மாயவன் - 11

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 11
Thread starter  

என்ன நடந்தது?

 

அந்த மாடலுக்கு ஆத்மிகா உடைய எப்படி டிசைன் செய்து அணிவிக்கலாம் என்று இன்னொரு பெண்ணை வைத்து செய்து காண்பிக்க, அழகாக இருந்தது.

 

 நீங்க இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க என்று அந்த மாடலுக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூறியவள், “பண்ணி பாருங்க” என்றதும் அந்த மாடலுக்கு கோபம் வந்து விட்டது, அவள் பெயர் மாயா, இங்க வேலை செய்ற நீ, உன்ன பார்த்தா சரி இல்ல, முதல்ல நல்ல டிரஸ் உடுத்தி இருக்கியா நீ, எப்படி இருக்க?

 

 நீ சொல்றத நான் கேட்கணுமா இங்க பெருக்குற வேலை செய்ற மாதிரி கிடக்குற?” என்று அவள் சொல்லிக் கொண்டு போக ஆத்மிகாவிற்கு ஒரு கணம் கண்களில் கண்ணீர் துளித்து விட்டது.

 

 இதுவே பழைய ஆத்மிகாவாக இருந்திருந்தால் பளார் என்று ஒன்று விட்டு இருப்பாள், முதலில் அவள் இவ்வளவு பேச இடம் கொடுத்திருக்கவே மாட்டாள், எப்போதும் பட்டாசு போல் புரிந்து கொண்டிருப்பாள்.

 

 ஒருவரும் ஒரு வார்த்தை அவளை பற்றி தவறாக பேச முடியாது, ஆனால் இந்த ஐந்து வருட வாழ்க்கை அவளை முற்றிலுமாய் மாற்றி, அவளின் சுயத்தையே அழித்து இருந்தது அவள் பேச பேச கண்களில் நீர் நிறைய ஆரம்பிக்க

 

 திவ்யா ஏதோ சொல்ல வருவதற்குள்.. “ஜஸ் ஷட் அப்” என்ற சத்தம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, 

 

என்ன மாயா வாய் இருக்கிற இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்கா என்று கோபமாக கேட்டபடி உள்ளே வந்தான் விஜய்.

 

 விஜய் அந்த நேரம் யாரும் அங்கே எதிர்பார்க்கவில்லை, கண்கள் கோபத்தில் ரௌத்திரமாக சிவந்திருந்தது, அவன் யாரிடமும் முதலில் இந்த டிரஸ் விஷயத்தில் எல்லாம் வரவே மாட்டான்.

 

 என்னதான் அந்த கம்பெனியின் எம்டி அவனாக இருந்தாலும், அதை தங்கை வசமே ஒப்புவித்து இருந்தான், அவள் பேரில்தான் அதை எழுத வந்தான். 

 

ஆனால் அவள் தான் என்ன இருந்தாலும், நான் இங்கு வேலை செய்கிறேன் என்று எண்ணம் இருந்தால்தான் எனக்கும் கொஞ்சம் உத்வேகமாய் இருக்கும்” என்று அவள் கூறியதும், அவள் பேரில் அவள் மாற்றிக்கொள்ள மாட்டார் என்று சிறிது காலம் பிறகு நவீன் பேரில் மாற்றி விடுவோம் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.

 

அவ்வப்போது இங்கே விசிட் செய்வான், அவளுக்கு நிறைய ஆலோசனைகள் பிசினஸில் அவன் தான் சொல்லுவான் ,அவன் வரும் நாட்களில் இந்த மாடல்கள் அவனை பார்க்கவே பெரும்பாலும் வருவார்கள்,

 

 அந்த பொட்டிக்கில் அவர்களுக்கு தகவல் அளிக்கும் நம்பிக்கையான ஆட்களை வைத்திருந்தார்கள், விஜய் வருவான் என்று தெரிந்தால் அன்று வந்து ஏதாவது ஆர்டர் கொடுப்பார்கள்.

