26
ஜெர்ரிக்கின் பரந்த விரிந்த நெஞ்சில் தஞ்சம் கொண்ட வஞ்சியவளை அணைத்து கொண்டான் "என் ஹனி" என்று இந்த கந்தர்வ காதலன்!!
தாமரையின் அந்த நெகிழ்வான நேரம் எல்லாம் சில வினாடிகள் தான்.. சட்டென்று அவனிடமிருந்து பிரிந்தவள், தப்பு செய்து குழந்தையை போல திருதிருவென்று முழித்துக் அடுத்த நொடி "போ! போ!! போய்டு! இங்கிருந்து போய்டு.. என்னை.. என்னை நீ வீக் பண்ற.. போடா.. போ" என்று கண்களை மூடி மடிந்து அமர்ந்து அவள் கத்த..
அவனோ அவளின் கத்தலை கண்டு சற்றும் நகராமல் அவளை பார்த்தப்படி தான் நின்றிருந்தான். சற்று முன் அவளை அணைத்த கைகளை தன் மார்போடு இறுக்கி கட்டியபடி..
இவ்வளவு நாட்களில் இப்பொழுதுதான் அவள் கண்களில் கண்ணீரை பார்க்கிறான். அவளின் அந்த கண்ணீர் வலி ரணங்கள் அவை அனைத்தும் அவனுக்கு நெஞ்சில் ரத்தத்தை வரவைக்கும் அளவுக்கு வலிக்கிறது. ஆறுதல் கூற மனம் தவிக்கிறது. கண்ணீர் வழியும் கண்களை தன் உதடுகள் கொண்டு துடைக்க ஏங்குகிறது. கதறியழும் அவள் இதழ்களை தன் இதழ்கள் கொண்டு ஆறுதல் படுத்த உள்ளம் விழைகிறது.
ஆனால்..
ஆனால்..
கையறு நிலை தான் இப்போது!!
அவள் அழ வேண்டும்..
மனம் திறந்து கதற வேண்டும்..
அவளின் ரணத்தை வெளிக்கொணர வேண்டும்..
மூடி மூடி வைத்து சீழ் பிடித்த காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்..
அதற்கு அவள் பேச வேண்டும்..
பேச வைக்க வேண்டும்..
பேச வைப்பேன்!!
அவள் ரணத்தை காயத்தை ஆற்றி நானே மருந்தாவேன்!!
என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அசையாமல் அவள் அழுகையை கண்டு கல்லென நின்றிருந்தான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
நீ ஜெர்ரி ஜோன்ஸாக இருந்தாலென்ன இல்லை நாட் நாட் செவென் ஜேம்ஸ் ஆக இருந்தால் எனக்கு என்ன? என்னை உடைய வைக்க முடியாது! என்று சற்று நேரத்துக்குள் தெளிந்து எழுந்து விட்டாள் தாமரை.
திரும்பவும் மலையேறி விட்டாளே என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவன், வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல், "அப்பாடி க்ரைட்டு சீன் முடிஞ்சுதா?" என்று நக்கலாக சிரித்தவன் அவளை அருகே குனிந்து "இனி அடுத்த சீனுக்கு போகலாமா?" என்றான் கண்ணடித்து..
அதுவரை இவனிடம் இப்படி நடந்து கொண்டோமே என்று நெகிழ்வான நேரத்தில் அமைதியாக இருந்தவள், அடுத்த கணம் அவன் பேசியதை கேட்டு கோபத்துடன் "வெளியில் போங்க ஜோன்! அத்துமீறி என்கிட்ட நடக்க முயற்சி பண்ணாதீங்க" என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
ஏதோ ஜோக் கேட்டது போல வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் ஜெர்ரி.
"வாட் அ ஜோக்! வாட் அ ஜோக்!! அத்துமீறி நடந்தேன்னா?" என்று மறுபடியும் சிரித்தவன்.. "நமக்குள் ஏதும் எல்லைகள் இருக்கிறதா?" என்றான் அவள் கண்களை காதலாக நோக்கி..
