தேன்மழை 💞 - (33)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

வீட்டின் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த சண்முகம் ஐயாவிற்கு, எண்ணங்கள் யாவும் தற்போது கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் வீட்டை பற்றிய யோசனை தான்.

 

"அப்பா கிளம்பலாமா?" என குரல் கொடுத்தபடி சதாசிவம் அவரை அழைக்க, அவரும் சிறு தலையசைப்பை கொடுத்து மகனோடு காரில் அவ்விடம் நோக்கி பயணமானார்.

 

மனைவி சாவித்திரி பாட்டிக்கு தான் அவரது முன் கோவமும், பிடிவாத குணமும் கண்டு எங்கு போய் முடிய உள்ளதோ என நினைக்க வைத்தது. கட்டிட வேலையை மேற்பார்வையிட்டவருக்கு மனம் முழுவதும் அத்தனை சந்தோஷம். வீடு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் நெருங்கி விட்டது.

 

கீழே மட்டும் வீடு என்பதால், இன்னும் ஒன்றரை மாதங்களில் அனைத்து வேலைப்பாடுகளும் முடிந்து கைக்கு சாவி கிடைத்து விடும் என்னும் நெகிழ்ச்சியில் வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அதனை அளந்தவர் விழிகளில், பழைய கதவு ஒன்று தென்னை மரத்தில் நிறுத்தி வைக்கப்படிருப்பதை கண்டு எரிச்சலுற்றவர் காட்டுக் கத்தாக கத்தி அதை அவ்விடத்தில் இருந்து எடுத்திட கூறினார்.

 

எங்கிருந்து வீசியதோ புயல் போன்ற சூறாவளி காற்று, தென்னை மரங்கள் அத்தனை ஆவேஷம் கொண்டு ஆடியது. அதனை அங்கு வேலைப்பார்த்தவர்களே  புதிதாக தான் பார்த்தனர். இதுநாள் வரை இப்படியொரு காற்றை கண்டது இல்லை.

 

உச்சி கிளையில் இருந்த தென்னை மரக் கிளை முறிந்து விழுந்தது. நூலிழையில் உயிர் தப்பித்தார் சண்முகம் ஐயா. அவர் மட்டும், எலெக்டரிஷன் அழைப்பை காதில் வாங்காது நின்றிருந்தால், அவரை விடி காலையில் அடக்கம் தான் செய்திருக்க வேண்டும்.

 

விழுந்த கிளை கண்டு அவரே ஓரு நொடி திகிலாக திரும்பி பார்க்க, அதே திகில் அங்கிருந்த ஒரு சிலர் கண்களிலும் பயத்தை உண்டாக்கியது. இந்த காற்றும், கிளை முறிவும் கண்டு சதாசிவம் நடுநடுங்கி நின்றார்.

 

"அப்.. பா.. நீங்க இந்த வீட்டு வேலை முடியுற வரை இங்க வர வேண்டாம்.. வீட்டுல இருங்க.."

 

"என்ன டா பயந்துட்டயா? இதுக்கெல்லாம் நான் பயப்படுவேனா? எவ்வளவோ பாத்துருக்கேன் சதாசிவா. இதெல்லாம் நம்மளை திசை திருப்புற ஒரு விஷயம்.."

 

"அதுக்கு இல்லை பா.. நிலை வைக்கும் போதே, கற்பூரம் பத்திக்காம அமந்து போய்டுச்சு. இப்போ இங்க வரவும்.." என்றவர் பார்வை தனது அப்பாவிற்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்னும் ரீதியில் நோக்க..

 

"மலை போல நான் இருக்கும் போது நீ எதுக்கும் கவலை படக்கூடாது.." என்றவர் தன் மகன் தோளை தட்டிக் குடுத்து நகன்றார். சதாசிவத்திற்கு, பயபந்து உருண்ட வேகத்தில் நெஞ்சை அடைத்தது.

 

"பாட்டி.. மாமாக்கு போன் பண்ணி குடுங்க.."

