உயிரே 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 316
Thread starter  

10

 

அவள் நின்றிருந்த விதமே உள்ளுக்குள் உடைந்து விட்டாள். தன்னை திடப்படுத்தி நின்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது வீராவிற்கு. அவனும் சற்று சோர்வாகவே இருக்க இவர்களோடு இங்கே மல்லுக் கட்ட முடியவில்லை.

 

ஆனாலும் விருந்தினர்கள் விருந்து உண்டோமா போனோமா என்று இல்லாமல் மூன்று நாட்களாக இயங்கிய டேரா போட்டு இருக்க இனிமேலும் அவர்களை இங்கே வைத்துக்கொள்ள பிரியப்படவில்லை வீரா. 

 

"தர்மா…!!!" என்று இவன் சத்தமாக அழைக்க.. அதை புரிந்துகொண்டு தர்மாவேம் "இப்ப எதுக்கு எல்லாரும் ஒப்பாரி வைக்கிறீங்க.. மச்சான் நல்லபடியா தான் இருக்கியான். என்னமோ அந்த பொண்ணு வந்து இவன புடிச்சு தள்ளி விட்டது மாதிரி பேசுறீங்க.. இவனுக்கு தேன் கையும் வாயும் சும்மா இருக்காதே.. இவனா போய் பிரச்சினையை வாங்கிக்கிட்டு அடி வாங்கிட்டு வந்து நிற்குறான். அதுக்கு அந்த பொண்ணு என்ன செய்யும்?" என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே விவசாய சங்கத்திற்கு சென்றிருந்த நாச்சிமுத்துவும் சற்குணமும் வந்து விட்டிருந்தனர்.

 

"ஏ ஆத்தா வடிவு.. புள்ள ஏற்கனவே அடிபட்டு வந்துருக்கான்.. அவனுக்கு என்ன வேணும்கிறத பார்க்கறத விட்டுட்டு இப்படி கூடி நின்னு எல்லாரும் கும்மி அடிச்சு இருக்கீக.. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?" என்று சற்குணம் சற்று குரலை உயர்த்த.. அப்போதுதான் அந்த உறவினர்கள் கூட்டம் சற்று அடங்கி கலைந்து சென்றது.

 

மகனின் குற்றச்சாட்டும் பார்வையை பார்த்த சற்குணம் புரிந்து கொண்டேன் என்று தலையை அசைத்தவர், அங்கிருந்து உறவினர்களிடம் "முறையா நம்ம குல தெய்வ கோவிலில் புள்ளைக்கு கல்யாணம் வைச்சு உங்களுக்கு எல்லாம் விருந்து வைக்கலாம் நினைச்சேன். ஆனா அவனுக்கு உடம்பு சரி இல்லாம இருக்கு அதனால இப்போதைக்கு கொஞ்ச நாளாக தள்ளி போடலாம்னு இருக்கேன்" என்று அவர் சொன்னதும் சொந்தங்களும் "ஆமா இந்த உடஞ்ச கைய வைச்சிட்டு எப்படி தாலி கட்டுவியான்.. எல்லாம் இந்த மகராசி வந்த நேரம்!!" என்று பெருமூச்சு விட்டபடி இன்னும் சலசலத்துக் கொண்டிருக்க..

 

"இந்த பேச்சை கொஞ்சம் நிறுத்துறிகளா!! என்ன பேச்சு பேசுறீக? அவ இந்த வீட்டு மருமக!! சற்குணபாண்டியனின் மருமக.. இப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு யாரும் பேசிட்டு இருந்தீக நடக்குறதே வேற!! அப்படி யேன் மருமகள பேசுற எந்த உறவும் எங்களுக்கும் வேண்டாம்!!" என்று அவர் சற்று காட்டமாக உரைக்க.. உறவினர்களோ வாயை பிளந்து பார்த்த வண்ணம் இருந்தனர்.

 

"நல்லா சொல்லுங்க மாமா காலையிலிருந்து இல்ல இல்ல ரெண்டு நாளாவே என்னா பேச்சாக பேசியிருக்கிறாக அந்த புள்ளய.. அது உண்டு அது வேலை உண்டுன்னு இருக்கு பாவம்!!" என்று கொஞ்சம் காட்டமாக குரலில் கூறிய வடிவின் கைகள் என்னவோ மகனின் அடிபட்ட கையையே வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தது.

 

"எம்மாவ்.. எனக்கு ஒன்னும் இல்ல சாதாரண சுளுக்கு தான். ஒரு நாலஞ்சு நாள் கட்டு போட்டு இருந்தா சரி ஆவும்னு அந்த டாக்டர் பய சொன்னதனாலதான் கட்டு போட்டு இருக்கேன். நீயி இப்புடி இப்புடி என்னைய பார்த்து பார்த்து அழுதுகிட்டு இருந்த.. அப்புறம் கட்டை பிரிச்சு போட்டுருவேன். பரவாயில்லையா?" என்று சற்று கோபத்தோடு வீரா கேட்டதும், பதறிய அன்னையோ.. "அப்படி எல்லாம் செஞ்சுபுடாத ராசா.. ஒரு வாரம் என்ன கூட ரெண்டு நாளு சேர்த்து வேணாலும் கட்டு இருக்கட்டும். கை நல்லான சரிதேன். நான் போய் உனக்கு சூப்பு எடுத்துட்டு வரேன்" என்று அவர் அடுக்களைக்குள் செல்ல..

