மாயவன் - 4

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 4 weeks ago
Messages: 6
Thread starter  

மறுவாழ்வு கொடுக்க போறானா?

 

ஆத்மிகா திவ்யாவிடம் விஜய் அண்ணாக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டாள், ஆனால் அவள் காதில் விழாததால் அவனுடைய மகன் நவீன்,

 

“ ஐயோ அம்மா, ஆன்ட்டி விஜய் மாமாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டாங்க” என்று சொல்லவும், அனைவரும் அதிர்ச்சியுடன் விஜயை பார்த்தனர்.

 

 விஜயும் அப்பொழுதுதான் மீட்டிங்கை முடித்து அவளைப் பார்த்தான், அனைவருக்கும் நன்றாகவே காதில் விழுந்தது.

 

சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து நின்றான், அவன்நின்றதுமே பழைய பயத்தில் படக்கென எழுந்து நின்று விட்டாள் அவளும், அவன் வந்ததுமே ஆத்மிகாவுக்குள் மீண்டும் அதே பயம்.

 

சட்டென அவள் எழுந்து நிற்கவும் அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன், அவள் அருகில் போய் இருக்க மற்றவர்களுக்கும் பயம்.

 

விஜய் யாரிடமும் பேசியதில்லை அதாவது திவ்யாவின் தோழிகள் ஆனாலும் சரி, வீட்டில் பெரும்பாலும் உறவினர்களிடமே அவன் பெரும்பாலும் பேச மாட்டான்,

 

 பேசும் வார்த்தைகளையும் அளந்து தான் பேசுவான், எல்லோருக்கும் அவன் மேல் மரியாதை கலந்த பயம் குடும்பத்தை தனியாக நிறுத்தியவன், செய்யும் தொழில் மேன்மையாகவும் அதே நிலையில் வரும் வருமானத்தில் பாதி நல்ல விஷயங்களுக்காகவும் பயன்படுத்தி இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறான், தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தான். 

 

ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ளவே இல்லை, அவனுக்கு வரன்கள் வந்து கொண்டே இருந்தாலும், விருப்பமில்லை விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவன், பெரும்பாலும் பெண்கள் பக்கம் திரும்பவே மாட்டான்,

 

 தங்கை முறையில் இருக்கும் பெண்களிடமும் அதுவும் தன்னிடம் வந்து பேசும் பெண்களிடம் தான் அளவோடு பேசுவான், அதுவும் பார்ப்பதற்கு முன் முப்பதுகளில் இருப்பவன் என்று சொன்னாலும், நம்ப முடியாத அளவிற்கு அவ்வளவு ஹான்சமாக இருப்பான்.

 

 எங்கேயாவது திருமணம், விஷேசம் என்று அம்மாவுடன் பெரும்பாலும் செல்ல மாட்டான் தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலையில் செல்லும் பொழுது தான், சம்பந்தம் கேட்டு வருபவர்களிடம் தாயை ஒரு பார்வை தான் பாப்பான் ,அதற்கு மேல் அவரும் ஏதும் பேச மாட்டார் ஆனால் மகனின் வாழ்க்கை குறித்த கவலை அவருக்கு இருந்தது.

 

 இப்போது ஆத்மிகாவின் அருகில் வந்து அவன் நிற்க, “இல்ல விஜய் எதுவா இருந்தாலும் நான் பார்க்கிறேன்ப்பா” என்று பதற்றத்துடன் வாசுகி சொல்ல,

 

“ மா” என்று அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், ஆத்மிகாவிடம் திரும்பினான், அவள் தடுமாற்றத்துடன் “இல்லணா அது..” என்று அவனை அழைத்து ஏதோ சொல்ல வர, அவளின் அண்ணா என்று அழைப்பு சிறு கடுப்பு உண்டாகத்தான் செய்தது.

 

“உஷ்” என்று தன் வாயில் விரலை வைத்து அவளைப் பேச வேண்டாம் என்று தடுத்தவன்,

 

“நானும் மனுஷன் தான், கோஸ்ட் இல்ல நார்மலா ரிலாக்ஸா இரு..

