யட்சன் 12

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம்: 12

 

கட்டிலில் அவள் அருகிலேயே அமர்ந்துவன் முறுக்கும் அவள் கைகளை தன் கைகளோடு அழுத்தமாக கோர்த்துக் கொண்டான்.  ஒரு இடத்தில் படுக்காமல் உடலை இங்கும் அங்கும் புரண்டு புரட்டி ஏதோ வலியால் துடிப்பது போலவே துடித்தவளை கண்டவனுக்கு ஏனெனன்று புரியாமல் பார்த்தவன், அடுத்த நிமிடம் அவளின் இரு கைகளையும் அவன ஒரு கையால் பிடித்து அவள் இடை வளைத்து தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான்.

 

சித்ராவை இறுக்கமாக ஆலிங்கனம் செய்திருந்தான் அவளை அசைய விடாமல். அப்பொழுதும் அடங்காமல் நடுங்கிக் கொண்டிருக்கும் அவளது அதரங்களும் கிட்டிக்கொள்ள போகும் பற்களையும் கண்டவன் "என்ன ஆச்சு இவளுக்கு? யட்சிணி.. காம் டவுன்.. காம் டவுன்" என்று எத்தனையோ முறை கூறியும் அவள் தன்னிலைக்கு வரவே இல்லை.

 

அவள் கைகளை விடுத்து ஒரு கையால் அவள் தாடையை அழுத்தமாக பற்றியவன் அவள் பற்களுக்கு தன் இதழ்களை உணவாக்கினான்.

 

மேல் தாடையும் கீழ்தாடையும் கிட்டிக் கொள்ள போகும் முன் அவன் இதழ்கள் கொண்டு பிரித்து இருக்க.. பற்கள் அவனின் இதழ்களை மென்று தின்றது. அதன்பின்னரே  கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலையை அடைந்தாள்.

 

அதுவரை ஆட்களைப் பற்றிய கவனமே அவனிடம் இல்லை. அவளை நார்மலாக்க முயல்வதிலேயே அவனது கவனம் மொத்தமும் குவிந்திருந்தது. அதன் பின் தான் அவள் மேல் தான் படர்ந்து இருப்பதை கண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

 

மதியம் தான் இந்த யட்சிணி ஸ்பரிசத்தை உணர்ந்திருந்தான். ஆனால்.. இரவு அவளை நினைத்து குடித்துக் கொண்டிருந்தவன் தம்பியின் ஃபோன் காலிலேயே அவனை தேடி சென்றான்.

 

"அண்ணையா.. எங்க இருக்கீங்க? ஒரு ஹெல்ப் ப்ளீஸ்"

 

"ஏமிட்டி?" என்று கட்டுப்போடு கேட்டான் இராவணன்.

 

"இங்க ஹோட்டலுக்கு மீட்டிங் வந்தேன அண்ணைய்யா.. கார் கொஞ்சம் ப்ராப்ளமா ஆயிடுச்சு நான் அர்ஜெண்டா கொஞ்சம் போகணும். நீங்க சென்னையில இருந்தீங்கன்னா உங்க காரும் கொஞ்சம் யூஸ் பண்ணிக்க வா" என்று தயவுடன் கேட்டான்.

 

அப்படியெல்லாம் ராவணனிடம் உரிமையாக எதையும் கேட்டு விடமாட்டான். கொஞ்சம் பயத்துடன் இருக்கும் ஆள்.

"என்ன என்னிடம் கேட்கிறான்?" என்று யோசித்துக்கொண்டு "ஏன்ட்டி விஷயமு?" என்று கேட்டான்.

 

"அண்ணைய்யா.. உங்க மாமையா அதான் ரங்கராஜன் அங்கிள் கால் பண்ணி இருந்தார். ஏதோ அர்ஜெண்டாம். சித்துவுக்கு என்னனு தெரியல.. அதான் அண்ணையா போகணும்" என்றான் தகைந்த குரலில்.

 

'என்னானது அவளுக்கு ஒரு வேலை என் நெருக்கம் அவளை பாதித்துவிட்டதோ? அப்படி என்னடி செய்தேன் உன்னை? இறுக்கமான அணைக்க கூட இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் அந்த பட்டு இடையில் கை வைத்து உன்னை அணைத்து வாக்கில் தான் நின்று இருந்தேன். அதற்கே உனக்கு என்ன செய்கிறதாம் யட்சிணி? வரேன் யட்சிணி.. இதுவரை வராத மாமையா வீட்டுக்கு உனக்காகவே வரேன்' என்று நினைத்து கொண்டவனுக்கு அங்கே இருக்க மனம் இல்லை. சித்ராவையே நினைத்துக் கொண்டிருந்தது.

