அத்தியாயம்: 8
சிவப்பிரசாத் பொறுப்பில் கட்டிக் கொண்டிருந்த அந்த மாளிகை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்ந்து கொண்டே சென்று முடிவடையும் நிலையில் இருந்தது. அதே நேரம் சிவப்பிரசாத் மற்றும் சித்ரலேகா இடையேயான நட்பும் மெல்ல மெல்ல வளர்ந்தது.
சித்ராவை பொருத்தவரை அது நட்புதான். மற்றும் உறவினன் என்ற பாசம் அன்பு ஆண்டு. அதை தாண்டி அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆனால் சிவப்பிரசாத்துக்கோ சித்ராவின் ஒவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு நளினங்களும் பித்து பிடிக்கும் அளவு அவள் மேல் பிடித்தம் உண்டானது.
சித்ரலேகா பாந்நமான அழகி. திரும்ப திரும்ப பார்த்து மனதை பறிக்கொடுத்து ஏங்க வைக்கும் அழகி. அக்கால கோவில் தூணில் இருக்கும் சர்வ லட்சணம் பொருந்திய சிற்பத்தை ஒத்தவள். குணமும் கூட அத்தனை அமைதியானவள்.
எங்கே தன் பிடித்தத்தை சொன்னால் வேலைக்கு கூட வரமாட்டாளோ என்று ஒரு பயம் அவனுக்கு. தாத்ரியின் தங்கையாக இருந்தாலும் அவளிடம் காணப்படும் அந்த தைரியமோ துணிச்சலோ சடுதியில் முடிவெடுக்கும் திறனோ எதுவும் சித்ராவிடம் கிடையாது.
சித்ரா அமைதியான அமர்க்கையான பெண். ஒரு முடிவெடுக்க முன் பலதையும் யோசித்து எடுப்பவள்.
இவளின் ஓவியத்திறனை பார்த்து நிறைய தோழிகள் ஓவியம் மாடர்ன் ஆர்ட் இந்த மாதிரி எல்லாம் வரைந்து நல்ல சம்பாதிக்கலாம் என்று கூறினர். இவளோ அதனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்ன லாபம்? என்று எண்ணி, அதை விடுத்து இன்டீரியர் டிசைனில் தனது கலைத்திறனை காட்டினால், அனைவருக்குமே நல்லது தானே என்று முடிவெடுத்தாள்.
அவளை பொறுத்தவரை அவளது கற்பனைக்கு நன்றாக வேலை வாங்குமிடம் வேண்டும். அது ஓவியத்தில் இருந்தால் என்ன கட்டுமான துறையில் இன்டீரியர் டெக்கரேஷனில் இருந்தால் என்ன? இது தொழிலுக்கு தொழிலும் ஆச்சு. குடும்பத்தோடு பாதுக்காப்பில் இருந்தது போலவும் ஆச்சு.
இவளும் குடும்பத் தொழிலில் பங்கெடுக்க வேண்டும் என்று மணிகண்டராஜன் மகளிடம் அவ்வப்போது கூறி வர, அதனால் இந்த துறையை அவள் தேர்ந்தெடுத்தாள். அப்படிப்பட்ட பெண் எப்படி சட்டென்று இவனின் காதலுக்கு ஒப்புதல் கூறுவாள்.
'அதிலும் தார்தி மேல் ரங்கராஜன் இன்னும் கோபமாக இருக்கும் பட்சத்தில் இவளிடம் நாம் நெருங்கி அதே தவறை செய்ய வேண்டாம்! அப்புறம் மொதலுக்கே மோசம் வந்துவிடும்' என்று நினைத்து தான் தள்ளி போட்டுக் கொண்டிருந்தான் சிவப்பிரசாத்.
தன் விருப்பத்தை மறைத்து அவளிடம் சகஜமாக உரையாட முடியும் என்றாலும் அதை தாண்டி அவன் கண்ணில் அவ்வப்போது ஒரு பாவம் வெளிப்படும். அதனை சித்ரா கண்டுகொள்ளவில்லை. ஆனால் கண்டுகொள்ள வேண்டியவனோ மிகச் சரியாக கண்டு கொண்டான்.
