருக்காரா? அவங்க வீட்டு ஆளுங்க யாரும் இல்லையா.
எங்க அம்மாவுக்கு வேற சொந்தம்.. கூட்டிட்டு போகலைனா ஆத்தா வையும்..!” என்று போலியாக கண்ணீரை துடைத்துக்கொள்வது போல துடைத்துக் கொண்டு செல்லும் கிருத்தியின் முதுகில் தட்டி
“ஒழுங்கா அவர கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணி அழைச்சிட்டு போ.. அன்னைக்கு அவர் உனக்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்காருல.. போ போ ஹெல்ப் பண்ணு..!” என்று அனுப்பி வைத்தாள் சனா, வேற கேள்விகள் கேட்காமல்..!!!
“ஸ்ஸப்பா.. எவ்வளவு பொய் சொல்ல வேண்டியதா இருக்கு? இப்ப தான் ஏன் இந்த லவ்வர்ஸ் பக்கிங் எல்லாம் பொய் புழுவிகளா இருக்கீங்கன்னு புரியுது. எப்பா இந்த வோல்ர்ட சமாளிப்பது சாதாரண காரியம் இல்லை போல..” என்று உலகத்தைப் பற்றி யோசித்தவள் அவளையே உலகமாக எண்ணுபவனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை..!!
அன்று கிருத்தியை முத்தமிட்ட பின் அவள் ஆவேசமாய் அடிப்பாள்.. கிட்டத்தட்ட வார்த்தைகளால் திட்டுவாள் இல்லை அழுது கொண்டே ஓடுவாள்.. கடைசியாக அத்தையிடம் மாட்டி விடுவாள் என்று ஏக எதிர்பார்த்து.. அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள நேரமில்லாமல் சற்று பயந்தபடி தான் அவளைப் பார்த்தான்.
அவளோ அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள். அது அவனை அடித்தால் கூட அவ்வளவு வலித்திருக்காது..! அவனை மிகவும் வருத்தியது. அவன் தெரிந்து செய்ததும் அல்ல இது திட்டமிட்டு செய்ததும் அல்ல..!
தானாக நடந்த ஒன்றை தனதாக மாற்றிக் கொண்டான்..!
இனி அவள்தான் அவன் எல்லாமுமே என்ற எண்ணம் மீதூற..!!
அவனை பொறுத்தவரையில் அது தவறல்ல..!! ஆனாலும் தவறு தான்..!!
“லயா? அது வந்து.. நான்..” என்றவனிடம், தன் கையை உயர்த்தி போதும் பேசாதே என்றவள்,
“இது என்னோட தப்பு தான்..! ஒரு ஆண் தனியா இருக்குற இடத்துல இப்படி வந்து நான் பேசி இருக்க கூடாது..! நீ என்கிட்ட உரிமை எடுக்க நான் இடம் கொடுத்து இருக்க கூடாது.! ரெண்டுமே என்னோட தப்பு. இனி ஒரு தடவை என்கிட்ட நெருங்க முயற்சிக்காத..!” என்று கண்களில் அத்தனை கோபம் கங்குகளாக மின்ன அவனை பிரிந்தவள் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்.
அக்கம் பக்கம் எல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று பிரஞ்கையோ கவனமோ இல்லை. எப்படி அவன் இப்படி செய்யலாம் என்று எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது..!
அடுத்து இரண்டு நாட்களும் மாடிக்கு மட்டுமல்ல வெளியிலேயே அவள் வரவில்லை. காலையில் வேலைக்கு சென்றால் வீட்டுக்கு வருவது. அன்னைக்கு துணையாக எதுவும் செய்வது. வேலனோடு வம்பு இழுப்பது. பின் அமைதியாக தன் கூட்டுக்குள் அடைந்து கொள்வது என்று இதையேதான் கடைபிடித்தாள்.
சிவகாமிக்கு பெரிதாக எதுவும் அவளிடம் வித்தியாசம் தெரியவில்லை..! அவள் தெரிய விடவில்லை..!
அதைவிட தவறு செய்தவன் அவன்? நாம் ஏன் அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்? வருந்த வேண்டும்? கூட்டுக்குள் ஒடுங்கியிருக்க வேண்டும்? என்ற எண்ணத்தில் அவள் மிகத் தெளிவாக இருந்தாள்.
ஆண் என்று ஆணவத்தில் அவன் ஆடினால்.. அதற்கு நான் பழி சுமக்க முடியாது..! இனி ஒரு தரம் அவன் என்னை நெருங்கட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு..! என்று இவள் சங்கல்பம் எடுத்து தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாகீஸனும் அதன்பின் அவளை தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக அவளை அவதானித்தான்..!
அவள் அவளாக தான் இருந்தாள். தம்பியோடு வம்பு பேசினாள்.. அம்மாவோடு கலகலத்துப் பேசினாள்.. வேலைக்கு சென்றாள்.. வந்தாள்.. உண்டாள் உறங்கினாள்..!
அதன் பின் அவன் அந்த மலையூர் மம்பட்டியான் பாடலை அதிக சத்தமாக வைத்தால் கூட அவள் கண்டு கொள்ளவே இல்லை. அவனை திட்ட மாடி ஏறி வரவும் இல்லை..!