 

"ஹேய் குஷி.. பேசாம சாப்பிட்டு படு.." என ருத்ரா தன் அண்ணனிடம் வீடியோ கால் பேச வேண்டும் என்ற மகளை அதட்டி, ஜூஸ் குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவளோ ஜூஸ் கிளாசை ஒரே தள்ளாக தள்ளி விட்டு, கல்யாணியின் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டாள்.

 

"ருத்ரா!!" என அலறலோடு ராஜீவ் அங்கு வர, அவனை நோக்கி ஓடினாள்.

 

"மாமாக்கு போன் பண்ணி குடு மாமா.. இவ என்னை கிள்ளி வைக்கிறா.." என்றதும் ருத்ராவை காண அவனுக்கே செவியோடு அறைய தோன்றியது.

 

ஏனோ, குழந்தை அவளை விடுத்து அண்ணனிடம் அதீத பாசமாக இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என புரிந்து கொண்டவன் அவளை கொஞ்சி கெஞ்சி சமன் செய்ய முயற்சித்தான்.

 

அவளோ பிடிவாதமாக, பேசியே ஆக வேண்டும் என்றிட ருத்ராவே அவனுக்கு அழைத்தாள்.

 

அழைப்பு மணி ஒலித்த நிலையில் தான் இருந்தது தவிர அவனோ ஏற்கவில்லை.

 

ஏற்கும் நிலையில் அவனில்லை என்பதை யாரறிவார்?

 

முதலில் அவனது பீடிகையான செயலில் அதிர்ந்தவள், இது வம்பிற்கான ஆரம்பம் எனவோ யோசித்து விட்டு அவனை ஊடுருவல் பார்வை பார்த்தப்படி அங்கிருந்து நகன்று விட்டாள்.

 

காதலன் என்றிருந்த போது கூட அவளது விலகல் பெரிதாக தெரியவில்லை. இன்று கணவனாகிய பின் கோவத்தை தோற்றுவித்தது.

 

அவனது அலைபேசி அடிக்கொரு முறை சிணுங்கி அமைதியடையவது உடை மாற்றிக் கொண்டிருந்தவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

 

"என்ன ஹேபிட் இது.. இத்தனை டைம் போன் அடிக்குது.. எங்க போனான்னு தெரியல.." என புலம்பியப்படி அறையில் இருந்து, மாடி நோக்கி ஓடியவள் அஞ்சனம் பூசிய விழிகள் அவனை கண்டு அதிர்ச்சியில் விரிந்தது.

 

அவள் செல்லும் போது எப்படி அமர்ந்திருந்தானோ, அதே போல் ஆழியளவு ஏக்கமும் சிந்தனையும் ஒன்று சேர்ந்தப்படி அமர்ந்திருந்தான் நாயகன்.

 

'என்ன அதிசயம்.. காலையில இருந்து ஒரு மாதிரி.. இருக்கானே.. நார்மல் ஆகிட்டானோ..' என யோசித்தவள் அவன் மொபைலை எடுத்து பார்க்கும் நேரம், அவள் அலைபேசி சத்தமாக ஒலி எழுப்பியது. அவன் முதுகுக்கு பின்னால் இருந்தே.

 

அப்பிரத்யேகமான அழைப்பு ஜனனி உடையது. லொகேஷன் அனுப்பியிருப்பாளோ என்னும் நினைவு வர, அவன் போனை டேபிள் மீது போட்டு விட்டு அப்படியே அவன் புறம் திரும்பி பார்த்தாள்.

 

பிரதீஷ் கையை மாரினூடே கட்டிக்கொண்டு, காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன் விஷமமாக கண்ணடித்து சிரித்தான்.

 

"மொபைல் வேணும்ன்னா நீயே.. எடுத்துக்கோ.. இல்லை தூக்கி வீசிடுவேன்.. அண்ட் ஒன் மோர் திங்க் நான் கேட்டதை குடுத்துட்டு எடுத்துக்கோ.."

 

என்றவன் பேச்சில் பெண்ணவள் ரோமக் கால்கள் சிலிர்த்தடங்கியது.

 

'நான் ஏன் தரணும்? கொஞ்சம் நெர்வஸ்ஸா வேற இருக்கு.. திடிர்னு முத்தம் குடுன்னு கேட்டா எப்படி?

