அத்தியாயம்: 33
"குளுகுளுன்னு இருந்துச்சா? இருக்கணுமே.. உன்னோட புருஷன் உன் தங்கச்சியோட இருப்பதை பார்த்து அப்படியே கோபம் உச்சி மண்டைக்கு வந்து என்னை இழுத்து போட்டுட்டு அவளை கன்னம் கன்னமா அறையனும்னு தோணியிருக்குமே?" என்று அசட்டையாக அவளை பார்த்து கூறினான் இராவணன்.
தாத்ரியின் மனதினை படித்தவன் போல அப்படியே சொல்ல.. அவளுக்கோ தொண்டை வறண்டது.
இவனை பார்க்கும் முன் என்னென்னமோ கேள்விகள் எல்லாம் கேட்ட வேண்டும் என்று வரும் வழி எல்லாம் யோசித்தது, எதுவும் இப்பொழுது அவளது மனதில் இல்லவே இல்லை.
எப்பொழுதும் போல இப்பொழுதும் அவளின் எண்ணங்களை படித்து அவளை தன் கணிப்பிலேயே வைத்திருந்தான். இவனைத் தான் யாராலும் கணிக்க முடியாமல் இருந்தது.
இனி இவனிடம் கோபம் எடுப்படாது. சத்தமும் சரி படாது. என்று எண்ணியவள் அழுகைக்குத் தயாரானாள். நிமிடத்தில் கண்களில் கண்ணீரை நிறைத்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
முன்னே என்றால் யாருக்கும் இரக்கம் பார்க்காத இராவணன் கூட இவளின் கண்ணீருக்கு இரக்கம் பார்த்திருப்பான். ஆனால் இன்று அவையெல்லாம் அவளின் கைதேர்ந்த நடிப்பாக தெரிய.. அவன் எழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த காபி கோப்பை தட்டி விட்டுயிருந்தான்.
அவள் கையிலிருந்த சூடான காஃபி அவள் மீது தெறித்து சிதற.. வலியில் முகம் சுழித்தவளை அலட்சியமாக பார்த்தான்.
"ரொம்ப வலிக்குதோ? இப்படித்தான் எனக்கும் வலிச்சது" என்றவன் முகமோ அத்தனை குரூரமாக இருந்தது. ஆனால் அவள் எதை சொல்கிறான் என்று புரியாமல் பார்க்கும் முன் அவரது பாவத்தை மாற்றி விட்டான்.
"இங்க பாரு.. இது என் வீடு இந்த வீடுக்கு எஜமானி என் பொண்டாட்டி சித்ரலேகா" என்று அவன் கூறி முடிக்கும் முன்…
"அப்போ நான் யாரு?" என்று அதிகாரமாக கேட்டாள் தாத்ரி.
"நீ யாரா?" என்று இரு கைகளாலும் இடுப்பை பிடித்துக் கொண்டு பின்னால் சாய்ந்து சிரித்தான்.ன அத்தனை சத்தமாக.. அந்த பெரிய மாளிகையே அதிர்ந்தது அவனின் சிரிப்பு சத்தத்தில். ஆங்காங்கே வேலை செய்த வேலைக்காரர்கள் எல்லாம் வந்து நின்று பார்க்க..
அவ்வளவு அவமானமாக இருந்தது தாத்ரிக்கு.
அவனின் ஒற்றை சொடுக்கில் அனைவரும் மாயமாய் மறைந்து போயினர்.
அதற்குள் கமலா என்று அவன் அழைக்க வந்திருந்த ஒரு பெண் வேலையாளை பார்த்து "மேடமை வர சொல்லு" என்றான் தெலுங்கில்.
அதேபோல அந்த பணியாள் சென்று சொன்னவுடன் "இப்போ வரேன்" என்றவள் தான் உடுத்திருந்து காட்டன் சேலையை பார்த்துவிட்டு வேறு புடவை உடுத்த அவன் சொன்ன வாட்ரோப்பின் கதவை திறக்க.. அங்கு வகை வகையாக பலவித வேலைபாடுகளோடு விலை மதிப்பு மிக்க புடவைகள் இருந்தன.
ஆனால் அதில் அவள் மனம் செல்லவே இல்லை. சாதாரணமாக ஒரு புடவை எடுத்துக் கொண்டு கட்டிக் கொண்டு வந்தாள். கழுத்தில் காதில் எந்த நகைகளும் இல்லை. அவன் அணிவித்த தாலி மட்டுமே அணிந்து சித்திரப்பாவை என சோகமே வடிவாக மெல்ல நடந்து வந்தாள் சித்ரலேகா.
இதே வேற ஒரு தருத்தில் தார்தி இங்கே வந்திருந்தால் "தேவி அக்கா.." என்று அலறலோடு அவளை அணைத்துக் கொண்டு கதறி இருப்பாள் சித்ரா.
ஆனால் இன்று அவள் வந்தது.. அவள் பார்த்தது.. அனைத்துமே ஒருவித அசுசையை கொடுத்தது சித்ராவுக்கு. அதனால் யாரையும் பார்க்காமல் நிலத்தை மட்டுமே பார்த்து அமைதியாக நின்று இருந்தாள்.
"அம்மாயி உங்க அக்கா வந்திருக்காங்க.. தாத்ரி தேவி.. பாக்கலையா? நீ பேசலையா?" என்று அத்தனை நக்கல் இராவணனின் குரலில்.
