Share:
Notifications
Clear all

காமன் 23

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 273
Thread starter  

23

 

 

 

காலையில் வெகு நேரம் உறங்கும் அக்காவை பார்த்தவன் அவளுக்கு வயிற்று வலியாக இருக்கலாம் என்று தானே நினைத்துக் கொண்டு அவளுக்கு உணவு தயார் செய்துவிட்டு எழுப்பினான். அப்பவும் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்…!

 

 

 

“சரி எப்பவும் காலேஜ் அதுக்கப்புறம் வேலைனு சுத்திட்டே இருப்பா.. இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டுமே” என்று தூங்கியவளை எழுப்பாமல் இவன் ஆன்லைன் கிளாஸில் பிஸியாக இருந்தான்.

 

 

 

ரத்னாவிடம் இருந்து அழைப்பு வர “ஏன் டி இன்னைக்கு அந்த சீனியரை பார்க்க போலாம்னு சொல்லிட்டு இருந்தேனே.. எப்ப டி போகலாம்?” என்று ராகவ் ஃபோனை எடுத்த உடனே பட்டாசாய் பொரிந்த ரத்னாவிடம்,

 

 

 

“ரத்னாக்கா.. ரதிக்கு உடம்பு சரியில்ல. இன்னமும் தூங்கிட்டு தான் இருக்கா” என்று கூறினான் ராகவ்.

 

 

 

“இன்னும் தூங்கிட்டு இருக்காளா? சரி.. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். தூங்கி எந்திரிச்சானா எனக்கு ஃபோன் பண்ண சொல்லு” என்று வைத்து விட்டாள்.

 

 

 

ஃபோன் அடித்த சத்தமோ ராகவ் பேசிய சத்தமோ எதுவும் தெரியாத ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அக்காவை அவ்வப்போது தொட்டுப் பார்த்தான் ‘ஏதும் காய்ச்சல் அடிக்கிறதா?’ என்று..!

 

 

 

அதுபோல எதுவும் இல்லை என்றதும் சரி தூங்கட்டும் என்று விட்டுவிட்டான்..!

 

 

 

ரதியோ இங்கே அமைதியாய் தூங்க.. ஆனால் ரதியை பற்றிய வதந்திகள் காட்டுத் தீயாய் அந்த காலனி முழுக்க இரவுக்கு இரவாகவே பரவியதை பாவம் அறியவில்லை அவள்…!

 

 

 

காலையில் அலுவலகத்திற்கு வந்த கதிர்காமனுக்கும் ரதியின் ஞாபகமே..!!

 

 

 

சில நாட்களாக அவனை மோகத் தீயில் வாட்டி வதைத்த அந்த தீ நேற்று அவளை அணைத்ததும் முழுதாக அணைந்து விடவில்லை. குறைந்திருந்தது..! இப்போது ஒரு மென் முறுவல் அவன் முகத்தில்..!

 

 

 

ரதியின் விடலை உடலுடன் திகட்ட திகட்ட அவன் நடத்திய காம விளையாட்டுக்கள் அவனின் மனகண்‌ முன் ஓட, மீண்டும் அவள் சம்மதத்துடன் அடைந்து விட மாட்டோமா என்று அவன் மனது ஏங்கித் தவிக்க ஆரம்பித்தது.

 

 

 

கண் மூடினாலே அவள் முகம் தான் கண் முன் வருகிறது. எதை பார்த்தாலும் அவள் ஞாபகம் தான். அவனுக்கு புரிந்து விட்டது அவள் மீது கொண்ட அந்த மோகமானது அவனை உள்ளுக்குள் அவள் பால் உருக்கிக் கொண்டிருக்கிறது. அதை குணப்படுத்த கட்டாயம் அவள் வேண்டும்..! நேற்று நடந்த நிகழ்வுக்கு பின்னால் இன்னும் இன்னும் அவள் மேல் உள்ள மோகத் தீ கொழுந்து விட்டு இருந்ததே தவிர குறையவில்லை..!

 

 

 

“ஓஹ் ரதி..! யூ கில்லிங் மீ..!” என்று‌ சிகையை அழுத்தமாக கோதிக் கொண்டான் கதிர்காமன்.

