12
தன் தம்பியை வைத்து தன்னை அச்சுறுத்தும் இந்த வழக்கறிஞனை தன்னால் முடிந்த மட்டும் கண்களை கனல் கங்குகளாக வைத்து எரித்தாள்.
“என்ன பிளாக்மெயில் பண்றீங்களா மிஸ்டர் கதிர்காமன்?” என்று நிமிர்ந்து கேட்டவளை பார்த்து தலையை சாய்த்து சிரித்தவன் “யூ நாட் வொர்த் ஃபார் தட். மோர்ஓவர் அதற்கு ஒன்னும் எனக்கு அவசியமே இல்லை..!” என்றான் அலட்சியமாக தோளை குலுக்கி..
“உன் பேர்ல ரதி இருக்கறதுனால நீ அந்த தேவலோகத்தில் இருந்து வந்து குதிச்ச ரதி இல்லை.. அன்னைக்கு நான் ரொம்ப உன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேன். அது ஒரு மாதிரி சின்ன ஏமாற்றமா என் மனசுல என்னை குத்திட்டே இருக்கு.. அந்த புண் பட்ட மனசை கொஞ்சம் மாற்றலாம்னு தான் இந்த ஆஃபர் உனக்கு நான் கொடுத்தேன். இஃப் யூ விஷ் ஆர்.." என்று அறை வாசல் கதவை நோக்கி கையை நீட்டினான்.
“என்னால நீங்க சொல்ற அமௌன்ட் ஸ்பெண்ட் பண்ணி இந்த கேஸை நடத்த முடியாது. அட் த சேம் டைம், இது ஜஸ்ட் ஒரு ப்ரோபர்ட்டி. இதுக்காக என் தன்மானத்தை.. மானத்தை உங்ககிட்ட அடகு வைக்க முடியாது. அம்மா எங்களோட இல்லாத போதும், உணர்வும் உயிருமாய் எங்க கூட அவங்க வாழ்ந்த இடம் எங்க வீடு. அதை மீட்கணும்னு என்னால் மட்டும் நான் கடைசி வரைக்கும் போராடுவேன். அதுக்காக இப்படி கீழ்த்தரமா இறங்க மாட்டேன். எங்க அம்மாவுக்குமே அது பிடிக்காது..” என்றவள் விறு விறுவென்று வெளியே சென்று விட…
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் யாரும் புரிந்துக் கொள்ள முடியாத ஒரு பாவம்.
“இன்ட்ரஸ்ட்டிங்..!” என்று தாடை தடவியவாறு நின்றவனின் இதழோரம் ஒரு கள்ளப் புன்னகை..!
ஒரு மெல்லிய தலையசைப்போடு கதிர்காமன் தன் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வந்த தோழியை கண்டு “என்னடி ஆச்சு? என்ன சொன்னாரு சார்?” என்று அக்கறையாக கேட்ட ரத்னாவிடம் விரக்திப் புன்னகையை சிந்தினாள் ரதி. அங்கே தான் பார்த்திவ்வும் இருந்தான்.
"பாஸ் என்ன சொன்னாரு சிஸ்டர்?” என்று கேட்டவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவளோ
‘நல்லா இருக்குடா உன் பாஸ் விஸ்வாசம்.. பொண்ண கூட்டி கொடுக்கிறான். இவன் பிஏவா இல்ல மாமாவா?’ என்று கண்களால் அவனை எரித்தாள் பாவை.
ஏனோ அதனை ரத்னா கண்டு பிடிக்கவில்லை. ஆனால் பார்த்திவ்வோ அவளிடம் ஏதோ சரியில்லை என்று கண்டு கொண்டான்.
‘பாஸ்.. ஏதாவது அவர் வேலைய இந்த பொண்ணு கிட்ட காட்டி இருப்பாரா? அப்படியெல்லாம் இருக்காது ப்ரொஃபஷனல்னு வந்துட்டா அவரு ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! ப்ரொஃபஷனையும் பர்சனலையும் அவர் குழப்பிக்க மாட்டார்’ என்று தனக்குள்ளே அவன் பேசிக்கொண்டு தலையாட்டி இவர்களை பார்த்தான்.
“நாங்க வந்து ரொம்ப டைம் ஆயிடுச்சு பார்த்திவ்” என்று தோழியின் கையை பிடித்துக் கொண்டு சென்ற ரதியை இவன் பார்க்க..
அவளோ வாய் நிறைய அண்ணா என்று அழைத்தவள், இப்பொழுது போகும்போது வெறும் தலையாட்டி விட்டுச் சென்றது அவன் மனதினுள் உதைத்தது.