மெல்ல நிமிர்ந்து இராவணனை பார்க்காமல் தாத்ரியை பார்த்தவளின் கண்களில் அத்தனை இறைஞ்சுதல். எதிரே நின்ற தாத்ரி தெரியாத அளவு கண்களில் கண்ணீர் மறைக்க.. மீண்டும் குனிந்து கொண்டவளின் கண்ணீர் முத்துக்கள் நிலத்தை முத்தமிட்டன.
"ஆமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்ன சொன்ன? என் பொண்டாட்டியா?" என்று தாத்ரி அருகில் நெருங்கியவன் அவளை சுற்றி வந்து கழுத்தை பார்க்க.. அதில் அவன் கட்டிய தாலியோ.. இல்லை! அதற்குப்பின் அவர்கள் முறையில் நான் குழல் போட்டு வரலட்சுமி போட்டுவிட்டு அந்த செயின் எதுவுமே இல்லை.
நேற்று நடந்த அத்தனை களேப்புரத்திலும் காலை எழுந்து குளித்து கிளம்பி வந்தவள் தன் உடைக்கு பொருத்தமாக கழுத்திலும் காதிலும் வைரங்களை அணிந்து கொண்டுதான் வந்திருந்தாள். காலிலும் மெட்டி இல்லை. வகுட்டில் குங்குமம் இல்லை. நெற்றியில் குங்குமம் இல்லை. ஏன் போட்டு கூட இல்லாமல் அதி நாகரீகமாக நின்றிருந்தாள் தாத்ரி.
"உன்னை யாராவது பார்த்தா கல்யாணம் ஆனா பொண்ணுனு சொல்லுவாங்களா? அதுக்கான எந்த அறிகுறியாது உன்னிடம் இருக்கா? நான் வாங்கி கொடுத்த வைரம் நெக்லஸ் வேண்டும். வைரத்தோடு வைர பிரேஸ்லெட் இதெல்லாம் போட்டு இருக்க.. ஆனா நான் கட்டுன தாலி எங்க காணோம்?" என்றதும் தாத்ரி திருதிருத்தாள்.
"சரி தாலி தான் போட இஷ்டம் இல்ல.. நெத்தியில குங்குமம்.. ம்ஹூம்! நீ கல்யாணம் ஆன பொண்ணுக்கான.. சுமங்கலிக்கான குங்குமம் அதுவும் இல்லை! எதுவுமே இல்லாம.. நீ தான் என் பொண்டாட்டினா.. எப்படி தாத்ரி தேவி?" என்று எள்ளலாக கேட்க அவளுக்கு சித்ராவின் முன் இவ்வாறு கேட்டது அவமான பிடுங்கி தின்றது.
எட்ட நின்று அவளை தொடாமல் ஒவ்வொன்னத்தையும் சுட்டிக்காட்டி கேட்க கேட்க கேட்க.. என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டே பின்று இருந்தாள்.
இவனை குற்றவாளியாக்கி அத்தனை கேள்விகள் கேட்க வந்தவள், இப்போது இவளையே குற்றவாளியாக்கி விட்டான் இராவணன். அவளுக்கு இப்போது இராவணனிடம் என்ன கேட்பது என்றே தெரியவில்லை.
அதே வேக நடையோடு சித்ராவை நெருங்கியவன் நிலம் பார்த்து இருந்த அவள் முகத்தினை தாடையில் ஒரு விரல் கொடுத்து நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.
நன்றாக தள்ளி வந்து தாத்ரியை அழைத்து இவளை காட்டினான் "உனக்கு வாங்கி கொடுத்ததை விட கூடவே வாங்கி கொடுத்திருக்கேன். ஆனா பாரு கழுத்து காது எதுவும்.. எதுவுமே அவ போடல.. ஆனா நான் கட்டிய தாலி.." என்றவன் அவள் பின்னால் வந்து நின்று அவள் புடவையினுள் போட்டிருந்த தாலி எடுத்து வெளியில் போட்டான்.
"இப்ப தெரியுதா நான் யாருக்கு புருஷனு" என்றவன் சித்ராவை பின்னால் இருந்து இடையோடு அணைத்தபடி தாத்ரியை பார்த்து கேட்க.. இருவரின் நெருக்கமும் அவர்களின் ஜோடி பொருத்தமும் இவளுக்கு எண்ணெய் சட்டியில் இறங்கிய தகிப்பைக் கொடுத்தது.
அதே சமயம் சித்ராவின் பொன்மஞ்சள் தேகத்தில் கழுத்தில் சற்று முன்னர் அவன் கொடுத்த காதல் காயங்கள் அப்பட்டமாய் தெரிய.. மெல்ல அவர்களை நோக்கி வந்தவள் இராவணனை பார்க்காமல் சித்ராவை பார்த்து "அக்கா மடியிலேயே கைவைச்சிட்டில்ல.. என் வாழ்க்கை அழிச்சுட்டல.. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட" என்றவள் திரும்பி இராவணனை பார்த்து "தாலி இல்லைனாலும் நான்தான் உங்கள் பொண்டாட்டி! சட்டப்படியான முதல் பொண்டாட்டி நான் மட்டும்தான்! இதற்குப் பின் நீங்கள் எத்தனை கூ***" என்று ஆரம்பித்தவள் "இவளை மாதிரி சேர்த்துக்கிட்டாலும் அவளுக்கு எல்லாம் பொண்டாட்டி அந்தஸ்து கிடைக்கவே கிடைக்காது" என்று இராவணனுக்கு குறையாத அதிகா
ரத்தில் மொழிந்தவள் வேகமாக வெளியே சென்று விட்டாள்.
தொடரும்…
