யட்சன் 29

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம் :  29

 

குளியல் அறையில் இருந்த சித்ராவுக்கு குற்றால அருவி போல கண்ணீர் நிற்காமல் கொட்டிக் கொண்டே இருந்தது. இராவணன் சொன்னது நினைவு வர.. வேகமாக கண்ணாடியில் முன் நின்று அவளை பார்த்தாள். அவன் சொன்னதின் அர்த்தம் அப்பொழுது தெரிந்தது. அவளது கழுத்தலும் மார்பிலும் காது ஓரமும் புஜங்களிலும் எல்லாம் அவனது பற் தடங்கள்.. அவர்களது இணைப்பிற்கு ஆதாரம் கூறியது.

 

இராவணனின் இந்த அதிரடி கூடவே இப்படி அரக்கனாய் மாறி அவள் பெண்மையை அழித்தது என்று எதனையும் ஏற்க முடியாமல் தவித்தவள் அந்த குளியல் அறையிலேயே மடங்கி அமர்ந்து அழுக ஆரம்பித்தாள்.

 

அதிலும் அக்காவின் கணவன் அவன்! எவ்வளவு ஆசையாக தாத்ரி அவனை மணந்தாள் என்று இவளுக்கு தெரியுமே!

 

வேற ஒருவனுக்கு மனைவியாக வேண்டியவளை,வேற ஒருத்தியின் கணவன் இப்படி கொள்ளை கொண்டதை இதுவரை கதையிலும் சினிமாக்களிலும் மட்டுமே கேட்டு பார்த்து வந்தவளுக்கு.. தன் வாழ்க்கையில் அப்படி ஒரு விபரீதம் நடந்தது நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதற்கு சாட்சியாய் அவள் உடலில் அவன் பற்தடங்கள்.

 

அந்நிலையில் அவளால் அழுக மட்டுமே முடிந்தது. வேற என்ன செய்ய நான்??

 

"இல்லை.. இல்லை அழுக கூடாது.  நான் அழுக கூடாது. இது அழுக வேண்டிய தருணம் இல்லை. இது என் வாழ்க்கை கிடையாது. என் அக்காவின் வாழ்க்கை.. அவள் வாழ்க்கையை நான் வாழ கூடாது. முதலில் இங்கே இருந்து எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும்" என்று ஏதேதோ நினைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் அங்கேயே ஷவருக்கு அடியில் அமர்ந்திருந்தாளோ.. உடல் எல்லாம் குளிர்ந்து நடுங்க ஆரம்பிக்க தன்னிலை உணர்ந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

 

அதுவும் அவன் அறையில் இருப்பான மீண்டும் தன்னிடம் முறை‌ தவறி நட்பபானோ என்று பயந்து பயந்து அவள் வெளியில் வந்தாள்.

 

அவள் பயந்தது போல் அறையில் அவனில்லை‌ நிம்மதி பெரும் மூச்சுடன் அவன் காட்டிய வாட்ரோப் சென்று பார்க்க இராவணன் கூறியது உண்மை என்று மெய்ப்பிக்கும் வகையில் அவளுக்கான உடைகள் அணிமணிகள் அலங்கார உபகரணங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. 

 

முதலில் அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்தாலும் பின்பு ஒரு அருவருப்போடு பார்த்தாள். 

 

"இதையெல்லாம் யார் கேட்டார்கள் அவனிடம்? ஓலை குடிசையில் வாழ்ந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று  வாழ வேண்டும். 

அடுத்தவள் கணவனோடு அதுவும் சொந்த அக்காவின் கணவனோடு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? ச்சை.. இப்படி தரம் இறங்கி வைத்து விட்டானே என்னை" என்று மனசில் பொங்கிய ஆத்திரத்தை இப்பொழுது காட்ட நேரமுமில்லை அவனுமில்லை என்று அடக்கி வைத்தாள்.

 

உடை மாற்றியவள் வெளிவர மனம் இல்லாமல் மீண்டும் அந்த கட்டிலிலேயே சுருண்டு கொண்டாள். ஆனாலும் இதே கடலில் தானே நேற்று நான் சுய நினைவு அற்ற நிலையில் என்னை பெண்ணாண்டான் என்ற நினைவு வர.. அந்தக் கட்டிலில் அமராமல் அருகில் இருந்த சோஃபாவில் தன் உடலை குறுக்கி கால்களை மடக்கி அதில் தலையை வைத்து அமர்ந்து கொண்டாள்.

 

மீண்டும் கண்ணீர் பெருகியது பெரியம்மா பெரியப்பா அண்ணன் என்று ஒவ்வொருவராக நினைத்து நினைத்து அழுதாள். கூடவே தாய் தந்தையர் இருந்தால் எனக்கு இந்த மாதிரி ஒரு அவநிலை வந்திருக்குமா? என்று மனது கூப்பாடு போட்டாலும், யார் இருந்தாலும் அவன் தூக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பாக தூக்கி இருப்பான் என்று அறிவு அதட்டியது.

 

இப்படியாக நேரம் சென்று கொண்டிருக்க அவளை தேடி உணவு வந்தது. 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ஒரு சின்ன டிராலியில் அவளுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு வர, யார் மீது கோபத்தை காட்டுலாம் என்று இருந்தவளுக்கு.. அவ் கொண்டு வந்ததை எல்லாம் தூக்கி எறிந்து

தன் ஆத்திரத்தை தீர்த்து கொண்டாள்.