 

இன்று காலையில் வந்து விட்டு சென்றான் என்ற தகவல் அந்த மாயாவிற்கு வந்திருந்தது, அதனால் தான் செய்யப் போகும் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு இந்த மாதிரி உடை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.

 

 ஆனால் அங்கே விஜய் இல்லை என்றதும் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது, 

 

ஆத்மிகாவின் தற்போதைய தோற்றத்தை பார்த்து ஏளனமாக நினைத்தாள். ஏனோ அவளுக்கு ஆத்மிகாவை பிடிக்கவில்லை ஒரு பொட்டிக் அதுவும் பேஷன் டிசைனிங் ஒர்க் பண்றவ ட்ரெஸ் நல்லா இல்லையே, ஆளும் தான் .

 

அந்த இடத்திற்கு வருபவர்களுக்கு, முதலில் அங்கு வேலைப் பார்க்கும் நபரின் உடையும் அலங்காரமும் கவனத்தை ஈர்க்கும், பெரும்பாலும், 

 

அங்கே யாரும் அரைகுறை ஆடையுடன் சுற்றுவதில்லை என்றாலும், அங்கு வேலை செய்யும் கடை ஊழிய வரை நேர்த்தியான உடைகள் இருக்கும் ,ஆத்மிகாவும் நேர்த்தியான புடவையில் தான் இருந்தாள், ஆனால் அவளின் நலுங்கிய தோற்றம் அங்கே வேலை செய்யும் பெண் போல் இருந்தால் மாயாவின் கண்களுக்கு. 

 

அதுவும் அவள் இப்படி ஒரு அழகிய உடையை தயார் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவள் செய்து, தான் போடுவதா என்று எண்ணமும் வேறு எழ, அந்தக் கோபத்தை மறுப்பை இப்படி காட்டினாள்.

 

ஆனால் அங்கே இப்படி திடீரென்று விஜய் வரவும், யாரும் எதிர்பார்க்கவில்லை, இவர்களுக்குள் இது போன்ற வாக்குவாதங்கள் எல்லாம் ஏற்கனவே நடந்திருக்கிறது.

 

 அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் ,அப்போது எல்லாம் கடந்து சென்று விடுவான், தங்கைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டும்தான் அங்கே சிறிது நேரம் நிற்பான்,

 

 அவன் நிற்கிறான், பார்க்கிறான் என்று தெரிந்தாலே மற்றவர்கள் வாயை மூடி கொள்வார்கள் ,ஆனால் இன்று பேச்சு அதிகம், அவனுடைய ரியாக்ஷன் அதைவிட அதிகம். 

 

நேராக அங்கே வந்தவன் மாயாவிடம் மைன்ட் யுவர் வேர்ட்ஸ், யாரையும் தரைக்குறைவா பேசக்கூடாது, என்ன உனக்கு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா?” என்று கோபமாக அடிக்கிரவில் சீறினான்.

 

 கண்கள் மட்டுமே கோபத்தை சுமந்து இருந்தது, அவன் குரலும் கோபத்தில் நிதானமாக வந்தது.

 

“அண்ணா அது வந்து..” என்று திவ்யா சொல்ல வரும் முன், கைய உயர்த்தி தடுத்தவன்,

 

 “இனி இந்த மாடலுக்கு எந்த டிசைனிங் இங்கிருந்து போகக்கூடாது, இவங்களும் இனி இங்க வரக்கூடாது” என்று சொல்லவும், “சார்” என்று அதிர்ந்து போய் பார்த்தாள் அவள்

.

 

“ இல்லை சார், நான்..” என்று மாயா தன்னிலை விளக்கம் கொடுக்க வர, “எதுவுமே தெரியாம ,டிரெஸ்ஸும் ஆளு மட்டும் நல்லா இருந்து என்ன பண்றது, ஒரு சக ஹுமேனா எப்படி ரெஸ்பெக்ட் பண்ணனும்னு கூட உனக்கு தெரியாதா? ஏன் ஈவன் உண்மையாவே பெருக்குறவங்களா இருந்தா கூட அவங்க கிட்ட இருந்து ஒரு நல்ல விஷயம் வருதுன்னா அது அக்செப்ட் பண்றதுல தப்பு இல்லையே,

