உயிரே 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 316
Thread starter  

11

சமையலறைக்குள்ளே சென்ற தர்மா கையில் எடுத்து வந்ததை பார்த்த கோதை "ஐயையோ அய்த்தான்... ஆள விடுக" என்று ஓட அவளை இழுத்து வந்தான் "அப்படி எல்லாம் உன்னைய விட முடியாது!" என்று!!

 

வேறொன்றுமில்லை.. வடிவாம்பாள் திருமணமாகி வந்த போது அவர் சீரோடு வந்த பெரிய பித்தளை தாம்பாளத்தை தான் தேடி எடுத்து வந்திருந்தான் தர்மா!!

 

அதை பார்த்து மிரண்ட கோதையை தன் கை வளைவிலேயே வைத்தவன் அவள் முன்னால் சாதத்தை மலையாகக் குவித்து.. பெரிய குழியை தோண்டி.. அதற்குள் முதலில் நாட்டுக் கோழிக்குழம்பை ஒருபக்கம் ஊற்ற.. அது பொங்கி எரிமலை லாவாவை போல வழிந்தது. அதன்மீது அந்த கோழி போட்டு முட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்க.. இடையிடையே அதன் கால்களையும் குத்தி வைக்க… பார்ப்பதற்கு ஐயனாருக்கு வைக்கும் படையல் போலிருந்தது.

 

"அய்யய்யோ அய்த்தான்… என்னைய பாத்தா ஐயனாரு கணக்கவா இருக்கு?" என்று அவள் உதட்டை பிதுக்க..

 

"இரு டி செல்லக்குட்டி..

அதுக்குள்ள மலைச்சா எப்புடி??"

என்றவன் அடுத்து நல்லி எலும்புகளை வாரி எடுத்து மழை சாரல் போல தூவ.. அது என்னவோ ஆலங்கட்டி மழையால் தொப்பு தொப்பு என்று அந்த சோத்து மலையின் மீது விழுந்தது. விழி தெறித்து விடும் வண்ணம் பார்த்துக்கொண்டிருந்த கோதைக்கு பசி எல்லாம் பின்னங்கால் பிடரியில் பட பறந்து போனது.

 

"ஏன் இப்படி பண்றீக அய்த்தான்? எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கலந்தா எப்புடி திங்கிறது.. அய்த்த நீங்களாவது சொல்லுக.. உங்க புள்ள கிட்ட?" என்று தர்மா அடிக்கும் அலப்பறையை பார்த்து யோகலட்சுமியிடம் முறையிட்டாள் கோதை..

 

யோகலட்சுமியோ வாயை இறுக்க மூடி அமர்ந்திருந்தார். எங்கே வாயை திறந்தால், மகன் நமக்கு ஒரு கவளத்தை வாயில் திணித்து விட்டு விடுவானோ என்று அவ்வளவு பயம்!!

 

"நீயாச்சு உன் புருஷனாச்சு.. என்னைய விடு ஆத்தா" என்றவர் வேகவேகமாக சாப்பிட்டு இடத்தை காலி செய்ய.. இப்பொழுது கோதை தன் அன்னையைப் பார்க்க.. அவரோ உதட்டை பிதுக்கி "நீயி தானே ஆசைப் பட்ட அனுபவி!" என்றவாறு இவர்களை கண்டும் காணாதது போல சாப்பிட்டுக்கொண்டிருந்தார் வடிவாம்பாள்.

 

ஒரு கையால் மனைவியின் கரத்தை இறுகப் பற்றி அவளை நகர விடாமல் பார்த்துக் கொண்டவன், மறு கரத்தால் அந்த மலையை பிரட்டி எடுத்து பிசைந்து பெரிய கவளமாக உருட்டி.. அதன் மீது கிரீடமாக முட்டையை வைத்து மனைவியை வாயை நோக்கி நீட்டியவன்..

"வாய திற கோதை.. 

உன் மாமன் ஆசையாசையா பாசத்தோட.. நேசத்தோட.. அன்போட.. உனக்கு சோறு ஊட்டு வந்திருக்கேன்ல.. என்னைய ஏமாத்தாத.. வாய தொற சாந்தா.. ச்சீ.. கோத.. வாய தொற" என்று சினிமா வசனம் வேற பேச.. உண்மையிலேயே அழுகையே வந்துவிட்டது கோதைக்கு. 