 

அடுத்த நிமிடமே காரை எடுத்து பறந்து விட்டான் கார் டிரைவர் உடன், சிவப்பிரதாத் சொன்ன ஹோட்டலுக்கு. அங்கிருந்து அவனை ரங்கராஜன் வீட்டிற்கும் அழைத்து வந்ததும் இராவணனே.

 

கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்து கொண்டிருந்த சித்ராவை கண்டவனுக்கு இப்பொழுது அவளது காய்ச்சல் இவனுக்கு தொற்றிக் கொண்டது மோக காய்ச்சலாக. 

 

அவளது குழையும் அனிச்சம் பூவை போன்ற தேகமும் பட்டை போன்ற மென்மை வளவளப்பும் அவனை இன்னும் பித்தம் கொள்ள செய்தது.

 

முத்தம் என்று அறியா வகையில் இதழ்கள் உறவாடி இருந்தாலும் இதழின் ஈரம் மீண்டும் மீண்டும் வேண்டுமென கேட்டது அவனது மானங்கெட்ட மனம்.

 

ஆனால் இருக்கும் சூழல் அறிந்து சட்டென்று அவள் மீது எழுந்தவன் போர்வையை சரியாக அவளுக்கு போட்டுவிட்டு நிமிர அந்த கணம் உள்ளே வந்தார் கலாவதி.

 

"மாப்பிள்ளை தேவி உங்ககிட்ட பேசணுமாம்?" என்று ஃபோனை நீட்டிக் கொண்டே..

 

ம்ம்ம்.. என்றவனிடம்,

 

"விஷ் நீங்க அங்க தான இருக்கீங்களா? அப்ப நானும் நாளைக்கு கிளம்பி வரவா?"

என்று என்றுமில்லாத கொஞ்சலோடு கேட்டாள் தாத்ரி.

 

ஆறு மாதங்களில் மற்றவை காட்டிலும் அவளிடம் ஒன்றை சரியாக புரிந்து கொண்டான் இராவணன் என்றால்.. அது அவளுக்கு ஒன்று தேவை அவளுக்கு ஏதேனும் நடக்க வேண்டும் என்றால் தான் இந்த கொஞ்சல் மொழி எல்லாம் அவளிடம் இருந்து வெளிப்படும்.

சமயங்களில் எல்லாம் இவனை தன் அழகில் அடக்கி ஆளுமை படுத்த எண்ணி போராடிக் கொண்டே இருப்பாள்.

 

"என்ன திடீர்னு?" என்று கேட்டான்.

 

"அம்மா வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் காரணம் ஏதாவது இருக்குமா விஷ்" என்று மீண்டும் கொஞ்சல் மொழி.

 

"ஆறு மாதமாக அம்மாவை பற்றி அம்மா வீட்டைப் பற்றி நீ பேசியதே கிடையாதே!" என்று சரியாக அவள் நாடியை பிடித்தான்.

 

"உங்ககிட்ட பேசலனா அவன் ஞாபகம் இல்லை என்று அர்த்தமா? நான் தினமும் எங்க அம்மா கிட்டயும் என் தங்கச்சி கிட்டயும் பேசிகிட்டு தான் இருக்கேன்" என்றாள்.

 

"ம்ம்ம்…??" என்ற‌ ஒற்றை வார்த்தையே நான் நம்பவில்லை என்று அவளுக்கு உணர்த்த, கொஞ்சலை விட்டு பாசத்தை கையில் எடுத்தாள்.

 

"நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். நான் ஊருக்கு போனா எங்க அம்மா நோண்டி துருவி ஏதாவது கேள்வி கேட்டுகிட்டே இருப்பாங்க… நீங்களும் சென்னைக்கு வந்தாலும் அங்க எங்க வீட்டுக்கு வரதே இல்ல.. அதனால தான் எங்க அம்மாவ பாக்காம இவ்வளவு நாள் தவிர்த்து கிட்டு தவிச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப நீங்களே அங்கே இருக்கும் போது எனக்கு என்ன கவலை" என்றாள்.

 

"சாகசகுடு" என்றவனின் உதடுகள் இகழ்ச்சியில் வளைந்தது.

 

"அத்தை கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவேன். உங்களை நான் அங்க டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.‌ நீங்க ஒர்க் பாருங்க நான் அதுவரைக்கும் அம்மா வீட்டில் இருக்கேன்" என்று வெகு அமைதியாக கேட்கும் தாத்ரியின் குள்ளநரித்தனம் தெரிந்தாலும்,

 

"என்னதான் செய்கிறாள் பார்த்து விடுவோமே!" என்று நினைத்தவன், சித்ராவை பார்த்துக் கொண்டே சரி என்றான் இராவணன்.

 

சென்னைக்கு வந்து இறங்கிய மறுநாளே தன் வேலையை ஆரம்பித்து விட்டாள் தாத்ரி. சித்ரலேகாவுக்கும்

சிவப்பிரசாதத்திற்கும் திருமணத்தை பேசினாள் தாத்ரிதேவி!

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top