 

 

 

மதியம் போல் தான் எழுந்தாள் ரதி அவளுக்கு உடம்பு அத்தனை வலி. கூடவே அழுது முகமெல்லாம் சோர்ந்து என்னவோ போல் இருந்தாள்.

 

 

 

“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா கா?” என்று அக்கறையோடு தம்பி கேட்டதும் தான் நேற்று அவள் சொன்ன பொய்யே அவளுக்கு ஞாபகம் வந்தது.

 

 

 

“ஓகே டா..!” என்றவள் தம்பி சமைத்து வைத்திருந்ததை உண்டு விட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருக்க.. அப்போது அவளுக்கு கதிர்காமனிடமிருந்து அழைப்பு வந்தது.

 

 

 

“எப்படியும் மார்னிங் உனக்கு டயர்டா இருக்குன்னு எனக்கு தெரியும்..! அதான் உனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணல..‌ நாளையிலிருந்து வந்து ஜூனியரா சேர்ந்துக்கோ..!” என்று அவன் கூற வேண்டியதை கூற விட்டு ஃபோனை அணைத்துவிட, அந்த ஃபோனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.

 

 

 

“என்னக்கா? என்ன ஆச்சு?” என்று ரதியை அவன் உலுக்க..

 

 

 

“இல்லடா சார் வந்து நைட் டிபன் பண்ண வர சொன்னாங்க..!” என்றதும்,

 

 

 

“சரி கா.. போயிட்டு வா..! உன்னால முடியும் தானே? இல்லன்னா நானும் வரவா?” கேட்ட தம்பியை கண்டு மனம் வருந்தினாள்.

 

 

 

‘எத்தனை நம்பிக்கையோடு என்னை இவன் அவர் இடத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்தான். நம்பியவர் அத்தனை பேருக்கும் நான் துரோகம் இழைத்து விட்டேனே?’ என்று உள்ளுக்குள் பொறுமியவள்

 

 

 

“இல்ல டா..! நான் மேனேஜ் பண்ணிப்பேன். டிபன் மட்டும் தானே?” என்று கிளம்பிச் சென்றாள்.

 

 

 

போகும் வழியெல்லாம் ஒரே சிந்தனை தான் அவளுக்கு.

 

 

 

‘இவனிடம் தொடர்ந்து வேலை பார்த்தால்.. நம் மானம் கெடுவதோடு இது வேற மாதிரி ஒரு உறவு நிலையில் சென்று நிற்கும். அது.. அசிங்கம்.. கேவலம்..! இன்னையோடு அனைத்தையும் முடித்து விட வேண்டும்’ என்று முடிவோடு கதிர்காமன் வீட்டிற்கு சென்றாள் ரதி.

 

 

 

ரதி வந்திருக்க மாட்டாள் என்ற நினைப்போடு இரவு சற்றே தாமதமாகத்தான் வெளியே உணவு முடித்துவிட்டு வந்தான் கதிர்காமன்.

 

 

 

ஆனால் வழக்கமான இடத்தில் அவள் அமர்ந்திருப்பதை கண்டதில் அவனிடம் ஒரு திடுக்கிடல்..! ஒரு மெல்லிய சந்தோஷம்..! கண்கள் மின்ன அவளை “ரதி..!” என்ற ஆசை அழைப்போடு நெருங்கினான் காமன்.

 

 

 

“நீ வரமாட்டேன்னு நினைச்சேன்” என்று தனது டையை தளர்த்தி கழட்டி சோபாவில் போட்டவன், கை பட்டன் அவிழத்து சட்டையை முழங்கை வரை மேலே சுருட்டியவாறு அவளை நோக்கிச் சென்றான்.

 

 

 

அவன் அருகில் நெருங்கி வர வர அவளுக்கோ வியர்க்க ஆரம்பித்து விட்டது.

 

 

 

அவள் அருகில் வந்து நின்றுக் கொண்டவனின் கண்கள் முழுவதும் காமம் கலந்த போதை, பேதையவளை கண்டவுடன்..!

 

 

 

நேற்று அவளின் சுகத்திற்கு பழகிய உடம்பு அல்லவா? இன்றும் வேண்டும் அந்த சுகம் என்று கேட்டது.

