அத்தியாயம்: 30
மயங்கி விழுந்த கலாவதியை ஆகாஷூம் ரங்கராஜனும் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
"மன அழுத்தம் அதிர்ச்சி தான் காரணம். கொஞ்சம் லோ பிரஷரா இருக்காங்க.. மத்தபடி ஷி இஸ் ஓகே.. இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்கட்டும்" என்று டாக்டர் கூற, ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார் ரங்கராஜன்.
கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு தான் தம்பி தம்பி மனைவியின் இழப்பு, அதன் பின் பிடிவாதமாய் பெரிய மகளின் காதல் திருமணம், ஓய்வு எடுக்கலாம் மகனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு என்று நினைக்கும் வேளையில்… இப்பொழுது சின்ன மகளின் அதிரடி திருமணம் அதுவும் பெரிய மகளின் கணவனே… சோர்ந்து போய் அமர்ந்து விட்டார்.
அவன் சாதாரணமானவன் என்றால் இந்நேரம் தட்டி தூக்கி அவனை ஒரு வழி ஆக்கி இருக்கலாம். அவனோ ஆஸ்திகளும் அந்தஸ்திலும் அதிகாரத்திலும் இவர்கள் எல்லாம் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறான். கூடவே பெண்ணை தூக்கிக்கொண்டு எங்கே சென்றானோ என்று பரிதவித்தபடி அமர்ந்திருந்தார்.
அதிலும் கலாவதியின் உடல்நிலை அவரை மிகவும் சோர்வடைய செய்தது. என்ன தான் தொழில் வளர்ச்சி என்று அவர் ஓடினாலும் அவரின் மனநிம்மதி தைரியம் சந்தோஷம் பக்கபலம் அனைத்தும் கலாவதி தான். அவரின் சோர்வு இவரையும் தாக்கியது. வேறு எதையும் யோசிக்காமல் களை இழந்து வதங்கி கட்டிலில் படுத்திருந்த கலாவதியை தான் பார்த்தவாறே இருந்தார்.
சம்சாரம் போனால் சகலமும் போகும் என்று சும்மாவா சொன்னார்கள்?
ஆகாஷ் ஃபோனும் கையுமாகவே இருந்தான். முதலில் வரலட்சுமி இடம் அவன் அங்கு வந்தானா என்று கேட்க, "இல்லை ஆகாஷ் அவன் இங்கு வரவே இல்லை" என்று வருந்தியவர், "எனக்கும் தெரியல இப்படி செய்வானு.. இப்படி ஒரு பாவிய பிள்ளையாய் பெத்துட்டேன்.." என்று அதற்கு மேல் பேச முடியாமல் அவர் அழுதார்.
"வேண்டாம் ஆன்ட்டி, இதுல உங்க தப்பு என்ன இருக்கு. தாத்திரி கொஞ்சம் நீங்க பார்த்துக்கோங்க"
"ஏனென்றால் ஆகாஷ்.. இனி எனக்கு மகன் மகள் எல்லாமே தார்தி தான்" என்ற ஒரு குரலில் அவ்வளவு அழுத்தம்.
அதன் பிறகு அவனுக்கு தெரிந்தவர்கள் அவன் நண்பர்கள் அவர்களின் மூலம் தற்போது இராவணன் எங்கே? இவனின் தங்கை சித்ரலேகாவின் நிலைமை என்ன என்று விசாரிக்க சொன்னான். எத்தனை முயன்றும் அவனால் இராவணன் எங்கு சென்றான் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
சாலை மார்க்கமாக சென்று இருந்தால் கூட சிசிடிவி கேமராவின் உதவியால் இல்லை அங்கங்கே நிறுத்தப்படும் டோல்கேட்டினால் கூட கண்டுபிடித்து இருப்பார்கள். இவன் ஆகாய மார்க்கமாக மாயமாகி விட்டிருந்தான் அவர்களை பொறுத்தவரையில்… அவன் இப்படி தனியாக ஒரு இடத்துக்கு சென்று இருப்பான் என்று தெரிந்தாலும் அது எந்த இடம் என்று யாருக்கும் எந்த யோசனையும் இல்லை. ஏனென்றால் அவனுக்கு இருக்கும் சொத்து பத்துக்கள் ரிசார்ட் எண்ணிக்கை யாரும் அறியாதது. இராவணன் மட்டுமே அறிந்தது!!