இந்த பழுப்பு நிற கண்கள்!
அது காட்டும் பாவனைகள்!!
அதில் வழிந்தோடும் காதல்!!
அதில் தெரியும் அன்பு!!
அது பாவிக்கும் பாசம்!!
அது சொரியும் நேசம்!!
இதை.. இதைத்தான் அவளால் பார்க்கவே முடியவில்லை.. இதிலிருந்து மீள முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. மகேஷையும் அவன் குடும்பத்தையும் தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்..
அவளை நெருங்கி நின்றிருந்தான் இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டப்படி..
"உனக்கும் எனக்கும் எல்லைகள் வகுக்க நாம் என்ன பக்கத்து பக்கத்து நாடா? இல்லை பக்கத்து பக்கத்து மாநிலமா?
காமெடி பண்ணாத டாம்.. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது!" என்று மீண்டும் சிரித்தான்.
கண்களில் கனல் கங்குகளை தேக்கிக் அவனை பார்க்க, இன்னும் அவளை நெருங்கி நின்று "இவ்வளவு காதலா பார்த்தா நான் பொசுங்கிப் போய் விட மாட்டேனா டாம்?" என்றான் ஹஸ்கி வாய்ஸில்..
*தட்ஸ் லிமிட்!!" என்று ஒற்றை விரலை அவள் உயர்த்த, அந்த விரல்களோடு தன் விரல்களை கொக்கி போல பிணைத்து, அவளை தன் அருகே இழுத்து "ஐ ஹேவ் நோ லிமிட் ஆன் யூ.." என்றவன் கண்கள் அவளை இன்ச் இன்சாக அளந்தது.
கண்களாலேயே காதல் சொல்ல முடியும்!
கண்களாலேயே காமம் கொள்ள முடியும்!
கண்களாலேயே கலவி புரிய முடியுமா என்ன?
அவன் கண்கள் அதை தான் செய்தது அவள் கண்களோடு..
இருவர் கண்களிலும் கடந்த ஞாபகம் எல்லாம் அலை அலையென வந்து போக.. அது கொடுத்த வேகமும் உணர்ச்சியும் தாங்க இயலாத தாமரை சட்டென்று தன் அறையில் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
கதவின் மீது சாய்ந்து நின்றவளுக்கு மூச்சு எக்குத்தப்பாக ஏறி இறங்கியது.
அந்த நாளில் நெகிழ்ந்ததற்காக இன்றும் அவள் தன்னை நொந்து கொண்டாள்.
'உணர்ச்சி மிகுதியில் ஒரே ஒரு நாள் இல்லையில்லை ஒரே ஒரு இரவு தான் தடுமாறியதால்.. இப்போது ஜெர்ரியின் வாழ்வும் வீணாகி நிற்கிறதே!' என்று தான் அவளது கவலை.. வருத்தம் அனைத்தும்! தவறியும் கூட அவனுடன் இருந்த உறவை.. இரவை அவள் நினைத்து வருந்தவில்லை இந்நொடி வரை!!
என்னதான் மதுவின் பிடியில் மதிமயங்கி இருந்தாலும் மனம் கவர்ந்தவன் அல்லாது வேறு ஒருவருடன் இவ்வாறு கண்டிப்பாக இருந்திருக்க மாட்டாள்.
அதுவரை மகேஷ் உடன் கல்யாணமா என்று மதில்மேல் பூனையாக நின்ற அவளது மனம் சட்டென்று ஜெர்ரியின் பக்கம் விழுந்தது. ஆனால் அதை அவனிடம் பகிர்ந்து கொள்ள தான் பெண் அவளால் முடியவில்லை.
தன் வாழ்வோடு அவன் வாழ்வு பிணைய வேண்டாம் என்று இந்நொடி வரை பிடிவாதமாக இருக்கிறாள்.
