அத்தியாயம்: 11
மதியம் பார்க்கும்போது அன்றலர்ந்த மலராய் இருந்தவள் இப்பொழுது துவண்டு கொடியிலிருந்து பிடுங்கிய மலராய் வதங்கி போய் படுத்து இருந்தாள்.
காரிருள் போர்வைக்குள் பளிங்காய் தெரியும் நிலவினை போல தெரியும் அவள் முகம் போர்வைக்குள் தெரிய, அவளது முகத்தினை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ராவணன். அவன் முகத்திலிருந்து எதையும் யாராலும் படிக்க இயலாது. ஏன் அவனைப் பெற்ற அன்னை வரலட்சுமியால் கூட முடியாது.
சிவப்பிரசாத் தான் தவித்துப் போனான் "என்ன ஆன்ட்டி இப்படி இருக்கா? டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனீங்களா இல்ல.. இங்க கூட்டிட்டு வந்து பார்த்தீர்களா? என்ன சொன்னார்?" என்று தவிப்போடு கேட்டவனை நெற்றி சுருங்க கண்கள் இடுங்க பார்த்தான் ராவணன்.
"அப்போ அங்கிள் சொன்னாங்கள அதை தான் சொன்னாங்க தம்பி. ரெண்டு நாளைக்கு பாப்பா ரெஸ்ட்ல இருக்கட்டும். உடம்பு நல்ல ஆனதுக்கு அப்புறம் ஒர்க்குக்கு வருவா" என்றதும் சிவப்பிரசாத்தால் ஒன்றும் பதில் கூற முடியவில்லை.
வீடு முடிக்கும் தருவாயில் இருந்தது அவன் தவிப்போடு அண்ணனை பார்த்தான்.
"ஆன்ட்டி.. வீடு.. லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கு" என்றான் ப்ரசாத்.
"வத்து அத்தகாரு… ஐ மீன்.. வேணாம் அத்தகாரு. அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றவன் சிவப்பிரசாத்திடம் கண்ணால் அதை உணர்த்திக் கொண்டிருந்தான். அப்போது சிவப்பிரசாத் செல்ல அடிக்க "அண்ணையா.. அம்மா.." என்றான்.
"போய் பேசு!" என்று கண்களாலேயே அறையை விட்டு வெளியே காட்ட.. தலையாட்டிக் கொண்டு சிவப்பிரசாத்தும் "ஹலோ அம்மா.." என்றவாறு வெளியே சென்றான்.
ஜலஜா எடுத்த உடனே ஆரம்பித்தார் "இன்னும் நீ வீட்டுக்கு போகலையா டா? வேல வேலனு எவ்ளோ நேரம் தான் வேலை செய்வ.. எல்லாத்தையும் உன் தலைல கட்டிட்டு அந்த ராவணன் ஜம்முன்னு ஊர் சுத்துறானா?" என்று தெலுங்கில் அவர் காய, அண்ணனுக்கு எங்கே கேட்டு விடுமோ என்று இன்னும் தள்ளி வந்து விட்டான் சிவப்பிரசாத்.
அந்த நேரம் ரூமின் இன்டெர்காம் ஒலிக்க அதை எடுத்தார் கலாவதி "மேடம் நான் சார் சொன்ன டேப்லட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்" என்றார் செக்யூரிட்டி.
அவர் கணவனை பார்த்து "செக்யூரிட்டி மருந்து வாங்கிட்டு வந்துட்டாராம்"
"ஓகே வெயிட் பண்ண சொல்லு. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்" என்று வேகமாக கீழே இறங்கினார் ரங்கராஜன்.
அதே நேரம் மாப்பிள்ளை என்று கலாவதி அழைக்க… அது நேரம் வரை வெற்றி சுருங்க தூக்கத்தில் எதையோ கண்டு அஞ்சுவது போலவே முகத்தை வைத்திருந்த சித்ராவை பார்த்து இருந்தவன் முகத்தை மட்டும் திருப்பி கலாவதியை நோக்கினான்.
"இல்ல அது வந்து… கல்யாணமாகி ஆறு மாசம் ஆகுது. ஒரு விருந்துக்கு கூட நீங்களும் தேவியும் இங்கே வரவே இல்ல.. புரியுது உங்களுக்கு வேலை நிறைய இருக்குன்னு! நானும் கேட்கும்போதெல்லாம் அதைத்தான் தேவியும் சொல்றா.. ஆனாலும் சொந்தம் என்றால் அப்பப்போ வந்து போகணும் இல்லையா? ஒரு முறை தேவி அழைச்சுக்கிட்டு நீங்க வாங்களேன்.. நான் அண்ணிக்கு போன் பண்ணி எப்போ அவங்களுக்கு வசதிப்படும்னு கேட்கிறேன்" என்று பெண்ணை பெற்ற அம்மாவை பதிவுசாக கேட்டார் கலாவதி.
பெண்ணை பெற்றவர் இல்லை என்றாலுமே அவன் முன்னே அந்த பதிவுசு தானாக வந்து விடுகிறது மற்றவர்களுக்கு. அதுவும் கண்களிலேயே கத்தி வைத்து அதை நம் கழுத்துக்கு அடியிலேயே வைத்து பார்ப்பது போலவே இருக்கும் அவன் பார்வை!!
