வஞ்சகன் - 11

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 11

 

“இப்போ எதுக்கு சிரிக்குறீங்க?.. நான் சாகப் போறேன்னு சொல்றேன்..” 

 

“நான் மட்டும் நீ 100 வருஷம் வாழப்போறேன்னா சொன்னேன்.. ஏன்டி.. எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம்.. என்னமோ நான் மட்டும் ஆயிரம் வருஷம் வாழப் போற மாதிரிப் பேசுற?. இன்னைக்கு நீ ன்னா.. நாளைக்கு நான்..” என்றான் எளிதாக, 

 

“என்னைக் காதலிக்கிறேன்னு சொல்றீங்க?.. நான் செத்தா உங்களுக்கு கஷ்டமில்லையா?..”

 

“நீ செத்தா, உன் நினைவுகளோட வாழ்ந்துட்டுப் போறேன்.. இதுக்கு எதுக்குடி நான் கஷ்டப்படப் போறேன்?..” என்றவனை, எந்தலிஸ்ட்டில் வைப்பது என்றே அவளுக்குப் புரியவில்லை.. 

 

சட்டென்று, போனை அணைத்து விட்டாள் யாதிரா.. 

 

அவனோடு பேசிக் கொண்டிருக்கவும் மனமில்லை.. 

 

மீண்டும் அழைப்பான் என யோசித்தாள்.. அவனோ அழைக்கவேயில்லை.. 

 

அறைக்குள் சென்ற மஹாலெட்சுமியோ அழைத்தது ப்ரணவ்வீற்குத் தான்.. 

 

“சொல்லு அக்கா..” 

 

“நீயெல்லாம் கமிஷனர்னு சொல்லாதேடா.. ச்ச்சீய்ய்.. த்தூ..” என்றதும், நீண்ட பெருமூச்சொன்று ப்ரணவ்வீடம் இருந்து வந்தது.. 

 

“இப்போ என்னை என்ன பண்ணச் சொல்லுற?.. மாமா தப்பு பண்ணலைன்னு சொல்லுறீயா?..” என அழுத்தமாக கேட்டான் ப்ரணவ்.. 

 

சட்டென்று அமைதியாகி விட்டார் மஹாலெட்சுமி.. 

 

தயக்கமும், பயமும் அழுகையாக வந்தது அவரிடம்.. 

 

“அக்கா, ப்ளீஸ் அழாதே..” என்றார் ப்ரணவ்.. 

 

“வேற என்னடா பண்ணச் சொல்லுற?.. ஒரு பக்கம் புருஷன் ஜெயிலுக்குப் போயிருவாரோன்னு பயமா இருக்கு.. இன்னொரு பக்கம் என் பொண்ணு அவ அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதை நினைச்சு கவலையா இருக்கு.. நான் என்ன தான் டா பண்றது?..” 

 

“அக்கா.. ரிலாக்ஸ்.. எனக்கென்னவோ, நீ யாதிராவை சயந்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்லதுன்னு தோணுது?..” 

 

“என்னடா பேசுற?.. ஊர் உலகத்துல எங்கேயாவது இந்தக் கூத்து நடக்குமா?.. அண்ணணுக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் நடந்தா, அது நம்ம சமூகத்துக்கே சீர்கேடு டா..” 

 

“அக்கா.. எனக்கு சயந்தன் மேல நம்பிக்கை இருக்கு..” என்றதும் தான் தாமதம், போனை கட் பண்ணி விட்டார் மஹாலெட்சுமி.. 

 

அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

 

ப்ரணவ் இப்படிச் சொல்வான் என கனவில் கூட அவர் நினைத்ததில்லை.. 

 

“அண்ணனை, தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்.. மடச்சாம்பிராணி மாதிரி பேசுறதை பாரு..” என புலம்பித் தள்ளினார்..  

 

தன் கணவனின் வாழ்க்கைக்காக, தன் மகளை பாழங்கிணற்றில் தள்ளிவிட அவருக்கு மனமில்லை.. 

 

ஏதோ யோசித்தவர், தன் பையை எடுத்தார்.. அதில் தேவையான அத்தனை பொருட்களையும் எடுத்து வைத்தவர், படபடவென யாதிரா அறையின் கதவை தட்டினார்.. 

 

அப்பொழுது தான் சயந்தனிடம் பேசி முடித்து விட்டு திரும்பிய யாதிரா சற்று திடுக்கிட்டுப் போனாள்.. 

 

வேகமாக வந்து கதவை திறந்தாள்.. 

 

கையில் பையுடன் நின்றிருந்த மஹாலெட்சுமியை புருவம் சுருக்கிப் பார்த்தாள் யாதிரா.. 