வெளியில் நின்ற ஜெர்ரியும் அவள் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் சற்று முன் உடைந்த அவளை தேற்ற அவன் மனம் விரும்பியது. அதற்கான வாய்ப்பை தான் அவள் ஒரு பர்சன்ட் கூட அவனுக்கு தர விட மாட்டேன் என்கிறாளே!!
டாம்!! டாம்!! டாம்!! மனம் அரற்றியது.
"டேம் இட்!!" என்று கத்தியவன் அப்பவும் அவள் கதவு திறக்கவில்லை என்றவுடன், "கோ டூ ஹெல்!!" என்று வேகமாக கர்ஜித்தவன் பின்பாதியில் "வித் மி!!" என்று காதலோடு சொல்லிக்கொண்டு இவன் கதவை திறந்து கொண்டு வெளியில் வர, அதே நேரம் உள்ளே நுழைந்தாள் வித்யா.
"அன்னைக்கு நைட் இன்னிக்கு பகலிலே வா?" என்று அவளது விழி சொன்ன செய்தியை படித்தவன் அதுவரை தாமரை மேல் கோபத்தோடு வந்தவன் இவளை நினைத்து சிரித்துக் கொண்டான்.
"அவ கிட்டவே நெருங்கவே விட மாட்டேங்கிறா.. இவ என்னவோ நாங்க உள்ள குத்தாட்டம் போட்ட மாதிரி முழிய விரிச்சி பாக்குறா" என்று சிரிப்புதான் வந்தது.
அத்தோடு இவனும் சும்மா இராமல், அவளை பார்த்து ஒற்றைக் கண்ணடித்து, வாயில் ஒற்றை விரலை வைத்து "உஷ்!!" யார்கிட்டயும் சொல்லாத என்றவாறு இருபக்கமும் தலையாட்டிவிட்டு சென்றவன் முக்த்திலோ அவ்வளவு ஒரு கள்ளத்தனம்.
செல்லும் ஜெர்ரிகின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. பின் வேகமாக உள்ளே வந்து தாமரை அறையின் கதவை தட்ட அந்த பக்கத்தில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.
தாமரைதான் தனை மறந்து ஜெர்ரியின் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தாளே.. தட்டி தட்டி பார்த்து அவள் திறக்கவில்லை என்றவுடன், போன் செய்து பார்க்க வெகுநேரம் அடித்து அடித்து அதுவும் ஓய்ந்து போனது. என்னவானது இவளுக்கு என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சிறிது நேரம் யோசித்தவள், திரும்பவும் தன் அறை சென்று விட்டாள். இவங்க ரெண்டு பேரையும் நினைச்சு நமக்குதான் கிறுக்கு பிடிக்குது என்று புலம்பியவாரே..
மறுநாள் மதியம் வழக்கம் போல தன் டீமோடு அமர்ந்து மதிய உணவை உண்டு கொண்டிருந்தாள் தாமரை. நிஷா அஸ்வின் பிரீத்தி என்று இளைஞர் பட்டாளம் இருக்க பேச்சுக்கும் கலகலப்புக்கும் சொல்லவா வேண்டும்!
முதல் நாள் இரவில் இருந்தே வித்யாவிடம் சரியாக பேசவில்லை தாமரை. வேண்டும் என்று எல்லாம் தவிர்க்கவில்லை. அவள் நினைவு முழுவதும் ஜெர்ரியே!!
காலையிலும் பலத்த யோசனையோடு தான் சமையலறையில் இருந்தாள் தாமரை! வித்யாவும் அவளை தொந்தரவு செய்யாமல் இருக்க.. இப்போது மதிய உணவின் போது பார்த்தவுடன் தான் தாமரைக்கு ஒரு மாதிரியானது. கையசைத்து வித்யாவை தன் அருகில் கூப்பிட்டாள் தாமரை!
இப்போது அவள் முகம் தெளிந்திருந்ததை பார்த்து ஜெர்ரி பற்றி ஏதும் கேட்காமல் அவள் எதிரே அமர்ந்து அவர்களோடு பேசிக் கொண்டே சாப்பிட்டாள் வித்யா. ஆனாலும் தாமரையை ஒரு குறுகுறு பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் வித்யா.
