28
தன் முன் இருந்த தட்டச்சு இயந்திரத்தை வேக வேகமாக தட்டிக்கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி.
கோபம்! கோபம்! கோபம்! மட்டுமே!!
என்னதான் நாகரீகமாக உடையணிந்து கொண்டு கணிப்பொறி துறையில் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் உள்ளுக்குள் மனிதம் குரூரமாக இந்த வதந்தியை பரப்பி விட்ட இந்த நாகரீக மனிதர்கள் மீது கோபம்!!
அதை கேட்டு, நம்பி தன்னிடம் வார்த்தை விட்ட மகேஷின் மீது கோபம்!!
அந்த மகேசை நாலு அடியாவது அடிக்க முடியாத கோபம்!!
இது எல்லாவற்றுக்கும் காரணமாய் தன்னை சுற்றிய ஜெர்ரி மீது கோபம்!!
அவனாக நெருங்கி வந்த பல சமயங்களில் விலகிப்போய் பின்பு அவன் கையிலேயே நெகிழ்ந்துவிட்ட தன் மீது இன்னும் கோபம்!!
அழகு அறிவு திறமை என்று என்னதான் இருந்தாலும் சமூகத்தில் பெண்ணாய் பிறந்தால், இம்மாதிரி அவதூறுகளை தாங்க வேண்டியுள்ளது என்ற சமூகத்தின் மீது கோபம்!!
'நான் அப்படி இல்லை!' என்று எதிர்த்து பேசினால் திமிர் பிடித்தவள் அடங்காப்பிடாரி என்று பட்டம் கட்டும் நல் உள்ளங்களின் மீது கோபம்!!
'இவர்கள் இப்படித்தான்!' என்று நாம் கடந்து செல்ல முயன்றாலும் 'பார் செய்வதையும் செய்துவிட்டு கூச்சமே இல்லாமல் செல்கிறாள்!' என்று அதற்கும் பேசும் இந்த கேடுகெட்ட உலகத்தின் மீது கோபம்!!
அவர்களுக்கு அங்கே பதிலடி கொடுக்க முடியாத கோபம்!!
அவர்கள் சொன்னதில் ஒரு சிறு பகுதி அதாவது ஜெர்ரி மீது தான் கொண்ட நேசத்தை விட மற்ற அனைத்தும் பொய்யாக இருந்தாலும் அதை தட்டிக்கேட்க முடியாத கோபம்!!
இவ்வாறு தன் கோபத்தை எல்லாம் விரல்கள் வழியே அந்த தட்டச்சு இயந்திரத்தை வேகமாக அடித்து அவள் காட்டிக் கொண்டிருக்க.. அவளை கண்டும் காணாதது போல அங்கும் இங்கும் நிறைய பேர் சென்று கொண்டிருந்தாலும், பார்வைகள் எல்லாம் அவளிடம் மட்டுமே!!
முதலில் இங்கு நடந்த பிரச்சனை எதையும் முழுதாக அவனுக்கு புரியவில்லை. சிறுசிறு வார்த்தைகள் மட்டுமே கேட்டிருக்க தன் அறைக்கு சென்றவன் இங்கே அவனுக்கு ஆஸ்தான பிரண்டாக இருக்கும் ரஹீமை அழைத்தான். ஹெச் ஆர் மேனேஜராக இருக்கும் அவனை அழைத்து "இங்க இப்போ என்ன நடக்கனுதுனு எனக்கு தெரியணும் ரஹும்!" என்று கர்ஜிக்கும் ஜெர்ரியை பார்த்து.. "ஒரு பத்து நிமிஷம் டைம் கொடு!" என்ற வெளியே சென்று யார் யாரிடமோ பேசினான்.
சிலரை முறைத்தான்.. இன்னும் சிலரை கோபமாக திட்டினான்.. திரும்ப உள்ளே வந்தவன் எப்படி சொல்வது என்று நெற்றியில் கை வைத்து தேய்க்க.. "எதா இருந்தாலும் சொல்லு!" என்று உறுமினான் ஜெர்ரி.
