Share:
Notifications
Clear all

காதல் சகி 29

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 198
Thread starter  

29

 

இதுநாள் வரை வலியோடு திரும்பி பார்க்கும் தன் பிறப்பை இன்று சன்ன சிரிப்போடு ஜெர்ரியிடம் பகிர்ந்து கொள்வாள் என்று காலையில் சொல்லியிருந்தால் கூட நம்பி இருக்க மாட்டாள்.

 

"எங்கள் தாத்தா பாட்டிக்கு எங்க அம்மா ராகவியும் என் சித்தி மாதவியும் இரண்டே பொண்ணுங்க தான். திருச்சிக்கு அடுத்த டால்மியா புரம் தான் எங்க ஊரு.. அங்க இருந்த

சிமெண்ட் ஃபேக்டரில வேலை செஞ்சுதான் அவங்க வயிற்றுப் பாடு. ப்ளஸ் டூ வரைக்கும் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச அவங்களுக்கு அதுக்கு மேல படிக்க வைக்க முடியல. ஆனால் கம்பெனி டிரஸ்ட் மூலமா நல்ல மார்க் எடுத்த எங்க அம்மாவ திருச்சி காலேஜ்ல சேர்த்தாங்க.. ஆகும் செலவை டிரஸ்ட் ஏற்கும். முதல் வருஷம் எல்லாம் நல்லாத்தான் போச்சு..

 

 

இரண்டாவது வருஷம் தான் பிரச்சனை ஆரம்பமானது. அவங்க தாய் மாமா ராமதாசுக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறதா சின்ன வயசுலயே பேச்சு. அதனால கல்யாணத்தை முடிச்சு ரெண்டு பேரையும் திருச்சியிலேயே தனிக் குடித்தனம் வெச்சிடலாம்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க..

 

 

எங்க அம்மாவுக்கு எவ்வளவுக்கெவ்வளவு படிப்பில் ஆர்வமும் திறமையும் இருந்ததோ அதே அளவு அவங்க அழகிலும் கொஞ்சம் கர்வம் உண்டு. அதுவும் சிறு வயதிலேயே அவங்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்க.. கூடவே படிப்பு அழகு அவங்க ஜொலிக்க.. அதிலே ஒரு தலைகணம் வந்து உட்கார்ந்துடுச்சு. எங்க சித்திய ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டாங்க.. அக்காவுக்கும் தங்கைக்கும் எப்பவுமே சண்டைதான் பிரச்சினைதான் எந்த விஷயத்துக்கும்… என்ன சித்திக்கு அந்த அளவு படிப்பு வரல. ஆனா நல்ல உழைப்பாளி தான் அவங்க. அதனால பத்தாவது முடிச்சதுமே அவங்களும் எங்க தாத்தாவோட அதை சிமெண்ட் ஃபேக்டரி வேலைக்கு போயிட்டாங்க…

 

 

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ!!" என்று கத்தினாள் இடையில்.. "இப்படி புடிச்சி அழுத்தி வைக்கிறீங்க வலிக்குதுல" என்று அவனிடமிருந்து கையை பிடுங்கி விரல்களை ஊதிக்கொண்டால்.

 

 

"கதை கேட்டு ரொம்ப நாளாச்சு ஹனி. அதனாலதான்.. அதுல அப்படியே ஒன்றி போயிட்டேன்" என்று அவன் கூறியது அவளுக்கு நக்கலாக தெரிய.. "நான் சொல்லல போங்க!" என்று அவள் திமிறி எழ, அவளை இழுத்துப் பிடித்து தன் மடியில் அமர வைத்து கைகளை மீண்டும் பௌலில் வைத்தான்.

 

"அப்புறம் என்ன ஆச்சு கல்யாணம் நடந்ததா?" என்று அவன் கேள்வியாய் நிறுத்த..

 

 

"இல்ல!! கல்யாணத்துக்கு முதல் நாள் எங்க அம்மா அவங்க காதலிச்சவரோடு ஓடி போயிட்டாங்க" என்று சொன்னவளின் முகத்தில் அவ்வளவு வருத்தமும் வலியும்..

 

 

"அப்புறம் என்ன ஆச்சு?" என்று அவன் கேட்க, "வேற என்ன? வழக்கம் போல எங்க சித்தியை புடிச்சு அவங்க தாய்மாமனுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க!" என்றாள்.