 

“என்ன அம்மா?..” என்றாள் யாதிரா சற்று படபடப்பாக, 

 

“உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு.. வா நாம எங்கேயாவது போகலாம்?..” 

 

“என்ன ம்மா பேசுறீங்க?.. என் படிப்பு?.” 

 

“படிப்பு நாசம்மா போகட்டும்.. இனி இங்கே நடக்கிறது எல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது.. வாடி போகலாம்..” என அவளுக்குத் தேவையானதை அனைத்தையும் பையில் போட்டு அடைத்தார்.. 

 

“அப்பா..” என்றாள் தயக்கமாக, 

 

“அந்தாளு ஜெயிலுக்குப் போகட்டும்.. பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு, என் பொண்ணு வாழ்க்கையை அந்த நாசம்மா போறவன்கிட்ட அடகு வைப்பாரா?..” என்றவருக்கு ஆதங்கமாக இருந்தது.. 

 

எந்தப் பக்கம் போனாலும், பாரிகேடு போட்டு அடைத்து வைத்தாள் அவரும் என்னதான் செய்வார்?.. அய்யோ பாவம்.. அந்தர் பல்ட்டி அடித்தாவது, தன் மகளைக் காப்பாற்ற தவியாய் தவித்தார்.. 

 

“வாடி..” என அவர் ரெண்டு பை.. இவளுக்கு ரெண்டு பை.. என அடைத்துக் கொண்டு வெளியே வர, அங்கு அப்பொழுதும் சிலையென அமர்ந்திருந்தார் சந்தோஷ்.. 

 

கண்களில் தாரை, தாரையாக கண்ணீர்.. அவரின் கண்ணீரைப் பார்த்த மஹாலெட்சுமிக்கு அவரை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் போனது.. 

 

“இப்படியே அழுதுட்டு இருக்கப் போறீரா?..” என கேட்ட அதட்டல் குரலில், திடுக்கிட்டு நிமிர்ந்தார் சந்தோஷ்.. 

 

வேறு என்ன செய்வது, அடி வாங்கிய சிறு பிள்ளை போல பாவமாக முழித்துக் கொண்டிருந்தார் அவர்.. 

 

“வாரூம் ய்யா.. ஊரை விட்டுப் போகலாம்..” என்றவரை அதிர்ந்துப் பார்த்தனர் மற்றவர்கள்.. 

 

“என்ன ம்மா சொல்லுற?.. ஊரை விட்டுப் போகப் போறோமா?.” 

 

“அப்போ, முறை தெரியாதவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லுறீயா?.. நான் செத்தாலும் அது நடக்காது டி..” என்றவர், சந்தோஷக்ாகக பையை அடைத்து வைக்கச் சென்றார்.. 

 

வேக, வேகமாக வீட்டில் சேர்த்து வைத்த காசு முதற்கொண்டு அனைத்தையும் அடைத்துப் போட்டு ஹாலுக்குள் வர, அங்கு சோபாவில் கம்பீரமாக அமர்ந்திரந்தான் சயந்தன்.. 

 

அவனைப் பார்த்ததுமே, சடன் ப்ரேக் போட்டு நின்று விட்டார் மஹாலெட்சுமி..

 

நள்ளிரவு 2 மணி.. அவன் இப்படி நடுவீட்டில் உட்கார்ந்திருப்பான் என அவர் என்ன கிளி ஜோசியமா பார்த்தார்?.. அய்யோ பாவம்.. மாட்டிக் கொண்டதைப் போன்ற பாவனையில் முழித்தார் அவர்..  

 

“என்ன சித்தி, சித்தப்பா கூட செகண்ட் ஹனிமூனா?..” 

 

“ஏன் அந்தப் புள்ளையையும் கல்யாணம் பண்ணிக்கப் போறீயா?..” என்றவரின் பேச்சில், சந்தோஷ் தன் கவலை மறந்து பல்லைக் காட்ட.. 

 

யாதிராவோ, என்னடா நடக்குது இங்கே என்பதை போல் மண்டையை சொறிந்தாள்.. 

 

தான் சொன்ன பின்பு தான் அதன் அர்த்தம் உணர்ந்த மஹாலெட்சுமி.. 

 

“ச்சைய்.. தலையெழுத்து.. உன் கூட பேசிப் பேசி, நானும் எப்படி மாறிட்டேன் பாரு டா..” 

