அத்தியாயம்: 28
ஏற்கனவே பயங்கர அதிர்ச்சியில் இருந்தவள் அதன் பின் முதல் முறை ஹெலிகாப்டர் பயணம் அவளை நிலை குலைய செய்ய அப்படியே மயங்கி இருந்தாள்.
ஹெலிகாப்டரில் மயங்கியவளை கையில் ஏந்திக் கொண்டு தான் வந்தான் இராவணன் அவனின் புது வீட்டுக்குள்.
"நம்மூர் முறைப்படி கல்யாணம் பண்ணியாச்சு.. ஆனா ஃபர்ஸ்ட் நைட் ஃபாரின் முறைப்படி தான் போல? அவனுங்க தான் இப்படி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பெட்ரூம் வரை தூக்கி போவானுங்க.. ஆனா அங்க பொண்டாட்டி முழிச்சிட்டு இருப்பா" என்று அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்பதை கண்டுக் கொள்ளாமல் அவன் பேசியபடி தூக்கி சென்றான்.
மறுநாள் காலை கண்களை விழிக்கவே அவ்வளவு கடினமாக இருந்தது சித்ராவுக்கு. "இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் தான் என்ன?" என்று மனம் இன்னும் கெஞ்சியது.
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு" என்று அவளுக்கு இப்போது கட்டளையிட, "ம்ம் ஓகே" என்றவள்
புரண்டு படுக்க முயன்றாள். முடியாமல் இருக்க, சட்டென்று விழித்தவளின் கண்களில் அந்த அறையின் அலங்கார விளக்கு பட,
அரைகுறையாக கண்கள் விழித்தவள், நன்றாக விழித்து பார்த்தாள். நுரை மெத்தையில் உடல் அமுங்க படுத்திருந்தாள் அவள்.
நன்றாக கண்களை சுழற்றி பார்த்ததும் தான் நேற்று நடந்த ஞாபகங்கள் ஒவ்வொன்றாக அவள் கண் முன்னே உலா வர, தலை கொஞ்சம் பாரமாக இருந்தது. யாரோ நாலு பேர் அடித்து போட்டது போல உடலெல்லாம் வலி. நெற்றியை கையால் பற்றிக்கொண்டு எழுந்தவளின் உடலை மூடியிருந்த போர்வை விரிப்பு நழுவ.. அதில் தன்னை கண்டு திடுக்கிட்டாள்.
வேகமாக நழுவிய போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டவளுக்கு கூடவே தான் இப்பொழுது இருக்கும் இந்நிலை வேறு அவளின் மனதில் தேவையற்ற நினைவுகளை நினைவூட்ட நடுங்கிப்போனாள்.
என்ன நடந்திருக்கும்? அறியாத அறியா பெண் இல்லையே! அதிலும் அவளின் வெற்று உடம்பும்.. இடையினை அழுத்தமாக கட்டிக் கொண்டு உறங்கும் இராவணனும்.. நேற்றைய இரவை தெள்ளத் தெளிவாக உணர்த்தி இருக்க.. "ஆண்டவா… ராமா.." வாய் விட்டுப் கதறினாள்.
"உஷ்.. இராவணன் இருக்கும் இடத்தில் ராமனை பற்றி பேசாத அம்மாயி.." என்றவன் இன்னும் அவனது முகத்தை அழுத்தமாக அவளது வயிற்றினில் புதைத்துக் கொண்டு உறங்கினான்.
அதில் அவள் தவித்து போக.. அவளில் இருந்து அவனை தள்ளினாள். ம்ம் ஒரு இன்ச் கூட அவளிலிருந்து அவனைப் பிரிக்க முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இராவணன்.
முயன்று பார்த்து முடியாமல் பரந்த விரிந்த மைதானமாய் இருந்த அவனது முதுகில் ஒரு கடி வைத்தாள் சித்ரா.
அதை ஏதோ கொசு கடித்தது போல தட்டி விட்டவன், இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொள்ள.. அவன் மூச்சுக்காற்று பயணித்த இடங்கள் அவளுக்கு தீயாய் தகித்தது.
"ச்சீ.. இப்படி புடிக்காத பெண்ணு கிட்ட அத்து மீறி நடந்துக்கிறியே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? உன் பலத்தை எல்லாம் பலவீனமான பொண்ணு கிட்ட தான் காட்டுவீங்களா? ஓஓ.. அப்பதான் நீங்க எல்லாம் ஆம்பளைன்னு வெளியில சொல்லிக்க முடியும் இல்ல. இப்படி ஒரே நாளில் என் வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டியேடா.. அரக்கா.. ராட்ஷசா.." என்று அதுவரை உள்ளுக்குள் அமுங்கிக் கொண்டிருந்த கோபம் எல்லாம் வெளியில் வர வெறி கொண்டவள் போல கத்தினாள் சித்ரா.
சுண்டு விரலால் காதல் குடைந்து அவள் அருகில் பெருமாளை போல பள்ளிகொண்டவன், அவளை பார்த்து மெலிதாக அவள் கன்னம் வருடி "அழிச்சிட்டேனா? யார் வாழ்க்கையை? உன் வாழ்க்கைய வா?" என்று மல்லாக்க படுத்து ஏதோ நகைச்சுவை கேட்டது போல சிரித்தான்.
"யாரு வாழ்க்கையை.. யார் அழிச்சா? அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து என் வாழ்க்கையில் தான் விளையாடி இருக்கீங்க.. தெரியுமா? அதை புட்டு புட்டு வச்சேன்னா உன் குடும்பமே நாண்டுக்கிட்டு செத்துடுவாங்க" என்று ஆத்திரத்தோடு கேட்டபடி மெத்தையில் அவளது இருபுறமும் கைகளால் சிறைப் பிடித்தான்.