 

 

 

அவனின் காம அனல் அவளின் உடம்பைச் சுட்டது.. கொதித்தது..!

 

 

 

‘ஆக..‌ நான் நினைத்தது சரிதான் இவனுக்கு என்னிடம் தோன்றும் உணர்வு காமம் மட்டுமே காதல் அல்ல..!’ என்று விரக்தியாக சிரித்துக்கொண்டது அவளது மனம்.

 

 

 

அவன் மீண்டும் அவளை நெருக்கம் இல்லாமல் நெருங்கி உடல் உரச நின்று "ரதி" என்று அழைக்க.. கூனிக் குறுகி போனாள் ரதி.

 

 

 

அவளின் மூச்சுக்காற்று அவன் மேல் பட, அவளின் அந்த சுவாச காற்றுக்கே அவனின் தேகத்தில் ரத்தம் வேகம் தெறித்துக் கொண்டு ஓடுவதை அவனால் உணர முடிந்தது.

 

 

 

“ஓ.. காட்..! ஒரு சின்னப் பெண் என்னை எப்படி எல்லாம் இம்சிக்கிறாள் தூண்டுகிறாள்..!” என்று காமன் கண்களை மூடி தன் தேகத்தை மனத்தை கட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் முடியவில்லை..!

 

 

 

மெல்ல அவளின் கைகளைப் பற்றி தன் புறம் இழுத்து தன் மார்பின் மீது அவள் கைகளை வைத்தான். அவனின் தேக சூட்டை கண்டு அவள் பதறி கையை விலக்க முற்பட..

 

 

 

“நோ.. ரதி.. நோ..! பாரு உன்னால என்னோட டெம்ப்ரேச்சர் எப்படி கூடியிருக்குனு பாரு.. என் ஹார்ட் பீட்‌ எவ்வளவு வேகமாக துடிக்குது பாரு..” என்றவன்‌ அவள் கையை இப்பொழுது தன் இதயத்துக்கு நேராக வைத்து அதன் துடிப்பை காட்டினான்.

 

 

 

“எதை கூறுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். இன்பலோகத்தில மிதப்பது போல ஒரு உணர்வு உன் கூட இருக்கும் போது..” என்றவனுக்கோ அவன் மனதிற்குள் இருந்த மோக அரக்கன் விழித்துக் கொண்டான்.

 

 

 

அவள் காதருகே குனிந்து காது மடலை மெல்ல கவ்வி விடுவித்தவன், தன் கற்றை மீசை அவள் காதுமாடலில் உரச.. மூக்கு நுனியை அவள் காதுக்குள் நுழைத்து ரகசியம் பேசினான்.

 

 

 

“நான் உன் அங்கங்களில் தொலைந்து போய் ஒரு நாளாச்சு.. ரதி.. அதுவோ இன்னும் உன்னை வேணும் வேணும்னு கேட்குது. உன் அனுமதியுடன் நான் உன்னை லவ் மேக்கிங் பண்ணவா?” என்றதும் அவள் திடுக்கிட்டு பார்க்க..

 

 

 

“ப்ளீஸ் ரதி.. என் நிலைமைய நீயே புரிஞ்சுக்கோ.. என் மோகத் தாகத்தை தீர்ப்பாயா?” என்று அவனிடம் எந்த வார்த்தைகளை கேட்டு விட கூடாது என்று தவியாய் தவித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தாளோ.. அதே வார்த்தைகளை தான் அவன் சொன்னான். அவள் அறிவு எச்சரித்த அதே வார்த்தைகளை..!!

 

 

 

யாரோ அவள் நெஞ்சுக்குள் கையை விட்டு, இதயத்தை பிசைவது போல் ஓர் வலி அவளின் மார்பு முழுவதும் பரவி விரவி அழுத்த..

 

 

 

மெல்ல அவனிடம் இருந்து விலகியவள், “நான்.. நான்.. இன்னைக்கு டேட்.. தட்‌ மீன்ஸ் தட் த்ரீ டேஸ்” என்றாள் குனிந்த தலையை நிமிராமல்..!