 

எப்பொழுதும் அவள் எது திட்டினாலும் சரி.. பேசினாலும் 'சரி போ கழுதைய!' என்று கடந்து போய் விடுபவன், இன்றும் அதே போல செய்வான் என்று அவள எதிர்பார்த்திருக்க.. 

 

"எதிர்பாராததை எதிர் பாருங்கள்!!" என்கிற மாதிரி இவன் இவ்வளவு உணவை போட்டு புரட்டி கவளமாக்கி நீட்டுவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.

 

"அய்த்தான்.. தயவு செய்து விட்டுடுக.. இனிமே உங்களைய ஊட்டுகனு கேட்கவே மாட்டேன்" என்று அழுகாத குறையாக கெஞ்சினாள். எப்பொழுதும் தானாக சிந்தித்து செயல்படும் அறிவு ரொம்ப கம்மி கோதைக்கு. ஒன்று எடுப்பார் கைப்பிள்ளை அல்லது அடுத்தவரைப் பார்த்து நடப்பது, செய்வது. வடிவும் சிறுவயதில் இருந்து அவளை கண்டித்து பார்க்க அதுவரை அவள் மாறவேயில்லை. 

 

சொல்லி திருந்தாதவள் பட்டு திருந்தட்டும் என்று விட்டுவிட்டார் வடிவு!!

 

"இங்கே பாரு கோத.. இது தேன் கடைசி. இனிமே அவ புருஷன் அவளுக்கு அப்புடி செஞ்சான்.. இவ புருஷன் இவளுக்கு இப்புடி செஞ்சானு எதையாவது சொல்லி கிட்டு யேன் கிட்ட வராதே.. அப்புடி வந்த?? இதுபோல தான் ஏதாவது எடக்கு மடக்கா நடக்கும். ஞாபகத்துல வச்சிக்கோ!!" என்றவன் அத்தோடு இல்லாமல் அவள் தாடையைப் பற்றி வாயைத் திறந்து கையிலிருந்த கவளத்தை அவள் வாயில் திணித்தவன், "இங்கன பாரு கோத.. ஏதோ சின்ன பொண்ணுனு பொறுத்துப் போறேன் நீ ஆடுறதுக்கு எல்லாம். ஆனா.. யேன்‌ பொறும பறந்துச்சு.. அவ்வளோதேன்.. இது உனக்கு மட்டுமல்ல அந்த தூணுக்கு பின்னால மறைஞ்சு நின்னு ஒட்டுக் கேட்கும் உன் மாமியாருக்கும் சேர்த்துதேன். சரியா?" என்று தன் அம்மாவையும் குத்திவிட்டே சென்றான் தர்மா.

 

"சொன்னேன் தானே கேட்டீகளா ரெண்டு பேரும்.. அப்போ வாங்குங்க!!" என்று முணுமுணுத்தவாறு தன் இடத்தைக் காலி செய்தார் வடிவு.

 

"நீ பாட்டுக்கு ஜம்பமாக அழைச்சிட்டு வந்திட்டு யாருக்கு வந்த விருந்தோனு உட்கார்ந்திருக்க.." என்று நக்கலாக கேட்ட வீராவை 'என்ன வேணும் இப்போ?' என்று பார்த்தாள் அஸ்திரா. 

 

"வா.. வா.. வந்து மாமன் சட்டைய கழட்டு.. ரொம்ப இடைஞ்சலா இருக்கு.. வேகுது வேற" என்றவனை அவள் அதிர்ச்சியாக பார்த்தாள். எப்போதும் அவன் அப்படிதான் இரவு அறைக்குள் வந்து சட்டையை கழட்டினான் என்றால் அடுத்து அவளை உடுத்த போகிறான் என்று அர்த்தம்!!

 

"உன் கற்பனைய நிப்பாட்டு டி பொண்டாட்டி.. நானே கை அடிப்பட்டுடுச்சே.. ஒன்னும் பண்ண முடியதேன்னு வருத்தத்தில் இருக்கேன். இவ வேற கண்டபடி கற்பனை ஓடவிட்டு கிட்டு" என்று அவன் கடுப்புடன் சொன்னதும் தான் அவளுக்கு சிறு தைரியம் பிறந்தது. மெல்ல அவன் அருகில் வந்து சட்டை பட்டனகளை அவள் கழட்ட.. 

 

அவளின் அருகாமையும் அவளுக்கே உரித்தான அந்த கஸ்தூரி மஞ்சள் கலந்த குளியல் பவுடர் வாசனையும் அவன் நாசியினுள் நுழைந்து சுவாசத்தில் கலந்து நுரையீரலில் நிறைய.. மெல்ல குனிந்து அவளது கழுத்துக்கும் காதுக்கும் இடையேயான பகுதியில் மூக்கை வைத்து வாசம் பிடித்து பித்தானான்.