என்னதான் வீரமாக வார்த்தைகளை கோர்த்து அவனிடம் பேச முயன்றாலும் வாயை திறக்கும் போது அத்தனையும் புஸ்வாணமாய் போய்விடும்.
சிலருக்கு பிறப்பிலேயே வரும் அந்த ஆளுமையும் தேஜஸூம் ராவணனுக்கும் அவன் பாரம்பரியம் கொடுத்திருக்க அதை சரியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறான் இவன்.
இடது கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டே "அது அத்தையா.. எனக்கு டைம் எப்போ கிடைக்கும்னு சரியா சொல்ல முடியாது. பட் ஒரு நாள் கண்டிப்பாக விருந்திற்கு வருவேன் உங்க பொண்ணையும் கூட்டிட்டு. வேணும்னா தாத்ரி கொஞ்ச நாள் வந்து இங்கே இருக்க சொல்றேன்" என்றான்.
பெண் புகுந்த வீட்டிற்கு சென்ற பின் மகளைத் தாங்க எந்த தாயாருக்கு தான் மனம் ஏங்காது? "எப்ப வேணாலும் அவளை அனுப்பி வைங்க மாப்பிள்ளை. அதுல எந்த சங்கடமும் எங்களுக்கு இல்லை. ஆனால் அவள் வரும்போது தனியா வராம ஜோடியா உங்க கூட வந்தா நல்லா இருக்கும். கல்யாணத்துக்கு பிறகு ரெண்டு பேரும் ஜோடியா இன்னும் வீட்டுக்கு வரல" என்று அன்பொழுக கேட்கவரிடம் மறுக்க முடியாது "சீக்கிரம் பார்க்கிறேன்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த சித்ராவின் போன் அடித்தது.
இந்த நேரத்தில் யார் என்று அவன் கண்ணை சுருக்கி பார்க்க அதில் தாத்ரியின் எண்ணோடு அவள் படமும் மின்னி மின்னி மறைந்தது.
"உங்க பொண்ணு தான் கூப்பிடுறா" என்றான்.
"ஆமா அவளுக்கு 100 ஆயுசு" என்றபடி ஆசையோடு ஃபோனை எடுத்தவர் "தேவி.." என்று சத்தமாக அழைக்க, இராவணனோ கண்களை சுருக்கி உதடு மேலே சுட்டு விரல் வைத்து உஷ் என்று கண்களாலேயே உறங்கிக் கொண்டிருக்கும் சித்ராவை காட்டினான். அவரும் ஆமாம் என்று தலையாட்டி விட்டு வேக வேகமாக அறையை விட்டு வெளியேறினார்.
இப்பொழுது அந்த அறைக்குள் ராவணனும் அவனது யட்சிணியும் மட்டுமே.
"ம்ம்ம்.. வலிக்குது டா யட்சா" என்று காய்ச்சலின் வீரியத்தில் ஏதேதோ முணுமுணத்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
என்ன முணுமுணுக்கிறாள் என்று அவள் அருகில் சென்று நின்றவன் குனிந்து அவள் வார்த்தைகளின் சத்தத்தை உள்வாங்க முனைய ஒன்றுமே அவன் காதில் விழவில்லை.
மீண்டும் அவள் வாயிலிருந்து யட்சா.. ம்ம்ம் என்ற வார்த்தைகள் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்க "அவங்க பெரியம்மாவை கூப்பிடுகிறாளா அல்லது அவங்க அம்மா ஞாபகம் வந்துவிட்டதா?" என்று யோசித்தவன் மெல்ல குனிந்து அவனது வலது காதை அவள் இதழ்கள் அருகில் வைத்து கேட்டான்.
"யட்சா.. யட்சா.. போய்டு டா.." என்று பயத்தில் காய்ச்சலின் வீரியத்தில் பிணாத்திக் கொண்டிருந்தாள்.
இருக்க இருக்க அவள் பினாத்தல் வேகம் அதிகரிக்க.. உடலை முறுக்கி தலையை இடமும் வலமும் அசைத்து அசைத்து அவள் ஏதோ செய்ய.. சற்று குழம்பித்தான் போனான் ராவணன். அதே நேரம் இவளுக்கு என்ன ஆயிற்று என்று கொஞ்சம் பயந்தும் போனான்.
"ஹேய் யட்சிணி" என்று அவனுக்கு யட்சிணி என்ற பெயர் சாதாரணமாகவே வாயில் வர அதை உணரும் நிலையில் அவன் இல்லை. அவள் கன்னத்தை மெதுவாக தட்டி "காம் டவுன்! காம் டவுன்" என்று ஆற்றுப்படுத்தினான்.
அவளோ இன்னும் உடலை முறுக்கி தலையை இடவலமாக செய்ய உதடுகளும் நடுக்கத்தில் வெகுவாக துடித்தது. இந்நிலை நீடித்தால் பற்கள் கிட்டிக் கொள்ளவும் நேரிடும். அதன் பின் அவளை மருத்துவமனையில் அனுமதித்து தான் கிட்டிக் கொண்ட பற்களை பிரிக்க முடியும் என்று அவனுக்கு தோன்ற.. ஒரு நிமிடம் சுற்று மற்றும் பார்த்தவன் அடுத்த நிமிடம் அவள் இத
ழ்களுக்குள் தன் இதழ்களை கொண்டு
அழுந்த மூடினான்.
தொடரும்…