"ஜெர்ரி பத்தி கேட்கலாமா? இப்போது நல்ல மூடில் இருக்கிறாளா?" என்று ஒரு வாய் சாப்பிடுவதும், அடுத்து அவள் முகத்தை பார்ப்பதுமாகவே இவள் இருக்க.. அவள் எண்ணத்தின் நாயகனே அவளருகே அமர்ந்து "என் டாமை நான்தான் சைட் அடிக்கணும் வித்யா! நீங்க இல்ல" என்றான்.
அவளோ அவனின் அந்த வார்த்தைகளில் தூக்கிவாரிப் போட்டு திரும்பிப் பார்க்க வசீகரமாக சிரித்தான் ஜெர்ரிக். தொண்டைக் குழியில் இருந்த சாப்பாடு இறங்க மறுத்தது வித்யாவுக்கு. அதோடு கூடவே விக்கலும் வந்துவிட, தாமரை தான் தண்ணீரை அவள் பக்கம் நகர்த்தி வைத்தாள். கூடவே ஜெர்ரியை முறைத்துக்கொண்டே..
என்றும் இல்லாத திருநாளாக இன்று ஜெர்ரி அவர்களோடு அமர்ந்து உணவு உண்பதை பார்த்த நிஷா பிரீத்தி வாயெல்லாம் பல்லாக அவனை பார்த்து சிரித்தனர். அவனோ அனைவருக்கும் ஒற்றை தலையசைப்பை மட்டுமே கொடுத்தான்.
அவனுக்கு தமிழ் தெரியாது என்கிற தைரியத்தில் "பார்க்க நல்ல அம்சமா இருக்காரு.. இங்கிலீஷ்காரர் தானே இங்கிதமா நடந்து கிட்டா தான் என்ன.. இளசுங்க எங்க மனசும் சும்மா குளுகுளுன்னு இருக்கும்ல" என்றாள் அவனை பார்த்துக் கொண்டே..
அங்கிருந்த அவர்களுக்கும் ஜெர்ரியை பற்றி தெரியாததால், "ஆனாலும் உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி! அவரு நம்ம டைரக்டர் தெரியும்ல" என்று குட்டினான் அஸ்வின் அவள் தலையில்.
"அப்படி என்னடா நான் தப்பா சொல்லிட்டேன்? ஆள் நல்லா இருக்காருன்னு சொன்னேன் தப்பா?" என்று அவளும் தலையை தடவிக் கொண்டு அதே பல்லவியை திரும்பப் படித்தாள்.
தாமரைக்கு தான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளுக்குத்தான் தெரியுமே அவனைப் பற்றிய அனைத்தும்! இவர்கள் பேசுவது கேட்டு அவன் என்ன செய்கிறான் என்று ஓரக்கண்ணால் பார்க்க.. அவனோ தான் எதுவுமே காதில் வாங்கவில்லை என்பதை போல அமைதியாக அந்த தயிர் சாதத்தை உண்டு கொண்டிருந்தான்.
தாமரையைப் பார்த்து "ஏன் தாமரை.. சார் உங்க கூட தானே சான்பிரான்சிஸ்கோவில் டீம்ல இருந்தாரு. நீங்கள் சாரை பார்த்து சைட் அடித்தது இல்லையா?" என்று வெளிப்படையாகவே கேட்க இப்போது தாமரைக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது. அவனுக்கு காதல் விழுந்தாலும் முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் வித்யா அருகில் இருந்த தண்ணீரை அவள் புறம் நகர்த்தி வைத்தான். ஆனால் அவன் உதட்டில் நிறைந்திருந்த அந்தக் கள்ள சிரிப்பை இனம் கண்டுக் கொண்டாள் தாமரை.
*சொல்லுங்க தாமரை?" என்று நிஷாவும் ஊக்க..