 

இதுநாள் வரை சண்டை வேற.. எப்பவும் பேசிட்டிருந்தா ஒன்னும் தெரியாது..' என யோசித்தவாறு, நின்றிந்தவள் தொண்டைக் குழிக்குள் எச்சில் மிக கடினப்பட்டு கடந்து செல்வதை பார்த்தவன் மனம் தறிகெட்டு ஓடியது.

 

"மேடம்.. போன்.. வேணுமா.. வேணாமா.. உன் ஃபிரண்ட் தான் கால் பண்ணுறா.." என்று அழுத்திக் கூறிட, மிகுந்த தயக்கத்தோடு அவனை நெருங்கி நின்றவள் ஆடையையும, இடை மேலான அங்க வளைவையும் விழி கொட்டாமல் பார்த்தான்.

 

"என் ட்ரெஸ் போட்டுக்கலாம்.. பட் நான் சொன்னா செய்ய மாட்ட.. ஓகே தூக்கி வீசிடுவா.." என்றவன் தன்னருகில் நின்றிருந்தவளை அழுத்தமாக கேட்பது போல், போலியான கோவத்தோடு கேட்டு வைத்தான்.

 

அவனை நோக்கி குனிந்தவளுக்கு முதுகு காட்டாது, வேண்டுமென்றே நிமிர்ந்து அமர்ந்து கொண்டவன் நயனங்களை மிக அருகில் கண்டு இறைஞ்சியவளிடம் கற்றுக் குரலில் கிசு கிசுத்தான்.

 

"முடிஞ்சா.. எடுத்துக்கோ டி.."

 

என்றவன் பார்வையே அவளை எதுவும் செய்ய முன்னேற விடாது தடுத்து விட்டது.

 

இருந்தும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டதில், எட்டி எடுக்க முயற்சித்தாள்.

 

அத்தனை நெருக்கத்தில் நின்றிருந்தவள் தொண்டைக்குழியில் நச்சென முத்தமிட்டான். அடுத்தொரு முத்தம் அவள் தொண்டைக் குழியை விட்டு இறங்கியது அவள் அணிந்திருந்த உடை மீதே.

 

அவனது திடிர் செயலில் ஊனுறைந்து நின்றவளை கண்டு,  "நீ நின்னு தான் எடுக்கணும் அவசியம் இல்லை ராசிகா.. இங்க உட்கார்ந்து கூட தேடலாம்.." என்றவன் தன் மடியினை விழியசைவில் அவளுக்கான இடமென சுட்டிக் காட்டினான்.

 

அவளோ தயங்கி நிற்க.. வலிய கரம் கொண்டு இழுத்து அமர வைத்தவனை, கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்து விசும்பி அழுதாள்.

 

எப்படியெல்லாம் காதல் கொண்டு, தன் வாயாலே வேண்டாம் என்றுக் கூறி.. மீண்டும் ஒன்று சேர்ந்த பின்பும், உண்டான விலகல் அனைத்தும் அவன் அண்மையிலும் அவ்வணைப்பிலும் இழையோடியது.

 

"ஸாரி.. டி.."

 

"என்மேல.. தானே.. தப்பு.."

 

"அதெல்லாம் ஒண்ணும்மில்ல டி.. இப்போ கூட உனக்கு ஒரு சின்ன ஷாக் தர தான் இப்படி பண்ணேன்.."

 

"பிரதீஷ்.. நான் வேணும்ன்னு எதுவும் பண்ணல.. உங்க தாத்தாவும், என் மாமாவும்.. மேரேஜ் நடக்காம.." என மீண்டும் பழைய கதையை கூற விழைந்தவளை, விலக்கி மேலும் இறுக கட்டிக் கொண்டவன் பழைய பஞ்சாங்கம் நமக்கு எதற்கு என்றான்.

 

"என் மேல கோவம் இருக்கா.. இன்னும்.."

 

"கோவமில்லை.. வேற தான் இருக்கு.." என்றவன் குரலும், நுனி மூக்கால் அவள் காதோரம் கூசியப்படி பேசியதில் தகித்தவளை சற்று விலகியிருந்து ரசித்தான்.

