யட்சன் 32

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம் : 32

 

 

முத்தாடலில் திளைத்திருந்த இராவணன் சித்ராவின் மறுப்பை மறுத்து தன் வேலையில் மூழ்கியிருக்க.. அதுவும் இதழ்களை‌ மறுத்தவளின் கழுத்தில் அவன் அழுத்தமாக தன் முத்திரையை பதித்தான். அவன் கட்டிய தாலிக் கொடியை உரிமையாய் பற்களில் கடித்தப்படி அவள் கழுத்தில் புதைந்து இருந்தான். 

 

இவனின் இவ்வளவு செயல்களுக்கும் சித்ரா கொஞ்சமும் இளகாமல் இறுகியே இருந்தாள். அவளுக்கு அவனின் செயல்கள் அருவுறுப்பு மட்டுமே!

 

இப்போதும் அவனது முத்தத்தில் பெண்ணவள் மேனி சில நொடிகள் நெகிழ்வதை கண்டவன் "யட்சிணி… யட்சிணி" என்று மெல்ல முணுமுணுத்தப்படி அவளது கழுத்தில் இன்னும் அழுத்தமாக முகம் புதைத்தான்.

 

அவள் கழுத்தில் இருந்த மச்சத்தில் அடுத்த முத்தத்தை பதிவிட்டவன், அவளின் உடைகளை தளர்த்த ஆரம்பிக்க.. சித்ராவோ ஊமையாய் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். 

 

அவள்‌ அழுகையை கண்டவனுக்கு கோபம் வந்தது. அழுகையில் துடித்த

உதடுகளுக்கு கடித்து தண்டனை கொடுப்போமா இல்லை தின்று ஏப்பம் விடுவோமா என்று அவன் அதி முக்கிய ஆராய்ச்சியில் இருக்க.. அப்போது தான் பூச்சாடி கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

 

இது இராவணனின் கோட்டம்! அதிலும் இது அவனின் பள்ளியறை!

இதில் யார் அத்துமீறி நுழைந்தது என்று கோபத்தில் ஜிவுஜிவு ஜிவுத்த முகத்தோடு அவன் திரும்பி பார்க்க… 

 

அதே சமயம் பிடித்தம் இல்லையென்றாலும் அவர்களது அந்தரங்கமான நேரம் அல்லவா? இதை யார் பார்ப்பது என்று பயத்தோடு சித்ராவும் பார்க்க..

 

அங்கே அறை வாயிலில் அலங்காரத்துக்கு இருக்கும் நீண்ட திரைச்சீலையை‌ பிடிமானத்துக்கு பிடித்தப்படி அதிர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்‌ தாத்ரி.

 

ஒரு மனைவியாய் கணவனை எந்த கோலத்தில் பார்க்க கூடாதோ அந்த கோலத்தில் பாரத்து விட்டுருந்தாள். அதுவும் அவளின் சொந்த தங்கையுடனே… இதுவரை தன்னிடம் கூட இவன்‌ இப்படி அத்துமீறியது இல்லையே என்ற ஏக்கத்தில்.. அவன் அத்துமீற தேவையே இல்லாமல் இவளே ஒத்துழைத்து இருப்பாள்‌ அவன்‌ நெருங்கி இருந்தால்… ஆனால் அவனோ அவளை அப்படி பார்க்கவேயில்லையே? ஏனோ கட்டிய மனைவியிடம் இராமனா நடந்துக் கொண்டவன் சித்ராவிடம் மட்டுமே இராவணனாய்!

 

என்ன தான் சித்ரா கழுத்தில் இராவணன் தாலி கட்டி இருந்தாலும் இன்னும் அவன் தாத்ரியின் கணவனும் கூட தானே?

 

அவளால் அந்த அதிர்ச்சி தாளாமல் மேற்கொண்டு  என்ன விபரீதம் நடக்குமோ? எதையும் நாம் கண்ணூற்று விடுவோமோ என்ற பயத்தில் தான் அவள் அந்த பூச்சாடியை தள்ளி அவர்கள் மோனத்தை கலைத்தது.