ஆகாஷை பொருத்தவரை இராவணன் பற்றிய பெரிதாக தப்பான அபிப்ராயங்கள் கிடையாது முன்பு.
அவன் ஆளுமையுடன் கர்வத்துடன் சுற்றி வருவதை தான் பார்த்திருந்தான். ஆனால் தங்கை காதல் என்று வந்திருக்கும்போது 'அவன் எப்படி காதலித்தான்?' எனக்கு புரியவேயில்லை' அதிலும் திருமணத்திலும் அவன் முகம் கொஞ்சம் கூட புன்னகை காட்டாதது கண்டதும் அவனுக்கு உறுத்தியது.
வரலட்சுமி தான் "அவன் அப்பா இறந்தது முதல் அவன் அப்படி தாம்பா" என்றதும் பெரிதாக அவனை சந்தேகிக்கவில்லை ஆகாஷ். இப்போ எங்கேயோ ஏதிலோ தப்பு நடந்திருக்கிறது என்று யோசிக்க தொடங்கினான்.
சித்ரா தான் வேண்டும் என்றால் எத்தனை வருடங்களில் அவளை எப்படியாவது தூக்கி இருந்திருப்பான். இல்லை இவன் தான் தூக்கினான் என்று தெரியாமலேயே தூக்கி இருந்திருக்கலாம். ஏனென்றால் இராவணனின் அதிகாரபலமும் பண பலமும் அந்தஸ்து பலமும் ஆகாஷ் அறிந்ததே!
அப்படி இருக்க.. இவ்வளவு நாட்கள் விட்டு விட்டு அதுவும் அவளின் திருமணத்தின் போது தூக்கி இருக்கிறான் என்றால்… இதனை எங்கு எப்படி முடிச்சு போட என்று ஒன்றும் புரியாமல் கண்களை மூடி யோசனையிலேயே ஆழ்ந்து விட்டான்.
சித்ராவின் குடும்பத்தில் ஒவ்வொருவரும் இங்கே ஒவ்வொரு விதமாய் இருக்க.. அங்கு வரலட்சுமி தாத்ரியின் கையை பிடித்து மன்னிப்பு கேட்டார். அவள் ஒன்றும் கூறாமல் சிறிது புன்னகைத்து "நீங்க என்ன செய்வீங்க ஆன்ட்டி? இதை நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்று விட்டு அவள் அறைப்பக்கம் வேகமாக சென்றுவிட்டாள். வரலட்சுமி தலையை பிடித்து அமர்ந்திருக்கும் நேரத்தில் தான் ஆகாஷ் போன் செய்தது. அவனிடம் பேசிவிட்டு இவரும் சென்று படுத்து விட்டார்.
தன் அறைக்குள் நுழைந்ததுமே அந்த பெரிய அறையையும் அதை சுற்றி உள்ள இடத்தையுமே வெறித்துப் பார்த்தாள் தாத்ரி மாளிகைக்குள் ஒரு குட்டி மாளிகை என்பது போல இருந்தது அவர்களுக்கான பகுதி.
அதிலும் இவளுக்கு தேவையானதை செய்து கொள் என்று இராவணன் அனுமதித்திருக்க.. அவனுக்கு உள்ளது போலவே இவளுக்கும் தனியாக ஜிம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டாள். கூடவே இன்டோர் ஸ்விம்மிங் ஃபுல் அதனை ஒட்டிய லான் என்று அத்தனை பார்த்து பார்த்து செய்தாள்.
