15
கதிர்காமனுக்கு முன் தளபதியாய் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் பார்த்திவ்.
பார்த்திவ் “யாரு ஹோட்டல் மேனேஜர்?” என்று விசாரிக்க..
‘டிப் டாப்பாக இருக்கிறார்களே.. பௌன்ஸரோடு எல்லாம் வந்திருக்கிறார்களே… என்னை வேறு விசாரிக்கிறார்களே.. கண்டிப்பாக பெரிய இடமாகத் தான் இருக்கும்.. ஏதாவது ஃபங்ஷனுக்கு ஃபுல்லா புக் பண்ண வந்திருப்பாங்க இன்னைக்கு ஜாக்பாட் தான்’ என்று வாலன்டியராக வந்து மாட்டிக் கொண்டான் அந்த மேனேஜர்.
“நான் தான் சார்” என்று அவனுக்கு இருக்கும் 28 பல்லையும் காட்டியபடி..
“ஓஹ் க்ரேட்..! எக்ஸ்க்யூஸ் மீ மேனேஜர்.. கொஞ்ச நேரத்திற்கு முன் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்க்கணும். அதை காட்டுறீங்களா” என்றான் பார்த்திவ் அதிகாரமாக..!
அவனோ பார்த்திவ் மற்றும் அவன் பின்னால் வந்த கதிர்காமன் பௌன்ஸர்கள் அனைவரையும் பார்த்தவன் இதுவரை அவர்களை பெரிய பார்ட்டி என்று நினைத்திருக்க.. இப்பொழுது அவர்கள் வந்திருக்கும் நோக்கம் வேறவாக இருக்கும் என்று அதிர்ந்தவன்.. பின் சுதாரித்து,
“சார் அதெல்லாம் ப்ராப்பர் பெர்மிஷன் இல்லாம காட்ட முடியாது. காட்டவும் கூடாது. நீங்க எங்க ஹெட் கிட்ட லெட்டர் எழுதி வாங்கிட்டு வாங்க அதுக்கப்புறம் பார்க்கலாம்” என்றான் அலட்சியமாக..
உடனே “பார்த்திவ்..!” என்று கதிர்காமன் சொடுக்கிட வந்திருந்த பவுன்சர்கள் அந்த மேனேஜர் முகத்திலேயே ரெண்டு காட்டு காட்ட..
“சார்.. வேணாம். வேணாம்.. பர்மிஷன் எல்லாம் வாங்க வேணாம். நானே.. நானே.. காட்டுறேன். வாங்க சார் காட்டுறேன்” என்று நொடியில் பிரசன்னமாகும் ஜீனி பூதம் போல அவனும் மாறி, செக்யூரிட்டி அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அந்த அறைக்குள் சென்றதும் அங்கிருந்த ஆப்ரேட்டரை பார்த்த பார்த்திவ், தனக்கு பின்னால் இருந்த பவுன்சரை பார்த்து சைகை செய்ய.. அவர்கள் இருவரும் அந்த ஆப்ரேட்டரை தூக்கி பின்னால் நிறுத்தினர்.
இப்போது அந்த இடத்தில் அமர்ந்து பார்த்திவ், “சார் எத்தனை மணியிலிருந்து ப்ளே பண்ண?” என்று கதிர்காமனை பார்த்து கேட்க..
கதிர்காமனோ திரும்பி ரதியை பார்த்தான்.
“எனக்கு இன்ஸ்பெக்டர் ஃபோன் பண்ணது 9 ஓ கிளாக்? அதுக்கு ஒரு ஒன் ஹவருக்கு முன்னாடி இருந்து ப்ளே பண்ணுங்க.” என்றாள்.
பார்த்திவ் எவ்வளவு தேடியும் அதெல்லாம் அவனுக்கு கிடைக்கவே இல்லை. அருகில் இருந்த மேனேஜரை அவன் முறைத்துப் பார்க்க..
“சார் அது வந்து இழுக்க… அது..” என்று அந்த மேனேஜர் இழுக்க
“என்னடா வந்து போய்னு இழுத்துட்டு இருக்க? இன்னும் ரெண்டு காட்டு காட்ட சொல்லவா?” என்று பௌன்ஸர் பக்கம் பார்த்திவ் திரும்பி பார்த்தான்.