என்ன கேட்ட, எனக்கு மேரேஜா?” என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, 

 

“சீக்கிரத்திலே பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு நகர, அவள் பயத்தில் பேந்த பேந்தவழித்தாள் தவிர, ஒன்றுமே பேசவில்லை ஆனால் மற்றவர்கள் தான் அதிர்ந்து போய் பார்த்தார்கள். காரணம் அவனின் சுபாவம்.

 

இது வரை தானே சென்று, அவன் யாரிடமும் பேசியதில்லை, அவனிடம் பேசுபவர்களையும் சிறு புன்னகையுடன் கடந்து செல்வான்,

 

 குறிப்பாக பெண்கள், காரணம் உடனடியாக திருமணம் என்று வந்து நிற்கிறார்களே என்ற கடுப்பில் ,இப்போது அவனே வந்து பேசியது மட்டுமல்லாமல் சொன்ன விஷயம் மற்றவர்களுக்கு பேர் அதிர்ச்சி, ஆனால் பாவம் யாரிடம் சொன்னானோ அவளுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை. 

 

குழப்பத்துடன் பார்க்க, “என்ன யாருக்கும் வேலை வெட்டி இல்லையா? போய் வேலையை பாருங்க” என்று விஜய் சொல்லிவிட்டு செல்லவும்,

 

 அஜய் தீபிகாவிற்கு கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ,குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்கள்.

 

“சரிடி நீ கொஞ்சம் உள்ள போ, இதோ வரேன்” என்று தோழியை ரூமுக்குள் அனுப்பி வைக்க சரவணனும் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தான், அதற்காகத்தான் அனுப்பினாள்.

 

“ஏய் திவ்யா என் காதுல சரியா தான் விழுந்துச்சா?” என்று அவன் திவ்யாவிடம் கேட்க, நறுக்கென்று அவன் கையைக் கிள்ளவும்,

 

 அடிப்பாவி எதுக்குடி எனக்கு கிள்ன என்று தன் கைகளை தேய்த்த படி திவ்யாவை பார்த்தான்.

 

“ அப்போ வலிக்குதில்ல எனக்கும் அப்படித்தான் விழுந்துச்சு நினைக்கிறேன், கனவில்ல நிஜம் தாங்க” என்று சொல்லவும் அவளை முறைத்தவன்,

 

“ இப்பதாண்டி தெரியுது உங்க அண்ணா வாழ்க்கையில் அடிபட்ட பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்கிற ஐடியாவுல இருந்திருக்கான் போல என்று சொன்னான், திரும்பி அவனை முறைத்தாள் திவ்யா,

 

 அவளிடம் ஏதோ கேட்க வந்த ஆத்மியும் அதைக் கேட்டுவிட்டு ஒரு கணம் பதறித்தான் போனாள், அவன் எதார்த்தமாக தானே சொன்னான், இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்?” என்று திக் என்று இருந்தது அவளுக்கு. 

 

“என்ன முறைக்கிற, பின்ன இதுவரைக்கும் ஒரு முறை கூட உங்க அண்ணன் பிடி கொடுத்து பேசல, இப்போ அந்த பொண்ணு கிட்ட மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்துட்டு, சீக்கிரம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு போறானா என்ன அர்த்தம்,

 

 அப்போ மனசுல வேற ஏதோ இருக்கு, நீங்க தான் கொஞ்சம் ஏதாவது விதவை பொண்ணு டிவோர்ஸ் ஆனப் பொண்ணு, இந்த மாதிரி யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டு இருந்திருக்கணும்” என்று சொல்லவும், 

 

அந்த பேச்சுக்கள் ஆத்மிகாவிற்கு பிடிக்கவில்லை ஏதோ மறுவாழ்வு அளிப்பதற்காகவே விஜய் அவதாரம் எடுத்திருப்பதை போல அவர்கள் பேசுவது சற்று கடுப்பாகத்தான் இருந்தது, இன்னும் திவ்யா முறைக்கவும்,

 

“என்னடி இப்படி முறைச்சிகிட்டு இருக்க, ஓஹோ உங்க அண்ணனே வாழ்க்கை கொடுத்தாலும் நீ வேணான்னு சொல்லுவ போலயே, ஏன் அப்படி ஒரு பொண்ணு உன் ஃபிரண்டா இருந்தாலும், உங்க அண்ணனை கட்டி வைக்க விருப்பம் இல்லையா என்றான்.

