Share:
Notifications
Clear all

காமன் 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 273
Thread starter  

22

 

 

 

“ஏன் ரதி இவ்வளவு லேட்டு இன்னைக்கு? முக்கியமா ஏதாவது கேஸ் பத்தி சார் கிட்ட ஏதாவது டிஸ்கஸ் பண்ணுனியா?” என்று கொஞ்சமும் அக்காவை சந்தேகப்படாமல் வீட்டுக்குள் நுழைந்தவளை பார்த்து ராகவ் கேட்டான்.

 

 

 

ஆனால் ரதிக்கு ராகவ் கேட்ட எந்த கேள்வியும் காதில் ஏறவில்லை..! ஏன் அவன் பேசியவை எதுவுமே புத்திக்கும் செல்லவில்லை மூளையிலும் பதியவில்லை..!

 

 

 

ஏதோ பித்து பிடித்தது போல் குளியல் அறைக்குள் நுழைந்தவள் ஷவருக்கு அடியில் நிற்க.. விழுந்த நீரில் விழிகளை மூடி சிலையாக நின்ற அவளின் கண்ணீரும் கரைந்து ஓடியது.

 

 

 

“நான் என்ன நினைத்திருந்தேன் கடைசியில் அவன் என்ன வார்த்தை சொல்லிட்டான்?” என்று அவளால் கதிர்காமன் கூறியவற்றை ஜீரணிக்க முடியவில்லை.

 

 

 

“ஆமா.. என்ன.. என்ன நினைச்சிருந்த நீ? உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பான்னா? அறிவுகெட்டவளே..!” என்று அவளது அறிவு அவளை அதட்ட..

 

 

 

காதலா??

 

 

 

அவன் மீது தனக்கு காதலா?? என்று யோசித்தவளுக்கு “ஆம்.. காதல் இல்லாமல் காமம் ஏது? இத்தனை நாட்களில் அவன் நடை உடை பாவனையில்.. அவனது பழக்க வழக்கத்தில்.. அவன் உன்னிடம் நடந்துக் கொண்ட முறைகளில்.. நீ அவன் மீது சலனப்பட்டு, சபலப்பட்டு, ஈர்க்கப்பட்டு அது நேசமாய் வளர்ந்து இருக்கிறது உன்னுள்ளே.. அதன் வீரியத்தில் தான் உன்னையே அவனிடம் இழந்திருக்கிறாய்” என்று மனமானது அடித்துக் கூறியது.

 

 

 

ஆம்.. நேசம்..!

 

 

 

ஆனால்.. அதற்கு அவன் சொன்ன பெயரோ ஆஃபர்..!!

 

 

 

ச்சே.. எவ்வளவு மோசமா ஏமாந்து வந்திருக்கிறாய் ரதி நீ..! இவ்வளவு முட்டாளா நீ??

 

 

 

“நீ வயது வந்த காலம் முதலே உனக்கு உன் அம்மா அறிவுறுத்தவில்லையா? ஆண்களின் பசப்பு வார்த்தையில்.. கண்ணியமான நடவடிக்கையில்.. கவர்ந்து விழுந்து விடக்கூடாது..! தள்ளியே இருக்க வேண்டும்..! எட்டி நின்றே பழக வேண்டும் என்று..!!

 

 

 

அத்தனையும் அவன் மீது கொண்ட மயக்கத்தில் விட்டு விட்டு வந்து விட்டாயே..!” என்று அவள் மனசாட்சியே அவளை குத்தியது..! குறை கூறியது..!!

 

 

 

ஆனால்.. என் நேசம் என்று அவள் மனம் குமற..

 

 

 

நேசமாவது.. மண்ணாங்கட்டியாவது..! அவன் என்றாவது உன்னிடம் அது போல பேசியிருக்கிறானா? இல்லை நடந்திருக்கிறானா? அதுபோல ஒரு பார்வை தான் பார்த்து இருக்கிறானா?

 

 

 

இல்லை.‌.! இல்லை‌‌..! இல்லை…!!

 

 

 

அவன் மற்ற பெண்களிடம் நடந்துக் கொண்டது போல தான் உன்னிடமும் நடந்துக் கொண்டான். நீ தான் தம்பிக்காக தன்னையே தருகிறேன் என்று அவனிடம் கூறி.. அதுவும் முடியாது என்று விலக்கினாய்.. ஆனால்.. அவனோ கண்ணியம் தான் காத்தான். உன் கன்னித்தன்மையை அழிக்கவில்லை..!

 

 

 

ஆமாம் கண்ணியம் காத்தான்..! அந்த கண்ணியம் தான் என்னை அவன் பால் ஈர்க்க வைத்து.. உருக வைத்து.. கடைசியில் என்னையே தர வைத்தது..!

 

 

 

“ஆஆஆஆ.. அம்மா.. நான் தப்பு பண்ணிட்டேன்..! பெரிய தப்பு பண்ணிட்டேன்..! நீங்க சொன்ன அத்தனை அறிவுரைகளையும் வயது கோளாறில்.. காதல் மயக்கத்தில் போட்டுவிட்டு இன்று குற்றவாளியாய் நிற்கிறேன். என்னை மன்னிச்சாடுங்க ம்மா..‌ என்n மன்னிச்சிடுங்க ம்மா..” என்று கதறி அழுதாள்.

 

 

 

அழுதால்..‌ வலி தீருமா? ஆனாலும் அவள் உள் மன வலி தீரும் மட்டும் அழுதாள்.

