அத்தியாயம்: 31
இராவணனே தாத்ரியை உள்ளே அழைத்து வர அவள் நம்பாமல் அவனை பார்க்க "ப்ளீஸ்… தாத்ரி தேவி.." என்று கார் கதவை திறந்து விட்டான்.
அவளும் தான் கேட்க வந்த கேள்விகளை அந்நேரம் மறந்து விட்டு, அவனின் ஆளுமையில் மயங்கி 'இவன் என் கணவன்! எனக்கு மட்டுமே உரிமை ஆனவன்' என்ற எண்ணம் தோன்ற காரின் முன்னால் அமர்ந்து கொண்டாள் கர்வமாக.
காம்பவுண்ட் கேட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு மேல் இருந்தது அவனது வீட்டுக்குள் செல்ல… அவ்வீட்டினை மெய்மறந்து பார்த்தாள்.
'இது என் வீடு' என்ற உரிமை உணர்வு அவளுக்கு பொங்கியது.
அவன் வேக நடையோடு உள்ளே பிரவேசிக்க… அந்த வீட்டின் உள் அலங்காரத்தை வியந்தப்படி தாத்ரி இராவணன் பின்னாலேயே வர திரும்பி சட்டென்று அவளை ஒரு பார்வை பார்த்தவன் "கெஸ்டுக்குனு ஒரு அளவு இருக்கு. அது என்னோட ஹால் வரை மட்டும்தான்! அதைத் தாண்டி என் பெட்ரூமுக்கு வர வேலை எல்லாம் வச்சுக்க கூடாது" என்று கடினமான முகத்தோடு கூற விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டான்
"என்ன நான் கெஸ்ட்டா? இது என் வீடு.. நான் தான் இந்த வீட்டின் மகாராணி" என்று உரக்க கத்த வேண்டும் போல இருந்தது.
இப்போதைக்கு இவனிடம் கத்தி பேசி வீணாக இவனுக்கு கோபத்தை மூட்டக்கூடாது என்று நினைத்து சிடுசிடுப்போடு சோபாவில் அமர்ந்தாள். ஆனாலும் மனதில் அவள் இடத்தில் சித்ரலேகாவை வைத்து பார்க்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.
தாத்ரியை செக்யூரிட்டிகள் வெளியே விடாததை மேலே இருந்து கவனித்த சித்ராவுக்கு 'கண்டிப்பாக இது ராவணன் வேலை தான்.. அரக்கன்.. டீமன்.. பொல்லா ராட்ஷசன்' என்று பொரிந்தாள்.
தன் தமக்கை அவர்களிடம் அவமானப்படுதை காண சகிக்காமல் அங்கே நிற்க மனம் இல்லாமல் மீண்டும் அதே ஷோபாவில் தஞ்சம் அடைந்தாள். கால்களை மடித்து அதன் மீது தலையை சாய்த்து இலக்கு இல்லமாமல் வெறித்தாள். இராவணுடனான் வாழ்க்கையை வெறுத்தாள்.
"என்ன அம்மாயி தூக்கமா?" என்று அவன் முரட்டு கைகள் மென்மையாக அவரது முகத்தில் படற சட்டென்று அதை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்து கொண்டாள் சித்ரா.
"முரட்டுத்தனம் உதாசீனம்? அதுவும் இராவணனிடமே வா? விட்டு விடுவானா இராவணன்?" என்று நக்கலாக மொழிந்தவன் அவளை ஷோபாவிலேயே சிறைபிடித்தான்.
இருவர் முகமும் மிக மிக அருகில்
இருவரதும் மூச்சுக்காற்றும் ஒருவரை ஒருவர் தீண்டும் விதத்தில் மிக நெருக்கத்தில் இருந்தனர்.
அதுவும் அவனது மூச்சுக்காற்று அவனை விட கோபமாய் அவள் முகத்தை வந்து தாக்கியது.
"இரவின் மயக்கம் தான் தீர்ந்திடிச்சுல? அப்புறம் என்ன?"
என்று கோபமாக கேட்டாள்.
"மயக்கமா உன் மேலேயா? குட் ஜோக் அம்மாயி" என்று சிரித்தான்.
"என்ன நினைச்ச இந்த இராவணனை? பாக்குற இடத்துல எல்லாம் வாய் வைக்குற ஹைனானா? சிங்கம் டி!
முழுசா ஆறு மாசம் நானும் உன் அக்காவும் ஒரே ரூமில் தான் இருந்தோம். பட்.. நந்திங் ஹாப்பண்ட்!" என்று உதட்டை பிதுக்கியவன், அவள் தாடையை பற்றினான் அழுத்தமாக "பட்… உன் கூட அப்படி கிடையாது அம்மாயி.. யூ சோ ஸ்பெஷல் டூ மீ அம்மாயி" என்றான் பற்களை கடித்துக் கொண்டு! அவன் பற்களின் நறநற சத்தம் பெண்ணவளின் உள்ளத்தை கிலியை பரப்பியது.
சித்ராவின் விழிகள் அவன் அருகாமையில் அனலை கக்கியது. அதற்கு மாறாய் இராவணனின் விழிகள் அவளை தாபமாய் பார்த்து தலை முதல் கால் வரை அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கியது. அவனது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டவளுக்கு பயம் தொண்டையை கவ்வியது. அவனோ அவனது பார்வையை மாற்றாமல் இன்னும் அவளை தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்கமாய் விடாது பார்வையால் துளையிட.. அவனது அந்த பார்வை வீச்சினை தாங்காது அவளது மெல்லிய பூவுடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் தைரியத்தை மனதினில் தேக்கி,
"பொண்டாட்டியோட தங்கச்சி கிட்ட இப்படி கேவலமா பிஹேவ் பண்ண உங்களுக்கு அசிங்கமா இல்லையா?
