அத்தியாயம்: 21
"சித்துக்கு ஓகே.. அப்போ உங்களுக்கும் ஓகே தானே?" என்று குதூகலித்தாள் தாத்ரி.
"இன்னும் நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று சின்ன மகளை கூர்ந்து பார்த்தார் ரங்கராஜன். கலாவதி கணவனை கலாவரமாக பார்த்தார்.
"நமக்கு மட்டும் ஓகேன்னா.. போதுமா? முக்கியமா சம்மதிக்க வேண்டியது யார் தெரியுமா?" என்று மகளை பார்த்து கேட்க.. தாத்ரி "தெரியும் பா. ஜலஜா ஆன்ட்டிய தான சொல்றீங்க? கண்டிப்பா அவங்க ஒத்துக்குவாங்கப்பா" என்று அவரைப் பற்றி தெரியாமல் வாக்கு கொடுத்தாள் தாத்ரி.
இல்லை என்று தலை அசைத்தார் ரங்கராஜன். "சிவப்பிரசாத்துக்கு தான் ஏற்கனவே நம்ம சித்துவ பிடிக்குமே பா.. லவ்வுனு சொல்லலைனாலும் அஸ் அ ப்ரண்டா அவனை என்னால புரிஞ்சிக்க முடியும்? நீங்க அவனை பத்தி கவலைப்பட்ட வேணாம் பா" என்று என்னவோ அவள் தான் அந்தக் குடும்பத்தை தாங்கி பிடிப்பதை போல உரைத்தாள். அவள் குரலில் தான் எத்தனை தன்னம்பிக்கை எத்தனை கர்வம் ஆனால் அத்தனை கர்வமும் ஒருவனின் காலில் சென்று விழ போகிறது என்பதை அந்த கணம் அவள் அறியவில்லை.
"நீ சொல்ற சிவப்பிரசாத் இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் அதுக்கு எல்லாம் மேல ஒருத்தர் இருக்கார் யார் தெரியுமா உன் புருஷன் விஷ் ராவணன் ரெட்டி! அவரு சம்மதம் சொன்னா மட்டும்தான் இந்த கல்யாணம் நடக்கும். அதிலும் நீ சொன்னியே உங்க ஜலஜா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க…" என்று அந்த நல்லவங்களை இழுத்து நக்கலாக கூறினார் ரங்கராஜன்.
"அவங்கள பத்தி இன்னும் உனக்கு சரியா தெரியல தார்தி" என்றார் அதில் அவளுக்கு கோபம் வெடுக்கென்று வந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக சிவப்பிரசாத்தோடு அவளுக்கு பழக்கம் அப்படி இருக்கும் பொழுது அவனை அவன் என்றால் அவனோடு அவனது அப்பா சீனிவாசரெட்டியும் ஜலஜாவும் நன்றாக தான் பழகியிருக்க.. அதை தந்தையிடம் நிரூபிக்கும் பொருட்டு,
"எனக்கும் சிவாவுக்கும் ஏழு வருஷமா பிரண்ட்ஷிப் பா. ஜலஜா ஆன்ட்டி எனக்கு அப்பத்தில் இருந்தே தெரியும். நான் சொன்னா கண்டிப்பா உங்க கேப்பாங்க" என்று சிலிர்த்துக் கொண்டாள்.
"நோ வே! உன்ன அவங்க மகனின் தோழியா பிடிக்கும். அதேசமயம் விஷ்ராவணனின் மனைவியா உன் மேல அவங்களுக்கு ஒரு மரியாதை இருக்கும். அதை தாண்டி நீ.. அதாவது இந்த ரங்கராஜனுடைய பொண்ணு தாத்ரி தேவியா உன்ன அவங்க பக்கம் கூட சேர்க்க மாட்டாங்க. காரணம் என்ன தெரியுமா? நம்முடைய பொருளாதாரம்! என்னதான் நம்மளும் சொந்தமாக பிசினஸ் பார்த்தாலும்.. அவங்க அளவுக்கு நம்ம கிடையாது. அந்த ஏற்றத்தாழ்வு அவங்க கண்ணுல நான் நிறைய பார்த்திருக்கேன். அதுவும் உன் கல்யாணத்துக்கு போதே… அப்படி இருக்கிறவங்க எப்படி சித்துவ அவங்க பையனுக்கு கட்டிக் கொடுக்க சம்மதிப்பாங்க" என்றதும் அவள் திரு திருத்து முழித்தாள் தாத்ரி. கலாவதியும் சித்ரலேகாவும் வெறும் பார்வையாளராக இருந்தனர்.