 

 அவங்க அந்த இடத்தை சுத்தம் பண்ணாம இருந்தா, நீ இருக்கிற இடம் எப்படி இருக்குன்னு யோசிச்சு பாத்துக்கோ, உன்ன எல்லாம் பார்த்தா வீட்ல ஒரு டம்ளர் கூட தூக்கி வைக்க மாட்டேன்னு நினைக்கிறேன் என்று எரிச்சலாக கூறியவன்,

 

“ இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த பொண்ணுங்க இருந்து போகணும்” என்று திவ்யாவிடம் கூறினான்.

 

 “அண்ணா” என்று ஏதோ சொல்ல வந்தால் அவள், நான் எந்த விளக்கமும் கேட்க விரும்பல, அவங்க இங்கே நிக்கக்கூடாது காட் இட்” என்றவன் திரும்பி ஆத்மிகாவை பார்த்தான் கண்களில் ஏற்கனவே வழிந்து கொண்டிருந்த கண்ணீர் நின்று அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனோ மனதில் அவள் தன்னவள், இப்போது உண்மையிலும் தனதாகிவிட்ட பிறகு என்னதான் மறைத்து வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாலும், அந்த உரிமை உணர்வு இயல்பாகவே எழுந்து விடுகிறது,

 

 “உனக்கு வேற ஏதாவது வேலை இருக்கா?” என்று கேட்டான் இதற்கு முன் வரை வாங்க போங்க என்று பெருசாக சொல்லவில்லை என்றாலும், ஏதோ ஒரு மரியாதை பன்மை என்று இருந்தது. இப்போது ஏதோ உரிமை உணர்வு இருப்பதை திவ்யாவினால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

 இப்போது அவன் இப்படி கேட்கவும் அவள் தலை இல்லை என்பது போல் தானாக அசைந்தது,

 

‘ கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம் வா” என்று அழைக்க இப்போது அதிர்ந்து போனது திவ்யாவும் அங்கு இருந்த பெண்களும் தான்,

 

 ஏனென்றால் விஜய் இவ்வாறு எந்த பெண்ணிடமும் பழகி யாரும் பார்த்ததில்லை. 

 

மாயாவிற்கு ஆத்திரம் அதிகமாகி கொண்டே இருந்தது, தான் அவன் பின்னே சுற்றுவது அவனுக்கும் தெரியும், தெரிந்திருந்தும் சட்டை செய்யாமல் இருந்தான்.

 

 அவன் இயல்பாகவே பெண்கள் இடத்தில் அப்படித்தான் என்றதால் அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை, ஆனால் போயும் போயும் இவளிடம் இப்படி நடந்து கொள்வது எரிச்சலை கொடுக்க,

 

“ மிஸ்டர் விஜய்” என்று அழைத்தாள் அவள், அவன் பதில் கூறாமல் திரும்பிப் பார்த்தான். 

 

“எந்த விதத்துல இவ..” என்று ஆத்மிகாவை ஏதோ சொல்ல வர, “ஷ்ஷூ..” என்று வாயில் விரலை வைத்து அவளை பேசாமல் இருக்கும்படி செய்கை செய்தவன், வாசனை காண்பித்தான்.

 

 உன்னிடம் எனக்கு பேச கூட விருப்பமில்லை என்று சொல்லாமல் சொல்லியது அந்த செய்கை, அது அவளுக்கு மேலும் எரிச்சலைக் கிளப்ப, கோபமாக அங்கு இருந்தவர்கள் முன் தன்னை அவமான வேறுபடுத்தியதால் ஆத்மிகாவை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் மாயா,

 

 இவளை ஏதாவது பண்ணனும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. 

 

அவள் சென்றதும் சுற்றி இருந்தவர்களை, “உங்களுக்கு வேற இப்போ வேலை இல்லையா? போய் வேலையை பாருங்க” என்று அவர்களையும் அனுப்ப ,திவ்யாவும் ஆத்மிகாவும் தான் அங்கே நின்று இருந்தார்கள்.