என்னோடது என்னோடது இதெல்லாம் என்னோடது என்று வெறித்தனமாக கத்தியப்படி அனைத்தையும் தொட்டு தொட்டு பார்த்தாள்.
அன்று அவன் கட்டி கொடுத்து எல்லாம் இருக்கின்றன.. ஆனால் கட்டியவன் இல்லையே என்று அந்த நிதர்சனத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து ஒவ்வொரு பொருளையும் தூக்கிப்போட்டு உடைத்து அடித்து துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
"எப்படி? எப்படி? எப்படி அவன் என்னை விட்டுவிட்டு அவளிடம் போகலாம்? அதுவும் அவளை தூக்கிக்கொண்டு செல்லலாம்? இதுவரை என் அருகிலேயே வராதவன்.. அவள் கையில் பிடித்து எப்படி இழுத்துக் கொண்டு செல்லலாம்? அவன்.. என்னுடைய விஷ்… எனக்கு மட்டுமேயான விஷ்… எனக்கே எனக்கு மட்டும் தான்.. அவளுக்கு கொடுக்க மாட்டேன். அவருக்கு நான் தான் மனைவி! நான் மட்டும் தான் மனைவி!!" என்று பைத்தியம் போல அந்த அறையை சுற்றி சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தாள். இரவெல்லாம் பொட்டு தூக்கம் இல்லாமல் மொட்ட மொட்ட விழித்திருந்தாள்.
மறுநாள் அவளுடைய ஸ்பை மூலம் அவளுக்கு செய்தி வந்தது இராவணன் இதே ஊரில் அவன் கட்டிய வீட்டில் தான் இருக்கிறான் என்றதும் சிறிதும் தாமதிக்காமல் டிரைவரை கூட அழைக்காமல் வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி வந்து விட்டாள், இருவரையும் ஒரு வழி பண்ண…
அதுவும் முக்கியமாக ராவணன் இல்லை என்றால் இவளுக்கு வசதி. ஏனென்றால் சித்ரா பத்தி இவளுக்கு தெரியுமே.. அது ஒரு புள்ளப்பூச்சி. ஆனாலும் அவளுக்கு இருக்கு எப்படி என் புருஷன் கையால் தாலி வாங்கலாம் அவள் என்று பொறுமிக் கொண்டே தான் காரை ஓட்டினாள்.
சித்ரா நல்லவள். அக்கம் கணவனை ஏற்க மாட்டாள். அதனால் திரும்பவும் தன் தாலியை ஆயுதமாக வைத்து அவள் தாலியை பறித்து விடலாம் என்று திட்டம் போட்டு தான் தாத்ரி அங்கு சென்றது.
அவளின் திட்டத்தை எல்லாம் ஏற்கனவே கணித்து வைத்திருந்த இராவணனும் அவளை அனுமதிக்கவே கூடாது என்று சொல்லி இருந்தான். அவளை உள்ளேயே விடவில்லை செக்யூரிட்டிகள்.
அவளோ பிடிவாதமாக உள்ளே செல்வேன் என்று காச்சு மூச்சு என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது இராவணன் கார் அங்கே வர… செக்யூரிட்டிகள் சல்யூட் அடித்து ஒதுங்கி நின்றனர்.
"என்ன இங்க சத்தம்?" என்று அவன் எதுவுமே தெரியாதவன் போல கேட்டான்.
"சார்.. இவங்க.." என்று அவர்கள் தாத்ரியை கைகாட்டினர்.
அப்போதுதான் அவளை பார்ப்பது போல "ஓ தாத்ரி தேவிகாரு? என்ன என்னை தேடி வந்திருக்கீங்க போல.. ஏன் அவங்கள இங்கேயே நிப்பாட்டுனீங்க.. ஷி இஸ் மை கெஸ்ட்! உள்ளே அனுப்ப வேண்டாமா? சரி சரி வா நானே அழைத்து போகிறேன்" எ
ன்று அவளை வன்ம புன்னகையோடு உள்ளே அழைத்து சென்றான்.
தொடரும்…