மேனேஜரோ பதறி “இல்ல சார். வேணாம் வேணாம்..! இதுவரை காட்டுனதே போதும். அந்த ஃபுட்டேஜ் மட்டும் டெலீட் ஆயிடுச்சு” என்றான் திக்கி திணறி..
“ஏய் என்ன கதை விடுறியா மேன்? பர்டிகுலரா அந்த ஃபுட்டேஜ் மட்டும் எப்படி டெலீட் ஆகும்?” என்று கதிர்காமன் கர்ஜிக்க..
“இல்ல சார்.. உண்மைய தான் சொல்றேன்.” என்று மேனேஜர் பம்மினான்.
“அது எப்படி அதுவா டெலீட் ஆகும்? நீ தான் டெலீட் பண்ணியிருக்க? அப்படிதானே” கதிர்காமன் தன் உச்சக்கட்ட குரலில் அதட்ட.. அவனும் ஆமாம் என்று ஒத்துக் கொண்டான்.
“எதுக்காக டெலீட் பண்ண?” பாரத்திவ் அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டு கேட்க..
“போலீஸ் தான் டெலீட் பண்ண சொன்னாங்க?” என்றான் பரிதாபமாக மூக்கில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே..
“போலீஸா எதுக்கு?” என்றான் கதிர்காமன்.அந்த இன்ஸ்பெக்டர் அவனிடம் நடந்துக் கொண்ட முறையில் இருந்து எதுவோ சரி இல்லை இவனிடம் என்று புரிந்து இருந்தான் கதிர்காமன்.
அதை மெய்ப்பிப்பது போல இந்த மேனேஜரும் இன்ஸ்பெக்டர் தான் செய்ய சொன்னார் என்று கூற.. அவனுக்கு அங்கெங்க இருந்த புள்ளிகளை சேர்த்தவுடன் வழக்கு புரிந்து விட்டது.
“அது என்னனு தெரியல? இன்ஸ்பெக்டர் கிட்ட தான் சார் கேட்கணும்” என்றான் இன்னும் மூக்கில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைத்த படி..
அங்கு நின்றுக் கொண்டிருந்த ஆப்ரேட்டரிடம் “அதை ரெக்கவர் பண்ண முடியுமா?” என்று ரதி பதற்றத்தோடு கேட்க..
அவன் ஹேட்டல் மேனேஜரை பார்த்தான். மேனேஜரோ பதறி விட்டான். “இந்த பையன் ஏன் என்னை பார்க்குறான்? ஏற்கனவே மூக்குல இருந்து ரத்தம் வருது. அடுத்து என்ன செய்வாங்களோ?” என்று நடுங்கியபடி நின்று இருந்தான்.
“நீ உண்மைய சொல்லலேனா உன் மேனேஜர் உயிர் ஊசலாடும்.. உன்னுயிர் உன் வசம் இருக்காது.. நீங்க எப்படி டெலீட் பண்ணீங்களோ ஃபுட்டேஜை. அதே மாதிரி நாங்க வந்து போனதுக்கான ஃபுட்டேஜையும் நாங்க டெலீட் பண்ணிடுவோம்” என்று கதிர்காமனின் கண் அசைவில் பார்த்திவ் அசால்ட்டாக கூற…
மேனேஜரோ பயந்து “டேய் சொல்லி தொலைடா” என்றான்..
அந்த ஆப்ரேட்டர் “பண்ணலாம் சார்.” என்றான்.
“அப்போ வேகமா.. பண்ணி கொடு..” என்று கதிர்காமன் கட்டளை இட.
“சரி சார்.” சொல்லி அதற்கான சாஃப்ட்வேர் டவுன்லோட் செய்து அந்த டெலீட் ஆன வீடியோவை மீண்டும் எடுத்து பிறகு ப்ளே செய்து காட்டினான்.
அந்த வீடியோ ஆரம்பித்த 15நிமிடத்தில் அங்கிருந்த வேறொரு கும்பல் தான் போதை பொருளை பயன்படுத்தி விட்டு அங்கிருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்..