 

 

"ஏய்.." என்று கர்ஜித்தவாறு இராவணன் எழுந்த வேகத்திற்கு இன்னும் பயந்த தாத்ரி வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடினாள்.

 

ஆனால் சித்ராவோ அன்று சீதையை பூமி பிளந்து விழுங்கியது போல தன்னை விழுங்கி விடாதா என்று வேதனையோடு தன் முன் நின்றவனை பார்த்தாள்.

 

அந்நிலையிலும் சித்ரா தாத்ரிக்காக வேதனை உற்றாள். யாரால் தான் ஆசையை காதலித்து கல்யாணம் செய்த தன் கணவனை இன்னொருத்தியுடன் படுக்கையில் பார்க்க முடியும்? 

 

அந்த வேதனை இருக்கே.. உயிரோடு மரண வலியை அனுபவிப்பது.

 

"போடா போடா எல்லாம் உன்னால தான். பாவம் தேவி க்கா.." என்று அவனது சட்டையை பிடித்துக் கொண்டு கோபத்தில் உலுக்கி எடுத்தாள் சித்ரா. ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளாமல் போகும் தாத்ரியையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தான். கண்கள் எல்லாம் கோபத்தில் சிவந்து ரத்த வரிகளாக மாறி இருந்தது.

 

"இப்படி என்னை இந்த நிலைமையில உன்னோட அவள பாக்க வச்சிட்டியே?" என்று இப்பொழுது அவன் நெஞ்சத்தில் இரு கைகளாலும் மாறி மாறி குத்தினாள் அடித்தாள் சித்ரா.

 

"ஏய் விடுடி.. அம்மாயி விடு.." என்று மென் குரலில் ஆரம்பித்து சற்று குரலில் கடினத்தை ஏற்படுத்தி அவன் கூற, அது எதுவுமே சித்ராவின் காதுகளில் சென்று சேரவில்லை.

 

அவள் எண்ணங்கள் முழுவதும் தாத்ரியே நிறைந்திருந்தாள். இப்படி தங்களைப் பார்த்தது, அதுவும் அவள் கணவனோடு பார்த்ததை நினைத்தால்.. அவள் மனம் என்ன பாடுபடும் என்று ஒரு பெண்ணாய் தாத்ரியின் வலிகள் சித்ராவுக்கு புரிந்தது. அதன் வெளிப்பாடு இந்த கோபம் ஆற்றாமை எல்லாம். அதனை யாரிடம் காண்பிக்க என்று தெரியாமல் அனைத்தையும் இராவணன் மீதே காட்டிக்கொண்டிருந்தாள்.

 

ஆனால் இராவணனுக்கு வேறு விதமான கோபம். 'எவ்வளவு துணிவு இருந்தால் என் வீட்டில் என் பகுதியில் என் அறைக்குள்ளே வந்திருப்பாள்?' என்று அதோடு இவளின் அழுகையும் சேர அவனுக்கு அந்த நேரம் எரிச்சல் மிகுந்தது.

 

"ஹே ஆப்பண்டி (ஏய் நிறுத்துடி)" என்று உறுமினான்.

 

"எதுக்கு இப்படி கத்தி கூச்சல் போட்டுக்கிட்டு இருக்க? நீ எவன் கூட இருந்து விட இல்ல தானே.. உன் புருஷன் கூட தானே இருந்த? அதை அவ பார்த்ததுல உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?" என்று அவள் கைகளை தட்டி விட்டு தாடையை இறுக்கமாக பிடித்து கண்களுக்குள் பார்த்து கேட்டான் இராவணன்.

 

அவனின் ஏய் என்ற கர்ஜனைக்கே அவளது சத்தம் குறைந்து கண்ணீர் நிற்க.. இப்பொழுது அழுத்தமாக பற்றிய தடையில் சர்வம் ஒடுங்கியது சித்ராவுக்கு.