 

 

"இது என்ன அநியாயமா இருக்கு? உங்க அம்மா ஓடிப் போயிட்டா அதுக்கு எதுக்கு உங்க சித்தியை அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்?" என்று நம் தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாய் தொன்றுதொட்டு நடைபெறும் இப்படி ஒரு திருமணத்தை அறியாமல் புரியாமல் அறிந்து கொள்ள கேட்டான் நம் ஜெர்ரி.

 

 

"நான் தான் சொன்னேன் இல்லையா? எங்க சமூகம் கோட்பாடு எல்லாம் உங்களுக்கு புரியாது. அதெல்லாம் அப்படித்தான் மானம் மரியாதை ஒருபக்கம் எங்க பாட்டிக்கு.. அம்மா அப்பா இல்லாத அவங்களோட தம்பி ஒரு பக்கம் அதனால இரண்டாவது பொண்ணையே கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க…

 

எங்க அம்மா ஓடிப்போனதனால கம்பெனியில எங்க அப்பாவுக்கு கெட்ட பேரு. அந்த பொண்ண நம்பி தானே டிரஸ்டில் பேசி நாங்க ஸ்காலர்ஷிப் எல்லாம் வாங்கி கொடுத்தோம். இப்படி ஓடி போச்சுதே.. இனி அடுத்த ஒரு பொண்ணுக்கு எல்லாம் எப்படி நம்மை நம்பி ஸ்காலர்ஷிப் கொடுப்பாங்க!" என்று அவரைச் சுற்றி இருந்தவங்களே கேள்வி மேல் கேள்வி கேட்க.. எங்க தாத்தாவும் பாசத்தோடு வளர்த்த முதல் பெண்ணின் இந்த துரோகத்தை தாங்க முடியாமலும் சுத்தி இருந்த மனிதர்களின் அவமான பேச்சிலும் சீக்கிரமா போய் சேர்ந்துட்டாரு..

 

 

முதல்ல எங்க சித்திக்கு அவங்க புருஷன பிடிக்கல. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அப்படியே மெதுவா மெதுவா அவங்க வாழ்க்கை போச்சுது. அப்பதான் வேலை விஷயமா எங்க சித்தியோட கணவர் மதுரைக்கு ஒரு வேலையா போயிருக்காங்க.. போயிட்டு திரும்பி வரும்போது மயக்கமா கிடந்த ஒரு பொண்ணு கிட்ட, அங்கிருந்து 2 பேர் தப்பா நடந்துக்க முயற்சி பண்ண.. இவங்க அவங்கள அடித்து விரட்டியது போய் பார்த்தா.. அது எங்க அம்மா!!

 

"அப்போ அவங்க ஓடி போனது??" என்று என்று ஜெர்ரி இழுக்க..

 

"பெரிய லவ்வாம் லவ்வு! 18 வயசு கூட முடியாத அவங்களுக்கும் 20 வயசு ஆன அந்தப் பையனுக்கும் லவ் எல்லாம் ஜஸ்ட் பாசிங் கிளவுட் மாதிரிதான் மிஞ்சி மிஞ்சி போனால் அந்த லஸ்ட் ஒரு மாசம்! அதற்கு பிறகு.." என்று உதட்டை பிதுக்கினாள்.

 

"அவங்களும் எங்க அம்மாவ தனியா விடமுடியாமல் எங்க ஊருக்கு திரும்ப அழைச்சிட்டு வந்தாங்க.. 

 

 

முதல்ல எங்க சித்தியிலிருந்து பாட்டி வரை யாருமே அவங்கள ஏத்துக்கல.. இவங்க தான் பிடிவாதமா அங்க தங்க வச்சாரு. காரணம் எங்க அம்மா எங்கேயோ பெருசா பாதிக்கப்பட்டு இருந்தாங்க போல.. எப்பவும் வெறிச்சு பார்த்துகிட்டே இருந்திருக்காங்க..

 

 

இவ மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கான்னு நினைச்சு எங்க பாட்டியும் ஒன்னும் சொல்லல. இப்படியே ரெண்டு மாசம் போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது எங்க அம்மா கர்ப்பமாக இருந்த விஷயம்..