 

“ஏன் அதுல என்ன தப்பா?.. சித்தப்பாவுக்கும், உங்களுக்கும் ஒன்னும் அப்படி வயசாகலையே?..” என்றான் சயந்தன் படு நக்கலாக, 

 

“ம்க்கும்.. பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுனானாம்.. அந்த மாதிரி இருக்கு உன் பேச்சு.. காலம் போன கடைசியில குழந்தை ஒன்னு தான் கேடு.. இருக்கிற ஒரு பொண்ணையே, கிராதகன் உன் கையில பிடிச்சிக் கொடுக்கக்கூடாதுன்னு திணறுறேன் நானு..” என்றார் அழுகையுடன்.. 

 

“இதுக்கு ஏன் சித்தி அழணும்?.. நீங்க அழுதா, என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?.” 

 

“அப்போ, அப்படியே வெடிச்சுச் சாகட்டும்..” என்றார் பட்டென்று.. 

 

“சித்திஈஈஈஈஈஈ..” என்றான் சிவாஜிகணேசன் போன்று, 

 

“இவன் ஒருத்தன்..” என புலம்பிக் கொண்டே இருந்தவர், வேகமாக தன் பையைக் கையில் எடுத்தார்..

 

அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த சயந்தனின் முகம் இறுகியது.. 

 

“என்ன சித்தி?.. ஊரை விட்டுப் போகப் போறீங்களா?..” என்றான் அழுத்தமாக, 

 

“அதான் நீ வந்து கெடுத்துட்டீயே?.. இனிமேல் எங்கிட்டு இருந்துப் போறது?.. நாங்க ரூம்க்குள்ள போறோம்..” என்றவர், மறக்காமல் யாதிராவின் கையைப் பிடித்துக் கொண்டு தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்.. 

 

“குரூப்ல டூப்பு மாதிரி.. எங்க சித்தி மட்டும் இந்த வீட்டுலேயே உஷாரா சுத்துது..” என சொல்லிக் கொண்டே, தன் தாயின் அறைக்கு முன்பாக வந்து நின்றான்.. 

 

சித்தியை டென்ஷன் ஏத்தி விட்டாய்ச்சு.. அடுத்த டார்கெட் அவனைப் பெற்ற மகராசி தானே.. 

 

“தாய்க்குலமே.. தாய்க்குலமே.. தாயே.. தாயே..” என்றான் கதவில் தாளம் போட்டுக் கொண்டே, 

 

வேகமாக வந்து கதவை திறந்தார் கெளதம்.. 

 

இடையில் லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற தந்தையைப் பார்த்து புருவம் சுருக்கினான்.. 

 

அவருக்கு இவனைப் பார்த்தாலே எரிச்சல், எரிச்சலாக வந்தது.. 

 

“என்னடா?..” என்றார் எரிச்சலாக, 

 

“ஏன் டாடி.. எனக்கு தங்கச்சி ரெடி பண்ற ப்ராசஸ்ல இருந்தீங்களா?.” 

 

“ம்க்கும்.. உன்னையே சமாளிக்க முடியலை.. இதுல உனக்கு தங்கச்சி ஒன்னு தான் கேடு..” என்றபடி வழியை விட, அறைக்குள் நுழைந்தான் சயந்தன்.. 

 

அஞ்சலியோ நல்ல நித்திரையில் இருந்தார்.. 

 

“இங்கே வீடே ரெண்டு பட்டுக்கிடக்கு.. எப்படி டாடீய்ய்.. உன் பொண்டாட்டி மட்டும் நல்லா உறங்குது?.” என கன்னத்தில் கை வைத்து கேட்டவனைக் கண்டு முறைத்தவர், 

 

“ரெண்டு நாளா உறங்கலை டா.. பாவம் ரொம்ப சோர்ந்துப் போயிட்டா.. அதான் இப்போ தூங்குறா?.” என்பதற்குள், கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தார் அஞ்சலி.. 

 

“என்னடா வேணும்?..” என்றார், கலைந்த கூந்தலை அள்ளி முடித்தபடி, 

 

“நாளைக்கு காலையில 10.30 மணிக்கு எனக்கு வடபழனி முருகன் கோவில்ல கல்யாணம்.. ரெண்டு பேரும் மறக்கமாக வந்துடணும்..”

 

“வர முடியாது.” என்றார் கெளதம்.. 

 

“ரொம்ப சந்தோஷம்.. நீங்க வரலைன்னா போங்க.. அம்மாவை அனுப்பி விடுங்க..” 

 

“அவளும் வரமாட்டா..” என்றார் கெளதம் அதிகாரமாக, 

 

“அதை நீங்க சொல்லாதிங்க டாடீ.. அம்மா சொல்லட்டும்..” 

