யட்சன் 20

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 20

 

 

"சொல்லு சித்து.. உனக்கு சிவாவை புடிச்சிருக்கா? அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா? நீ சிவாவை கல்யாணம் பண்ணிட்டு என்கூட வந்துட்டா.. நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கலாம். உன்னை எங்கையோ யாருக்கோ மேரேஜ் பண்ணி கொடுக்கிறதுக்கு என் பக்கத்தில் கொடுத்தால் எனக்கும் தெம்பாய் இருக்கும் தானே? அதே மாதிரி உனக்கும் இருக்கும் தானே?" என்று அன்பொழுக தங்கையின் கையை பிடித்து கேட்கும் தாத்ரியை முறைத்தார் ரங்கராஜன்.

 

"எது நீ அவளை பார்த்துக்கொள்வாயா? இவ்வளவு நாள் நீ தான் அவளை பாத்துக்கிட்டாயா? அக்கா என்கிற ஸ்தானம் அம்மாவுக்கு அடுத்து. சித்து மேல உனக்கு பாசம் இருக்கு உண்மைதான்.. ஒத்துக்கிறேன்! அதுக்காக உன்னோட டயத்தை அவளுக்காக நீ எப்படி ஸ்பென்ட் பண்ணி இருக்க இதுவரைக்கும் சொல்லு பார்ப்போம்?" என்றதும் தாத்ரி அமைதி காத்தாள். ஏனெனில் அவளுக்கு நண்பர்கள் வட்டம் பெரிது. அது தான் முக்கியம் கூட…

 

"இங்கே வந்து ஒரு நாள் தான் எங்க கூட இருந்த. அதுக்கப்புறம் பிரண்ட்ஸோட ஊர் சுத்த போயிட்ட… நாலு நாளா நீ வீட்ல இல்லை! நான் ஆபீஸ் போயிட்டா வீட்டில் நடக்கிறது எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சுக்கிட்டியா?" என்று சற்று கோபமாகவே இறைந்தார் ரங்கராஜன். அதில் தாத்ரி முகம் விழுந்து போனது. கூடவே கடைக்கண்ணால் அன்னையை முறைத்தாள். இவள் வெளியே சென்ற விஷயம் கண்டிப்பாக அம்மாவின் மூலமாகத்தான் அப்பாவிற்கு தெரிந்து இருக்கும் என்று அவளது எண்ணம்.

 

"அவளை ஏன் முறைக்குற? அப்பாவின் கோபத்தில் இருந்து பிள்ளைகளை காக்கும் சராசரி தாய்‌தான் உன் அம்மா. அவ சொல்லல… நீ சுத்தறுது தான் ஊருக்கே தெரியுமே. எனக்கு அப்பப்ப இன்ஃபோர்மெஷன் வந்திடும்"

 

"என்னை என்ன செய்ய சொல்றிங்க ப்பா.. நீங்களும் சித்துவும் ஆஃபிஸ் போய்டுறிங்க… எவ்வளவு நேரம் தான் நான் அம்மா பார்க்கும் சீரியலை பார்க்க.. அது மட்டுமல்ல அங்க போனா ஒரு எண்டர்டெயின்மெண்டும் கிடையாது. நானே ஆறு மாசம் கழிச்சு இப்ப தான் ப்ரண்ட்ஸ பார்க்க போனேன். இது ஒரு‌ குத்தமா?" என்று அவளும் தன் துக்கம் அனைத்தையும் குரலில் காட்டி பேசினாள்.

 

"இரு.. இரு என்னமோ நாங்களா மாப்பிள்ளை பார்த்து, இந்த மாப்பிள்ளை தான் கட்டியே ஆகணும்னு கட்டாயப்படுத்தி கொண்டு போய் கட்டிக் கொடுத்த மாதிரி பேசுற? நீயே விருப்பப்பட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட… அந்த மாப்பிள்ளையோட குணம் வேலை எல்லாம் தெரிஞ்சு கட்டி கிட்டா இவரைத்தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட… இப்ப வந்து அங்க என்டர்டைன்மென்டே இல்ல வீட்ல அடைச்சது போல இருக்குன்னு சொன்னா… அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?" என்ற கிடைத்த வாய்ப்பில் மீண்டும் மகளை குட்டி.

