மயக்கம் 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

மயக்கம் 7

 

 

அடுத்த நாள் கிருத்தி தன்னை நேரத்தியாக அலங்கரித்து பிரசன்டேஷனுக்கு தேவையானவற்றை ஒரு முறை சரி செய்தவள்,

வழக்கம் போல சாமியறைக்குள் நுழைந்து இன்று கடவுள்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுக்காமல், கண்களை மூடி கிட்டத்தட்ட கால் மணி நேரம் வேண்டினாள்.

 

“ஏம்மா.. நான் தான் ரொம்ப பக்தியோட சாமி கும்பிடுறேனு தெரியுதுல.. இப்ப ரொம்ப முக்கியமா அந்த காபி டிகாஷன் இறக்கி நீ எனக்கு காபி கலக்கணுமா? அந்த வாசனை வேற இடையில வந்து எனக்கு டிஸ்டர்ப் பண்ணது தெரியுமா?” என்று சுருங்கிய முகத்தோடு கேட்டவளை கண்டு சிரித்த சிவகாமியோ,

 

“அப்ப காபி முக்கியமா? கடவுள் முக்கியமா?” என்று இடுப்பில் கை வைத்து அவளை பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தி சிவகாமி கேட்க..

 

“இந்த மாதிரி ஹைப்போதெட்டிக் கொஸ்டின் எல்லாம் கேட்காத ம்மா..! எனக்கு ரெண்டுமே முக்கியம்..! காஃபி மை சோல்.. கடவுள் மை டிவைன் ஃபீல்..!”

என்றவள், காஃபியை வாங்கி ரசித்து ருசித்து குடித்துவிட்டு காலை உணவை பேருக்கு கொறித்து விட்டு வழக்கம் போல அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர் கையில் பணம் வாங்கி திருநீர் பூசி விட்ட பின்னே வேலைக்கு சென்றாள்.

 

ஒரு குட்டி செமினார் ஹால் போல இருந்தது அவ்விடம். இவளைப்போல பல ஜூனியர்ஸ் தங்கள் பிரசன்டேஷனை வைத்துக்கொண்டு ஒரு சின்ன படபடப்போடு தான் காத்திருந்தனர். 

 

ஒவ்வொருத்தராக அழைத்ததும் அவர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கொடுத்து, அதன் பின் அவர்களின் பிரசன்டேஷனை அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.

 

அதில் இந்த ரெஸ்டாரண்டை நடத்தும் சிஇஓ, அந்த ரெஸ்டாரண்டின் டாப் செஃப், ஊரில் உள்ள பிரபலமான செஃப்ஸ்.. அதைவிட இதே போல் பல ஊர்களில் இருக்கும் இவர்களது செயின் ரெஸ்டாரண்டில் இருந்தும் முக்கியமான ஒவ்வெருவர் வந்திருக்க.. உள்ளுக்குள்ளே பயங்கர படபடப்பு தான் கிருத்திக்கு.

 

“கிருத்தி.. இது உன் வாழ்க்கை..! இத்தனை வருட தவம்..! இதில் நீ சொதப்பன அவ்வளவுதான் டி மொவள..!” என்று தனக்கு தானே மன தைரியம் கொடுத்து கண்ணை மூடி அம்மாவை நினைத்துக் கொண்டாள்.

 

அப்பா இல்லாமல் இத்தனை வருடம் அவர் வளர்த்த வளர்ப்பிற்கு ஒரு அர்த்தம் இவளின் இந்த பிரகாசமான வாழ்க்கை நல்ல வேலை..!

 

எவ்வளவுதான் பண்புள்ள அழகுள்ள பெண்ணை அவர் பெற்றிருந்தாலும் சமுதாயத்துக்கு முன் அவர் தன் சொந்தக்காலில் நல்ல வேலையோடு மதிப்பு மரியாதையோடு இருந்தால் தானே இந்த சமூகம் அவரது வளர்ப்பை நல்ல வளர்ப்பு என்று ஒத்துக் கொள்ளும்? 

 

ஆகவே மற்ற கடவுள்களை விட முதன்மை கடவுளாக அன்னையை அவளின் கண்மணி போன்ற அம்மாவின் இத்தனை வருட கடும் உழைப்பு.. பல பெயர்களின் அவசொல்.. வன்மச்சொல் புறமுதுகில் பேசுதல்.. போன்றவற்றை என்னுடைய இந்த வேலை மூலம் படிப்பிணையாக்க வேண்டும் என்ற நினைப்பு அவளிடம் பெருகி.. அதுவே ஒரு தனி திடம் கொடுத்தது..! நிமிர்வை கொடுத்தது..!