"இல்லப்பா.." என்று தாத்ரி கூற வர கை அமர்த்தி தடுத்தவர் "நம்ம இந்த விஷயம் பேசுறதுக்கு முன்னாடி இதெல்லாம் தெளிவுபடுத்துகிறது நல்லது தேவி. இப்ப நீ சொன்னது போல அவங்களும் இந்த கல்யாணத்தை ஒத்துக்க வைக்க ஒருவரால் தான் முடியும் அது உன் வீட்டுக்காரர் விஷ்ராவணன் தான். அவர் நினைத்தால் தான் இந்த திருமணம் நடக்கும்" என்றதும் சித்ரலேகாவின் நெஞ்சு குழி உலர்ந்தது. இதயத்தின்னுள் யாரோ பெரிய பெரிய ட்ரம் வைத்து வாசிப்பது போல இதயத்துடிப்பு எகிறி குதித்தது.
'இந்த திருமணம் பற்றி தெரிந்தால் பாவா.. அவன் என்ன செய்வான்?' என்று அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை…
'கண்டிப்பாக சம்மதிக்க மாட்டான்! யாரோ ஒரு பெண்ணாக அவளிடம் அத்து மீறுபவன் தன் தம்பியின் மனைவி என்ற போது எப்படி அத்துமீறி விட முடியும்? ஆனாலும் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு இவனை எதிர்த்து நிற்பதற்கு சிவப்பிரசாத் பின்னால் ஒளிந்து கொள்வது சால சிறந்தது தம்பி என்றும் தம்பியின் மனைவி என்றும் பார்ப்பான் தானே' என்று அவளது தீர்மானம் வலுப்பெற்றது.
"சரிப்பா.. இத நான் ஃபர்ஸ்ட் என்னோட வீட்டுக்காரரிடமும் அத்தம்மாவிடமும் பேசுறேன்ஃ" என்றவள் முதலில் அழைத்ததோ சிவாவுக்கு தான்.
"சிவா நமது பிளானோட அடுத்த ஸ்டெப்ப தாண்டியாச்சு" என்றதும் "நிஜமாவா சொல்ற தாத்ரி? சித்து கல்யாணத்துக்கு சமாதிச்சிட்டாளா?" என்று சந்தேகமாக கேட்டான்.
"அப்பாக்கு கூட சம்மதம் இல்லடா இவதான் நான் போட்ட பிட்ட எல்லாம் நம்பி அங்கேயும் நாங்க ஒத்துமையா இருக்கலாம் என்று நினைத்து உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா"
"ஓ அவ்வளவுதானா? நான் கூட என்னால ஈர்க்கப்பட்டான் நினைச்சேன்.
"அவள ஈரக்கிற மாதிரி நீ என்னத்தடா செஞ்ச முட்டாள்.. முட்டாள்.. ஆறு மாசம் முழுசா ஆறு மாசம் அவள் உன் பக்கத்துல இருந்தா. உன்னால அவ மனசுல ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்த முடியல. இல்லனா நான் கேட்ட அடுத்த நிமிஷமே உன் பேர கேட்டா அவ முகத்தில் தானா ஒரு வெட்கமோ ஒரு பதைபதைப்போ எதுவுமே இல்ல. ரொம்ப சாதாரணமா இருந்தா.. தெரியுமா?" என்று அவனை திட்டினாள்.
"ரொம்ப பண்ணாதடி! எங்கடி.. நான் தனியாவே அவளை நெருங்க முடியவில்லை. நிறைய நேரம் அண்ணைய்யா வேற இங்கே வந்துடுறாரு. எப்ப வராரு எப்ப போறாருன்னு தெரியாம அவகிட்ட நான் எப்படி நெருங்க முடியும் சொல்லு?" என்றதும் தலையில் அடித்துக் கொண்டவள் "ஒரு பெண்ணை நெருங்குவது என்றால் உடலால் இல்லடா மனத்தால் தான். தள்ளி இருந்தே அவகிட்ட நீ பேசி இருந்து இருக்கலாம் தானே? பரவால்ல போ.. எப்படியும் இந்த வகையில் திருமணம் பேச்சு வந்தது. ஆனால் இதுல உங்க அம்மா சம்மதிக்கணும்னா அது ஒருத்தரால தான் முடியும். அது உங்க அண்ணன். நீ அவர் காலில் விழுவியோ என்ன பண்ணுவியோ அவர்கிட்ட எப்படியாவது சம்மதத்தை வாங்குற" என்றாள்.