 

“ கட்டி வைக்க விருப்பம் இல்லையா?” என்று கேட்டது, சுருக்கு என்று தைத்தது ஆத்மிகாவிற்கு ,

 

 அவர் எங்கே, தான் இங்கே நிச்சயம் என்னை பார்த்தால் யாருக்கு தான் பிடிக்கும், கட்டியவனுக்கே பிடிக்கவில்லை என்று நினைத்தவள், தன் எண்ணப் போக்கை நினைத்து, ஐயோ என்ன நினைக்கிறோம் அதுபோல எல்லாம் யோசிக்கவே கூடாது,

 

 முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும், அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு, விடு விடு என்று உள்ளே சென்றாள்,

 

 “இங்கே திவ்யாவிடம் ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள் அவள்,

 

 “இல்ல அந்த பொண்ணு உங்க அண்ணன் கட்டிக்க விருப்பப்படுறானு சொன்ன உடனே முறைக்கிறியே” என்றதும்,

 

“ ஹலோ சார் அவ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா, அப்படி ஒருத்திய கட்டி இருந்தால் லைஃப் ஜாம் ஜாம்னு இருந்திருக்கணும், ஆனா அவளை இப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் அப்போ எப்படிப்பட்ட ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்ல அவ இருந்திருப்பானு நெனச்சேன்,

 

 உண்மையாவே அவ அந்த மைன்ட் செட்ல இருக்கானே தெரியல, ஏற்கனவே நிறைய சஃபர் ஆகி இருக்கிறா, அவ எதிர்க்க இப்படி எல்லாம் பேசி அவளை திரும்பவும் ஹர்ட் பண்ணாதீங்க,

 

 எனக்கே அண்ணா ஏன் இப்படி சொன்னாருன்னு ஒன்னும் புரியல, ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஐடியா இருக்குமோ” பேசிக்கொண்டே திரும்ப வாசுகியும் நின்று அதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

 

“ஐயோ வாய வச்சிட்டு சும்மா இருக்கீங்களா ,இப்ப தாய்க்குலத்தை வேற சமாளிக்கணும்” என்று நினைத்தபடி நிற்க..

 

“ உண்மையாவே, உங்க அண்ணன் அந்த ஐடியால தான் இருக்கானா?” என்று இவர்கள் இப்படி கேட்கவும்,

 

“ அப்போ உங்களுக்கு பிரச்சினை இல்லையா? அவர்களை சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டீங்க போலையே” என்று கடுப்புடன் சரவணன் காலை மிதித்தபடி திவ்யா கூறினாள்.

 

“ஐயோ அம்மா, அத்த பொண்ணு பெக்க சொன்னா..” என்று ஏதோ சொல்ல வந்தவன்,

 

“ என்ன மாப்ள?” என்றதும், “இல்ல ஒன்னும் இல்ல அத்தை, பொண்ணு பெக்க சொன்னா தேவதையை பெற்று வச்சிருக்கீங்கன்னு சொன்னேன்”

 

 சரவணன் சிரித்தபடியே கூறினான்.

 

“ அப்படியா?” என்று அவரும் சிரித்துக் கொண்டவர், “அப்படி மட்டும் நடந்துச்சுன்னா நல்லா தான் இருக்கும், ஆத்மியும் நல்ல பொண்ணு, அவங்க அப்பா எப்படி கல்யாணம் பண்ணி வச்சாரு, கடைசில இப்படி பாக்கவே கஷ்டமா தான் இருக்கு, ஆனா என்ன நடந்துச்சுன்னு தெரியலையே, திரும்பி மேரேஜ் பண்ணி வாழ்வானு தெரியலையே” என்று யோசனையுடன் கேட்டார்.

 

விஜய் மாயவனை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை அவன் அவளிடம் அடங்குவானா? அல்லது அவள் அவனிடம் அடங்குவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால் ஆண் பெண் என்ற அதிகார அடக்கு முறையில் அல்ல, அன்பு என்னும், காதல் என்னும் காமம் என்னும், இல்லறம் என்னும் அடக்கு முறையில்..