 

"வடிவு உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? மணி என்ன ஆவுது.. மாப்புள்ளைக்கு பசிக்காது? முதல்ல மாப்புள்ளைக்கு சாப்பாடு போடு ஆத்தா.. அதுக்கு அப்புறம் தான் சூப்பை சாயந்தரம் போல கொடுக்கலாம்" என்று நாச்சிமுத்து கூற.. "சரி தேன் நீங்க சொல்வதும் சரிதான். எனக்குதான் மாறனுக்கு அடிபட்டுருச்சினதும் ஒன்னும் விளங்காம போச்சு.. நீங்க வாங்க எல்லாரும் சாப்பிடலாம்" என்று அனைவருக்கும் சாப்பாடு எடுத்து பரிமாறினார் வடிவு..

 

"தம்பி நீயும் வா சாப்பிடுவியாம்!" என்று மகனை அழைக்க "அதெல்லாம் அப்பா மாமா எல்லோரும் சாப்பிட்டுமா.. நானு செத்த நேரம் செண்டு சாப்பிடுறேன் என்றவன் தன் அருகில் சாப்பாட்டையும் தன்னையும் பார்த்துக்கொண்டிருந்த தர்மாவை பார்த்து "போடா நீயும் போய் சாப்பிடு" என்றான்.

 

"பெரிய மனசு டா மச்சான் உனக்கு!!" என்றவாறு சாப்பாடுக்குள் தன்னை ஒப்படைத்தான் தர்மா.

 

கோதையும் யோகலட்சுமியும் வீராவிடம் நலம் விசாரித்துவிட்டு மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தனர். யோகலட்சுமி வீராவிடம் "சாப்பிடு மாறா.. மணி ஆகுது தானே" என்று கூற தன் அருகில் நின்று கொண்டிருந்த மனைவியை இழுத்து அமர வைத்தவன் "நீங்க எல்லாருக்கும் பரிமாறுங்க அய்த்த.. எனக்கு என் பொண்டாட்டி ஊட்டிவிடுவா" என்றதும் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க.. அவளை பார்த்துக் கண்ணடித்தவன் "என்ன பொண்டாட்டி.. எனக்கு ஊட்டி விடுவது தானே?' என்று கேட்க.. எல்லோருக்கும் முன்னால் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றிருந்தாள் அஸ்திரா.. ஆனால் அவளது கண்களோ அஸ்திரமென அவனைத் தாக்கிக் கொண்டிருந்தது.

 

அதற்குள் வடிவே தட்டில் அவனுக்கு சாப்பாடு போட்டு எடுத்து வந்து தீராவிடம் கொடுத்து "நீயே ஊட்டி விடு கண்ணு" என்று கொடுக்க.. வேறு வழியின்றி அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள்.

 

அத்தனை பேர் இருக்கும்போது இவன் எதுவும் செய்ய மாட்டான் என்று சிறு நம்பிக்கை அவளிடம் இருந்தது. ஆனாலும் அப்படியெல்லாம் என்னிடம் எதிர்பார்க்காதே என்று.. அவள் ஊட்டி விடும் சாதத்தை மென்று சாப்பிட்டானோ இல்லையோ அவளது தளிர் விரல்களை தான் தன் வாய்க்குள் சுவைத்து சுவைத்து மென்று தின்று வெளியே அனுப்பினான்.

 

"நீயும் கொஞ்சம் அதிலே சாப்பிட்டுக்கோ தீரா நேரம் ஆகுதில்ல.." என்றான் கரிசனையாக.

 

"என்னது உன் எச்சில் சாப்பாட நான் சாப்பிடவா?" என்று சத்தமில்லாமல் அடிக்குரலில் கேட்டு அவள் முறைக்க..

 

"ஏன்..‌ யேன் எச்சிலை நீ சாப்பிட மாட்டியோ? ஆனா நானு…" என்றவன் அவள் இதழ்களை பார்த்த பார்வையில்.. அவன் சொல்ல வருவது புரிய "வெட்கம் கெட்டவன்!!" என்று அவனை திட்டி விட்டு அவனுக்கு ஊட்ட முனைய அந்த கையை அப்படியே திருப்பி "நீயும் சாப்பிடு" என்று அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

மீண்டும் வடிவு வந்து சாப்பாட்டு வைத்து விட்டு செல்ல.. அது வேணும் இது வேணும் என்று கேட்டு கேட்டு வாங்கியவன், பாதியை மனைவி அறியாமலேயே அவளையே சாப்பிட வைத்தான். இதை எல்லாம் பார்க்காதது போல பார்த்து இருந்தது அந்த மொத்த குடும்பமும் அங்கு உள்ள உறவினர் கூட்டமும்.