 

அவளோடு பள்ளியில் படித்த பல தோழிகளும் இன்று பலர் இன்ஜினியர்கள் ஆகவும் ஒரு சிலர் மருத்துவத்துறையிலும் ஒரு சிலர் பார மெடிக்கல் துறையிலும் விற்பனை துறையிலும் பிரகாசித்துக் கொண்டிருக்க.. இவளோ சமையல் துறையைத் தேர்ந்தெடுத்தது அவர்களுக்கெல்லாம் சற்று இளப்புமாகவும்.. கேலிக்குள்ளாகவும் இருந்தது..!

 

அவை அனைத்தையும் இந்த ஒற்றை வேலையின் மூலம் சிதறடிக்க வேண்டும் என கிருத்திக்கு ஆழ்மனதில் ஏற்கனவே வெறியோடு பதிந்திருக்க.. இன்று நேரம் கை கூடி வர.. அதை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற தன்னை தகுதிப்படுத்திக் கொண்டாள்.

 

நிமிர்வான உடல் மொழியோடு.. நம்பிக்கையான பார்வையோடு.. சிறிதும் திக்கு திணறல் இன்றி அனைவரையும் எதிர்கொண்டு.. தன்னுடைய உணவு பட்டியல்களை ஒன்று ஒன்றாக காட்டி, அவைகளுக்கு அவள் வைத்திருந்த தனித்துவ பெயரையும் அழகாக சுட்டி காட்டி அவள் விவரித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

 

கூடவே பவனின் கணினிசார் மேஜிக்கும் அதில் சேர்ந்திருந்தது. ஆம் மற்றவர்களை விட இவளது பிரசன்டேஷன் இன்னும் அனைவரையும் கவர்ந்தது. 

 

அவனது குட்டி குட்டி கிராபிக்ஸ் கூட அங்கே அவளது திறமையை தூக்கி நிறுத்தி இருக்க.. அனைவருமே இவள் பிரசன்டேஷன் முடிக்கும் வரை பொறுமையாக பார்த்திருந்தனர்.

 

சிலருக்கு முதல் ஐந்து ஆறு தினுசை பார்த்தவுடன் ஓகே என்று அனுப்பியவர்கள், இவளை அப்படி அனுப்பாமல் நிறுத்தியதே இவளுக்கு ஏதோ சாதித்த உணர்வு..!!

 

கண்டிப்பாக அவளது பேச்சு அவளது தனித்துவமான பெயர்களை காட்டிலும், அவற்றை அவள் பிரசன்ட் செய்த விதம் அவர்களை கவர்ந்தது என்பதை அவளால் கூட மறுக்க முடியாத உண்மை. அந்நேரம் மனதார பவனனுக்கு அவள் நன்றி கூறினாள்.

 

மிகுந்த முதிர்ச்சியோடு பேசினாள், அந்த துறையில் சாதித்தவர்கள் பலர் அங்கே இருக்க.. அதிகமாக கேள்விகள் கேட்டனர்.

 

அவள் எல்லாவற்றுக்கும் தெளிவாக அழகாக பதில் சொல்ல விதம் அனைவரையும் கவர்ந்தது.

 

கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்டதில் மற்றவர்களது ஒன்று இரண்டு என்று தேர்வு செய்தவர்கள், கிருத்தியுடைய உணவு பட்டியலில் இருந்து ஐந்து உணவினை தேர்வு செய்து, அவற்றை ஒரு மதிய இடைவேளைக்கு பின் செய்து காட்டுமாறு பணித்து விட.. மிகுந்த உற்சாகத்தோடு அடுத்தடுத்து வேலைகளை பார்த்தாள் கிருத்தி. 

 

வேலை இடத்தில் ஒருத்திக்கு மட்டும் இவ்வாறு ஒரு பாராட்டு கிடைக்கும் போது மற்றவர்களிடம் சிறு பொறாமை தென்படுவது சகஜமே..!

 

ஆனாலும் பெரும்பாலானோர் நாகரீகம் கருதி யாரும் அதை வெளிக்காட்டாமல் மனதோடு வைத்து அவளை வெளியில் பாராட்டவே செய்தனர். கூடவே அவர்கள் வேலை முடித்துவிட்டு இவளுக்கும் உதவி செய்தனர்..!