'ஏதோ சரி இல்லை.. இந்த பொண்ணு உள்ள போன போது முகத்தில் இருந்த முகமலர்ச்சி இப்போ இல்ல.. பாஸ்.. கேஸ் எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா? இருக்காதே..! சொல்லி இருக்க மாட்டாரே..! கேஸில் ஏதாவது ஒரு ஓட்டையை கண்டுபிடிச்சு உள்ள நுழைஞ்சு எவ்வளவு பெரிய கேஸையும் முறியடிக்கிறவர் நம்ம பாஸ்… வேற என்னமோ நடந்து இருக்கு? ஆனா இதை அவர் கிட்ட கேட்கவும் முடியாது’ என்று யோசித்தபடி இவன் கதிர்காமனை நோக்கிச் சென்றான்.
ரதி ரத்னா இருவரும் ஆட்டோவில் தான் பயணித்துக் கொண்டிருந்தனர் வீட்டை நோக்கி..
“எப்பொழுதும் இந்த மாதிரி ஆட்டோ இல்லை கேப் புக் பண்றேன்” என்று ரத்னா கூறினால் கூட..
“இதுல காசு நிறைய செலவாகும். அவசியம் இல்ல.. வா வா ட்ரைன்ல போலாம்” என்று அந்த கூட்டத்தில் நசுங்கி பிதுங்கி தான் செல்வாள் ரதி.
ஆனால் இன்று அவளே “ஆட்டோ பிடி டி” என்றதும் விசித்திர ஏலியனாய் ரத்னாவின் கண்களுக்கு தெரிந்தாள் ரதி.
ஆனாலும் அவள் மனது சரியில்லை என்று புரிந்துக் கொண்டவள், அங்கே வைத்து எதுவும் கேட்கவில்லை.
நாசுக்காக கேட்டவளிடம் கூட “நான் போகும் போது சொல்றேன் ரத்னா” என்று பார்த்திவ்வை கண்களால் காட்டி கூறியதும் அமைதியாகிவிட்டாள் ரத்னா.
“என்ன ஆச்சு ரதி? கேஸ் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா? இல்ல இந்த கேஸ்ல ஜெயிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரா? எவ்வளவு பெரிய வக்கீல் அவரே ஜெயிக்க முடியாதுன்னு சொன்னா என்னடி பண்றது?” என்று ரதிக்கு மேல் இப்பொழுது தவியாய் தவித்தாள் ரத்னா.
அவளின் கையைப் பற்றிக் கொண்ட ரதியும் “அதெல்லாம் இல்லடி கேஸை படிச்சிட்டு ஜெயிக்கிறது கஷ்டம் தான். ஆனா ஜெயிச்சிடலாம்ன்னு சொல்லிட்டார்” என்றதும் ரத்னாவின் முகமும் புன்னகையில் பூரித்தது.
“நீ இவ்ளோ நாள் கஷ்டப்பட்டது வீண் போகல ரதி. அவர் கடைசியா உனக்கு கிடைச்சிருச்சுருக்க ட்ரம்ப் கார்ட். நான் நிறைய கோயிலுக்கு வேண்டுதல் வச்சிடுறேன்.. ஆனா எல்லாத்தையும் நீதான் செய்யணும் உன்னோட செலவுல” என்று பேசிய ரத்னாவை விரக்தியாக பார்த்தவள்,
“ஆனா நான் கேஸ் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றதும் திடுக்கிட்டு தோழியை பார்த்தாள் ரத்னா.
“என்னது நீ வேண்டாம்னு சொல்லிட்டியா? கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா? யாருமே இந்த கேஸ் எடுத்துக்க மாட்டேங்கறாங்க எல்லாமே பக்காவா அவங்களுக்கு சாதகமா இருக்கு. ஒரு ஓட்டை கூட இல்ல.கண்டிப்பா நம்ம தோத்துருவோம்னு சொன்னாங்க.. ஆனா.. கேஸ் அவர் எடுத்து ஜெயிச்சு தரேன்னு சொல்றாரு…” என்றவளை ரதி முறைக்க..
“ஜெயிச்சு தரேன் சொல்லல தான். ஆனா வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காரு தானே? அவர் எடுத்த எந்த கேஸும் இதுவரையும் தோத்ததில்லை.. ஜெயிக்க வேண்டிய கேஸூ டி” என்று கதிர்காமனுக்கு மார்க்கெட்டிங் செய்தாள் ரத்னா.