 

 

 

“ஓஹ்.. நோ..! நேத்து நான் ரொம்ப உன்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேனா? அதான் இப்படி சட்டுனு..??” என்று அவன் கேட்க வந்ததை புரிந்துக் கொண்டவள் இல்லை என்று வேகமாக தலையாட்டிவிட்டு,

 

 

 

“சாப்பாடு டைனிங் டேபிள்ல இருக்கு சார். நான் கிளம்புறேன்” என்று கிளம்பியவளின் கையை பிடித்து தடுத்தான்.

 

 

 

“என்ன புதுசா நீயா கிளம்புற? இரு நானே கொண்டு வந்து உன்னை விடுகிறேன்..” என்றவன்‌ அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அவளை அவள் வீட்டின்‌ முன் வழக்கமான இடத்தில் கொண்டு வந்து விட்டவன், அவளை செல்ல விடாமல் கையை இறுக்க பிடித்துக் கொண்டு அதை தன் நெஞ்சிலேயே வைத்துக் கொண்டான்.

 

 

 

“என்னன்னே தெரியல எனக்கு இன்னைக்கு உன்னை விடவே மனசு இல்ல ரதி. என் கூடவே இப்படியே வச்சுக்கணும் போலவே இருக்கு” என்றதும் அவள் அவனை கோபமாய் பார்க்க..

 

 

 

“ஏய் நோ.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல. அதுவும் எனக்கு வேணும் தான். ஆனா இப்படி உன்னை பக்கத்திலேயே என் கூடவே வச்சுக்கணும்னு தோணுது” என்றவன் அவளை இறுக்கமாக இழுத்து தன்னில் பொதித்துக் கொண்டான்.

 

 

 

அவன் சொன்ன “வச்சுக்கணும்” என்ற வார்த்தையில் முணுக்கென்று அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது.

 

 

 

“சார் டைம் ஆகுது..!” என்று அவள் மெல்ல முணுமுணுக்க..

 

 

 

“யா.. ம்ம்ம்..‌” என்று அவளை பிரித்தவன், வழக்கத்தை விட அழுத்தமாக அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு அணைத்துவிட்டே விடுவித்தான்.

 

 

 

அவள் இறங்கி கதவை சாத்தும் முன் “ஹே ரதி.. இந்த மாச சம்பளம் உன் அக்கவுண்டுக்கு போட்டு இருக்கேன் செக் பண்ணிக்கோ” என்றவன் காரில் பறந்து விட்டான்.

 

 

 

தன் ஃபோனை எடுத்துப் பார்த்தவளுக்கோ அவன் கொடுப்பதாக சொல்லியிருந்ததை விட ஒரு பெரும் தொகை வந்திருந்தது கண்டு திடுக்கிட்டாள்..! மொத்த மேனியும் நடுங்கியது..!

 

 

 

அந்த கூடுதல் பணத்தை பார்த்ததும் “இந்த கூடுதல் பணம் எதற்கு? என் உடம்புக்குக்கான விலையா?” என்று அருவருப்பிலும்.. அவமானத்திலும்… ஆற்றாமையிலும்.. கோபத்திலும் முகம் சிவக்க சமைந்து நின்றாள் பாவை.

 

 

 

அடுத்து இரண்டு நாட்களாக வேலைக்கு ரதி வரவில்லை என்றவுடன் “ஒருவேளை அந்த 3 டேஸ் பிராப்ளமா இருக்கும்..” என்று கடந்தவன், ஐந்தாம் நாள் அவளை தேடி அவள் வீட்டுக்கே வந்துவிட…

 

 

 

அங்கிருந்தவர்கள் அவனை ஒரு மாதிரியாக பார்த்து “ஓ அந்த பொ

ண்ண தேடியே வந்திட்டான் பாரு..”

 

 

 

“ஆமா.. வராம எப்படி இருப்பான்? நைட்டு இவன் கூட தானே வந்து இறங்குவா அவ.. எல்லாம் காலக்கொடுமை கருமம்” என்று புறம் பேசியதெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றவனை பூட்டிய வீடே வரவேற்றது..!

 

 

 

தொடரும்..

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top