தன் நெஞ்சிற்கு பொய்யை எப்படி உரைப்பாள். ஆனாலும் அது அவள் மட்டுமே அறிந்த இரகசியம் அல்லவா? அதனால் தண்ணீர் அருந்தி விட்டு ஓரளவு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு "அப்படியெல்லாம் இல்லை!!" என்று அவள் கூற டீமில் இருந்த மற்றவனோ, "நம்ம தாமரையை தெரியாதா? எப்போதுமே எல்லோரிடம் இருந்து சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றவங்க!" என்று சிரித்தான். அவளும் அதை ஆமோதிப்பது போலத் தலையசைக்க, நிஷாவும் ப்ரீத்தியும் விடுவேனோ என்று அவளையே கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர்.
அங்கே இவளோடு யார் சேர்ந்த பணியாற்றியது? ஜெர்ரி எப்போதும் எல்லோரிடமும் எவ்வாறு பழகுவார்? ட்ரெய்னிங் என்பதால் ஜாலியாக இருப்பாரா இல்லை இங்க இருக்கிற மாதிரி ஊர்ரர் என்று தான் சுத்துவாரா? இவர் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதால் கண்டிப்பாக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இல்லாமல் இருக்கவே இருக்காது. எத்தனை கேர்ள் பிரண்ட்ஸ் அவருக்கு? நீங்க பார்த்திருக்கீங்களா? என்று துளைத்து எடுக்க, தாமரை முன்னிருந்த சாப்பாடு அவள் தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.
இவையெல்லாவற்றையும் ஜெர்ரி கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு இன்னும் படபடப்பாக இருந்தது.
"டேய் பசங்களா.. அவர் இங்கே வந்ததிலிருந்து ஒரு பெண்ணை கூட நிமிர்ந்து பார்த்து இல்லை. கேஷுவலாக பேசியே நான் பார்க்கவில்லை. வெளிநாட்டுக்காரர் ஆக இருந்தாலும் அவ்வளவு ஒழுக்கமா இருக்கிறார் தெரியுமா?" என்று ஒருத்தி கூற, வித்யா அதிர்ச்சியுடன் அவளையும் ஜெர்ரியையும் மாறி மாறி பார்த்தாள்.
முன்னை விட இப்போது தான் நன்றாக சிரிப்பு பீறிட்டது நம் ஜெர்ரிக்கு. அதை தன் தாடிகுள்ளேயே மறைத்து உதட்டை கடித்துக் கொண்டான்.
இவனா ஒழுக்கசீலன்?? ஒருத்தரை விடாமல் அனைவரிடமும் கடலை போட்டுக் கொண்டே இருப்பானே இவன்? என்று இம்முறை வெளிப்படையாகவே தன் அதிர்ச்சியை தாமரை காட்டினாள்.
இப்படியாக மாறி மாறி ஜெர்ரியை தங்கள் சாப்பாட்டுக்கு ஸ்நாக்ஸாக போட்டு மென்று கொண்டு இடையிடையே தாமரையையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அந்த டீம்.
அனைத்தையும் முகத்தில் எந்தவித பாவனைகளையும் காட்டாது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வித்யாவுக்கு ஓரளவும்..தாமரைக்கு அவனைப்பற்றி முழுமையும் தெரிந்து இருக்க.. இரு பெண்களும் தான் தங்கள் பாவங்களை அடக்க பாடுபட்டனர்.
எழுந்தவன் அனைவருக்கும் "பை கைஸ்!!" என்று விட்டு, தன் கைக்கடிகாரத்தை சுட்டி காட்டிவிட்டு செல்ல, "அதாவது பக்கிகளா சாப்பிட்டது போதும் எழுந்து வேலையை பாருங்க என்று அவர் சொல்லுகிறார்!" என்று அஸ்வின் மொழிபெயர்த்து கொடுக்க.. அவசர அவசரமாக உண்டு தங்கள் இடத்தை ஆக்கிரமித்து கணிப்பொறிக்குள் எலிகளை போல தலையை விட்டுக் கொண்டனர் அவர்கள்!!