அஸ்திரா கூச்சத்தில் நெளிந்தாள்.

 

"இன்னும் அதே வாசனை டி.. இப்போ சோப்பு தானே‌ போடுற? பின்ன எப்படி குளியல் பவுடர் வாசனை வருது உன் மேல?" என்று‌ கம்பத்து பாண்டியன் சந்தேகம் கொள்ள.. 

 

"ரொம்ப முக்கியம் இப்போ அது!! ஒழுங்கா நிக்க போறியா? இல்லையா? இல்லன்னா என்னால கழட்ட முடியாது. நான் பாட்டுக்கு போய்டுவேன்.. இப்படி நீ அறைகுறையா நிக்க வேண்டியது தேன்" என்று அவள் பேச விரிந்த சிரிப்பை மீசைக்குள் அடக்கியப்படி அவளை பார்த்தவன் 'நான் பேசல.. நீ செய்!' என்பது போல் சைகை செய்தான். ஆனாலும் அவனது கண்கள் விடாது அவளை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது.

 

வாய்விட்டு சிரித்தால் தான் சிரிப்பா என்ன? கண்களில் கேலி வழியே சிரிப்பதும் கூட தான்!! 

 

"இப்ப எதுக்கு சிரிச்சிகிட்டு நிக்கிறவன்? ச்ச்சே.. இன்னும் எத்தன நாளுக்கு இந்த இம்சைய சகிக்கனுமோ? தெரியல.." என்று முணுமுணுத்து கொண்டே பட்டன்களை கழட்டினாள்.

 

"வாழ்நாள் முழுசும்.. இல்ல நான் சாகுற வர.. எனக்கு முன்ன உன்னைய போக விடமாட்டேன் டி.. அதனால யேன் ஆயுசுக்கும் உனக்கு இம்சை தேன்.." என்றவன் கட்டுப்போட்ட கையின் விரல்களால் அவளது தோளில் உரசினான்.

 

அவள் தோளில் இருந்த அவனின் வலது கை அவளின் இள மாங்கனிகள் வழியாக பரவி படர்ந்து ஆலிலை வயிற்றுக்கு சென்றது. அடிபட்ட அவனது கையை அவளால் வேகமாக ஒதுக்க முடியாமல் திண்டாடினாள்.

 

தொப்பையின்றி சற்று புடைப்பான அவளின் மெல்லிடை இறுகி மெத்தென்றிருந்தது. அதில் விரல்களால் விளையாடி கொண்டே.. மறு கரத்தால் அவளது முகத்தை அவனின் பக்கம் இழுக்க.. அவளோ கோபத்தோடும்.. இவனை தவிர்க்க முடியா இயலாமையிலும் துடித்த அவளது வெல்வெட் உதடுகளை உரசினான் தன் உதடுகள் கொண்டு..

வெறும் தீண்டல் மட்டுமே.. தீண்டி.. தீண்டி தீயை மூட்ட முயன்றான். ஆனால் அவள் உள்ளுக்குள் ஏற்கனேவே அக்னி பிழம்பொன்று எரிந்துக் கொண்டிருக்கிறது!! அது நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கிறது இவனை பஸ்பம் செய்ய என்று தெரியவில்லை வீராவுக்கு!!

 

அவனோ வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினான்.

அவளின் விரிந்த கண்கள்.. கூரிய மூக்கு.. செழுமையான மாம்பழ கன்னங்கள்.. சிவந்த ஆரஞ்சு சுளையை ஒத்த உதடுகள் என்று‌ விரல்கள் கொண்டு வருடியவன் பின் இதழ்கள் கொண்டு அவ்வேலையை தொடங்கினான். ஒவ்வொரு முறையும் சத்தமின்றி முத்தம் கொடுத்தான். அவள் அமைதியாக நின்றிருந்தாள். வேறு என்ன செய்ய முடியும் அவளால் இப்போது? ஆத்திரத்தோடு அவனை அடித்து தள்ளி விட்டால்.. அதன் பின் அவன் மூர்க்கம் கொண்டு வேகம் கொண்டால்.. தனக்குத்தான் ஆப்பாய் ஆப்ததாய் முடியும் என்றுதான் இந்த அமைதி!! 