“அதெல்லாம் சரிதான்..! அவர் வல்லவர் தான்..! ஒரு கேஸ் எடுத்தா ஜெயிச்சிடுவாரு தான்.. கண்டிப்பா ஏதாவது ஒரு ஓட்டை கண்டுபிடித்து அதுக்குள்ள நுழைந்து அதை பெருசாக்கி.. அவ்வளவு பெரிய கார்ப்பரேட் கட்டமைச்ச அந்த வலுவான ஆதாரத்தை எல்லாம் உடைச்சு தள்ளிடுவாரு.. அதுல எனக்கு சந்தேகமே இல்லை. ஆனா..” என்ற கைகளை கோர்த்துக் கொண்ட ரதி, தோழியானாலும் இதை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள அவளுக்குள் சிறு தயக்கம்.
அதுவும் இல்லாமல் அங்கே பார்த்திவ் அவனுக்கு பிஏவாக வேலை செய்கிறான். இப்படி கதிர்காமன் பெண் பித்தனாக இருக்கிறான். சில சமயம் பார்த்திவ்வே ஏற்பாடு செய்கிறான் என்ற விஷயம் கேள்விப்பட்டால்… கண்டிப்பாக ரத்னா துவண்டு போவாள். அவளால் பார்த்திவ் செய்வதை தாங்கிக் கொள்ள முடியாது.
இப்போது தான் மொட்டு விட்டு மலர்ந்து மணம் பரப்பும் அவளின் காதல் கருகிவிடும் வாய்ப்பு உள்ளது.
’எனக்காக இவள் ஏன் அவளது காதலை விட வேண்டும்? பொதுவாக பார்த்தால் பார்த்திவ் நல்லவன் தான். ஆனால் அவன் வேலை செய்யும் இடத்தைச் சார்ந்து தான் அவனது பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.. அதை அவனால் தவிர்க்க முடியாது. இதனால் ஏன் இவர்களுக்குள்ளே பிரிவினையை நாம் ஊட்ட வேண்டும்’ என்று அமைதி காத்தாள் ரதி.
“இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?” என்று அவள் கையைப் பிடித்து உலுக்கினாள் ரத்னா.
ரதி தன் கையில் வைத்திருந்த காகிதத்தை கொடுத்தாள் அவளிடம்.
“ரதி என்னடி இது?” என்று கேட்டவளிடம்..
“இதுதான் அவங்களோட ஃபீஸ் ஸ்ட்ரக்சர். இதை ஃபர்ஸ்ட் பாரு.. இதுக்கு அப்புறம் நம்மளால இந்த கேஸை அவர்கிட்ட கொடுக்க முடியுமான்னு யோசி” என்றவளை அதிசயமாக பார்த்தவள்,
பின் அவள் கொடுத்ததை நோட்டமிட்டு நெஞ்சில் கை வைத்து “ஆத்தாடியோ.. என்னடி இவ்வளவு ஃபீஸ் வாங்குறாங்க?” என்று கண்களை விரித்து கேட்டாள்.
“ரத்னா.. நம்ம இவ்ளோ பெரிய உயரத்துல இருக்கிறவர் கிட்ட கேஸ் கொண்டு போனா.. அதுக்கு தகுந்த மாதிரி அவர் ஃபீஸ் வாங்குவார் என்கிறதை நம்ம யோசிக்கவே இல்ல.. இவர் கேட்கிற ஃபீஸ் கிட்டத்தட்ட எங்க வீட்டுக்காக அந்த கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்ததாக சொன்னதை விட கொஞ்சமே குறைச்சல். இவ்வளவு காசு கொடுத்து நான் அந்த வீட்டை மீட்டாலும் அந்த கடனை எப்போ அடைப்பேன்னு தெரியாது. அவசியமா சொல்லு?” என்ற ரதியின் கூற்று ஏற்புடையதாக இருந்தது.
“அடுத்த வருஷம் ராகவ் காலேஜ் போயிடுவான். அவனுக்காக கொஞ்சமா சேவிங்ஸ் வெச்சிருக்காங்க அம்மா.. அதெல்லாம் மொட்டை வழிச்சி அவனுடைய எதிர்காலத்தை நான் நிர்மூலமா மாத்த முடியாது. இனி விதி விட்ட வழியில் போக வேண்டியதுதான்” என்று விரக்தியாக சொன்ன தோழியை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் ரத்னா.
