அத்தியாயம்: 22
சிவப்பிரசாத் சித்ரலேகா கல்யாண
விஷயத்தை ஆற போடாமல் வரலட்சுமி மூலமாக விஷ்ராவணனுக்கு விஷயம் வர கழுத்து எலும்புகள் எல்லாம் கோபத்தில் புடைக்க.. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக அன்னை கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
"அம்மா.. நான் சிவப்பிரசாத் கிட்ட பேசுக்கிறேன்.." என்று ஃபோனை அவன் வைக்கும் முன் "நாணா… ஜலஜா பின்னி…" என்று வருத்தமாக கூற… அவரின் வருத்தம் அவனை தாக்க "நேனு சூஸூகொண்டானு அம்மா" என்று ஃபோனை வைத்து விட்டான்.
சிறிது நேரம் இங்கேயும் அங்கேயும் நடைபோட்டவன் அன்றிரவு உறக்கமின்றி தவித்தான். சுவாசம் அடைப்பது போல் இருந்தது அந்த குளிரூட்டப்பட்ட அறையில், கதவை படாரென்று திறந்து கொண்டு வெளியில் வந்தான். அவனிடமிருந்து சில அடி தூரத்தில் அவனுக்கு பாதுகாப்பாக நின்றிருந்தனர் அவனது பாடி கார்ட்ஸ்.
ஆறடி நான்கு அங்குல உயரத்தில் அகன்ற மார்பும் திரண்ட தோள்களுமாக இருந்தவன் மனமோ உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது. இரண்டு வார ரோமங்களோடு பாறை போன்று இறுகிய அவனது முகம் கண்ட யாராயினும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு தான் நிதானப் படுவார்கள், அவ்வளவு ரௌத்திரம் அதில். தென்னிந்தியாவின் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தொழிலதிபன் இன்று மன உளைச்சலில் சிக்கி தவித்தான்.
கிரேக்கச் சிலையாக நின்றிருந்தவனின் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தின் கண்களில் மட்டும் ரத்த வரிகள். ஃபுல் சூட்டோடு தான் நின்றிருத்தான். மாலை ஒர் மீட்டிங் முடித்துவிட்டு அந்த பார்ட்டியடனே இரவு டின்னரை முடித்து வந்தவனுக்கு அன்னையிடமிருந்து ஃபோன் வர அப்படியே இருந்தவன் உள்ளே புழுக்கம் தாளாமல் வெளியே வந்து நின்று விட்டான். கடற்கரை காற்று அதன் குளுமையால் அவனை தாளாட்டியது.
மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி சிலையாக நின்றிருந்தவனிடம் சிறு சலனம் இரவில் ஒளிர்விடும் வெண்மதியை பார்த்து. ஒவ்வொரு முறையும் அதில் சித்ரலேகாவின் சிரித்த முகம் மின்னி மின்னி மறைந்தது.
"யட்சிணி… யட்சிணி.. அவள் என் யட்சிணி! அவளுக்கு வேறு ஒருவனுடன் கல்யாணமா? ம்ஹூம்! நடக்காது நடக்க விடமாட்டான் இந்த ராவணன். அவள் என் யட்சிணி" என்று அந்த நிலவைப் பார்த்து கோபமாக உரைத்தான் இராவணன்.
கழுத்தை இறுக்கிய டையின் முடிச்சை தளர்த்தியவாறு சற்று தள்ளி நின்று இவனது கோட்டை கையில் வைத்தபடி இவனையே பார்த்திருந்த பார்டி கார்ட்டில் ஒருவனை சைகையால் அழைத்து,
அவரிடம் ஏதேதோ கூற பாஸ் என்று விழித்தவனை "டூ வாட் ஐ சே" என்று
கர்ஜித்தவன் வேகமாக அறைக்குள் வந்தான். அதற்கு பின் தான் அவனை நித்ராதேவி தழுவிக்கொண்டாள்.