 

ஒரு வழியாக சாப்பாடு முடிந்தவுடன் "கூட்டிட்டு மாடிக்கு போ ஆத்தா" என்று வடிவு சொல்ல வேகமாக தலையாட்டினாள். அவனுக்கு தண்ணீர் புகட்டியவள் தன் முந்தானை கொண்டு வாயை துடைத்து விட முனைய.. வீராவின் கரங்களோ யாரும் அறியாமல் அவளின் விலகிய மாராப்பு வழியே உள்ளே சென்று.. சிற்றிடையை அழுத்தி பிடித்து பிசைந்தது.

 

அதிர்ந்து விழி விரித்தவள், அவன் பார்த்து முறைத்து "ஒழுங்கு மரியாதையா கைய எடுக்கல.. மொத்த தண்ணீரையும் உன் மேல கொட்டி அபிஷேகம் பண்ணிடுவேன் ஜாக்கிரதை.." என்றாள் அடிக் குரலில் சீறலாக..

 

அதற்கு எல்லாம் பயந்தவானா அவன்? "ரொம்ப சந்தோஷம்.. அப்படி தண்ணீர யேன் மேல அபிஷேகம் பண்ணினா நீதேன் எனக்கு உடம்பு தொடைத்து விடனும்.. என்னால சட்டைய கூட கலட்ட முடியாது.." என்றவனது கைகள் இப்போது அவளின் ஆலிலை வயிற்றின் சுழிந்த தடாகத்தில் விளையாட.. எரிச்சலோடு அவனது கையை எடுத்து விட்டாள்.

 

"போ ஆத்தா.. போய் அவனுக்கு டாக்டரு கொடுத்த மருந்தை கொடுத்து உறங்க வை கண்ணு" என்று வடிவு கூற.. சரி என்று தலையை அசைத்தவள் கணவனோடு தங்கள் அறைக்கு சென்றாள்.

 

அனைவருக்கும் பரிமாறிய முடித்துவிட்டு அப்போதுதான் கோதை யோகலட்சுமி வடிவாம்பாள் சாப்பிட அமர.. 

 

"முறையா வராதவளுக்கு எல்லாம் கொடுத்து வச்சிருக்கு.. ஆனா எனக்கு" என்று குறை பட்டாள் கோதை.

 

"இவ என்ன ஏழறையை இழுக்குறா?" என்று தர்மா பார்க்க..

 

"பாத்தீகள.. அடிபட்ட கையோட யேன் அண்ண அவன் பொண்டாட்டிக்கீ ஊட்டி விட்டத.. கொடுத்து வைச்ச மகராசி!! ஆனா நீங்க?" என்று அவள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்ள.. "என்ன உனக்கும் ஊட்டி உடனும் அவ்வளோ தானே? இந்தா வாரேன் இரு.. இந்த தட்டெலாம் உனக்கு பத்தாது.. வேற.. வேற‌ வேணும்" என்று அவள் முன்னே இருந்த தட்டை எடுத்து வைத்தவன், அடுக்களைக்குள் சென்றான்.

 

"பரவால்ல அத்தை உம்ம மகன நல்லா தான் வளர்த்து இருக்கீக.." என்று கோதை பெருமை பட்டுக்கொள்ள..

 

வடிவோ மகளை முறைத்தவர் "அவேன் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டா.. உடனே உனக்கு செய்யணும் எதிர்பார்க்காதே.. இது என்ன பொறாமையா? போட்டியா? வாழ்க்கை!! உங்க விருப்பப்படி தான் வாழ முடியும். அவங்களை மாதிரியே வாழணும்னு உன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்காத கோத" என்று வடிவின் எந்த அறிவுரையும் அவள் காதில் ஏறவில்லை.

 

"விடுங்க மதினி.. அவே சின்ன பொண்ணு தானே.. ஆசைப் படுறா அவன் என்ன ஊட்டிவிட்டா குறைஞ்சிடுமோ அவேன் பெகுமானம்" என்று மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார் யோகலட்சுமி.

 

"ஆமா நீக இப்படி பேசிகிட்டே இருந்து அவள இன்னும் ஏத்தி விடுக" என்ற வடிவாம்பாள் சாப்பாட்டில் கவனம் கொண்டார்.

 

உள்ளே சென்ற தர்மா எடுத்த வந்ததை பார்த்து அதிர்ச்சியான கோதை‌‌.. "அய்யய்யோ அய்த்தான்.. ஆள விடுக" என்று ஓடினாள்.

 

"அப்படியெல்லாம் உன்னைய விட மாட்டேன் டி யேன் மயிலு" என்று ஓடியவளை இழுத்து வந்தான் தர்மா..

 

ப்படியென்ன‌ எடுத்து வந்திருப்பான் தர்மா??

 

தாகம் தீருமோ??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top