Share:
Notifications
Clear all

மோக ராகம் டீஸர் 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

டீஸர் 1

 

“ம்மா.. என்னது இது? மலருக்கா இன்னைக்கும் நம்ம வூட்டுக்கு வந்திருக்கா? என்ன பிரச்சினை இப்போ புதுசா?” என்று கேட்டவளை அவளது அம்மா கோகிலா கலங்கிய விழிகளோடு ஏறிட்டவர் பின்பு தன் முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

 

“அவளுக்கு அங்க ஒத்தையில இருக்க பிடிக்கலையாமடி.. மாப்பிள்ளையும் மெட்ராசுக்கு ஏதோ வேல ஜோலியா போயிருக்கப்பலையாம்.. அதேன் ரெண்டு நாள் இங்கன இருந்துட்டு போலாம்னு வந்திருக்கா” என்ற அவரின் பேச்சிலிருந்து அவர் சொல்வது கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று நன்றாக புரிந்தது அலர்விழிக்கு. 

 

“ஏம்மா பொய் சொல்ற? அவ எங்க அங்க தனியா இருப்பா?  சரஸ்வதி அத்த இருப்பாங்க தானே? சேகரன் மாமாவும் பெருசா கண்டிப்பானவர் கிடையாது. பின்ன என்னதான் பிரச்சனையா உன் மூத்த பொண்ணுக்கு?” என்றதும் அவர் முகத்தை திருப்பிக் கொண்டு மாட்டுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார்.

 

“ம்மா.. உங்கிட்ட தானே கேக்குறேன்?  சொல்றியா இல்லையா இப்ப நீ? இன்னும் எத்தனை நாளு எனக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு இப்படி மூடி மறைச்சு பேசிட்டு இருப்ப? நீ போ.. நான் போய் அக்கா கிட்டேயே கேட்டுக்குறேன்” என்றவள் வேக வேகமாக 

 

“யக்கா.. யக்கா.. மலருக்கா..” என்று அழைத்தபடி அவளது அறைக்கு சென்று பார்க்க.. மலரோ அமைதியாக ஏதோ ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தாள். 

 

“என்ன  இவ ஏதோ படிச்சிட்டு இருக்கா? அங்க அம்மாவோ இவ வாழ்க்கையே போச்சு என்கிற மாதிரி அழுது மூஞ்சி மொகரையெல்லாம் வீங்க வச்சுட்டு இருக்கு, இவ யாருக்கு வந்த விருந்தோனு இங்கன உட்கார்ந்து இருக்கா..” என்று  எண்ணியவள், 

 

அடுத்த நிமிடம் அவள் கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி அருகில் வைத்துவிட்டு அவள் முறைத்து நின்றாள் அலர்விழி.

 

சிறு தங்கையின் செயலில் முதலில் திடுக்கிட்டாலும் “ஏய் அலரு.. வா.. வா.. காலேஜ் விட்டு வந்துட்டியா? நீ வராமல் எனக்கு ஒரே போரு.. கயல வீட்டுக்கு வான்னு கூப்பிட்டா அவ எனக்கு வீடு இருக்கு வேலை இருக்கு புள்ள குட்டி இருக்குன்னு சொல்லிட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா” என்று முதல் தங்கையை குறை கூறியபடி சின்ன தங்கையை அருகில் அமர வைத்துக் கொண்டாள் மலர்விழி.

 

 

"என்னடி ரொம்ப கோவமா இருக்குற மாதிரி இருக்கு? வர வழியில யாராவது உங்கிட்ட பிரச்சனை பண்ணினாங்களா? இல்ல இல்ல தப்பு தப்பு நீ யார்கிட்டயாவது பிரச்சனை பண்ணியா?" என்ற சிரிப்புடன் கேட்ட அக்காவை, கூர்ந்து பார்த்தாள் அலர்.

 

தன்னைப்போல் மாஞ்சோலையாய் இல்லாமல் பார்த்தவரை வசீகரிக்கும் நல்ல எடுப்பான நிறம் தான் மலர்விழி. அழகிய வட்ட முகம் முகத்தில் இருக்க வேண்டிய அத்தனையும் அதது பங்குக்கு அழகாகவே அடுத்தவரை கவர்வதாக தான் இருக்கிறது. உடலும் பெரிதாக குண்டும் இல்லை ஒல்லியும் இல்லாத உடல் வாகு தான். 

 

'பின்ன என்னதான் அந்த பெரிய அத்தானுக்கு அக்கா கூட பிரச்சினை? மாசத்துக்கு ஒரு தடவை இப்படி சென்னையை பார்க்க ஓடிறாரு.. இவளும் இங்கு வந்து உட்கார்ந்திருக்கா?  ஒருவேளை இவளுடைய நாத்தனார் ரத்னவள்ளி ஏதாவது வில்லி வேலை பார்த்து இருக்குமோ?'

 

“உன்கிட்ட எத்தனை தடவை கேட்கிறேன் அந்த ரத்தினவள்ளி ஏதும் வில்லி வேலை பார்க்குதானு? எதுக்குமே எனக்கு பதில் சொல்லு மாட்டேங்குற நீ..  இப்படி சிரிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டதும் அவள் தாடையில் கை வைத்து செல்லமாக கொஞ்சி மலர்,

 

“பெரிய மனுஷி.. இதெல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் படிக்கிற விஷயத்தை மட்டும் பாரு” என்று அழகாக சிரித்தாள் மலர்.