 

'எங்க சுத்துனாலும் அப்பா கரெக்டா அங்கே வந்து நிற்கிறாரே!' என்ற தலையை உலுக்கிக்கொண்டவள், "ஆமா எனக்கு விஷ்ஸோட வேலை அவரோட குணம் எல்லாம் தெரிந்து தான் கட்டிகிட்டேன். சந்தோஷமா தான் இருக்கேன். நான் ஒரு நாள் கூட அதுல ஏதாவது குறை சொன்னேனா? ஆனா இங்கே ஃப்ரீயா போயிட்டு வர முடியும். ஆனால் அவரோட இடத்துல அவரோட மகாராணி நான். அப்படியெல்லாம் போக முடியுமா? அப்படியே போனாலும் செக்யூரிட்டி கூடவே வராங்க.. அதை தான் சொன்னேன்" என்று முழுப்பி விட்டாள்.

 

"ஏண்டி நீ வெளிய போனா உனக்கு செக்யூரிட்டி வருவாங்களா?" என்று ஆச்சரியமாக கண்ணை விரித்தார் கலாவதி.

 

"பின்ன என்னமா நெனச்சிட்டு இருக்க என் வீட்டுக்காரர… அவர் ஆந்திரால எப்படிப்பட்ட வி வி ஐ பி தெரியுமா? அவ்வளவு லேசா அவரை யாரும் பார்க்கவே முடியாது. ஆல் இந்தியாவுல மட்டும் கிடையாது இன்டர்நேஷனல் லெவலையும் அவருக்கு பிசினஸ் இருக்கு. அதனால அப்படி ஓடிக்கொண்டே தான் இருப்பார். அத்தம்மா தான் கொஞ்ச நாள் ஆகட்டும் அதுக்கப்புறம் நீயும் கம்பெனி பொறுப்பு எடுத்துக்கலாம் அதுவரைக்கும் வீட்ட பாருனு சொல்லிட்டாங்க.. இல்லைன்னா நான் எப்பவோ அந்த கம்பெனிக்கு ஒன் ஆப் தி டைரக்டரா ஆயிருப்பேன்" என்றாள் குரலில் அத்தனை கர்வம்.

 

இது எல்லாம் ரங்கராஜனுக்கும் தெரிந்ததுதான். ராவணனை பற்றி விசாரிப்பதோடு மகளின் நலனையும் அப்போது ஆட்கள் மூலமாக தெரிந்து கொள்வார். ஆனால் அதை எதையும் மகளிடம் காட்டிக் கொள்ள மாட்டார். இதில் எல்லாம் பெருமை உண்டு! ஆனால் நம் இனம் இல்லையே? உரிமையை மாப்பிள்ளையை அழைத்துப் பேச நம் தகுதிக்கு தகுந்த மாதிரி பார்த்து இருக்கலாமே.. எட்டா கனியை கையில் வைத்துக்கொண்டு எட்டி எட்டி பார்ப்பதனால் என்ன லாபம்?  இவர்களும் அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை.. அவனும் மாப்பிள்ளையாக இங்கு வருவதில்லை. பின் எதற்கு இந்த கல்யாணம்?' என்று தான் அவருக்கு பிடித்தம் இல்லாமல் போனது. ஆகாஷ் தங்கைக்கு சப்போர்ட் செய்ததால் தான் அவரும் சம்மதித்தார்.