 

அதளகப்படுத்தினாள் அவ்விடத்தை சித்தா. அவளின் அத்தனை ஆக்ரோஷத்திற்கும் அமைதியாக நின்றவர் கதவருகே திரும்பிப் பார்க்க அங்கே மற்றொரு டிராலியை வைத்துக்கொண்டு இன்னொருவன் நின்றான்.

 

அந்தப் பெண்மணி கண்ணசத்ததும் அந்த ஆள் வேகமாக உள்ளே வந்து இவள் உடைத்து போட்டதெல்லாம் துப்புரவு செய்து அடுத்த நிமிடம் மாயமாய் வெளியே சென்று விட்டான்.

 

அந்த பெண்மணி மீண்டும் வேறொரு டிராலியை கொண்டு வந்து வைத்தாள்.

அதையும் போட்டு உடைத்தாள் சித்ரா. இப்பொழுது வேறு ஒருவன் வந்து முன்புப்போல துப்புரவு செய்து மாயமாய் வெளியே சென்று விட்டான்.

மீண்டும் ஒரு ட்ராலி உணவோடு வந்து நின்றது.

 

"என்னங்கடா மாய மந்திரமா இருக்கு? மாயாஜாலம் பண்றீங்களா?" என்று சித்ரா அந்த அறையே அதிர கத்தினாள்.

 

"இல்ல மேடம்.. சார் உங்களை நன்றாக பார்த்துக்க சொல்லி எனக்கு உத்தரவிட்டிருக்காங்க. இப்படித்தான் செய்வீங்கன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க. எத்தனை முறை நீங்க உடைத்தாலும் நீங்கள் சாப்பிடும் வரை உணவு கொண்டு வந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க" என்றாள் பவ்யமாக.

 

"எத்தனை முறை உடைத்தாலும் திரும்ப வாங்கிக் கொள்வானாமாம். இரு எல்லாத்தையும் உடைக்கிறேன்" என்று ஒவ்வொரு முறை கொண்டு வந்தவற்றையும் இவள் போட்டு உடைத்தாள். ஐந்து முறைக்கு மேல் இவளால் முடியவில்லை. காரணம் அதிலிருந்து தரையில் கொட்டி வீணாபோன உணவுகள் அவள் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தியது.

 

"இந்த உணவு கிடைக்காமல் உலகின் பல இடங்களில் எத்தனையோ மனிதர்கள் தினம் தினம் வாடுகிறார்கள். எத்தனையோ மனிதர்கள் இறக்கிறார்கள். இப்படி நாம் இதனை வீணாக்குகிறோமே?" என்று குமறினாள். பார்த்திருந்த அந்த பெண்மணியிடம் ஒரு மெல்லிய புன்னகை. "சார் மேடமை.. சரியாதான் கணிச்சிருக்காரு" என்று நினைத்தார்.

 

இவள் யோசித்துக் கொண்டே நிற்கும்போது அந்த பெண்மணியின் கையில் இருந்த மொபைல் அழைத்தது. அதை எடுத்து அட்டன் செய்தவள் "எஸ் சார் எஸ் சார்" என்று அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டார்.

 

"மேடம் சார் உங்க கிட்ட பேசணும் சொல்கிறார்" 

 

"நான் எவன் கிட்டயும் பேச விருப்பப்பபடல" என்று இவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

னஉடனே அந்த பெண்மணி தன் போனில் இருக்கும் லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்து அங்கிருந்து மேடாவில் வைத்துவிட்டு வெளியில் சென்று நின்று கொண்டார்.

 

"என்ன அம்மாடி.. ஒரே அதக்களம் தான் போல.. ஆனா நீ எவ்வளவு அதக்களம் பண்ணினாலும் என்னால எல்லாத்தையும் திரும்ப வாங்க முடியும்னு இதுதான் சின்ன சாம்பிள் உனக்கு. எத்தனை முறை எல்லாத்தையும் நீ உடைத்தாலும் இல்லை வீணடித்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றவனை முறைக்க முடியாமல் போனை முறைத்தாள்.

 

"ஓகே ஓகே ரொம்ப முறைக்காத அம்மாயி.. சாப்பிட்டு பலத்தை ஏத்திக்கோ நைட்டுக்கு பாவாவோட பர்பாமென்ஸ் தாங்க முடியணும் இல்ல. நேத்து மாதிரி ஒன் சைட் இருக்க கூடாது. ஐ நீட் வைல்ட் ஆக்ஷன் ஃபர்ம் யூ" என்றதும் அவள் விதிர்விதிர்க்க "உன் மூஞ்சி இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கணுமே அம்மாயி நான்" என்றவனின் சிரிப்பு அவளுக்கு கொடூரமாக கேட்டது.

 

அதே நேரம் அந்த வீட்டு வாயிலில் வந்து நின்றது தாத்ரியின் கார். ஆனால் அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

 

தாத்ரி வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தாள். மாடியில் ஜன்னல் அருகே நின்று

அதை பார்த்த சித்ராவுக்கு மனதில் பயம் கவ்வியது.

 

தொடரும்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top