 

இந்தத் தேர்வுக்காக வந்திருந்த ஜாம்பவான்கள் அனைவரும் ஒரு சிறு உணவு இடைவேளையினை முடித்து அதன் பின் போட்டியாளர்கள் சமைத்து உணவுகளை ருசி பார்த்தார்கள்..!

 

அவர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து உணவுகளுமே நல்லவிதமாக வந்திருப்பதை கண்டு அனைத்தையுமே தங்கள் ஹோட்டல் உணவு பட்டியலில் இணைத்தனர்.

 

அதிலும் கிருத்தியின் கைவண்ணத்தில் உருவான ஐந்துமே சேர்க்கப்பட்டது அவளுக்கு அத்தனை ஆனந்தத்தை கொடுத்தது. 

இவளது ஐந்து உணவுகளும் சிறப்பு உணவுகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது அவளை வானில்.. மேகத்தில் மிதக்க செய்தது..

 

அதனோடு சிறப்பு உணவாக இறுதியில் இரண்டு பதார்த்தங்கள் இடம்பெற்று இருந்தது அவளுக்கு பெரு மகிழ்ச்சி கொடுத்தது..

 

ஆம் அந்த இரண்டு சிறப்பு பதார்த்தங்களும் இவள் பிரசன்டேஷன் செய்யும் போது இருந்தன. அவற்றை தனியாக ஒரு செஃப் குறித்துக் கொண்டு அதையும் அவளிடம் விவரிக்க சொல்லி கேட்டவர், அதை முதலில் தன்னுடைய கிளையில் அறிமுகப்படுத்தப் போகிறேன் என்றதும் இத்தனை ஆனந்தம் அவளுக்கு.

 

“வெல்டன் கிருத்தி..!! இன்னும் இன்னும் நிறைய நிறைய நீங்கள் இந்த துறையில் முன்னேற வாழ்த்துக்கள்” என்று அனைவரும் அவளை வாழ்த்தி விடை பெற்று சென்றதும்.. அவளுடன் பணிபுரிந்த மற்றவர்கள் அவளைச் சுற்றி வளைத்து சந்தோஷத்தில் ஆர்ப்பணித்தனர். 

 

“சொல்லுங்க.. எந்த ஹோட்டல் இல்ல ட்ரீட் வைக்கட்டும்?” என்று கண்ணடித்து சிரிப்பாக கேட்டவளை கண்டு அனைவரும் ஒரு விரல் காட்டி பத்திரம் காட்டி 

 

“என்ன எங்க வேலைக்கு ஆப்பம் வைக்க நினைக்கிறியா? நீ இந்த ஹோட்டலை விட வேற ஹோட்டல் பெஸ்ட்னு சொல்ல சொல்லி அதை அப்படியே போட்டு கொடுக்கலாம்னு பிளான் பண்றியா? நடக்காது கீர்த்தி நடக்காது..!” என்று அவளுடன் வேலை பார்க்கும் விக்ரம் கூறி சிரிக்க..

 

“அதானே அப்படி எல்லாம் நாங்க மாட்ட மாட்டோம்..! ஆனா உனக்கு ஏதாவது செலவு வைக்கணுமே?” என்று யோசித்து ஷனாவின் காதை பிடித்து திருகியவள்,

 

“பார்த்து பக்குவமா யோசி டி.. நானே பாவம்.‌.!” என்றாள் சிரிப்போடு கீர்த்தி. 

 

“நீயா பாவமா? அதெல்லாம் ஒரு பாவமும் கிடையாது கண்டிப்பா இந்த அஞ்சு டிஸ்ஸூம் எடுத்துருக்காங்க கூடவே டெசர்ட் வேற அந்த செஃப் தனியாக நோட் பண்ணி வச்சு சொல்லிட்டு போயிருக்காரு… சோ உன்னை இங்க பெர்மனென்ட் ஆக்கிடுவாங்க.. இன்னும் உனக்கு சலுகை எல்லாம் கூடும்.. அலவென்ஸ் அது இதுன்னு கொடுப்பாங்க.. அதனால நீ ஒரு பெரிய பார்ட்டியே கொடுக்கலாம் டியர்.. தப்பில்ல.. தப்பில்ல..!” என்று மேனகா கூற மற்றவர்களும் ஆமோதித்தனர்.