"அவர்கிட்ட போய் பேசுறதுக்கு நான் கிணத்துல குதிச்சிடலாம்டி. இதைவிட இன்னொரு ஐடியா இருக்கு. நீ எங்க பெத்தம்மா வரலட்சுமி அதாவது உங்க அத்தம்மா கிட்ட பேசு… தொழில தான் அண்ணைய்யாவை எதிர்த்து நம்மால் நிற்க முடியாது. ஆனால் குடும்பம்னு போகும்போது கண்டிப்பா அண்ணாய்யா பெத்தம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்" என்று இவர்கள் இருவரும் திட்டம் தீட்டி அதன்படியே தாத்ரி காயை நகர்த்த வரலட்சுமிக்கு இந்த விஷயம் பிடித்துப் போனது.
ஆனால் அவள் சொன்ன செய்தியோ சிவப்பிரசாத்தும் சித்துவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
"அத்தமா.. இந்த கல்யாணத்தை நீங்க தான் எப்படியாவது நடத்தி வைக்கணும். ஜலஜா ஆன்ட்டிக்கு தெரிஞ்சுச்சுன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. இவன் என்னடான்னு கட்டுனா இவள தான் கட்டுவேன்னு ஒத்தக்கால நிக்கிறான். அதுக்கு மேல என் தங்கச்சி அழுது புரண்டு ஜுரம் எல்லாம் வந்து எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கா" என்று நடந்ததை இவளுக்கு சாதகமாகவே அள்ளிவிட்டாள் அனைத்தையும்.
தன் மகன் என்று வரும்போது அவரால் ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இது ஜலஜாவின் மகன் அல்லவா? எப்படி இவரால் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று தயங்கினார் அவர்.
"அத்தம்மா நீங்க உங்க பிள்ளை கிட்ட பேசுங்க.. கண்டிப்பா அவர் புரிந்து கொள்ளுவார். அவர் சொன்னா ஜலஜா ஆன்ட்டி மறுக்கவே மாட்டாங்க. அதோட அவங்க எங்க பினான்சியல் நிலைமையை பார்ப்பாங்கன்னு எனக்கு புரியுது" என்றதும் வரலட்சுமி அமைதியாக இருந்தார்
அந்த அமைதியே சொன்னது அதுதான் உண்மை என்று, அப்போ அப்பா சொன்னது உண்மைதான் இவங்க பொருளாதார ஏற்றத்தாழ்வை பார்க்கிறாங்க என்று மனதினில் குறித்துக் கொண்டாள்.
"என்ன மாதிரி சித்து இல்ல அத்தமா.. எனக்கு எங்க கம்பெனி சேரில் இருந்து கொஞ்சம் தான் வரும். ஆனா எங்க சித்தப்பாவோட மொத்த ஷேருமே அவளுக்கு தானே போகும். அதாவது எனக்கு 20% அவளோடது 50% இருக்கு அத்தமா…" ஒரு பெருமூச்சியை விட்ட வரலட்சுமி "நான் பேசப்போறது ஜலஜாவிடம் தாத்ரி. ஆனா நீ சொன்னது வச்சு தான் நானும் பேச போறேன். என் பையனுக்கு அவன் மனசுக்கு பிடிச்சா போதும் என்று இருப்பது போல அவள் கிடையாது. இத்தனை நாள் உனக்கு அது புரிஞ்சிருக்கும். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று எதிர்பார்ப்போம்" என்றார்.
விஷயம் கேள்விப்பட்டவனுக்கோ தன் மனைவியின் திட்டத்தை எண்ணி இகழ்ச்சி புன்னகை அவன் முகத்தில்.
"நடத்து தார்தி நீ நடத்து.. ஆரம்பம் உனதாகட்டும்! ஆனால் முடியும் போது என்னவோ அது இந்த இராவணனோடதாக தான் இருக்கும்" என்
று அமைதியாக சிரித்தவனின் முகத்தில் அத்தனை குரூரம்.