“சோ.. என்னோட நெருக்கம் உன்ன டிஸ்டர்ப் பண்ணல அப்படின்னு நீ எனக்கு காட்டுற? வெல்.. வெல்.. லயா..! அப்படி எல்லாம் ஒன்ன இருக்க விட மாட்டேன்” என்று சிரித்துக் கொண்டான்.
அன்று மாலை அவள் வீடு வந்து விட்டாள் என்று தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டு கதவைத் தட்டி உள்ளே சென்றான்.
“வா வாகீஸா.. உக்காரு என்ன சாப்பிடுற?” எந்த சிவகாமி வழக்கம் போல அவனை அன்பாக உபசரிக்க.. அவனுக்கு அவன் செய்ததை நினைத்து கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், ‘அத்தை பெண் தானே உரிமை எடுக்கலாம் தப்பில்லை’ என்று நினைத்து கொண்டான்.
வேலை முடித்து வந்து உடை மாற்றியவள் அம்மா செய்து வைத்து பலகாரத்தை உண்டு கொண்டு சமையலறையில் தான் இருந்தாள்.
“இப்ப எதுக்கு இவன் வந்திருக்கான்?” என்று மண்டையில் யோசனை அது பாட்டுக்கு சென்றாலும்.. வாயும் கையும் சிவகாமி செய்து கொடுத்த பலகாரத்திடம் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் சமயலறையை விட்டு வெளியே அவள் வரவில்லை..!!
அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வாடிக்கையாளர் சிவகாமியை அழைக்க.. அவருக்கு தைத்து எடுத்து வைத்திருந்த உடைகளோடு “கொஞ்சம் இரு வாகீஸா இத கொடுத்துட்டு வந்துறேன்” என்று அவர் வெளியேற முற்பட..
“அத்த கொஞ்சம் தண்ணி வேணும்” என்று கேட்டான்.
“இருப்பா எடுத்துட்டு வரேன்” என்று உள்ள சென்றவரை தடுத்து, “நம்ம வீடு தானே.. நானே எடுத்து குடிச்சுக்கிறேன்” என்றான்.
அவரும் சமையலறையில் கிருத்தி இருப்பதை மறந்து விட்டு “சரிப்பா” என்றபடி வெளியே வாடிக்கையாளரை பார்க்க சென்றார்.
இதே ஒரு வாரத்திற்கு முன்னால் என்றால் கூட இந்த உரிமையை எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். என் மாமியார் வீடு என்று உரிமையோடு அவன் உள்ளே நுழைந்தான். அதிலும் அவள் உள்ளே இருப்பதை அறிந்து தானே அவன் செல்வது..!
“லயா..” மெல்லக் கூப்பிட்டுக்கொண்டே சமயலறைக்குப் போனான் வாகீஸன்.
அவன் சட்டென்று இப்படி உள்ளே வருவான் என்று எதிர்பாராமல் சிற்றூண்டி உண்டு கொண்டிருந்தவள்.. ஆவென்று வாயை பிளந்து அவனை பார்த்தப்படி நின்றிருந்தாள்.
“என்ன லயா? லாங் டைம் நோ சீ..!” என்றான் சிரிப்புடன்.
‘ஒரு மூணு நாளைக்கு முன்ன கிஸ் கொடுத்துட்டு இப்ப வந்து என்னமோ காலங்காலமா பார்க்காத மாதிரி பேசுறான் பாரு’ என்று முணுமுணுத்துக் கொண்டவள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வைத்துவிட்டு அவனை முறைத்தாள்.
“ரொம்ப இயல்பா இருக்குற மாதிரி நடிக்காத லயா.. என்னால நீ.. உன் மனசு டிஸ்டர்ப் ஆயிட்டுங்குறது நீ மறுக்க முடியாத உண்மை” என்ற வாகீஸன் அவளை நோக்கி முன்னேறினான்.
“வாட் டிஸ்டர்ப்பா அதுவும் உங்களால? நெவர் எவர்..!’ என்றவள் அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து “கிட்ட வராதிங்க..!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
“ஆஹான்..!”
சட்டென்று திரும்பி அருகில் இருந்து சாரணியை கையில் எடுத்துக் கொண்டாள்.
”என்கிட்ட வந்திங்கன்னா.. அடிச்சிருவேன்.. !!” சொன்னதோடு மட்டுமல்லாமல் ஓங்கி வீசிக் காட்டினாள்.
”ம்.. ம்ம்..! வெல் வெல் லயா.. நீதான அடிக்கற..? எவ்ளோ வேணா அடிச்சிக்க..!” என்று இன்னும் நெருங்கினான்.
”நிஜம்மா அடிச்சிருவேன்.. !!”
ஒரு குழந்தை கொஞ்சுவது போலச் சொன்னாள். ஏனோ சத்தமிட்டு சிவகாமியின் முன் இதெல்லாம் தெரிய வர அவள் விரும்பவில்லை.