மாலை போல 'ஒரு டீ குடித்தால் தேவலாம்' என்று நினைத்து கேஃப்டேரியா பக்கம் தாமரை செல்ல, எதிரில் வந்த ஸ்டீபன் இவளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் கோபத்தோடு செல்வது போலிருந்தது. எப்பொழுதும் இவள் பார்க்கவில்லை என்றாலும், அவன் பார்த்து கையசைத்து பேசிவிட்டு செல்லுபவன், இன்று ஏன் இப்படி கோபத்தோடு சொல்கிறான் என்று புரியாமல் "ஸ்டீபன்!!" என்று அழைத்தாள். அவனுக்கு அது காதில் விழவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்து நான்காவது முறை சற்று சத்தமாக அழைத்தவுடன் தான் "ஹான்.. ஹான்ன்ன்.. ஹாய் தாமரை!!" என்று அவளருகில் வந்தான்.
"என்னாச்சு? ஏன் இப்படி?" என்று அவள் கவலையாக அவன் முகத்தை பார்த்து கேட்டாள்.
எப்போதும் அவள் முகத்தில் இருந்து தான் அவளை படிப்பான் ஸ்டீபன். இன்று முதல்முறையாக அதை செய்தாள் தாமரை ஒரு நல்ல தோழியாக!
"ஒன்னு இல்ல தாமரை!" என்று அவன் அந்தப் பேச்சை தவிர்க்கப் பார்க்க, இவளோ இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனை கூர்ந்து பார்த்தாள்.
"ஆனாலும் இந்த பொம்பளைங்க எல்லாம் இப்படி ஆட்டிப் படைக்கக் கூடாது என்னை!!" என்று மனதுக்குள் பொரிந்து கொண்டவன், அவளை நிமிர்ந்து பார்த்து, "ம்ப்ச் லவ் மேட்டர் தான் வேற என்ன?" என்றான் சலிப்பாக..
"என்னது?" என்றாள் இவள் ஆச்சர்யம் அதிர்ச்சி கலந்த கேட்க..
"அட நீங்க வேற எங்க!! காதலிக்குற அளவுக்கு எல்லாம் நமக்கு கெத்து பத்தாது!! பொய் சொல்லவும் வராது!! பர்பார்மென்ஸ் வரவே வராது!!" என்றான் சிரிப்போடு.
"பின்ன..???"
"நம்மையும் பார்த்து ஒரு பொண்ணு வாலண்டியரா லவ் பண்றேன்னு வருது! ஆனா இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் குறிப்பா இந்த மாதிரி ஐடி ஃபீல்டுல எல்லாம்.. ம்ப்ச் எனக்கு நம்பிக்கையே கிடையாதுங்க.. ஒரு மாதிரி ட்ரெண்ட் ஃபேஷன் இதற்காக 'நானும் லவ் பண்றேன்! எனக்கும் ஒரு ஆள் இருக்கான்!' என்பதற்காகவும், வீட்ல கட்டுப்பாடா வாழ்ந்துட்டு இங்கே சுதந்திரமாக பறக்க நினைத்து லிவ்விங் டுகெதர் வரைக்கும் போற பசங்க தான் ஜாஸ்தி.. அதனால எனக்கு இங்கே வேல செய்ற பொண்ணுங்களும் பையன்களும் செய்வதெல்லாம் உண்மையான லவ் கிடையாதுங்க. ஜஸ்ட் அஃபர்! லஸ்ட்!! அவ்வளவுதான்.. எங்க அம்மா அப்பா மாதிரி உண்மையான காதலை பாத்துட்டு இதெல்லாம்.." என்று தோளை குலுக்கினான்.
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஸ்டீபன்.. உண்மை காதலும் இருக்க தான் செய்கிறது!!" என்றவளின் பார்வை எங்கோ வெறித்தது.
"போங்க.. போங்க.. சுத்த ஹம்பக்.. அதுவும் இப்போ உள்ள பொண்ணுங்க.." என்று திரும்பவும் அவன் அதே குற்றச்சாட்டை சொல்ல தாமரைக்கும் உள்ளே கொதித்துக் கொண்டுவர "ஸ்டாப் இட் ஸ்டீபன்!!" என்று கத்திவிட்டாள்.