 

பெண்கள் முதலில் பொருத்து போவதெல்லாம் பின்னொரு நாளில் வெடித்து எழுவதற்கு தான்!! அந்த நாள் வரும் மனமே அமைதி கொள் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அஸ்திராவதி!!

 

ஆனால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவன் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து வாசம் பிடித்தவன் அழுத்தி முத்தம் கொடுத்தான் பற்தடம் பட... அவள் உதடுகளைக் கவ்வும் சந்தர்ப்பத்திற்காக அவன் உதடுகள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தன.. ஏனென்றால் திடீர் முத்தத்திற்கு தான் கிக் அதிகமாம்!!

 

அவள் முகத்தை வேகமாக திருப்பி கழுத்தை அவன் உதடுகளிடமிருந்து விடுவித்தாள். ஆனால் உதட்டை மறந்து விட.. அவள் கழுத்தை விட்டவன் சட்டென அவளின் உதடுகளைக் கவ்விக் கொண்டான். அவள் எதிர்பார்க்காத நேரம். வெளியில் பிதுங்கிய உதடுகளை அவள் சுதாரித்துக்கொண்டு உள்ளே இழுக்கும் முன்.. அவன் அவள் உதட்டை சுவைக்க ஆரம்பித்திருந்தான். அவள் உதட்டுச் சுவை அவனின் தொண்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. எச்சில்கள் அமிர்தமாய்!! ஆனால்.. அவளின் கண்களை விட்டு வெளியேறிய கண்ணீர் துளிகளோ அவன் உதடுகளில் பட்டு தெறித்து உப்புக் கரித்தது.

 

அதில் உதடுகளை விலக்கி அவள் முகத்தை நிமிர்த்த முரண்டு பிடித்தாள் மாது!!

அவளின் கன்னங்களுடன் சேர்ந்து மூக்கு நுனி கூட சிவந்து அழகாய் தெரிந்தது. ரசனையாய் பார்த்தான். இக்கன்ன சிவப்பு கோபத்தாலா?? நாணத்தாலா?? கண்டிப்பாய் கோபம் தான்.‌ அதுவும் ஆக்ரோஷ கோபமாய் தான் இருக்கும் எனப்து அவனுக்கு திண்ணம்!! இவ்வளவு சிவந்திருக்கிறதே!!

 

ஆனாலும் விடாமல் அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்களைப் பார்த்தான். ஆழ்ந்து அழுத்தமாக.. அதன் வழியே ஊடுருவி மனதினை படிக்க முயல்வதை போல.. அந்தோப் பாவம்!! அவளோ கண்களுக்கு கண்ணீர் என்னும் திரையை போட்டு மனதினை மறைத்தாள்.

 

நீர் நிரம்பிய விழிகளுடன் அவளும் அவனைப் பார்த்தாள். நிச்சயமாக அதில் வலி மட்டும் இல்லை. அவளுக்கு அவன் மீதிருந்த கோபமும் அவளது நிலையையும் தெரிந்தது.

 

அந்த நொடி அவன் அவள் கண்களில் தொலைந்தான். ஆத்திர விழிகளுக்குள் தொலைய முடியுமா என்ன?? முடியுமே!! கோபமும் தாபமும் உடையவனிடம் மட்டுமே காட்ட முடியும் என்று இவன் நினைத்திருக்க.. இல்லை நீ என்னவனே இல்லையென அவள் நின்றிருந்தாள்.

 

ஏனோ அந்த அமைதியும் அவளின் கண்ணீரும் அவனுக்கு கணமாய் கணக்க.. சட்டென அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். அவளோ கண்களை இறுக மூடிக் கொள்ள.. அந்த கண்களில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான் வீரா. அவள் விலக விரும்பாமல் அவனுடன் அணைந்து நின்றிருந்தாள்.

 

"அப்பவும்.. இப்பவும்.. எப்பவும் மாறவே இல்ல தீரா நீ... இப்படித்தேன் பயந்தா.. என்கிட்ட ஒட்டி நிப்ப" என்று அவன் கூற்றில் இருந்து சட்டென்று நிமிர்ந்து மன்னவனை பார்த்தாள் மங்கை. அதில் 'இன்னும் சிறுவயதை நீ மறக்கவில்லையா?' என்று கண்கள் கேட்க.. 'இல்லை!!' என்று அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து மறுமொழி கூறினான் வீரா.

 

இருவரின் விழிகளின் வழியே அந்த நாட்கள் விரிந்தது..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top