அவளோ "என்ன புதுசு புதுசா ஏதோ கதை சொல்ற?" என்ற திக்கி திணறி கேட்க…
"கதையல்ல அம்மாயி.. நிஜம்!"
தனது பேச்சால் மட்டுமல்ல மூச்சுக்காற்றாலும் அவளைச் சுட்டெரித்தான் இராவணன்.
அவனின் இவ்வளவு நெருக்கம் அவளை ஏதோ செய்ய.. நழுவிவிட்டிருந்த போர்வையை
கழுத்து வரை இழுத்துப் பிடித்து, ஏதோ அது அவளை அவனிடம் இருந்து காக்கும் ஆபத்பாந்தவனை போல இறுக்கமாக பற்றிக் கொள்ள, அவனோ அவளையும் அந்த போர்வையையும் பார்த்தான் ஒரு மாதிரியாக.. பின் கோணலாகச் சிரித்தவனின் முகம் அவளை நெருங்கி கழுத்து வளைவில் முகம் புதைத்து "யட்சிணி… யட்சிணி" என்று புலம்பினான். அவள் கழுத்து மச்சத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
அவள் கண்கள் கலங்க அவனை பார்க்க… "இனி இது தான் சுவாசதம்.. பழகிக்கோ அம்மாயி.." என்றவன் மீண்டும் அவள் இதழ்களை கொய்து விட்டு குளியலறை நோக்கி சென்றான்.
சித்ராவால் அவன் செய்ததை கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை. இந்நேரம் வேறு ஒருத்தனுக்கு மனைவியாக வேண்டிவளை தன் மனைவியாக்கி.. கட்டாய தாலி கட்டி.. உற்றார் உறவினர் பார்க்க அவளை தூக்கி வந்து.. அதுவும் மயக்கத்தில் இருப்பவளிடம் அத்துமீறி.. அதையும் இனி தொடர்ந்து நடக்கும் பழகிக்கொள்.. என்று கூறி செல்பவனை அவளுக்கு சக்தி இருந்தால் கண்களாலேயே எரித்து விடுவாள் அந்த அளவுக்கு கோபம் கனன்றது.
"முதல்ல இங்கிருந்து தப்பிக்கணும்? ஆனா இது என்ன இடம்?" என்று யோசித்தவள் முதலில் நம்மை ஒழுங்கு படுத்திக் கொள்வோம் என்று அவள் ஆடைகளை தேட…
அவையோ அவளிடம் தீவிரமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது.
உண்மையில் அந்த உடைகள் எல்லாம் அங்கே இருந்தால் அல்லவா? அந்த உடை என்னதான் இவனது பணத்தில் வாங்கி இருந்தாலும், தேர்ந்தெடுத்தது என்னவோ சிவப்பிரசாத் என்று நேற்றே அதை எல்லாம் தூக்கி கொளுத்தி விட்டான் இராவணன்.
குளித்துவிட்டு இடையில் இறுக்கிய டவலோடு வந்தவனை தான் பார்த்தாள். ஓங்கு தாங்கான உயரமும், உருண்டு திரண்ட புஜங்களும், விரிந்து பரந்த மார்பும் அதில் மண்டிய கருகரு முடிகளும் குளித்ததில் அவற்றில் எல்லாம் நீர் சொட்ட சொட்ட வந்து நின்றவனை.. மற்றவர்கள் பார்வைக்கு கந்தர்வனாய் காட்சியளித்திருக்கலாம்! ஆனால் இவளுக்கு அரக்கனாய் தான் தெரிந்தான்.
"என்ன அம்மாயி பாவாவை உத்து உத்து பாக்குற? இப்போ பாவாவுக்கு வேற வேலை இருக்கே.." என்று சிரித்துக் கொண்டே அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் வாட்ரோப்பில் இருந்து உடைகளை எடுத்து அவன் அணிந்தான்.
சித்ரா முகத்தை திருப்பிக் கொண்டாள். அங்கிருந்த கண்ணாடி வழியே அவளை பார்த்தவன் சத்தமாக சிரித்துக் கொண்டே உடைமாற்றினான்.
"நீ குளிக்கலையா?" என்று கேட்க "இப்படியே எப்படி போறது.. என் டிரஸ் எல்லாம் காணும்" என்றாள் அவள் கலக்கத்தோடு.
"என்னதான் இந்தக் கல்யாணம் மொத்தமும் என் செலவுல நடந்திருந்தாலும் அந்த புடவையை தேர்ந்தெடுத்தது அவன்.. எனக்கு அது புடிக்கல! அதான் அதை எரிச்சிட்டேன். என் பொண்டாட்டிக்கு எடுத்தது எல்லாம் நானா தான் இருக்கணும். உனக்கு தேவையானதெல்லாம் இங்கே வாங்கி வச்சிருக்கேன்.. போய் குளிச்சிட்டு வா அம்மாயி.." என்று அவன் போர்த்தியிருந்த போர்வையை அவன் இழுக்க…
அவளோ ஐயோ… என்று இறுக போர்வையை பற்றிக் கொண்டாள் உடல் விரைக்க.. ஏளனச்சிரிப்போடு அவள் காதருகே குனிந்தவன் “ஆமா.. யார் கிட்ட இருந்து உன்னை காப்பாத்திக்க நினைக்கிற அம்மாயி… புதுசா நான் பார்க்காத ஏதாவது அங்க இருக்கா? என் இதழ் படாத இடம் தான் இருக்கா? போய் கண்ணாடியில பாரு…” என்றதும் அதிர்ச்சியில் அவனை பார்த்தவளின் கண்கள் கலங்கி சூ
டாக ஒரு துளி கண்ணீர் விழுந்து அவனது புறங்கையில்!
தொடரும்…