” ம்..ம்ம்…!! அடிச்சிக்கோ..! நெஞ்சையே கெடுத்துட்ட அத விட இந்த அடிதானா பெருசா எனக்கு??” அவளை நெருங்கினான்.
”கெடுத்துட்டேனா? வேணாம். கிட்ட வராதிங்க..! சும்மாருங்க.. திரும்பி நடங்க.. தப்பு இது..!!” சீறினாள்.
பக்கத்தில் வந்தவனின் தோளில் சாரணியால் அடித்தாள். அதை தூசு தட்டுவது போல கையால் தட்டிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தான் வாகீஸன்.
”நான் பெரிய தப்பு பண்ணலமா.. சின்ன தப்புதான்..! அதுவும் ஸ்வீட் தப்பு. ஆக்சுவலி அப்ப நீ என் மேல விழுந்ததும் என்னை என்னால் கண்ட்ரோல் பண்ணிக்க முடியல..!! உன்ன அப்படியே கடிச்சு சாப்ட்றனும் போல தான் இருந்துச்சு.. நான் தான் பெரிய மனசு பண்ணி லிப்ஸ் ஓட விட்டுட்டேன்” என்றான் சோகமாக..!
அவளை நெருங்கி தோளோடு அணைத்து அருகில் நின்றவன் அவள் கையில் இருந்த சாரணியை வாங்கி ஓரமாக வைத்தான். இப்போதும் அவள் முரண்டினாள்.
“இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் லயா பண்ணனும்..! ஆனாப்பாரு நம்ம விஷயத்துல எல்லாமே கொஞ்சம் உல்ட்டாவே நடக்குது இல்ல” என்று அவன் கண்ணடித்து சிரிக்க..
“தள்ளுங்க.. அம்மா வந்து பார்த்தாங்கன்னா அவ்வளவு அசிங்கம் எனக்கு..!”
“என்கூட நிற்கிறது அவ்ளோ அசிங்கமா?” என்று சற்று மனவலியோடு தான் கேட்டான்.
“உங்களுடனு இல்ல எந்த ஆம்பளையோடையும் இப்படி வீட்டுக்குள்ள நின்னாலும் அது தப்பு அசிங்கம் தான்..!” என்றாள்.
ஆக நான் அசிங்கம் இல்லை என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“அப்ப நான் இங்கிருந்து போகணும்னா ஒரு டீல்..!”
என்ன என்று சொல்லித் தொலை என்பது போல அவள் பார்க்க..
“அதான் ஏற்கனவே சொன்னேனே என் பர்சனல் லவ்வர் போஸ்ட்..! அதுக்கு நீ ஒழுங்கா ஒத்துழைக்கணும் இல்லன்னா நெக்ஸ்ட் டைம் அத்தை இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன் அவங்களுக்கு நேராவே கூப்பிடுவேன்” என்றவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
சிவகாமியிடம் இவற்றையெல்லாம் ஒப்பித்து விட ஒரு நொடி கூட ஆகாது ஆனால் அதற்குப்பின்? வேலை பார்த்தது போதும் என்று ஊரில் உள்ள சொந்தங்களுக்கு எல்லாம் ஓலை அனுப்பி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுவார்.
இவளது கனவு லட்சியம் எல்லாம் தகர்ந்து விடும். நாமே இவனை சமாளிக்க முடியாதா என்ன? வேலை செய்ற இடத்தில் இப்பொழுது நண்பர்கள் கூட்டத்தோடு இருப்பதால் பெரிதாக இம்மாதிரியான ஆண்களால் தொல்லை ஏற்படுவதில்லை.
இதுவே வெளியில் சென்றால்? அப்போது இன்னும் நிறைய நிறைய நபர்களை எதிர்கொள்ளும் போது? இம்மாதிரி பிரச்சினைகள் வந்தால்? தானே தனியாக சமாளித்து தான் ஆகணும். அதனால் இவனை நாமே சமாளிப்போம் என்று முடிவு எடுத்தவள்,
“அதை நாளைக்கு பாக்கலாம் இப்ப போறீங்களா?” என்று பல்லைக் கடிக்க..
“ஷூர்..!” என்றவன், வெளியில் செல்ல போக, அந்நேரம் பார்த்து சிவகாமி உள்ளே வர..
தண்ணி குடிப்பது போல அவன் திரும்ப, அதுவரை அவன் அருகில் நின்று இருந்த கிருத்தி அவன் பின் தொடர எத்தணிக்கும் நேரத்தில் அவனும் திரும்ப.. இருவர் இதழ்களும் மீண்டும் விலங்கிட்டு கொண்டன..!
துளி விநாடி தான்..! ஆனால்..
அது பற்றி வைத்த தீப்பொறியோ ஜூவாலையாக அவனுள் இருந்து கொண்டிருந்தது..!!
“சத்தியமா இப்பவும் இது என் தப்பு இல்ல லயா..!” என்று சிரித்துக் கொண்டே வெளியேறி
விட்டான்.
அதை நினைத்துக் கொண்டே அவனது இதழ்களை கட்டை விரலால் வருடிக் கொண்டு இருந்தவன் முன்னே வந்து நின்றாள் கிருத்திலயா..!!
மயக்க வருவான்...