 

“சரிமா அதான் ஹாஸ்டல் பாக்க போறோம் இல்ல” என்று அவள் கூறவும்,

 

“ இதுக்கப்புறம் அந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும்” என்று வாசுகி கூற,

 

“உங்களுக்கு அவளை பத்தி நல்லா தெரியும், கொஞ்சம் சுயகவுரவம் அதிகமா பார்க்கிறவ, நீங்களே புடிச்சி இழுத்து நிறுத்தினாலும் போறதுக்கு தான் ரெடியா இருப்பா, பாக்கலாம்” என்று சொன்னவள்,

 

“ ஆத்மி” என்று அழைத்தாள்,

 

 உடனே வந்தாள் அவள் தன் பேக்குகளுடன், பார்த்தீர்களா என்பது போல் கண்களால் காட்டவும், அவர்கள் அதை வேறு மாதிரி சொல்ல,

 

அவளதை வேறு மாதிரியாக நினைத்து விட்டால், தான் இங்கு இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை, கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்புவதற்குள் செல்ல வேண்டும்,

 

 ஏற்கனவே அண்ணன் தம்பியும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, இன்னும் தன்னிடம் பாசமாக பழகும் இவர்களும் ஏதாவது சொல்லிவிட்டால் தாங்க முடியாது என்று நினைத்தாள்.

 

“சரி மா, நாங்க ஹாஸ்டல் பார்த்துட்டு வரோம்” என்று சொல்லவும்,

 

“ நான் அப்படியே எங்கேயாவது ஓகே ஆயிடுச்சின்னா அப்படியே ஸ்டே பண்ணிக்கிறேன் ஆன்ட்டி” என்று கூறினாள் ஆத்மிகா.

 

வாசுகி ஏதோ சொல்ல வாய் எடுக்க, திவ்யா அவரை கண்களாலேயே வேண்டாம் என்பது போல் செய்கை செய்தாள்.

 

“ சரி பார்த்து போயிட்டு வாம்மா, அப்புறம் உன் போன் நம்பர் இருந்தா கொடுமா” என்று அவர் கேட்கவும்,

 

“ ஐயோ இல்லைங்க ஆன்ட்டி, என்கிட்ட போன் நம்பர் எதுவும் இல்லையே” என்று கூறினாள்.

 

அவர் புரியாமல் நிற்க்கவும், ஃபோன் இல்ல ஆன்ட்டி, ஃபோனை வாங்கின பிறகு நானே சொல்றேன்” என்று சொல்லவும்,

 

“ சரிடா பார்த்து இரு, எதுவா இருந்தாலும் பயப்படாத, நாங்க இருக்கோம்” என்று லேசான புன்னகையுடன் வெளியே செல்லப் போனாள்.

 

 அப்போது அங்கே வந்தான் விஜய் மாயவன், புருவம் சுருக்கி அவர்கள் இருவரையும் பார்க்க, அவன் பார்வையிலே “இல்லண்ணா ஹாஸ்டல் பார்க்க போறோம்” என்று சொன்னதும்,

 

“ஓ” என்றவன், “ஹாஸ்டல் பார்த்துட்டீங்களா இல்ல, இனிமேல் தான் பார்க்கணுமா?” என்று கேட்டது எல்லாமே தன் தங்கையிடம் தான், ஆத்மிகா கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவே இல்லை. 

 

“ஓகே எனக்கு சில லேடிஸ் ஹாஸ்டல் தெரியும், ரொம்பவும் சேஃப்டி ,அது பத்தி கேள்வி பட்டு இருக்கேன் கூட வரீங்களா” என்றதும் வேகமாக மறுக்கப் போனாள் ஆத்மி.

 

 அவனை சற்று நிமிர்ந்து பார்க்க, அவன் திரும்பி பார்த்த ஒரே பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.