 

 

“ஐயோடா..!” என்று முகம் நிறைந்த சிரிப்போடு அவர்களைப் பார்த்து “என்னதான் வேணும் சொல்லுங்க கைஸ்?” என்று கேட்டாள்.

 

மற்றவர்களுக்கும் எங்கே செல்வது என்று புரியாமல் யோசிக்க அப்பொழுது கிரண் “நான் ஒரு ஐடியா சொல்லவா இவளோட லாஸ்ட் ரெண்டு மெனுவை அந்த பெங்களூர் செஃப் சேர்த்தார் இல்லையா? அந்த ரெண்டு டெஸர்ட்டை நமக்கு செஞ்சு குடுக்க சொல்லுவோம்” என்றதும் இது நல்ல ஐடியா என்று மற்றவர்களும் ஒத்துக்கொண்டனர். 

 

“ஆனால் எங்கே எப்போ? நம்ம ஹோட்டல்ல முடியாது..!” என்றாள் கைகளை விரித்து..

 

“வேறெங்க உங்க வீட்டில் தான்..!” என்றான் விக்ரம்.

 

“கம்மிங் சர்ட்ட டே எல்லாருக்கும் நைட்டு டின்னர் உங்க வீட்ல தான் அப்பதான் டின்னர் முடிச்சு மெதுவா வீட்டுக்கு போய் மறுநாள் ரெஸ்ட் எடுக்கலாம்..!” என்றவாறு அனைவரும் கலைந்து சென்றனர். 

 

இவர்கள் அனைவரும் ஜூனியர்கள் என்பதால் இன்னும் சரியான ஷெட்யூல் அவர்களுக்கு போடப்படவில்லை அதனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு விடுமுறை தான்…!

 

 

மாலை உற்சாகத்தோடு வீட்டுக்குள் நுழைந்திள் “”சிவகாமி அம்மையாரே…” என்று சத்தமிட்டப்படியே.. 

 

மாலை நேரம் விளக்கேற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்த சிவகாமியின் கைகளை பற்றி அப்படியே சுற்றி சுழன்றாள். 

 

“ஏய் விடுடி விடுடி.. கை வலிக்குது கை உன்னோட கழண்டு வந்தர போகுது. கைய வைச்சு தாண்டி எனக்கு பொழப்பே.. அப்புறம் நீ பூவாவுக்கு சிங்கி அடிக்கணும் டி” என்று அவர் சிரிப்போடவே கூற..

 

“நா ஏன் சிங்கியடிக்க போறேன்? நானே பெரிய செப்பாக்கும்..! அதுவும் இனிமே எங்க ஹோட்டல்ல பர்மனென்ட் ஸ்டாப் ஆக போறேனாக்கும். நீங்க இனி கஷ்டப்பட்டு சம்பாதிக்கணுமனு அவசியமில்ல ராஜமாதா சிவகாமியாரே..! நான் சம்பாதிச்சு போடுறேன் நீங்க ஜம்முனு வீட்ல இருந்துகிட்டு எனக்கு குணமா மனமா ஆக்கி போட்டா மட்டும் போதும்..!” என்றதும் மகளின் பேச்சு துளிர்ந்த ஆனந்தக் கண்ணீரை தன்னுள் அடக்கிக் கொண்டு..

 

ஒற்றையாள இருந்து மகளை இத்தனை எதிர்ப்பையும் மீறி வளர்த்ததிற்கு இன்று மகளின் இந்த நிலை அன்னைக்கு மனம் குளிர்ந்தது..!

 

 

“அப்படியெல்லாம் இந்த சிவகாமி யாரையும் நம்பி இருக்க மாட்டா..! கடைசி வரைக்கும் அவ சொந்த காலில் தான் நிற்பா..! போடி போடி..!” என்றார் இன்னும் சுற்றுவதை விடவே இல்லை கீர்த்தி. 

 

“சரி விடாதீங்க..!! தச்சு குடுங்க ஆனா எனக்கு மட்டும் தச்சு குடுங்க. சரியா?”

 

“சரி.. சரி சுத்துனது போதும். இன்னைக்கு பிரசன்டேஷன் என்ன ஆச்சு? அதை சொல்லு முதல்ல?” என்று ஆசையாக கேட்டார்.