 

"இன்னும்.. போனை எடுக்கலையே.." என்றவன் விரல்கள் அவளது வெற்று இடையில் தடையின்றி ஊற, இதழ்களோ அவளது கழுத்து வளைவில் ஊறியது.

 

விருட்டென எழுந்து கொண்டாள். விழியசைவிலே இப்போது வேண்டாம் என்றவளை, விலகி செல்லும் முயற்சி இல்லை ஆடவனுக்கு.

 

அவள் விருந்து படைத்தே தீர வேண்டும் என்னும் நோக்கில் நெருங்கியவன், வாகாக அவள் இடை நோக்கி இழுத்து நெஞ்சில் அணைத்தான்.

 

அவள் காதோரம் தனது அழுத்தமான முத்தத்தை பதித்தவன், பக்கவாட்டு சுவற்றில் அவளை தள்ளி நிறுத்தினான்.

 

பதமாக அவள் இதழ் கொய்ய; அவனது முத்த வேட்கையில் துளிர்த்தடங்காத பெண்ணவளை மஞ்சத்தில் சரித்தான்.

 

இரவும் அல்ல.. பகலும் அல்ல அவர்கள் கூடிக் கழித்த நேரம்..

 

ஆனால், அந்த மங்கிய மாலை நேரப்பொழுது துவங்கிய தாபம் பொழுது புலரும் வரை தொடர்ந்தது.

 

"பிரதீஷ்.. ம்வாஹ் ன்னு சொல்லிட்டு ஸ்நொக் போல பண்ணுறீங்க கிஸ்ஸை!"

 

அவனை பின்பக்கம் இறுக கட்டிக் கொண்டு, கேட்டவள் கேள்வியில் கலகலவென சிரித்தான் மீண்டும் தொடக்கத்திற்கே வர.

 

"ஸ்நொக்னா வேற.. ம்வாஹ்னா வேற.. ஸ்நொக் நான் கேட்டது உனக்கு தெரியல.. அதான் லிப் கிஸ்ஸை ஸ்நொக்ன்னு சொன்னேன்" என்றவன் விரல்கள் மட்டும் அவளது மேனியில் இன்பமாக உலா சென்று கொண்டிருந்தது.

 

"ம்வாஹ் ஒன்லி கிஸ்.. ஸ்நொக் கிஸ் அண்ட் டச்சிங்.." என்றவன் மீண்டும் அவளை மோகத்தில் ஆழ்த்திட நெருங்க, தன் முகத்தை மூடி சம்மதம் தந்தாள்.

 

அவனது தடித்த இதழை கவ்வி அவள் ருசிபார்க்க, அவனும் தான் சலைத்தவன் இல்லை என்பது போல் முத்தத்தோடு சேர்த்து பல கடிகளை அவள் இதழுக்கு தந்தான். இதழில் தொடங்கிய முத்தமும், கடிகளும் அவளின் மேனியில் பல மெல்லிய இடங்களில் சங்கமித்தது.

 

இரண்டு நாட்களுக்கு பின்..

"அம்மா.. நேத்து சுமித்ராவை மால்ல பாத்தேன்.."

 

ராஜீவ் கூறிய வார்த்தை கேட்டு அவரவர் வேலையில் இருந்தவர்கள் கூட அதிர்வோடு திரும்பி பார்த்தனர்.

 

"சுமித்ரா? நல்லாருக்காளா? உன்கிட்ட பேசுனாளா எதுவும்?" என கேட்டவாறு தெய்வானை கண்ணீர் மல்க அவனை நெருங்க, அதற்கு மௌனம் மட்டுமே பதிலாக வந்தது அவனிடம்.

 

"தெய்வா.. அழாதே.." என தேற்றிய கல்யாணி விழிகளும் நீரை தத்தெடுத்தது.

 

"பாவி மக.. என்ன நினைச்சு தான் இப்படி பேசாம இருக்கான்னு தெரியல.." என்ற சாவித்திரி பாட்டியும் தலையில் அடித்துக் கொண்டு அழ, அவர் அழுவதை கண்ட தெய்வானை மற்றும் கல்யாணி கண்களிலும் நீர் குளம் போல் பெருகியது.