 

பொண்ணு ஓடிப்போனது.. அதுவும் போனவ பித்து புடிச்ச மாதிரி வந்து இருந்தது.. எங்க பாட்டிக்கு பெரிய அதிர்ச்சி என்றால் அவங்க கர்ப்பமாக இருந்தது பேரதிர்ச்சி தான்.

 

 

"அப்போ உங்க அப்பா?" என்று அவன் கேட்க.. அவள் உதட்டை பிதுக்கினாள். 

 

"யார்னு எனக்கு தெரியாது! எங்க அம்மா யாரை காதலிச்சாங்க யார் கூட போனாங்கனு யாருக்குமே எதுவுமே தெரியாது"

 

"ஆனா ஊர்ல உள்ளவங்க எல்லாம் எங்க சித்தி கணவர் ராமதாஸ் மேல சந்தேகப்பட்டாங்க.."

 

"வாட்??!!" என்று அவன் அதிர..

 

"அதான் சொன்னேனே.. இந்த உலகம் எதையும் சந்தேகத்தோடும் குத்தமா தான் பார்க்கிறது ஜாஸ்தி.. அதுக்கப்புறம் எங்க பாட்டி "பெரியவளுக்கு தான் இப்படி ஆயிட்டுச்சு.. சின்னபொண்ணு வாழ்க்கை வீணாக போக கூடாதுனு" தனியா வேற வீட்டுக்கு வந்தாங்க அப்பவும் தனியாய் இருந்த எங்க அம்மாவ கழுகா சில காம பிசாசுகள் சுத்துச்சு"

 

"எங்க பாட்டி முதல்ல எப்படியோ சமாளிச்சாங்க தான்.. ஆனா அவங்க பின்னால் வேலைக்கு போயிட்டா தனியாய் இருக்க அம்மாவை என்ன பண்றதுன்னு தெரியாமல் எங்க சித்தி வீட்டில் விட்டுட்டு போனாங்க.. அப்போது தான் எங்க சித்தியோட இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்தது.

 

 

எந்த அழகு திறமை இது எல்லாம் எங்க அம்மா உயர்வா நெனச்சு சித்திய திட்டினாங்களோ இப்போ அதுவே அவங்களுக்கு தீங்காய் முடிந்திருக்க.. சொல்லாலும் செயலாலும் எங்க அம்மாவை வாட்டி வதைத்தாங்க.. அவங்களை அவங்க கணவர் எதாவது அதட்டி பேசினா "என்ன அவ அழகுல மயங்கிடியோ?" என்று இருவரையும் அவர்கள் தப்பா பேச,

 

 "உன் கூட எல்லாம் மனுசன் பேசுவானா?" என்று அவர் ஒதுங்கி விடுவார்.

 

"இப்படியே நாட்கள் போக நானும் பிறந்தேன். நான் பொறந்து மூணு மாசம் தான் எங்க அம்மா உயிரோடு இருந்தாங்க.. அதுக்கப்புறம் ஒரேடியா போயிட்டாங்க நிம்மதியா.. ஆனால் எனக்கு தான் அந்த நிம்மதி கிடைக்கல..

 

 

எனக்கு அப்புறம் எங்க சித்திக்கு ஒரு பொண்ணு சுமதி, அடுத்து கணேஷ் அடுத்து சுந்தரியின் வரிசையா அவங்களுக்கு மூணு பிள்ளைங்க..

 

 

எங்க பாட்டிதான் எங்க மூனு பேரையும் வளர்த்தது. ஆனா எங்க சித்தி அவங்க மூணு பேரையும் என்கிட்ட அண்ட விட மாட்டாங்க.. என்ன கூப்பிடுறது கூட "ஓடு காலிக்கு பிறந்தவளே!" "அப்பன் பெயர் தெரியாதவளேனு!" தான்" என்று சொன்னவள் அப்படியே திரும்பி ஜெர்ரியின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கதறினாள்.

 

 

"ஹனி நோ.. நோ!" என்று அவளது முதுகை இவன் தட்டி ஆசுவாசப் படுத்தினான்.

