யட்சன் 27

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 27

 

ஆகிற்று இதோடு இரண்டு நாட்கள்

சித்ராவை ராவணன் தூக்கி வந்து, தனி பங்காளவில் சிறை வைத்து.

 

அன்று மாற்றான் மனைவியான சீதையை இராவண புஷ்பக விமானத்தில் தூக்கி சென்றான். இன்று இன்றைய இந்த ராவணனோ மாற்றான் மனைவியாக போகும் தருணத்தில் அதை தடுத்து சித்துவை தன் இயந்திர விமானத்தில் தூக்கி வந்திருந்தான் தன் கோட்டைக்கு.

 

ஆந்திராவில் உள்ள அவனது வீடு அல்ல அது. அதே ஊரில் சற்று தள்ளி இருக்கும் அவனுக்கே அவனுக்கான மாளிகை! அவன் தொழில் ஆரம்பித்ததுமே அவனுக்கான லாபத்தில் அப்போதே தனியாக அந்த மாளிகையை கட்டினான். எதற்கு என்று கேட்க வரலட்சுமியிடம் "இந்த வீடு பொதுவானது. சித்தப்பாக்கு பங்கு இருக்கு. ஆனா நமக்கே நமக்கென்று ஒன்னு வேணும் இல்லையா? அதனாலதான்" என்று கூற அது வரலட்சுமிக்கு ஏற்புடையதாக இருக்க, மகன் ஆசை படி கட்டிக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.

 

இராவணன் என்ற பெயருக்கு ஏற்றார் போல சித்ராவை தூக்கி வந்து அசோகவனத்தில் அல்ல இன்றைய இராவணன் கோட்டத்தில் சிறை வைத்திருந்தான்.

 

இவன் தாலி கட்டி தூக்கியதுமே நம்ப முடியாமல் திக்பிரம்மை பிடித்தவள் போல இருந்தவளை ஈசியாக இழுத்துக் கொண்டு வந்து அலேக்காக தூக்கி ஹெலிகாப்டரில் போட்டு, அடுத்த நிமிடம் அவன் ஏற, அது உயர உயர பறந்து சென்றது. 

 

அதன் பிறகு தான் நிதர்சனத்தை அங்குள்ள ஒவ்வொருவரும் புரிந்தார்கள். கீழே விழுந்து கிடந்த சிவப்பிரசாத் அப்படியே இருக்க, அதிர்ச்சியில் வாயை பிளந்தப்படி தாத்ரி அப்படியே நிற்க.. மற்றவர்களோ இராவணனின் கொடுத்த அதிர்ச்சியில் சிலையென சமைந்து நின்றனர்.

 

ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டவுடன் "ஐயோ என் பொண்ணு" என்று கலாவதி ஆரம்பித்தவுடன் தான் மற்றவர்களும் சுயநினைவுக்கு வர.. அனைவரும் ஹெலிகாப்டர் இருந்த இடத்தை நோக்கி விரைந்தனர். ஆனால் தாத்ரி செய்வது அறியாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

சிவப்பிரசாத் கண்கள் தாத்ரியை தான் நோக்கிக் கொண்டு இருந்தன. 'எவ்வளவு திட்டம் தீட்டியும் கட்டம் கட்டியும் கடைசியில் அவன் தூக்கி சென்று விட்டானே?' என்ற பாவம். 'அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறானோ?' என்று பயம்.

எல்லாம் கலந்த கலவையாக இருந்தான் சிவப்பிரசாத்.

 

இப்போதைக்கு தாத்ரி இடம் பேச அவன் விரும்பவில்லை. அவனும்  ஹெலிபேட் இருந்த இடத்தை நோக்கி செல்ல.. அதற்குள் தான் ராவணன் சென்று விட்டானே அதனால் அவ்விடத்தை விட்டு சென்றான்.