 

"ராஜீவ் அவளுக்கு ஒரு போன் பண்ணி பாரு டா.. பாத்து எத்தனை வருஷம் ஆகுது.. ஒரு தடவை முகத்தை மட்டும் பாத்துக்குறேன்.." என கல்யாணி ஏக்கமாக கூற, ராஜீவ் வேண்டாம் என்று விட்டான் மறுப்பாக தலையசைத்த படி.

 

"ராஜீவ் அம்மாக்காக போன் பண்ணு டா.. சொன்னா கேளு.." என்றவர் கண் கலங்கி அவன் முன் நிற்க, "நான் நிறைய டைம் போன் பண்ணிட்டேன் பெரியம்மா அவ எடுக்கல.."

 

"இந்த கிழவி சாகுறதுக்குள்ள வீடு வருவாளான்னு தெரியல. இல்லை பொணத்தை பாக்க தான் வரப் போறாளா தெரியல.."

 

"பாட்டி என்ன பேச்சு இது? அப்போ நாங்க யாரும் உங்களுக்கு வேணாமா?"

 

"நீங்க எல்லாரும் போல தான டா அவளும்.. இப்படியா இருப்பா? யார்ட்டையும் பேசாம.. பெத்த அப்பன் பக்கவாதத்துல படுத்துட்டான்னு தகவல் சொல்லியும் வந்து பாக்க கூட தோணல அவளுக்கு.. எங்க இருந்தாலும் நல்லாருக்கட்டும் டா.."

 

"அம்மா.. என்ன பேசுறீங்க? அவ வருவா.. அதுக்குன்னு நீங்களே உண்மை புரியாம வெறுத்து பேசாதீங்க.."

 

"ராஜீவ், நீ பேசாம இரு டா.. பெத்த வயிறு பத்தி எரியுறது எனக்கு மட்டும் தான் தெரியும்.." என்ற தெய்வானை பேச்சில் அவனும் அதற்கு மேல் பேசாது நகன்று விட்டான்.

 

சண்முகம் அவர்கள் வருவது புரிந்து கொண்டு எல்லோரும் அரக்க பறக்க வேலையில் மூழ்க, ஏனோ எவரது முகமும் சரியில்லை என்ற உணர்வு ஓயாது அடித்துக் கொண்டது.

 

தோசை வார்த்து வந்த ருத்ரா முகமும் ஏதோ போல் இருப்பதை கண்டவர், "என்ன ருத்ரா எல்லாம் வெள்ளத்துல அடிச்சுட்டு போய், நிவாரணத்துக்கு ஒக்காந்த மாதிரி இருக்காங்க.. முருகனை நினைச்சு எல்லாம் இப்படி இருக்காங்களோ?" என்றவர் தோசையை வெங்காய சட்னியில் தோய்த்து உண்டபடி வினவ..

 

ஏன் வம்பு உண்ணும் போது அமைதியாக உண்ணட்டும் என நினைத்தவள், எதுவும் கூறாது இருந்தாள். ஆனால், ராஜீவ் குத்தலாக கூறினான்.

 

"இந்த வீட்டுல சில பேருக்கு யாரும் நல்லா இருந்தா பிடிக்காது. அதான் இங்க அதுக்கு வாய்ப்பில்லைன்னு தூரமா போனவங்க, எல்லாரையும் விட்டு தூரமா போய்ட்டாங்க.."

 

அவனது பேச்சில் உண்டு கொண்டிருந்த தாத்தா முறைத்து பார்க்க, வீட்டினர் அனைவருக்கும் ஐயோ என்பது போல் ஆனது.

 

ராஜீவ் எப்போதும் இப்படி பேசாத ஒரு ஆள். ஆனால், அக்கா விடயம் அல்லவா? நேரில் பார்த்தவளை நெருங்கி சென்றதும் விலகி சென்றால் யாருக்கு தான் மனம் கனக்காமல் இருக்கும்? அதன் வலி வார்த்தையில் குத்தலோடு வந்தது.

