Share:
Notifications
Clear all

மோக ராகம் டீஸர் 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

டீஸர் 2

அந்தக் கார இருளில் நின்று புகைத்துக் கொண்டிருந்தான் அவன்.

அந்த இருளில்  அவனின் உருவம் வரிகோடாக மட்டுமே தெரிந்தது.

 

அதிலும் கங்கு மட்டும் சற்றே அந்த இருளில் வெளிச்சமாய் தெரிய, கொல்லைப்புறம் வந்தவளோ இந்த காட்சியை கண்டு ஒரு கணம் திகைத்து நின்று விட்டாள்.

 

“யார்.. யாரது?” என்று அவளது உரத்த குரலில்..

 

சற்றே செருமியவன், “நான் தான்” என்றான் அழுத்தமாக.

 

அவனின் அழுத்த குரலே அவன் யாரென்று அவளுக்கு புரிய வைக்க..

 

“போச்சு..  ராத்திரில வந்து இவர்கிட்டேயா மாட்டணும்” என்று எண்ணியப்படி மெல்ல நடந்து அவள் செல்ல.. அவனோ அவளை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்.

 

“அத்தான்.. வழி விடுக..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் அவள் கூற..

 

“ம்ம்ம்..” என்றவனோ 

அவளைத் திரும்பி ஏறயிறங்க ஒரு மாதிரி பார்த்தானே ஒழிய அங்கிருந்து அவன் நகர்வதாக இல்லை. 

 

“அத்தான்.. வழிய விடுக.. போகணும்” என்றவளின் அருகே வந்தவன் தன் கையில் இருந்த சிகரெட்டை அவள் முகத்தில் ஊதி விட்டு, “யாரு அவன்?” என்று கேட்டான்.

 

அந்தகார இருளின் தனிமையை விட அவனுடனான தனிமை தான் அவளுக்கு பெரிதாக அச்சப்படுத்தியது.

 

‘அத்தான்.. தன்னை கண்டுக் கொண்டாரோ?’ என்று அவள் திடுக்கிட, அவனோ இன்னும் அவன் அருகில் வந்து “கேட்குறேன்ல.. யாரு அவன்?” என்றவனின் அழுத்தமாக கேள்வி அவளின் மெல்லிய தேகத்தை நடுங்க செய்வதாய்..!

 

“அவன் எவன் இருந்தாலும்… உன்னைய விட்டு தள்ளியே வைச்சிரு.. புரியுதா?” என்றவனின் பேச்சில் அவளுள் கோபம் கிளிர்ந்தெழ..

 

“அவேன் தேன் என்னைய கட்டுக்க போறவன்” என்று அழுத்தமாய் அவள் பேச..

 

உதட்டை சுழித்தவன் “உன் கனவுல கூட நடக்காது” என்றான். 

 

“நீங்க அக்கா வீட்டுக்காரு மட்டுதேன்.. அதுக்காக.. என் வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமை உங்களுக்கு கிடையாது” என்றாள் தீர்க்கமாக.

 

“உன் வாழ்க்கையில் முடிவெடுக்கிற உரிமை எனக்கு கிடையாதா? ம்ம்ம்??” என்று சிகரெட் புகையை ஒரு புறம் வேகமாக உள்ளெழுத்து விட்டவனின் அந்த வரி வடிவம் இருளிலும் அவளுக்கு இதயத்தை நடுங்க செய்வதாயிருந்தது.

 

“உன் வாழ்க்கையிலே இனி என்னோடு தான் டி” என்றவன் அவள் மீண்டும் அவள் புறம் சிகரெட் புகையை கக்கி விட, அவ்ளோ அந்த புகை ஒத்துக் கொள்ளாமல் இறும..

 

“எல்லாத்துக்கும் பழகிக்கோ அலரு..” என்றவன் அவ்விடம் விட்டு சென்று விட,

 

இவளோ வேர்விட்ட மரம் போல அவ்விடத்திலேயே சமைந்து நின்றாள். 

 

நாயகன் : காண்டீப பதஞ்ஜன்

 

நாயகி : அலர்விழி

 

 

இக்கதை.. இப்பொழுது சென்று

கொண்டிருக்கும் நாவல்கள் முடிந்தவுடன் வெளிவரும்.. 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top