ரஹீம் முதலில் ஜெர்ரி வேலைபார்த்து கிளையில் தான் ஹெச்.ஆராக வேலையை பார்த்தான். அப்போதே இருவருக்கும் நல்ல பழக்கம். அதற்குப்பின் ஆன் சைட் வேலை வேண்டாம் என்று சென்னைக்கு திரும்ப முடிவெடுத்தவனுக்கு அனைத்து உதவியும் செய்து அனுப்பியது ஜெர்ரி தான். அவர்களின் அந்த நட்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தாமரையை பற்றி கூறி இந்த ஆறு மாதங்களாக அவளை பார்த்துக்க சொன்னான் அவள் அறியாமல்.. அவளை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்க சொன்னான் ஜெர்ரி. அதன் பின் தான் இந்த புராஜெக்ட் விஷயம் கேள்விப்பட்டு அதை தான் தலைமை எடுத்து, தாமரை நேரில் பார்க்க சென்னை வந்தான். வித்யாவிடம் அன்று பேச்சுக் கொடுத்து அவள் சாவியை எடுத்துக் கொடுத்ததும் ரஹீம் தான்.
அங்கு நடந்த வதந்திகளை பற்றி ஒன்று விடாமல் அனைத்தையும் இவன் புட்டு புட்டு வைக்க.. அடுத்து ஸ்டீபனை அழைத்து வர சொன்னான். ஸ்டீபன் வந்தவன், ஜெர்ரியையும், ரஹீமையும் பார்த்துவிட்டு ஓரளவுக்கு புரிந்தது.
"சார் நானும் தாமரையும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இதுக்கு என்கிட்ட தாமரை என் கூட பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம். பக்கத்து பக்கத்து கேபின் ஆனாலும் அனாவசிய பேச்சு இருக்காது தாமரையிடம்..
நான் தான் தோணுது போதெல்லாம் அவங்க கிட்ட பேசுவேன். அவங்களோட பிஸ்மில்லாபாத்க்கு மட்டும்தான் அடிமையே தவிர அவங்க மேல காதல் எல்லாம் ஒன்னும் இல்ல சார்! இவனுங்க இப்படித்தான் எதையாவது ரூமரை கிளம்பிவிடுவானுங்க.. வேலை வெட்டி இல்லாத பசங்க" என்று அவன் பேசியதும் அவனை அனுப்பி விட்டான் ஜெர்ரி.
ரஹீமிடம் சில விஷயங்களை பேசியவன், "ஏற்பாடு பண்ணிடு!" என்று விட்டு கதவை திறந்து வேகமாக செல்ல, அதற்குள் குருவின் டீமில் அனைவரும் வந்திருந்தனர். அங்கு நடந்ததை கேள்விப்பட்டு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி! நிஷா ப்ரீத்தி அஸ்வின் குரு எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு எவ்வாறு தாமரையை அணுகுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அதையும் மீறி நிஷா மெல்ல தாமரையிடம் நெருங்க.. ஒரு கையை உயர்த்தி அவளை "தள்ளி போ!" என்றவள், மீண்டும் தட்டச்சில் தான் தனது கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாள்.
வேத நடையோடு அவளைத் நெருங்கினான் ஜெர்ரி. அவள் அருகே கையை கட்டிக்கொண்டு நிற்க.. ஒரு நொடி நின்ற அவளது விரல்கள், அடுத்த நொடி இன்னும் வேகமாக தட்டச்சு செய்ய.. அதே வேகத்திற்கு ஈடு கொடுத்து அவளது இதயம் துடித்துக் கொண்டிருந்தது.
"டாம்!!" என்று அவன் மெதுவாக அழுத்தமாக அழைக்க.. ஆனால் அவளோ எதையும் காதில் வாங்கவில்லை. சிறிது நேரம் பார்த்தவன் சத்தமாக "டாம், கெட் அப்! கெட் அப் யூ ஷிட்!" என்று வேகமாக கத்த.. அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் அவ்வளவு வேதனையை சுமந்து இருந்தது.