 

 திவ்யா, இங்கிருந்து போகலாமா இருக்கலாமா என்று புரியாமல் குழம்பினாள்.

 

 ஏனென்றால் சற்று முன் அவன் ஆத்மிகாவே வெளியே அழைத்து இருந்தான், உண்மையாகவே தான் அழைத்தானா ?அல்லது ஏதோ ஒரு வேகத்தில் அழைத்தானா, அதுவுமில்லாமல் அவள் செல்வாளா என்று யோசனை, அதனால் அவள் நிற்க,

 

“ நாமளும் போலாமா?” என்று திணறியபடி திவ்யாவிடம் கேட்டாள் ஆத்மிகா,

 

 சட்டென அவளை பார்த்தவன், “உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டான்.

 

 “என்ன சொன்னீங்க?” என்று வந்தது அவள் குரல் திணறியபடி, அவள் தன்னை பார்த்து பயப்படுவதை கண்டாலே அவனுக்கு கோவம் தான் வந்தது, 

 

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நான் ஒன்னும் ராட்சசன் இல்லை, மனுஷன் தான் ,எதுக்கு என்னை பார்த்து இப்படி மெரல்ற” என்று அடக்கப்பட்ட கோபத்தில் அவன் கேட்டாலும், அவன் எரிச்சல் வெளிப்படையாகவே இரு பெண்களுக்கும் நன்றாகவே தெரிந்தது.

 

 காலையில் எல்லாம் நல்லா தானே இருந்தான், இந்தப் பெண், அந்த மாயாவினால் கடுகடு ஆகி இருந்தது அவன் முகம்‌.

 

“ஏதாவது வேலை இருக்காமா ?”என்று தங்கையிடம் திரும்பி கேட்டான். இல்லையென்றால் அவள்,

 

 

 சொன்னதும் இரு பெண்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல், “வா” என்று ஆத்மியின் கையைப் பற்றி அழைத்துச் செல்ல, அதிர்ந்து போய் நின்று விட்டாள் திவ்யா,

 

 அவளுக்கு மேல் அதிர்ச்சியாக ஆத்மிகா அவன் கைகளிடம் இருந்து தன் கைகளை உருவிக்கொள்ள முயன்று கொண்டே இருந்தாள்,

 

 ஆனால் விட்டால் தானே அவனுக்கு இன்னமும் அவள் எப்படி பேசினால் என்பதை நினைக்க நினைக்க ஆத்திரம் தான் வந்தது,

 

 தன்னுடையவளைப் பார்த்து இன்னொரு பெண் இவ்வளவு தரம் தாழ்ந்த பேசுவதா? நார்மலாக யாரிடம் பேசினாலும் அவனுக்கு கோபம் வரும், அதுவும் தன் மனைவியிடம் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதா? 

 

தன்னிடமிருந்து அவள் கைகளை உருவிக்கொள்ள முயல்வதை உணர்ந்தவன், சட்டென அவள் கைகளை விட்டு,

 

 “என்னாச்சு, இப்ப நான் கைய புடிச்சதுனால உனக்கு கற்பு போயிடுச்சா?” என்று டைரக்டாகவே கேட்கவும், அவன் பேச்சில் அவள் தான் ஆடிப் போய் நின்று இருந்தாள்.

 

என்ன இப்படி எல்லாம் பேசுறான் என்பது போல் பார்த்தாள்.

 

அவள் ஷாக்கை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது, இருந்தாலும் அதை முகத்திலும் வெளியிலும் கொஞ்சம் கூட காட்டாமல்,

 

“ என்ன இதே டயலாக் தானே, முன்னாடி நீ என்கிட்ட சொல்லி இருக்க?” என்றதும் அவள் கண்கள் இன்னும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விரிந்தது. 

 

 சொன்னாள் தான் எதார்த்தமாக அன்றுதான் அவனின் கோபத்தையும் பார்த்து, அதன் பிறகு அவனிடமிருந்து இன்னும் விலக ஆரம்பித்து இருந்தாள், அப்படி என்ன நடந்தது இருவருக்குள்ளும்..

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top