ஒரு பொண்ணு விருப்பம் இல்லாம அவளை பெண்டாளுறது நினைச்சு உங்களுக்கு வெக்கமா இல்லையா?"
என்று அவளின் அடுத்த கேள்விகள் எல்லாம் அவனின் இதழ்களுக்குள் சென்று ஐக்கியமாகின.
நிதானமாக அவளது இதழ்களை ருசித்து பின் விடுவித்தவன் "உனக்கு ஒன்னு மறந்துடுச்சு அம்மாயி.." என்று அவள் புடவைக்குள் இருந்த தாலியை எடுத்து வெளியே விட்டவன், "நான் உன் அக்காவுக்கு மட்டும் புருஷன் இல்ல அம்மாயி… உன்க்கும் நான் தான் புருஷன்! அதனால.. புருஷனுடைய உரிமையை நான் எடுத்துகிறது தப்பே இல்ல! புரிஞ்சுதா? இல்ல அதா என்ன உரிமையுனு புரிய வைக்கவா அம்மாயி?" என்று அவனது கரங்கள் அவள் உடலில் சற்றே அத்து மீறி அவன் உரிமையின் அளவை கூற… அவனை தள்ளவிட்டு எழுந்து நின்றவள், அவன் கையில் அவள் முந்தானை சிக்கி கொள்ள நிலை தடுமாறி பஞ்சணையில் வீழ்ந்தாள்.
"அல்லரி அம்மாயி…(குறும்புக்காரி) வத்து வத்து(வேணாம்) சொல்லிட்டு நீயே கட்டில நோக்கி என்னை இழுக்கிறியே அம்மாயி… நேக்கு அதி சால பாகா நச்சணடி (எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு) அம்மாயி" என்று அவள் அருகே நெருங்கினான்.
அஞ்சன விழிகளில் கனலால் அவனை சுட்டெரித்தபடி "வேணாம்.. ராவணா.. கிட்ட வராதே! வேணாம்" அவள் பேச ஆரம்பிக்க.. இராவணனோ அவளின் தடுமாற்றத்தை பயத்தை ரசித்தபடி நின்றவன் அலட்சியமாய் தோளை குலுக்கிவிட்டு "எனக்கு உன்னை பிடிச்சிருக்கே அம்மாயி.. எப்படி சொந்தமாக்காம நான் விடுவேன். மன்சி அம்மாயியா (நல்லா பிள்ளையா) நான் சொன்னதை கேட்டனா.. சேதாரம் கம்மாயகும். நீக்கு அர்த்தம்யினதா (புரிஞ்சுதா)?" என்றான் என்னை மீறாதே என்று குரலில்.
"என்னை திட்டு பேசும் போது கனலைக் கக்குற இந்த கண்ணுல கெஞ்சல கொஞ்சல் காதலை பாக்கணும்னு அம்மாயி.." என்று கூறிக் கொண்டே அவள் அருகே படுத்தவனின் கரங்கள் அவளை இடையோடு சேர்த்து தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
அவனது அணைப்பு அருவுறுப்பாக தோன்ற திமிறி விலக நினைத்தாள் சித்ரா. அவனோ இராவணன்! விட்டு விடுவான் என்ன எளிதில்? மலைப்பாம்பாய் அவளை வாரி சுருட்டி தன்னுடன் பொதித்துக் கொண்டான்.
"வேணாம்… வேணாம்.. இராவணா.." என்று அவள் திமிறினாள்.
"இந்த இராவணா நீ சொல்லும் போது.. ரொம்ப பிடிக்குதே அம்மாயி? என்னவா இருக்கும்?" என்று அவளிடமே காது மடல் கடித்து மெல்லிய குரலில் கேட்டான்.
அவள் அவனை தள்ளி விட
அவளைப் படுக்கையில் கவிழ்த்து இரு புறமும் கரங்களால் அணையிட்டவன் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவாறு அவள் இதழ்களை நெருங்கினான்.
நேற்று இரவின் மிச்சமிருந்த அவள் மீதான தாபங்கள் அவள் கண்களிடம் ஏதெதோ ரகசியங்கள் சொல்லின. ஆனால் அதை புரிந்துக் கொள்ளும்
மனநிலையில் சித்ரா இல்லை. மலைப்பாம்பாய் தன்னை சுருட்டியவனிடம் மாட்டிக் கொண்ட சிறு மானாய் அவள் தத்தளித்தாள்.
அவனோ விடாக்கண்டனாக அவள் இதழ்களை நெருங்க.. விருப்பமின்றி
அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள சங்கு கழுத்தில் மின்னிய தாலி கயிறு அவனை அழைக்க அதனை தன் வாயில் கவ்வி அவளது கழுத்தில் பற்கள் பதிய முத்தமிட்டான் இராவணன்.
அப்போது பூச்சாடி விழுந்து நொருங்கும் சத்தம் கேட்க… இருவரும் திடுக்கட்டு சத்தம் வந்த திசையில் திரும்பி பா
ர்க்க.. அங்கே வெறித்த பார்வையோடு நின்றிருந்தாள் தாத்ரி.
தொடரும்…