 

 

 

அவளின் அழுகையின் சத்தம் அந்த குளியல் அறைக்குள்ளே புதைந்து போனது. எப்படி இதில் இருந்து வெளிவருவது என்று தெரியவில்லை. பார்த்த முதல் பார்வையிலே உயிரை சுண்டி இழுப்பது போல் ஆழ்மனதில் புகுந்துக் கொண்டு நாட்டாமை செய்பவனை அவளும் என்ன தான் செய்வாள்.

 

 

 

அறிவோ இன்னமும் இவன் உனக்கு வேண்டுமா? உனக்கு தொழிலில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தம்பியின் படிப்பு இருக்கிறது. அதை எல்லாம் விட்டு இப்படி ஒரு ஈனத்தனமான ஒரு பொழப்பு வேண்டுமா? என்று கேள்விக் கணைகளை தொடுக்க..

 

 

 

அந்த காமனின் கணையா?

 

இல்லை… மனதின் கணையா?

 

 

 

என்று இருகொல்லி எறும்பாய் தவித்தாள் பாவை..!

 

 

 

ஆனால் மனமோ.. ஒருவேளை என்னை போல் அவனும் என்னால் ஈர்க்கப்பட்டு.. என் மீது நேசம் கொண்டிருந்தால்..?? என்று அவன் பக்கமே சாய்ந்தது.

 

 

 

ம்ஹும்.. ! வாய்ப்பே இல்லை..!

 

 

 

பல மலர்களை நாடும் வண்டானது ஒரு மலரில் காதல் கொண்டு அதனையே வட்டமிடும் என்பதெல்லாம் நடக்கவே இயலாத உலக அதிசயம்..!

 

 

 

அவன் மீது என்னுள் முளைத்த காதல் அவனுள் ஏன் முளைக்கவில்லை?

 

 

 

அவன் மீது என்னுள் பிறந்த நேசம் அவனுக்கு ஏன் பிறக்கவில்லை??

 

 

 

ஏன்? ஏன்?? ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பதில் என்னவோ அவரவர் நியாயம்.. அவரவர் நேசம் அவரவருக்கு..!

 

 

 

காதலை கண்டுபிடித்தவன் மட்டும் கையில் கிடைத்தால் அவன் உயிர் காலாவதி ஆகும் வரை அடித்தே கொல்வாள் அந்த அளவிற்கு மனதில் ரணம்..! தேகத்தில் வலி..!

 

 

 

“ரதி.. ரதி.. நீ எவ்வளவு நேரம் இன்னும் பாத்ரூமிலே இருப்ப சீக்கிரம் வா” என்று வெளியே நின்று ராகவ் கதவு தட்டிய பிறகுதான் அவள் செய்துக் கொண்டிருந்த வேலையும் அவள் இருந்த நிலையும் புரிய..

 

 

 

தலையில் தட்டிக் கொண்டவள் அவசரமாக குளித்து உடைமாற்றி வெளியே வந்தாள்.

 

 

 

கண்கள் கலங்கி சிவந்து இமைகள் எல்லாம் தடித்து முகமே சோர்வாகி அதுவும் தலைக்கு ஊற்றி வந்திருந்தவளை விசித்திரமாக பார்த்து “என்னாச்சு?” என்று கேட்டான் ராகவ் பதற்றத்தோடு.

 

 

 

ஒரே ஒரு வார்த்தையிலான கேள்வி தான். ஆனால் அந்த கேள்விக்கு ஓராயிரம் வார்த்தைகளை கோர்த்து பார்த்தும் அவனுக்கு பதில் அளிக்க முடியவில்லை அவளால்..!

 

 

 

“அது.. அது…” என்று‌ அவள் என்ன சொல்வது என்று தடுமாறும் பொழுது.

 

 

 

“பீரியட்ஸா ரதி?” என்று ராகவ் கேட்க..

 

 

 

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

 

 

அக்காவின் அருகில் வந்தவன் அவள் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து மென்மையாக தலைமுடியை துவட்டி விட்டுக் கொண்டே “இட்ஸ் நேச்சுரல் ரதி..! ஏன் நீ இதுக்கு இப்ப தலை குளிக்கிற? எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குற? நைட்டு தூங்க தானே போற காலையில எழுந்து இன்னொரு தடவை வேற தலை குளிப்ப? உடம்பு என்னத்துக்கு ஆகும்? இப்படி ஓயாமல் தலை குளிச்சா? சரி சரி தலைய காய வெச்சிக்கிட்டே தூங்கு” என்று அவன் ஆறுதலாய் பேச அந்த ஆறுதல் இப்பொழுது அவளுக்கு மிகவும் தேவையாய் இருந்தது.

 

 

 

எப்பொழுதும் ரதி உள்ளறையில் படுத்துக்கொள்ள.. ராகவ் ஹாலில் படித்துக்கொண்டு தான் படுத்திருப்பான்.

 

 

 

“இன்னைக்கு நானும் உன் கூட இங்க ஹாலுலேயே படுத்துகிறேன் ராகவ்” என்ற அக்காவை பார்த்து,

 

 

 

“லூசு அக்கா.. என்னத்த போட்டு இந்த மண்டைக்குள்ள யோசிக்கிற? வா.. வந்து தூங்கு” என்று அவனும் அவள் அரு

கே பாய் விரித்து படுத்து விட..

 

 

 

ரதிக்கோ இருளின் போர்வையில் மீண்டும் அழுகை முட்டி வர.. சத்தம் இல்லாமல் உடல் குலுங்க அழுது கரைந்தாள் விடிய விடிய ரதி..!

 

 

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top