 

"சிறுசுங்க எல்லாம், சுதந்திரம்ன்னா பொம்பளை பின்னாடி காதல்ன்னு திரியுறதல நினைச்சுட்டு இருந்தா, எவன் வீடும் குடும்பமா இருக்காது. எல்லாம் தெருவுக்கு தான் வரணும். குடும்பம்ன்னா ஒற்றுமையா வாழுறது, இனம் இனத்தோட சேருறது.." என்றவர் பேச்சில் வெகுவான இறுமாப்பு கலந்திருக்க, ராஜீவ் மீண்டும் வாயாட வாய் திறந்தான்.

 

தெய்வானை வேண்டாமென தலையசைத்து விட, பாதி உண்டதோடு எழுந்து விட்டான்.

 

"ரோஷம் கவுரத்துல, குடும்ப மானத்தை காப்பாத்துறதுல இருக்கணும். மன்மத லீலை பண்ணுறதுல இருக்க கூடாது."

 

என்றவர் பேச்சில் எல்லோரும் ஒரு நொடி அதிர்ந்தனர்!

 

ஆண், பெண் என்று எல்லோரும் இருக்கும் போது இது பேசக்கூடிய பேச்சா என அனைவரும் விக்கித்து நிற்க, "அதை ஒரு பொண்டாட்டி கட்டுனவர் பேசணும்.." என ராஜீவ் ஆத்திரமாக கூற அனைவரும் அவன் பெயரை ஆவேசமாக உச்சரித்தனர்.

 

"ராஜீவ்.. யாரு கிட்ட பேசுறேன்னு பாத்து பேசு டா.."

 

அவனோ முறுக்கிக் கொண்டு வர, எல்லோரும் அவனை அடக்க ஓடிச் சென்று பிடித்தும் துள்ளினான் மல்லுக்கு போகவே.

 

"என்ன இள ரத்தம் துள்ளுதோ ரொம்ப? தம்பி.. ரெண்டு பொண்டாட்டி கட்டுனது எனக்காக இல்லை.. அதே போல எவ பின்னாடியும் நான் போகல..

 

என் முதல் பொண்டாட்டியை தெய்வமா நினைச்சு கும்பிட்டுட்டு இருக்கேன்.. அவ போட்ட வாழ்க்கை பிச்சையில தான் நீ, உன் அப்பன் உருவானது..

 

இல்லைனா என்னோட இந்த வம்சமே இல்லாம போயிருக்கும்.. நான் ஒன்னும் எவ பின்னாடி போய், இஷ்டத்துக்கு கூத்தடிக்கல.. உங்களை போல.. அதெல்லாம் புதுசா நாலு காசு பாத்தவங்களுக்கு தான் அந்த எண்ணமெல்லாம் வரும்.."

 

"சத்தமா.. பேசுனா நீங்க நல்லவர் ஆகிடுவீங்களா? நீங்க படுத்தி வச்சதுல தான் பாட்டி சமாதி ஆகிட்டாங்க.. அப்பறம் உங்களுக்கு பொம்பளை இல்லாம வாழ முடியலைன்னு சாவித்திரி பாட்டியை கல்யாணம் பண்ணிட்டீங்க.."

 

அவன் பேசி முடித்த அடுத்தக் கணமே, சதாசிவம் அறைந்து விட்டார். அதன் பின் தெய்வானை அறை, அடுத்த அடி சாவித்திரி பாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டான்.

 

"நியாயத்தை தானும் பேசுறது இல்லை.. அடுத்தவனையும் பேச விடுறது இல்லை.. எப்படியோ நாசமா போங்க இவருக்கு ஜால்ரா போட்டு.." என்றவன் எல்லோரின் பிடியில் இருந்து விலகி வெளியேற..

 

"தம்பி.. ரொம்ப ஆடுனா சொத்துல நயா பைசா கிடைக்காது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை தான் எடுக்கணும்.." என்றவர் குரலை கேட்டு முறுக்கிக் கொண்டு வந்தவனை, எல்லோரும் வழி மறித்தனர்.

 

"உங்க சொத்து யாருக்கு வேணும்? படிச்சுருக்கேன்.. சொந்த கால்ல நிப்பேன்.."

 

அதற்கு அவனது கால்லை வஞ்சகமாக பார்த்தவரை அவன் கவனிக்கவில்லை.

 

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top