 

"பேச்சு எங்கேயோ ஆரம்பிச்சு எங்கெங்கோ போயிடுச்சுப்பா உங்களால.. நீங்க என்ன சொன்னீங்க சித்துக்கு விருப்பம்னா தடை சொல்ல மாட்டேன்னு சொன்னீங்க தானே? நான் சித்து கிட்ட கேட்கிறேன். நீங்க இடையில பேசாதீங்க.. அம்மா நீயும்தான்" என்று அன்னையையும் ஒரு மிரட்டும் மிரட்டி விட்டு தங்கையிடம் திரும்பினாள். அதுவரைக்கும் இவர்கள் பேசியது எதுவுமே அவளது காதில் விழவில்லை ராவணன் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே அவளை சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

 

ஊரிலேயே தங்க மாட்டான்.. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறப்பான்.. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் அளவிலும் அவனுக்கு தொழில் இருக்கிறது.. ஆனால் அத்தனையும் விடுத்து இந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்ததில் இருந்து அடிக்கடி அவனின் முகம் தென்படுகிறதே? குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது.. அதுவும் இப்போ காய்ச்சலுக்கு பிறகு தினமும் அவனை பார்க்கிறோமே? உண்மையிலேயே இந்த ப்ராஜெக்டுக்காக தான் வரானா இல்லை…' என்று அதை பற்றி நினைக்கவே அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கி ஒரு உலுக்கு உலுக்கி போட்டது.

 

"சொல்லு சித்து" என்று அதே சமயம் அவள் கையில் தன் கையை வைத்து தாத்ரி உலுக்க, இராவணன் நினைவில் இருந்து வெளியே வந்தவள் "அப்பா அக்கா சொல்றது எனக்கு சரின்னு படுது! நானும் அக்கா கூடவே  அங்கு இருந்தா உங்களுக்கும் ரெண்டு பேரைப் பத்தியும் பெருசா கவலை இல்லாம இருக்கலாம். இங்கே போலவே நாங்க அங்கேயும் ஒற்றுமையா இருக்கலாம்" என்று அவள் கூற ரங்கராஜன் யோசனையாக சின்ன மகளை பார்த்தார்.

 

அவரின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு சித்ரலேகா "எனக்கு சிவபிரசாத்தை அக்காவோட நண்பனா மட்டும்தான் பிடிக்கும். இப்ப கொஞ்ச நாள்ல உறவினனா தெரியும்.

அவ்வளவுதான்! அதற்கு மேல அவர் மேல எனக்கு எந்த ஈடுபடும் கிடையாது" என்று அவள் தெளிவாக கூற, ஒரு நிமிடம் தாத்ரி அதிர்ந்து விட்டாள்.

 

"அடப்பாவி ப்ரசாத்.. ஆறு மாசமா என்னடா பர்பாமென்ஸ் பண்ண? இவ இப்படி சொல்றா?" என்று குழம்பினாள்.

 

சித்ரகாவின் பேச்சில்தான் ரங்கராஜனுக்கு முகம் தெளிந்தது. எங்கே இவளும் காதல் என்று சொல்லி வந்து விடுவாளோ என்று ஒரு நிமிடம் பயத்தார். 

 

அதேசமயம் நாங்கள் சிந்தித்து கோணத்தில் அவளும் சிந்திக்காமல் இல்லை. ஏனென்றால் ஒரு வகையில் மகளின் மனதில் பெரியவள் சலனத்தை ஏற்படுத்தி விட்டால்.. இனி இந்த பேச்சு அடிக்கடி நிகழ்ந்து அவளுக்கு ஈர்ப்பாகி வேறு ஏதாவது பிரச்சனை எடுத்து வருவதற்கு முன்..  நாமே சம்மதிக்கலாமா?" என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கொண்டிருக்கும்போதே "பெரியப்பா.. உங்களுக்கு பெரியம்மாவுக்கும் ஓகேனா.. எனக்கும் ஓகே!" என்று அழகாக சிரித்தாள் சித்ரலேகா..

 

அந்த சிரிப்பின் ஆயுள் சொற்பம்

என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top