நேற்று இருந்த அலைப்புறுதல்களோ அழுத்தமுமோ கோபமோ இன்று இல்லை இராவணனுக்கு. மிக நிதானமாகவே கிளம்பி
ப்ராஜெக்ட் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
நேற்று இரவு தாத்ரியிடம் பேசிவிட்டதில் இருந்து கோட்டையை பிடித்த நிம்மதி சிவப்பிரசாத்திடம். 'எப்படியும் தாத்ரி வரலட்சுமி இடம் பேசி விடுவாள் திருமணமும் நடந்து விடும். தாங்கள் போட்ட திட்டமும் சரியாக நடக்கிறது.. சித்து இனி எனக்கு தான்' என்று மனம் சந்தோஷத்தில் மிதக்க அங்கே வேலை செய்பவர்களை சற்று அதட்டலோடு பேசி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது வேகமாக வந்த லம்போரினி கார் சீறி நிற்க "அண்ணையா என்ன இவ்வளவு காலையில் வந்திருக்காரு? பெரியம்மா விஷயத்தை சொல்லி இருப்பார்களோ?" என்று சிறு பதட்டம் அவனுள். அது நடுக்கமாய் கையில் தெரிய, கையை சாதாரண போல கட்டிக்கொண்டு அண்ணனை எதிர்கொண்டவன் "குட்மார்னிங் அண்ணையா" என்றான். முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் இப்போது இல்லை
அவனை கூர்ந்து பார்த்த இராவணனும் "கம் ஆபீஸ் ரூம் சிவப்பிரசாத்" என்று கட்டளையிட்டு வேகமாக நடந்தான்.
அண்ணனின் முன்னே எதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக நின்றவனை பார்த்து 'நீ தான் சொல்ல வேண்டும்' என்று அழுத்தமாக அந்த டேபிளில் சாய்ந்து நின்றவனை அவஸ்தியாக பார்த்தான் இராவணன்.
"அது அண்ணைய்யா… நான் சித்துவ.." என்றதும் விட்டான் ஒரு அறை அவன் கன்னத்தில்…
"உன்னை நம்பி ஒரு பெண்ணை தனியாக வேலைக்கு அனுப்பினால் அவளிடம் காதல் விளையாட்டு விளையாண்டு கல்யாணம் வரைக்கும் செல்வாயோ? இன்னைக்கு சித்ரலேகா.. நாளைக்கு வேற பிராஜெக்ட் போய்ட்டா வேற பொண்ணா டா.. நேனு சம்பேஸ்த்னு ரா" என்று தெலுங்கில் அவன் வைத்து வாங்க பதில் சொல்ல முடியாமல் திரு திருத்தான் சிவப்பிரசாத்.
"அது வந்து அண்ணையா" "இல்லை அண்ணையா.. நேனு.."
"லேது அண்ணைய்யா"
"கொஞ்சம் கேளுங்க அண்ணைய்யா" என்று அவன் தமிழ் தெலுங்கு என்று மாறி மாறி சொன்ன எதுவும் அவன் காதில் விழவில்லை. அவனை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு தான் மறு வேலை பார்த்தவன் கடைசியாக சொன்ன செய்தியில் சிவப்பிரசாத் மயக்கமே போட்டு விட்டான்.
"உன் அம்மாகிட்ட பேசுறேன் இந்த கல்யாணம் பத்தி!" என்றதும்..
"வாட் அ மேக் அண்ணையா நீரு!" என்று பார்த்தான்.
அந்த மயக்கத்தோடையே அவனை வேறு ஒரு மீட்டிங்கு அனுப்பி வைத்து விட்டான். போகும் வழியில் அண்ணன் சொன்னதை சந்தோஷத்தோடு தன் தோழியிடம் பகிர்ந்து கொண்டான் சிவப்பிரசாத்.
இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் காலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த சித்து இருக்கையில் திரும்பி அமர்ந்திருப்பது சிவப்பிரசாத் தான் என்று எண்ணி "குட் மார்னிங் சிவா" என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.
"குட் மார்னிங் அம்மாயி" என்ற குரலில் திடுக்கிட்டு பார்க்க சாதாரணமாக இருக்கையை வட்டமடைத்த படி அவளுக்கு ஏடுக்கொண்டலவாடனாக பிரசன்னம் தந்தான் விஷ் ராவணன்!
"என்டே அம்மே இவனா?" அவள் அதிர்ந்தது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய..
"தர்வாத்த (அப்புறம்) அட்டனி பிரேமஸ்துன்னாரா (அவன் மீது காதலா?) என்று இகழ்ச்சியாக கேட்டதில், அரைக்குறையாக புரிந்தது அவளுக்கு. இருக்கிற சக்தி எல்லாம் வடிந்தது போல தோய்ந்து நின்று விட்டாள் சித்ரலேகா.
'இவனுக்கு பயந்துகிட்டு அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் இவன் என்ன நான் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறான்?" என்று தலையே சுற்றி விட்டது அவளுக்கு. 'யாருடா இந்த புரளி எல்லாம் கிளப்பி விடுறீங்க?" என்று நா உலர்ந்து போக எச்சில் விழுங்கிக் கொண்டாள் சித்ரா. ஏனென்றால் அவன் தான் இரையை பிடிக்கும் கழுகு போல கூர்ந்து இவ
ளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறானே...
தொடரும்..