அவள் கையை பிடித்து பார்க்க விரல்நுனிகள் எல்லாம் ரத்தம் கட்டி கன்னிப்போய் கருப்பாக காட்சியளிக்க, திரும்பி அங்கு நின்றவர்களைப் பார்க்க வேகமாக ஓடிவந்த நிஷா அவள் கையை பார்த்துவிட்டு "என்ன தாமரை இது? யாரோ எதையோ சொன்னாங்கன்னு இப்படி உங்களை நீங்களே ஏன் கஷ்டப்படுத்திகிறிங்க" என்று பதறியவள், அஸ்வினை அழைத்து "கேஃபேட்டேரியா போய் ஐஸ் க்கூப்ஸ் எடுத்திட்டு வா டா!" என்று கூற, ஏதோ இவர்களாவது நம்மை நம்புகிறார்களே என்று சற்றே ஆசுவாசமானாள் தாமரை.
"அஸ்வின்.. கெட் தி ஐஸ் க்கூப்ஸ் அண்ட் கம் டூ மை ரூம்!" என்று இவன் ஆணையிட்டவன், அடுத்த நொடி அழுத்தமான கால் அடிளோடு தாமரையின் கையைப் பற்றி தன் அறையை நோக்கி நடந்தான் ஜெர்ரி!
அதிர்ச்சியோடு பார்த்தாலும் தப்பான எண்ணம் மனதில் இல்லை "தாமரையை சமாதானப்படுத்த போலும்!" என்று நினைத்து அமைதியாக இருந்தனர் இவளின் டீம்.
அவளை அறைக்குள் தள்ளியவன், தன் காலால் அறை கதவை ஓங்கி உதைக்க, அந்த சத்தத்தில்
அலுவலகத்தில் இருந்த சிறு சிறு தலைகள் முதல் பெரிய தலைகள் வரை ஜெர்ரியின் அறை கதவை எட்டி பார்த்தது.
"ஏற்கனவே இவர்கள் பேசுவதெல்லாம் பத்தாதா? போதாக்குறைக்கு என் கையை புடிச்சு இழுத்துட்டு வேற வந்து.. கதவை வேற சாத்திட்டு.. ஓஹ் ஷிட்!!" என்றாள் சீற்றத்துடன்!
டாமிட்!! என்று கோப மிகுதியில் அருகிலுள்ள பூந்தொட்டியை தள்ளி விட்டான்.
அவனின் இந்த கோபத்தை பார்த்ததும் தாமரைக்கே மனதுக்குள் குளிரெடுத்தது.
அதே நேரம் கதவை தட்டி விட்டு வெளியே அஸ்வின் நிற்க, வேகமாக கதவை திறந்தவன் அவன் கையில் இருந்த ஐஸ் கட்டிகளை வாங்கிக்கொண்டு "தேங்க்யூ அஸ்வின்!" என்று மீண்டும் வேகமாக கதவை அடைத்தான். ஏதோ ஒரு சுவாரசியமான சினிமாவை பார்ப்பது போல இருந்தது அங்கிருந்தவர்களுக்கு தாமரையின் டீமையும் ஸ்டீபனையும் தவிர..
"அவர்கள் ஏதோ லூசு போல பேசினால், அது நம் லைஃபை பாதிக்குமா? அதை ஏன் இவ்ளோ பெருசா எடுத்துக்கிட்டு எப்படி ரியாக்ட் செய்து.. பாரு கையெல்லாம் க்ளாட் ஆகிடுச்சு!" என்று அந்த ஐஸ் கட்டிகளை ஒரு பௌலில் போட்டு அவள் கைகளை பிடித்து விரல்களை அதன் மேல் வைத்தான்.