 

 

"இவ்வளவு கஷ்டப்பட்டியாடா ஹனி?" என்று அவள் கன்னங்களை மெதுவாக வருடி கேட்க, இல்லை என்று தலையாட்டினாள். "இதெல்லாம் கஷ்டமே இல்ல.. இதுக்கு அப்புறம் வந்ததுதான் இன்னும் கஷ்டம்!"

 

"இங்கு சித்தியோட ஒவ்வொரு சொல்லும் எனக்கு அப்படியே தீயில நிக்குற மாதிரி தகிக்கும்.

எனக்கு 10 வயசு ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் அவங்க பேச்சிலே பாதியே எனக்கு புரிஞ்சது. எனக்கு ஆதரவு செஞ்சு எங்க பாட்டியும் ஒரு கட்டத்துல போயிட்டாங்க. சித்தியோட அந்த நாக்கு சாட்டை தான்..

 

 

 அவங்க கணவர் மற்ற பிள்ளைகளோடு சேர்த்து என்னையும் ஒரு பிள்ளையை தான் பார்த்தார். நான் அப்பானு அவரை கூப்பிட்டா, சித்திக்கு பிடிக்காது "அப்போ இவன் தான் உனக்கு அப்பனா?" என்று அவரிடம் சண்டைக்குப் போவாங்க.. சித்தப்பா என்று கூப்பிட்டாலும் அதுக்கும் ஒரு காரணத்தை கூறி சண்டை தான்.

 

 

ஆனால் பெரும்பாலான நேரம் அவர்தான் எனக்கு பக்கபலம் துணை எல்லாம். எப்பவுமே "செல்வி கண்ணு! செல்வி கண்ணு!!" இப்படித்தான் கூப்பிடுவார்.

 

 

ஒருமுறை எங்க சித்தி எனக்கு அவங்களை எதிர்த்துப் பேசினேனு சாப்பாடு போடல.. நைட் எல்லாம் அழுதுகிட்டே நான் படுத்து இருந்தேன். அவர்தான் எனக்கு சித்திக்கு தெரியாமல் பரோட்டா வாங்கிட்டு வந்து கொடுத்தார். நானும் அதை ஆசையாசையாய் சாப்பிட்டேன். எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணுவார். இந்த உலகம் இப்படி.. அப்படி.. நீ இப்படி எல்லாம் நடந்துக்கனும். இப்படி எல்லாம் உங்க அம்மா நடந்தது உன் பேரில் தான் வரும் நிறைய நிறைய சொல்லுவார்..

 

அப்ப பாத்து எங்க சித்தி எங்களைப் பாத்துட்டாங்க.. என்னை.. என்னை பார்த்து.. "என்ன டி அம்மாவுக்குத் தப்பாம வந்து பொறந்திருக்கியோ? என்ன இப்பவே என் புருஷனை வளர்ச்சி போட பாக்குறியா?" அப்படினு கேட்டு என்னை அடித்து வீட்டுக்கு வெளியில் நிறுத்திட்டாங்க.. அவரு எவ்வளவு சொல்லியும் கதவைத் திறக்கவே இல்லை…

 

நடுச்சாமம்.. குளிர் வேற.. அப்போதுதான் பொங்கல் முடிச்சு இருந்தது. பொங்கல் வேலை எல்லாம் பார்த்து கை கால் எல்லாம் வேற விண்விண்ணென்று வலிச்சுது. அதுல கூட பசி இருட்டு அவ்வப்போது குறைக்கும் தெருநாய்கள்.. இது எல்லாத்தையும்விட.." என்று உதட்டை கடித்தாள். "அப்போ.. அப்போ.. நான் பெரிய மனுஷி ஆயிட்டேன்"

 

அந்த இருளில்.. பயத்தில் யார்கிட்ட போவது? என்ன சொல்வது? என்ன செய்வது? என்று ஒன்றும் தெரியாமல்.. சித்தி என்னை தள்ளுன அதே இடத்தில் மடங்கி அமர்ந்திருந்தேன். ஒருபுறம் என் கண்ணீரும் மறுபுறம் என் செந்நீரும் வழிந்தோடியது" என்றாள் கண்ணீரோடு நடுங்கும் தேகத்தோடு..

 

பாய்ந்து அனைத்து தன்னுள் புதைத்துக்கொண்டான் தன்னவளை ஜெர்ரிக் ஜோன்ஸ்!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top