 

சுற்றி இருந்த சொந்தங்கள் எல்லாம் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள.. கலாவதிக்கு கண்ணீர் நிற்காமல் அழுது கரைந்து கொண்டு இருந்தார். மனைவியை தோளோடு அணைத்து உயிரே பறந்து சென்று விட்ட ஹெலிகாப்டரை பார்த்தார். அது சின்ன புள்ளியாய்  மறைந்து விட்டிருந்தது. 

 

ஆகாஷ் "யூ பாஸ்டர்ட்.. ஸ்கௌண்ட்ரல்… உன்னை சும்மா விட மாட்டேன் டா" என்று ஆவேசமாக கர்ஜித்தான்.

 

ரங்கராஜன் மனதினில் அத்தனை கோபம். ஏற்கனவே ஒரு பெண்ணை வேண்டா வெறுப்பாக கொடுத்திருக்க.. இன்று அதிரடியை அடுத்த பெண்ணின் கழுத்திலும் தாலி கட்டி தூக்கி சென்று இருக்கும் இவனெல்லாம் மனுஷனா இல்லை அரக்கனா? என்று ரௌத்திரத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார். அதே ரௌத்திரத்தோடு அதிர்ச்சியாக நின்ற வரலட்சுமி பார்க்க.. அவருக்கும் அதே அதிர்ச்சி தான். அவருக்கு அவமானமாக இருந்தது. ஆனால் தாத்ரியை நினைத்து பெரு வருத்தம். 'அவளுக்கு இனி என்ன? இருவருக்குமான இந்த பந்தம் என்ன? அப்போது தாத்ரி நிலை என்ன?' என்று மருமகளை நினைத்து அவருக்கு கவலை.

 

ஜலஜா திறந்த வாயை மூடாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு இந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை. திருமணத்தை பேசும் போது கூட பெண் வழியாக இவ்வளவு சொத்து வரும். அவர்களது சொத்தையும் பிரித்து இப்போதே தந்து விடுவதாக ராவணன் கூறி இருக்க… அதற்குப் பிறகு திருமணத்திற்கு சம்மதித்தார்.

 

இவர்களிடம் ஒன்றும் இல்லாமல்..  பரம்பரை சொத்தும் இல்லாமல்… சித்ராவிடம் இருந்து ஒன்றும் இல்லாமல்… எல்லாத்தையும் அவர் ஒருவனே அபகரித்து சென்று விட்டானே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்க தொடங்கினார்.

 

அதுவரை இரண்டாவது மகளின் திருமணத்தை நிறுத்தி, அவளை தூக்கி சென்று விட்டானே என்று தவித்து கண்கலங்கி கொண்டிருந்த கலாவதிக்கு அப்போதுதான் நிதர்சனம் நெற்றியில் அறையப்பட்டது. திருமணம் செய்தவன் முதல் மகளின் கணவன் அல்லவா? அப்பொழுது அவளின் நிலை? என்று நினைத்தவர் "தேவி.. எம் பொண்ணே" என்று கதறலோடு மீண்டும் மனம் கலங்க அவளிடம் ஓடினார்.

 

அங்கே சிலை போல மடங்கிய அமர்ந்திருந்த மகளை கண் கொண்டு பார்க்க முடியாமல் தவித்தார்.

 

"இந்த ராட்சசன் இடம் என் இரண்டு மகள்களும் மாட்டிக்கொண்டனரே.. ஒருத்தி தாலி கட்டி அவனுடன் குடும்பம் நடத்தி இங்கே இருக்கிறா.. இன்னொருத்தி கட்டாய தாலி கட்டிக் கொண்டு பிரிந்து சென்று விட்டாளே.." என்று கலாவதி கண்கள் கலங்க…

 

"இவனை அப்படியே சும்மா விடக்கூடாது? அன்னைக்கே சொன்னேன் இவனை பிடிக்கலை.. இந்த இடம் வேண்டாம்னு. கேட்காமல் சம்பந்தம் பண்ணி இப்ப என்ன ஆச்சு? அதுல போலீஸ் அப்படியே கம்ப்ளைன்ட்டை வாங்கிட்டாலும்?" என்று ரங்கராஜன் கொதித்து பேச.. உறவினர்களும் அதற்கு ஆதரவு கொடுக்க.. இங்கு நிலவரம் கலவரம் ஆனது.