 

"இது என் வீடு! நீ என் பொண்டாட்டி! இது என்னோட பெட்ரூம்.. இங்கே நான் உன் கூட எப்படி வேணாலும் இருப்பேன். அதை பார்த்தது அவ தப்பு.. நீ எதுக்கு இப்ப கூச்சல் போட்டுட்டு இருக்க.. உஷ்.. சத்தம் வரக்கூடாது. இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு ஆள் அனுப்புவேன். அப்போது நீ கீழே வா.." என்றவன் கலண்டு இருந்த தன் சட்ட பட்டன்களை போட்டுக் கொண்டு வேகமாக படி இறங்கி கீழே சென்றான்.

 

மேலே கண்ட காட்சியின் தாக்கம் தாங்க முடியாமல் கைகள் இறுக்க கட்டிக் கொண்டு இறுக்கமாக அமர்ந்திருந்தாள் தாத்ரி. 

 

ஒருவகையில் அவளும் பாவம் தானே.. கட்டிய கணவன் இதுவரை கட்டிலில் அவளை கண்டு கொண்டதே கிடையாது. ஆனால் இன்று அவளின் சொந்த தங்கை கூடவே கட்டிலில் சரசமாடுகிறான். அதுவும் இவளை ஹாலில் வைத்துக் கொண்டே.. அதை பார்த்து அவளுக்கும் எப்படி இருக்கும்? எந்தப் பெண்ணும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு.

 

"உடனே இந்த வீட்டை விட்டு ஓட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் ராவணனிடம் பேசாமல் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் இங்கிருந்து செல்லக்கூடாது. நாளைக்கு அவன் வேறு ஏதும் விபரீதம் முடிவு எடுக்கறதுக்குள் நம் கைக்குள் அனைத்தையும் கொண்டு வந்து விட வேண்டும்" என்று வெறி அவள் மனதில் ஓட கைகள் இறுக்கி கட்டியபடி அமர்ந்திருந்தாள் தாத்ரி.

 

'எப்படியும் இராவணன் வந்து கண்டிப்பாக சத்தம் போடுவான்' என்று அவள் எதிர்பார்த்துதான் காத்திருந்தாள்.

 

அதன்படியே வேக நடையோடு மாடிப்படி அவன் இறங்கி வருவதை ஓரக்கண்ணால் பார்த்தாலும் நிமிரவே இல்லை தாத்ரி.

 

வேகமாக வந்தவன் அவள் பக்கவாட்டில் இருந்த ஒற்றை சோபாவில் தோரணையாக அமர்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டு இரு கைகளையும் சோபா விளிம்பில் வைத்தவன் அவளிடம் கோபப்படவே இல்லை. வெகு நிதானமாக "என்ன சாப்பிட தாத்ரி? முதல் தடவை என் வீட்டுக்கு வந்திருக்க.. உபசரிக்கனும் இல்ல" என்றான் சாதாரண குரலில்.

 

இப்படி ஒரு நிதானத்தை இராவணனிடம் தாத்ரி எதிர்பார்க்கவே இல்லை. எப்படி என் அனுமதி இல்லாமல் நீ வந்து பார்க்கலாம் என்று ஏதேனும் திட்டுவானோ அடிப்பானோ சண்டை போடுவானோ என்று பலவித கற்பனைகளில் அவள் உறைந்து கொண்டிருக்க… அதற்கெல்லாம் வேலையே இல்லாமல் அமைதியாக இருந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள் தாத்ரி.

 

அதற்குள் வேலையாளை அழைத்து காபி கொண்டு வரச் சொல்லி இருந்தான். வேலையாள் கொடுப்பதை கை நடுக்கத்தோடு வாங்கிக் கொண்டாள் தாத்ரி.

 

"அப்புறம் தாத்ரி தேவி.. மேல பார்த்த காட்சி குளுகுளுன்னு இருந்துச்சா? இருக்கணுமே..?" என்றதும் குடித்துக் கொண்டிருந்த காபி புரை ஏற அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவனை.

 

இராவணன் கண்களில் 'நீ பார்ப்பாய் என்று தெரிந்த தான் அவளோடு சரசமாடினேன்' என்று செய்

தி தாங்கி இருக்க அதிர்ச்சி விலகாமல் சிலையென அமர்ந்திருந்தாள்.

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top