வெடித்து கிளம்பும் அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள் ரதி…
“எனக்கு தெரியும் உன்னால இதை தாங்கிக்க முடியாதுன்னு. அந்த வீட்டை நீ வீடா பார்க்கல.. உங்க அம்மா வாழ்ந்த இடமா பார்க்குறேன்னு எனக்கு தெரியும். இப்போ அது கைவிட்டு போறது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு எனக்கு தெரியும்.. மனசுல வச்சு அடக்காத டி.. அழுதுடு ரதி” என்றதும் தான் தாமதம் வெடித்து கதறினாள் ரதி, தோழியின் கழுத்தை கட்டிக்கொண்டு..
வீடு கை விட்டுப் போகும் என்பதற்காகத்தான் ரதி அழுகிறாள் என்று ரத்னா அவளை தேற்ற அதுவும் முதன்மையான காரணம் தான்.
ஆனால் அதை எடுத்து பணம் இல்லை என்றால் இந்த சமூகம் நம்மை இவ்வளவு கேவலமாகவா நடத்தும்? இந்த சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? பணம் இவ்வளவு உன்னால் கட்ட முடியுமா என்று கேட்டிருந்தால்.. கண்டிப்பாக அவள் முடியாது என்று சொல்லி இருப்பாள்.
ஆனால் அதற்காக அவன் ஆஃபர் என்று கொடுத்த ஒன்று அவளால் கற்பனையிலும் நினைத்துக் பார்க்க முடியாத ஒன்று. அதை நினைக்கும் போது உடலில் கம்பளிப் பூச்சி ஊறுவது போல அருவருப்பாக இருக்க.. அவள் உடல் தூக்கி வாரி போட்டது அந்த ஆட்டோ பயணத்தில்…
“பையா கொஞ்சம் பார்த்து பொறுமையா போங்க.. பாருங்க குண்டு குழியில இறக்கி எப்படி தூக்கி போடுதுனு” என்று ஹிந்தியில் அந்த ஆட்டோக்காரனை திட்டினாள் ரத்னா, ரதி உடல் உலுக்கி போட்டதை கண்டு..
இந்த இக்கட்டை வெளியே சொல்ல முடியாத நிலைமையில் எதுவுமே கேட்காமல் தனக்கு ஆறுதல் மட்டுமே தரும் ரத்னா போன்ற சில நல்லுள்ளங்களும் இந்த பூமியில் தான் இருக்கின்றனர்..
கதிர்காமனின் அந்த கோணலான சிரிப்பும்.. அவன் பிரத்யேக நறுமணமும்.. கடைசியாக அவளது இதழை உரசிய கற்றை மீசையும் ஞாபகத்தில் வர மீண்டும் உடம்பு உலுக்கி போட்டது அவளுக்கு…
“ஒழுங்கா சாப்பிட்டு படுத்து தூங்கு” என்று ரத்னா ராகவ்விடமும் பேசிவிட்டு தான் சென்றாள்.
அக்கா இப்பொழுது என்ன மனநிலையில் இருப்பாள் என்பதை புரிந்துக் கொண்டவனாக அவளை தொந்தரவு செய்யாமல்.. அவனே தோசை சுட்டுக் கொண்டு வந்து அவள் முன் வைத்தான்.
அவளோ பிரக்ஜை இன்றி எதிரே இருந்த அன்னையின் புகைப்படத்தை தான் வெறித்துக் கொண்டிருந்தாள்.
‘உன் கூட்டுல.. உன் சிறகுக்கு அடியில நாங்க ரொம்ப பாதுகாப்பா வளர்ந்தோம் மா.. இப்போ நீ எங்களை விட்டுட்டு போயிட்ட.. தெரு நாய்களும் வல்லூர்களும் தந்திரமிகு ஓநாய்களும் எங்களை சுத்தி சுத்தி வருது.. எங்களை அடிச்சு தூக்க பார்க்குது.. எங்களை கொஞ்சம் கொஞ்சமா கொல்ல பார்க்குது.. எங்ககிட்ட இருக்குற சிறு காசை கூட விடாம உறிஞ்ச பார்க்குது.. எப்படி மா இதுல இருந்து நான் மீண்டு வருவேன்’ என்று அன்னையின் புகைப்படத்தை பார்த்து அவள் தனக்குள் அழுதுக் கொள்ள..
“ஆ வாங்கு ரதி” என்ற தம்பியின் குரலில் அவள் திரும்பி பார்க்க அவன் தோசையை பிட்டு சட்னியில் தொய்த்து அவள் முன் நீட்டிக் கொண்டு இருந்தான் ராகவ்.