அந்த குளிர்ச்சியில் விரல் நுனிகள் எல்லாம் ஊசியால் குத்துவது போல சுருக் சுருக்கென்று குத்தியது. வலி தாள முடியாமல் முகத்தை சுருக்கியவளை கண்டதும் சட்டென்று பௌலில் இருந்து அவள் கையை தூக்கி "வலிக்குதுனா சொல்ல மாட்டியா?" என்று விட்டுவிட்டு வைத்து வைத்து எடுத்தான் ஐஸ்கட்டியில்.
"இந்த வலி என் வாழ்வோடு சேர்ந்தே வரும் வலி!
அதேபோல இந்த பேச்சு நான் பிறந்ததிலிருந்து என்னைத் துரத்தும் பேச்சு!
என்ன தெரியும் என்ன பத்தி உனக்கு? முதல்ல இங்கே தமிழர்களோடு மன உணர்ச்சிகளை பற்றி உனக்கு தெரியுமா? யாரோ எப்படியோ பேசிட்டு போகட்டும்னு அப்படியே ஓடி போக முடியாது. இந்த சமூகத்தில் சமுதாயத்தில் தான் வாழனும். அப்படி வாழும்போது இதையெல்லாம் கேட்டு தான் ஆகணும் வலியோட.. அதுதான் ஆரம்பத்திலிருந்து சொன்னேன் உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது வராதுனு!" என்று கையை அவன் பிடியிலிருந்து விலகி அருகில் இருந்த மேசையில் வேகமாக தட்டினாள்.
அமைதியாக அவள் அருகில் வந்தவன் திரும்பவும் அவள் கைகளை பிடித்து விரல்களை அந்த ஐஸ்கட்டி பவுலில் வைத்தான். அவள் கோபத்தோடு கையை பிடுங்கிக் கொள்ள, மீண்டும் பிடித்து இவன் வைக்க.. இதுபோல் நான்கைந்து முறை நடந்துவிட.. இவனைப் பற்றி தெரிந்தும் என்று அலுத்துக் கொண்டு கையை அவன் போக்கிலேயே விட்டு விட்டாள்.
அவள் கையையும் அவளையும் பார்த்தவன் "இவ்வளவு தான் நம்மை சுத்தியுள்ள சோசைட்டி!" என்றான். அவள் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்க..
"நீ கைய பிடுங்கிப் பிடுங்கி போன.. நான் திரும்பவும் பவுலில் வைச்சேன்.. திரும்பவும் பிடுங்கின திரும்பவும் வச்சேன்.. ஒரு கட்டத்தில் நீ என்கிட்ட மொத்தமா விட்டுட்டு அமைதியாகிட்ட.. அதே போல தான் அவங்க பேசுறதுக்கு நீ ஏன் ரியாக்ட் பண்ற.. சமூகத்துக்கு உள்ள தான் நாம் வாழ்றோமே தவிர சமூகத்துக்காக நாம் வாழல!" என்றவன் அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்து "இப்போது சொல்லு உன் கதையை நானும் கதை கேட்கிற மூடுல தான் இருக்கேன்" என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கூறிய விதத்தில்..
வழக்கம்போல "நீ எல்லாம் என்ன மேக் டா!" என்று நினைத்தவள் "உங்களை புரோடியஸ் பண்ண அந்த புரொடியூசர்ஸை நான் பார்க்கணும்" என்றாள் வாய்விட்டு..
"அதுக்கு என்னடா ஹனி? எங்க அப்பா அம்மா இல்லாம நம்ம கல்யாணம் நடக்காது. கண்டிப்பா நீ அவங்களை பார்ப்ப" என்றவுடன் அவள் முகம் மறுபடியும் சோர்ந்து போக..
"எப்படியும் இதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அது வரைக்கும் உன் கதையை சொல்லு நானும் கேட்பேன் இல்ல.. எனக்கும் போர் அடிக்காது ஹனி" லேசாக புன்னகையில் வளைந்தது அவளது இதழ்கள்.