 

“இப்படி எப்பவும் சிரிக்கிற உன்னையும் கஷ்டப்படுத்த முடியுமா உன் புருஷனால..” என்று ஆற்றமையாக கேட்டவள்

 

“வரட்டும் உன் புருஷன்..! ஒரு நாளைக்கு இல்ல ஒரு நாளு நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்கிறானா இல்லையானு மட்டும் பார்” என்றதும்,

 

“அவ்வளவு தைரியம் இருக்கா உனக்கு? அவர பார்த்து பேச?” என்று மலரின் கேள்வியில் “போடி.. அக்கா” என்று விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து கொண்டாள் உணவு உண்ண அலர்விழி.

 

 

ஆனால் அவள் வாயை முகூர்த்தமா இல்லை விதியின் சதியோ.. அடுத்த இரண்டாம் நாள் இரவில் அவன் முன் வகை தொகையாக மாட்டிக் கொண்டு நின்றாள் அலர்விழி.

 

அவனிடம் தான் மாட்டிக் கொண்டோம் என்றதை அறியாமல் ‘இன்று தன்னிடம் பெரியத்தான் நல்ல வசமாக மாட்டிக் கொண்டார். அவரிடம் கேள்வியாக கேட்டு ஒரு வழியாக்கி விடணும். என்ன நெனச்சிட்டு இருக்காரு பொண்ணு கொடுத்தோம்னா வாய மூடிட்டு இருக்கணுமா?’ என்ற முடிவில் அவள் இருந்தாள்.

 

“எங்க மலருக்காவ உங்க வூட்டு ஆளுங்க எல்லோரும் குழந்தை இல்லன்னு போட்டுப் பிச்சிப் பிடுங்கிறாங்க‌. அது உங்களுக்கு தெரியுமா? மாசத்துல பாதி நாளு நீங்க சென்னைனு ஓடுறீங்க இங்க வந்து எங்க அக்கா உட்கார்ந்துக்குறா இதுக்கு தான் உங்களுக்கு நாங்க கட்டி கொடுத்தோமா? அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்..! குழந்தை இல்லை என்கிறது அவளுக்கும் வலி தானே? அந்த வலி எத்தனை வேதனையை கொடுக்கும்? 

அப்ப எல்லாம் அவ புருஷனா எங்க அக்காவுக்காக ஆதரவா நிக்காம.. இப்ப மட்டும் என்ன ரொம்ப அதிகாரமா பேசுறீங்க?” என்று அவள் பேச்சில் அவளை கூர்ந்து பார்த்தபடி நின்று இருந்தான் காண்டீபன்.

அவன் முகம் இறுகியது. 

 

“இந்த மலருக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல.. எத சொல்லணும்னு வெவஸ்தையும் இல்ல..” என்று பற்களை கடித்த படி அவளை முறைத்து நின்றிருந்தான்.

 

ஆனாலும் தன் முன்னால் நின்று இந்த சிறு பெண் கேள்வி கேட்பதா என்று அவனுக்குள் இருக்கும் அந்த ஆண் என்ற ஈகோ.. வெளியில் வர

 

“நான் அதுக்கு என்ன பண்ண முடியும். குழந்தைப் பெத்துக் கொடுக்க உங்க அக்காவுக்கு தான் வக்கு இல்ல” என்றான் ஆண் என்ற அகந்தையோடு.

 

இதமாக எதுவும் சொல்லி, உன்  அக்காவை நான் பார்த்துக் கொள்வேன் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறுவான் என்று எதிர்பார்த்து இருந்தாள்.

 

என்னதான் இருந்தாலும் மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டான் என்று பெரிதாக நம்பி இருந்தாள்.

 

அவன் மனைவியையே விட்டுவிடப் போகிறான் என்று அறியவில்லை அவள்?

 

அவனின் இந்த பேச்சு பெரும் கோபத்தை தான் ஏற்படுத்தியது அலருக்கு. 

 

அந்த கோபத்தில் அவளும் வார்த்தைகளை விட்டாள். அவள் விட்ட வார்த்தையில்.. அவள் வார்த்தைகளை மட்டுமல்ல அவளையுமே அவன் அள்ளிக் கொள்ளப் போகிறான் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாது..!

 

 

“நீங்க எல்லாம் ஒரு மனுசனா?  அவளுக்கு புருஷனா? அவளுக்கு குழந்தை பெத்துக்க தகுதி இல்லைன்னு சொல்றீங்களே உங்களுக்கு அந்த தகுதி இருக்கா?”

என்று விட்டாள்.

 

அவன் மீதான கோபத்தில் அவள் யோசிக்கவில்லை. விட்ட வார்த்தைகளின் வீரியத்தை அறியவில்லை..!

 

அவனும் கண்கள் சிவக்க முகம் கடுக்க அதி கோபத்தோடு நின்றவன், ஒரே எட்டில் அவளை நூல் அளவு இடைவெளியில் நெருங்கி நின்று “என்ன கேட்ட தகுதி தானே? சீக்கிரமா நிரூபிக்கிறேன் அத.. அதுவும் உனக்கு புள்ள கொ

டுத்து” என்றான்.

 

அவளோ பேயடித்தது போல அஞ்சி நின்றாள்.

 

விரைவில்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top