அவள் கண்கள் கலங்க “அழுகிறது எதுக்கும் தீர்வு இல்ல ரதி. ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. எனக்கு ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியும். என் மனசு இதுக்கு ஏத்தாப்ல தான் தயார் பண்ணி வச்சிருக்கேன்” என்றவன், அடுத்தடுத்து அவளுக்கு ஊட்டிக்கொண்டே பேசினான்..
“என் பிரண்டு அப்பா கிட்ட சொல்லி அவங்க காலனியில வீடு பார்க்க சொல்லி இருக்கேன். சின்ன வீடு தான். பட் வாடகை நமக்கு கட்டுப்படியாகும்” என்று அவனின் முதிர்ச்சியான பக்குவமான நடத்தையில் அழுகையோடு அடுத்தடுத்த அவன் கொடுத்த தோசைகளை உண்டாள் ரதி.
ஆச்சு இதோடு ஒரு வாரம், அவள் கதிர்காமனை சந்தித்து வந்து.
முதல் இரண்டு நாட்கள் மட்டும் ஏதோ இழந்தது போல.. ஏதோ தன்னை யாரோ அவமானப்படுத்தியதை போல.. உணர்ந்தவள், அதன்பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தன் இயல்பான வாழ்க்கை ஓட்டத்தில் கலந்து ஓடினாள்.
ஒரு ஞாயிறு அன்று ராகவ் நண்பன் வருணின் அப்பா அவர்கள் காலனியில் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டினார்.
சின்ன சமையலறை ஒரு படுக்கையறை ஹால் கொண்ட சிறிய வீடு. இவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கும்.
“ஆனா அங்கிள்.. என்னால் வாடகை கொடுக்க முடியாது. நான் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கல. எனக்கு ஒத்திக்கு பேசி தரீங்களா? என்னால படிப்பில தான் இப்போ கவனம் செலுத்த முடியும். அதனால கொஞ்சம் பேசி பாருங்க ஓனரிடம்..” என்று சொல்லிவிட்டு தம்பியோடு வந்தாள்.
“இந்த ஒத்திக்கு பணத்துக்கு என்ன பண்ண போற?” என்று ராகவ் கேட்க..
“உனக்கு காலேஜ்காக சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் கை வைக்க மாட்டேன் டா... அது உன்னோட எதிர்காலம். என்கிட்ட கொஞ்சம் நகை இருக்கு. அதெல்லாம் அடமானம் வைத்து அந்த இடத்துல கொடுத்துடுவோம். வட்டி தானே.. நாமளே பார்த்துக்கலாம். ஏதாவது சின்ன வேலை கிடைக்காமலா போயிடும்..” என்று தம்பியை தேற்றி அடுத்தடுத்து வாழ்க்கையில் சரியாக யோசித்து நடைமுறைப்படுத்தினாள் ரதி…
“இது இதுதான் என் அக்கா..! அதை விட்டுட்டு சும்மா ங்ஙை ங்ஙைனு அழுதுக்கிட்டு இருந்தியே?” என்று அக்காவை வாரினான்.
அதன் பின் கடைசியாக அந்த வீட்டில் இருவரும் நின்று தங்கள் ஞாபகங்களாக போட்டோக்களை எடுத்து வீட்டை காலி செய்ய முடிவு செய்தனர்.
அதே சமயம் “தம்பிக்கு எக்ஸாம் நடந்துக் கொண்டிருக்கு.. அது முடிந்ததும் காலி செய்கிறோம். ஒன்த் மந்த் டைம் வேண்டும்” என்று இவள் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் கேட்க..
அவர்களும் தொந்தரவு இல்லாமல் கால் செய்தால் போதும் என்று சம்மதித்தனர்.
அதன்படி ராகவ் தனது 12ஆம் வகுப்பு பரீட்சையை நன்றாக எழுதி முடித்ததும், இவர்கள் இருவரும் அந்த காலனியில் உள்ள வீட்டுக்கு குடி பெயர்ந்தனர்.
ரதி கடைசி வருட படிப்பில் இருந்தாள். ராகவ்வும் பரீட்சை முடிந்ததும் தன் நண்பர்களோடு சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்துக் கொண்டிருந்தான்.
கதிர்காமன் என்று ஒருவன் இருப்பதையே அவள் மறந்து விட்டாள். அவன் நினைப்பே அவளுக்கு சுத்தமாக இல்லை..
ஆனால் விதி அவனிடமே கொண்டு போய் அவளை சேர்த்தது..
தொடரும்...