 

 எரிச்சலாக வந்தது அவளுக்கு இவனைப் பார்த்தாலே பேச்சும் மூச்சே வரமாட்டேங்குது, மனம் வேண்டாம் என்று சொன்னாலும் வாய் ஏன் ஃபெவி குயிக் போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண்டிருக்கிறது,

 

 ஒருவேளை இந்த ஆண் வர்க்கத்தை பார்த்து பயப்படுகிறேனா என்று அவளுக்கே தன் மேல் கோபம் வந்தது,

 

இல்லை, இல்லவே இல்லை ஆனால் இவன் முன் பேசவே மறக்கிறாள், அந்த அரக்கனை பொறுத்து போனதற்கு காரணம் தன் குடும்பம் இவனை பொறுத்து போக காரணம், பயமா இவன் மேலா? எதற்கு, ஏன்?” என்று தெரியவில்லை.. 

 

“அவனே பயப்படாதே என்று சொல்லிவிட்டு சென்றான், ஆனாலும்..

 

“ என்ன போலாமா?” என்று கேட்டதும் திவ்யாவிற்கு முன் ஆத்மியின் தலை தான் தானாக சரி என்று ஆடியது, வாசுகியும் திவ்யாவும் அர்த்தமாக புன்னகைத்தனர். சரவணன் தான் வாயில் ஈ போவது கூட தெரியாமல் விஜயின் நடவடிக்கைகளில் பேயறைந்து நின்றிருந்தான்.

 

 இருவரும் அவனுடைய காரில் சென்றனர், அவனுடன் இருந்ததால் திவ்யாவும் அவளுடன் இலகுவாக பேச முடியவில்லை, “பயப்படாதடி எதுவா இருந்தாலும், நாங்க இருக்கிறோம்” என்று சொல்ல, அவள் எதுவும் சொல்லவில்லை.

 

தலையை குனிந்தபடியே தான் அமர்ந்திருந்தாள், அவர்களை ரியர் வியூ மிரரில் பார்த்தபடி டிரைவ் செய்து கொண்டிருந்தான் அவன்,

 

 ஏன் இப்படி இருக்கிறாள், ஒளி நிறைந்த அவள் கண்களில் இன்று உயிர் பேய் இல்லை, அந்த விழிகள் எதையோ பறிகொடுத்தது போன்று ஒடுங்கிய தோற்றம், நலுங்கிய உடை, அவன் மனம் வலித்தது.

 

 சிரிக்கவே மறந்து போன கண்களும் இதழ்களும் ,மனதை யாரோ கத்தியை கொண்டு கிழிக்கும் வலி அவனுக்கு, அவளோ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, வெளியே திரும்பிக்கொண்டாள்.

 

 ஆனால் ஆத்மி தன் அண்ணனை கவனித்தாள், அவன் பார்வையெல்லாம் என்னதான் ரோட்டில் கவனம் இருந்தாலும், ஆத்மியின் மீதும் இருந்தது,

 

 ஒரு ஹாஸ்டல் முன் வண்டியை நிறுத்தினான் அவன், “ஹாஸ்டல் வந்துடுச்சு மா” என்று அவன் திவ்யாவிடம் கூற, “ ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன், நீங்க போய் பாத்துட்டு என்ன ஏதுன்னு கேளுங்க, உங்களுக்கு ஓகேவா பாருங்க” என்று சொல்லவும்,

 

“ சரிணா” என்றவள் அவளை அழைத்துக்கொண்டு இறங்கினாள்.

 

 ஆத்மி அழைத்துக் கொண்டு திவ்யா முன்னே செல்ல, அவள் அந்த படியில் கால் வைத்தது தான் தாமதம்,

 

 யாரோ ஒருவன், “ஏன்டி நாயே கொஞ்சம் கூட அறிவில்ல, சூடு சொரணை இல்ல, எவ்ளோ தைரியம் இருந்தா, டிவோர்ஸ் அனுப்பிட்டு இங்க ஜாலியா ஊர சுத்த கிளம்பி வந்து இருப்ப, அதுக்கு தான் இந்த மாதிரி ஹாஸ்டல்கள் இருக்குதா?” என்று கொத்தாக அவளின் முடியை பிடித்து கீழே போட வந்தான் கணவன் என்ற பெயரில் இருந்த ஒரு அரக்கன் சுரேஷ்.

 

 

அவள் தலை முடியை பற்றி இருக்கும் அவன் கரங்களின் மேல் அதற்கு மேல் இருக்கமாக பிடித்திருந்தான், விஜய் கண்களில் அவ்வளவு ரௌத்திரம். 

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top