 

ஆனால் அடுத்த பத்தாவது நிமிடம் உள்ளே வந்த பாக்ஸர்கள் அனைவரையும் கிளம்பும் படி கூறினார்கள். அதற்கு பின்தான் அந்த ரிசார்ட்டே அவனுக்கு சொந்தமானது என்று தெரிய வர மேலும் தாமதிக்காமல் பாதி உறவினர்கள் சென்றுவிட ரங்கராஜன் குடும்பத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.

 

ஆகாஷ் தாயையும் தந்தையும் சமாதானப்படுத்தி கொண்டிருந்தவன் தந்தையின் அருகே அங்கிருந்த தாத்ரியை குற்றப் பார்வை பார்த்தான். "இத்தனைக்கும் நீ தான் காரணம் இந்த திருமணம் அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று அப்பவே சொன்னார் அப்பா" என்று பல்லை கடித்து அவளைத் திட்ட தொடங்க..

 

"தேவி என்னடா பண்ணுவா? ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கலாம்னு அவ ஆசைப்பட்டா.." என்று அவர் முடிக்கும் முன்னே "அத தான் உங்க பெரிய மாப்பிள்ளை.. பெரிய்ய்ய மாப்பிள்ளை செஞ்சிட்டான். இனி இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கலாம். சக்களத்திகளா.. இதெல்லாம் தேவையா?" என்று "என்ன சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்கிறதுன்னே தெரியல அவனோட உயரம் அப்படி…" என்று புலம்பினான்.

 

"மொதல்ல நம்ம தேவிய கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று அவளை அழைக்க அவள் வர மறுத்தாள்.

 

"நா ஏன் வரணும்? நா அங்க ஏன் வரணும்? என்னோட வீடு ஆந்திராவில் இருக்கு. அதுதான் என் வீடு. நான் அங்கதான் போவேன்" என்றவர் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு இவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் தவிப்போடு நின்றிருந்த வரலட்சுமி அருகே வந்தவள் "அத்தமா நம்ம கிளம்பலாம்" என்று அவரை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.

 

மகளின் இந்த புதிய அவதாரத்தில் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறதோ.. இரண்டு பெண்களும் என்னவெல்லாம் துன்பப்பட போகிறார்களோ.. என்று கூறி கூறி அல்லது ஒரு கட்டத்தில் மயங்கி சரிந்தார் கலாவதி.

 

இப்போதைக்கு அம்மா தான் முக்கியம் நினைத்த ஆகாஷ் "பர்ஸ்ட் அம்மாவை பார்ப்போம் பா" என்ற ஆகாஷ் தாயையும் தந்தையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்று விட்டான்.

 

ஜலஜாவோ இத்தனை கலேபரத்தில் மகனை காணாமல் எங்கு சென்றிருப்பான் என அவனைத் தேடிக் கொண்டு கணவனோடு சென்றுவிட்டார்.

 

ஆக மொத்தம் திருமணம் என்று களைகட்ட ஆரம்பித்திருந்த ரிசார்ட் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்தும் துடைத்து விட்ட மாதிரி ஆட்கள் அரவரமின்றி நிர்மூலமாக கிடந்தது.

 

உயிரே பறக்கும் பொழுது இந்த அதிர்ச்சியை கொஞ்சம் கூட தாங்க முடியாமல் தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்தை வெறித்த வண்ணமே அமர்ந்திருந்த சித்ரலேகாவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பியது.

 

அவள் விழிக்கும் போது இராவணனின் அறையில் இருந்தாள். உடம்பில் இருந்து நழுவ 

முயன்ற போர்வையை எதா

ர்த்தமாக தள்ள.. அவளிருந்த நிலை அவளை அதிர செய்தது.

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top