அந்த பெண்கள் போலீஸூக்கு கால் செய்து விட்டு போலீஸ் வந்ததும் கும்பலை கையை காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
அதன் பின் அந்த போலீஸ் மேனேஜரிடம் பேசியிருக்கிறான். அந்த கும்பலுக்கு பதிலாக, நண்பனின் பர்த்டே பார்ட்டிக்கு என்று வந்த இவர்களை அரெஸ்ட் செய்திருக்கிறான் அந்த பீடா வாயன்.
“ப்ளடி ராஸ்கல்..! நான் கெஸ் பண்ணது தான்” என்றான் தாடையை தடவியப்படியே கதிர்காமன்.
மேனேஜரை பார்த்து “டேய் அந்த போலீஸ்கிட்ட என்ன பேசின நீ?”
“இல்ல சார் அது வந்து.. வந்து..”
“இப்ப நீ உண்மைய சொல்லலேனா அடுத்து உன் மூக்கிலிருந்து சத்தம் வராது. ஏன்னா தல அங்கு இருந்தா தானே? தலை சிதறிடும்” என்று பார்த்திவ்.. மிரட்ட ஒரு பவுன்சர் வந்து அவன் தலையில் பிஸ்டலை வைக்க..
அவன் உடனே பதறி கதிர்காமனின் காலில் விழுந்து, “சார் சார் உண்மைய சொல்லிடுறேன்.. அந்த பசங்க எல்லாம் பெரிய இடத்து பசங்க சார். இந்த ஹோட்டலோட ரெகுலர் கஸ்டமர்ஸ். அதுல ஒரு பையனோட அப்பா இந்த ஹோட்டல் ஒன் ஆஃப் த பார்ட்னர். அதான் அவங்க பேரன்ட்ஸூக்கு கால் பண்ணி சொன்னேன். அவங்க தான் இந்த இன்பெக்டர்கிட்ட டீல் பேசினாங்க. அவங்களுக்கு பதிலாக வேற பசங்கள அரெஸ்ட் பண்ணார் சார். இதுக்கும் எனக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்ல சார்.. என்னைய விட்டுருங்க சார். குடும்பஸ்தன் சார்.”
“சரி போய் தொலை.” என அவனை விட்டுவிட்டு ரெக்கவர் பண்ண வீடியோவை மொபைலில் காபி பண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கதிர்காமன் தன் படைகளோடு..
காவல் நிலையத்திலும் தன் படையோடு உள்ளே வந்த கதிர்காமனை இப்போது சற்றே யோசனை கலந்த பயத்தோடு பார்த்தான் இன்ஸ்பெக்டர்.
“வார்ரே வாவ் இன்ஸ்பெக்டர்..! உங்க தொழில் பக்தியை கண்டு அப்படியே எனக்கு எல்லாம் மெய் சிலிர்க்குது. பசங்கள மாத்தி அரெஸ்ட் பண்ணிட்டு வந்திட்டு, இதுல உனக்கு அதிகாரம் வேற.. ம்ம்ம்..” என்று அவன் முன் இருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்து கதிர்காமனை சற்று எரிச்சலோடு பார்த்தான் அந்த பீடா வாய் இன்ஸ்பெக்டர்.
“சார் அதலாம் இல்ல.. நாங்க ஸ்பாட்ல வச்சு தான் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்.. இவனுங்க தான் போதைல அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டது” என்றான் அப்பவும் அந்த இன்ஸ்.
“அப்படியா.. நீங்க ஹோட்டல்ல பண்ணின கூத்தை கொஞ்சம் பாருங்க.. நாங்க ஏற்கனவே இந்த வீடியோவை கமிஷனருக்கு அனுப்பிட்டோம்” என்று நக்கல் தொனியில் அவன் முன் அவர்களிடம் இருந்த அந்த வீடியோவை பார்த்திவ் போட்டு காட்ட, அந்த இன்ஸ்பெக்டர் முகம் பயத்தில் வெளிறி போனது..
“என்ன இன்ஸ்.. உங்க ஸ்பாட் அரெஸ்ட் படு பயங்கரமாக இருக்கே.. டீலிங் எல்லாம் பக்காவா ?” கிண்டலாக கதிர்காமன் கேட்க.. அவனோ அந்த குளிரிலும் நெற்றியில் வழிந்த வியர்வையை தன் புறங்கையால் துடைத்துக் கொண்டான்.
தொடரும்..