சட்டென்று அருகில் உள்ளவர்கள் திரும்பி பார்க்க, தாமரைக்கு என்னவோ போலாகிவிட்டது. யாரு மேல உள்ள கோவத்தை வருத்தத்தை இவர்மீது காட்டி விட்டோம் என்று "சாரி!!" என்றவள், விடுவிடுவென்று அங்கிருந்து ஓடி விட்டாள். தாமரையின் இந்த கோபத்துக்கு பின்னே உள்ள காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே சென்றான் ஸ்டீபன். அவனிடம் காதலை சொன்ன பெண்ணை கூட மறந்து..
"தனிமை!! இவ்வளவு பலவீனமானதா? இத்தனை நாள் இருந்த என் மன தைரியத்தை உடைக்கிறதே!" என்று ஸ்டீபன் இடம் பேசிவிட்டு ஓடி வந்தவள் ரெஸ்ட் ரூம் அருகிலுள்ள பால்கனி பக்கம் நின்று கொண்டுதான் கண்ணீர் சுரந்து கொண்டிருந்தாள். பொதுவாக அந்த பக்கம் யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணி..
அதுவும் வேலை முடிகிற நேரம்! அனைவரும் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று இப்பொழுதுதான் தேனியாக.. தீயாக.. சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க.. இவள் ஒருத்தியோ சோக பதுமையென நின்றிருந்தாள்.
''நோ ஹனி!! யூ ஆர் ஆல்வேஸ் ப்ரேவ் கேர்ள்" அவளது இடது தோளில் தன் முகம் தாங்கி கூறியவனை தள்ளிவிட.. தள்ளி நிறுத்த கூட மனதில்லாமல் அமைதியாக இருந்தாள்.
''இல்ல ஜோன்.. உனக்கு தெரியாது. தனிமை எவ்வளவு திடமானவனங்களையும் பலவீனமாக்க கூடிய ஒரு அபாரமான ஆற்றல் மிக்க சூழல்.. கருவி.. தெரியுமா? ஆனால் இத்தனை வருடத்தில் அதையெல்லாம் உடைத்து நொறுக்கி கொண்டிருந்த என்னை இன்று.. இன்று.." அதற்கு மேல் பேச முடியாமல் உதட்டை கடித்து கொண்டு நின்றாள்.
"ம்ம்!! மே பீ யூ ஆர் ரைட் நவ்! பட் நாட் ஆல்வேஸ்!!" அவன் முகத்தை நகர்த்தி போய் காதோரம் ஓரத்தில் தெரிந்த முடிகளை ஒதுக்கி
அவளது காது மடலில் தன் உதட்டை வைத்து அழுத்தி கூறினான் "யூ ஆர் ஆல்வேஸ் ப்ரேவ் கேர்ள் ஹனி!! ஐ அம் வித் யூ டியர்" என்று முத்தமிட்டான்.
அவள் காதில் அவன் முத்தமிட்டதும் சட்டென சிலிர்த்துக் கொண்டு கழுத்தை திருப்ப, அந்த திருப்பலில் அவளின் முகம் அவனின் முகத்திற்கு வெகு அருகாமையில் இருக்க.. துடிக்கும் அவள் இதழ்களை கொய்திருந்தான் கோமகன்!!
அந்நேரத்தில் அவன் மீதான காதலும் ஸ்டீபன் பேச்சால் வெளி
வர, முத்த யுத்தம் சத்தமின்றி நடக்க..
இவர்கள் அன்னியோன்யத்தை பார்த்த ஒரு ஜோடி கண்கள் தீயாய் வதந்'தீ'யை பரப்பியது.
மறுநாள் ஆஃபிஸில் ஹாட் டாபிக்கே டாம் அண்ட் ஜெர்ரி தான்!!
வருவாங்க..