 

“நான் சொல்றது தான், அவ சொல்றதும். அவ வரமாட்டா..” என்றார் கெளதம் பிடிவாதமாக, 

 

“ஓஹ்.. அப்போ நாளைக்கு உங்களையும் கடத்தணுமா?..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் பெற்றவர்கள்.. 

 

“கடத்தப் போறீயா?.. யாரை?..” 

 

“உங்களைத் தான்.. என் கல்யாணத்துக்கு நீங்களா வந்தா மரியாதை.. இல்லைன்னா, கண்டிப்பா கடத்திக் கொண்டு தான் போவேன்..” 

 

“கடத்திடுவீயா நீ?..” என்றார் கெளதம், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே, 

 

“கமிஷனரையே கடத்துடுறேன்.. நீங்க எல்லாம் எனக்கு எம்மாத்திரம்?..” 

 

“ஹான்..” என விழித்தனர் பெற்றவர்கள். 

 

“என்னடா நீ?.. இப்படி பேசிட்டு சுத்துற?.. ப்ரணவ் உனக்கு என்னடா பாவம் பண்ணினான்?..” 

 

“என்னையே தூக்கி ஒரு நாள் உள்ளை வைக்கிறதுக்கு, அத்தனை கள்ள வேலையும பார்த்துட்டு சுத்துறாரு.. அதான்.. நான் அவரை தூக்கிட்டேன.. நாளைக்குக் காலையில கல்யாணம் முடியட்டும்.. அத்தனை பேரையும் ரிலீஸ் பண்ணி விடுறேன்..” 

 

“போலீஸ் மாதிரியா நடந்துக்கிற?..” என்றார் எரிச்சலாக கெளதம்.. 

 

“அப்புறம் என்ன பொறுக்கி மாதிரியா நடந்தக்கிறேன்.. மீசை முளைச்ச நாள்ல இருந்து, யாதிராவை தவிர வேறு எவளையாவது நினைச்சிருப்பேனா?.. இல்லை ஆசை தான் வச்சிருப்பேனா?.. அவ தான் என் உலகம்னு சொன்னா.. யாராவது காதுல வாங்குறீங்களா?.. அண்ணன்.. தங்கச்சி, தங்கச்சி.. அண்ணன்னு.. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு சுத்துறீங்க?.. இர்ரிட்டேட்டிங்க இடியட்..” என திட்டியவன், அவர்கள் கையில் ஒரு கவரைக் கொடுத்து திணித்தான்.. 

 

“நாளைக்கு ரெடியாகி கோவிலுக்கு வர்றீங்க?..” 

 

“இல்லைன்னா என்னடா பண்ணுவ?..”

 

“கண்டிப்பா கடத்தல் தான்.. பொண்ணை வேற கடத்தணும்.. அவக்கூட சேர்த்து உங்களையும் கடத்திடுறேன்..” என சொல்லிவிட்டுச் சென்றவனைக் கண்டு அதிர்ந்து தான் போயினர் பெற்றவர்கள்.. 

 

“இவன் எல்லாம் ஒரு புள்ளன்னு ஏன்டி பெத்த?..” 

 

“ஆமா.. நான் வானத்தைப் பார்த்து வரம் வாங்கிப் பெத்தேன் பாருங்க. என்னமோ அவனுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க?.. அன்னைக்கே பத்து நிமிஷம் தள்ளிப் படுத்திருந்தா, எனக்கு இந்த ஏச்சும், பேச்சும் கிடைச்சிருக்குமா?..” என விசும்பிக் கொண்டே சென்று படுக்கையில் விழுந்தவரைக் கண்டு விக்கித்து நின்றார் கெளதம்.. 

 

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலான விடியலை தான் கொடுத்தது.. 

 

முருகன் கோவிலில் அத்தனை பேரும் அமர்ந்திரந்தனர்.. 

 

அவர்களின் முன்பாக ஹோமம் வளர்த்து, ஐயர் ஒருவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.. 

 

அவர்களின் முன்பாக அமர்ந்திருந்தனர் சயந்தனும், யாதிராவும்.. 

 

தம்பதி சமேதராக அமர்ந்திருந்தவரின் முன்பாக தாலியை நீட்டினார் ஐயர்.. 

 

அதை வாங்கி முகமெல்லாம் புன்னகையுடன் தாலி கட்டினான் சயந்தன்.. 

 

அதற்கு நேர்மாறாக கன்னத்தில் அவனின் கைத்தடத்துடன், கண்ணீர் வழிய அவன் கட்டிய தாலியை வாங்கினாள் யாதிரா.. 

 

அந்தக் கணம் மிஸ்சஸ்..இரவாள சயந்தனாக மாறியிருந்தாள் யாதிரா பாவை.. 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top