 

“இந்த கீர்த்திய செப்புனு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னீங்க இல்ல நீங்களும் உங்க பிள்ளையும். இப்ப பாருங்க என் ஹோட்டலே என்னோட அஞ்சு ரெசிபியை அக்சப்ட் பண்ணிருச்சு. பத்தாததுக்கு பெங்களூரில் இருந்து வந்த செஃப் என்னோட ரெண்டு டெசர்ட் தனியா நோட் பண்ணி வச்சிக்கிட்டாரு.. கீர்த்தி சோ ஹாப்பி மா” என்று கூறினாள். 

 

“சந்தோஷம் கண்ணா..!” என்று மகளை நிறுத்தி கட்டிக்கொண்டார் அன்னை.‌.

 

“மா.. பிரண்ட்ஸ் எல்லாம் ட்ரீட் கேட்ருக்காங்க அம்மா? என்றதும்

 

“சரி போய்ட்டு வா..!” என்றார்.

 

“ம்மா.. நிஜமாவே வா மா?” என்று கண்கள் விரிய பார்த்த மகளின் தலையில் செல்லமாக குட்டி, 

 

“சில சந்தோஷங்களை நாம் காலத்தோடவே அனுபவிக்கனும் கீர்த்தி..!” என்றதும் ஆமாம் என்ற தலையாட்டிக் கொண்டவள்,

 

“ஆனா அவங்க வெளியில் எல்லாம் கூப்பிடல?”

 

“பின்ன?” என்று அவர் பார்க்க..

 

“நம்ம வீட்லதான் டின்னருக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க” என்றதும் அவர் முகம் யோசனையை காட்டியது. 

 

“நம்ம தெருவு எப்படின்னு உனக்கு தெரியும்ல? ஏற்கனவே ஏதாவது பேசுவாங்க.. இதுல உன் பிரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தா கண்டிப்பா பசங்களும் இருப்பாங்க..‌. அதான் யோசிக்கிறேன்..” என்றார். 

 

“மா நீங்க தானே சொல்லி இருக்கீங்க மத்தவங்களுக்காக நம்ம சந்தோஷத்தையும் குறைச்சுக்கணும் அவசியம் இல்லைன்னு.. எனக்கு கிடைத்த முதல் வெற்றிமா அதை நான் என் பிரெண்ட்ஸ் கூட செலிப்ரேட் பண்ண கூடாதா? ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று கேட்ட மகளை மறுக்க முடியாமல் சனிக்கிழமை இரவு உணவிற்கு அனைவரையும் அழைக்க சம்மதம் தெரிவித்தார். 

 

“அம்மா அப்படியே அந்த மாடி வீட்டு மலையூறு மம்பட்டியான…

அதான் உங்க தூரத்து உறவினர.

  கூப்பிட்டுவோமா?₹ என்று கேட்டவளை முறைத்தவர்,

 

“இப்படி எல்லாம் பட்டப்பெயர் வச்சு கூப்பிடக்கூடாது..! கண்டிப்பா..! வாகீஸன் செஞ்ச பெரிய ஹெல்ப்னால தான் இன்னிக்கு நீ ஜெயிச்சுட்டு வந்திருக்க.. போய் அவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடு” என்றார்.

 

“”உத்தரவு மகாராணியாரே..!” என்று இடை வரைக் குனிந்து வெகு சந்தோசத்தோடு தனது வெற்றியை அவனிடம் கூற சென்றாள்.

 

அவனது அறைக் கதவை தட்ட.. திரிபுரபவனன் என்ன கோபத்தில் இருந்தானோ இல்லை சோகத்தில் இருந்தானோ..

 

“வாட்??” என்று கதவை திறந்ததுமே அவன் கடுப்போடு கத்த..

 

“இல்ல..! அது நீங்க கொடுத்த பிரசன்டேஷனால செலக்ட் ஆயிட்டேன். தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..! என்றவளிடம் 

 

“சொல்லிட்ட இல்ல கிளம்பு..!” என்று கடிந்தவன் வேகமாக கதவை சாற்றி விட்டு உள்ளே சென்றுவிட்டான். 

 

“சரியான மண்டக்கணம் புடிச்சவன்.. பாரு எப்படி கத்திட்டு போறான்னு? இருடா என்னிடமா கத்துற? உன்னை ஏதாவது

பண்ணனுமே..!” என்று சிறிது நேரம் யோசித்தவள்,

 

இம்முறை மலையூர் நாட்டாமை பாட்டை இவள் அலற விட்டாள், அவள் வீட்டில் இருந்து‌…!

 

தொடரும்..

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top