அவ்வப்போது இங்கே சென்னை வந்து இந்த ப்ராஜெக்ட் நேரிலே பார்த்து செல்வான் இராவணன். அதிலும் தன் நண்பனுக்கான மாளிகை என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவன் பார்த்து பார்த்து அத்தனை சிரத்தை எடுத்து செய்தான்.
அதுபோல அன்று ஒரு நாள் இராவணன் வந்திருந்தான். சிவப்பிரசாத் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் ஒரு அறையை தற்காலிகமாக ஆபீஸ் அறையாக வைத்திருந்தான். அவர்கள் உரையாடுவது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது சித்ரா தன் எண்ணங்களை தூரிகைகளாக்கி வரைந்து பார்ப்பது என்று அனைத்துமே அந்த அறையில் தான்.
யாருமே அனுமதி கேட்டு மட்டுமே வர வேண்டும் என்று உத்தரவோடு ஏற்பாடு பண்ணி இருந்தான். இல்லையென்றால் அவனின் அண்ணையா அவனை கட்டி வங்காள விரிகுடாவில் போட்டு விடுவான் என்ற பயம்.
அதுபோல ஒரு நாளில் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒரு பிரம்மாண்டமான கலை நயமிக்க ஓய்வு அறையை வரைந்து கொண்டு இருந்தாள் சித்ரலேகா.
அவளது எண்ணத்தில் எத்தனை கற்பனையை புகுத்தினாலும் சில இடம் மட்டும் சரியாக வரவில்லை.
சிவப்பிரசாத் பார்த்து கூட நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டான்.
ஆனால் அவளுக்கு மனது ஒப்பவில்லை. 'இன்னும் இன்னும் உன்னிடபம் எதிர்பார்க்கிறேன்' 'இது சரியில்லை சித்து இன்னும் ஏதோ குறையுது நல்லா யோசி' என்று அவளுக்கு அவளே திருப்தி அடையாமல் செய்து கொண்டிருந்தது அவளது மனம்.
"சித்து.. இதுக்கு மேல்எனக்கு பசி தாங்காது. நான் லஞ்சுக்கு போறேன்! வரியா?" என்று கேட்டான்.
"இல்ல பிரசாத் எனக்கு வீட்டில் இருந்து லஞ்ச் வரும்" என்று அவனிடம் மறுத்து விட்டாள்.
அவளை இயல்பாக பிரசாத் என்று அழைக்க வைக்க அவன் எவ்வளவு பாடுபட்டான் என்று அவனுக்கு மட்டும் தானே தெரியும்.
"ஓகே.. கவனம்" என்று சென்று விட்டான். அலுவலக அறைக்கு வெளியில் எப்பொழுதும் ஒரு பாடி கார்டை நிறுத்தி வைத்திருப்பான். அதுவும் ராவணனின் ஏற்பாடே. அவனிடம் சித்ரலேகாவை பார்த்துக்க சொல்லிவிட்டு இவன் மதிய உணவுக்காக அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று விட்டான்.
என்னதான் சித்து வீடு உறவினர்கள் என்றாலும் ஏனோ தினமும் அவர்கள் வீட்டில் இருந்து வரும் உணவு அவனுக்கு ஒப்புதல் இல்லை. கூடவே காரத்தை அள்ளி சாப்பிடும் காரப்பிரியர்களான இவர்களுக்கு கொஞ்சம் காரம் குறைவாகவே இருக்கும் தமிழ்நாட்டின் உணவு இன்னும் அத்தனை ருசிக்கவில்லை. அதற்கென்று அருகில் இருக்கும் ஒரு குஷனில் இவனுக்காக ஆந்திர உணவை தருவித்து சாப்பிட்டு விட்டு வருவான்.
"என்ன குறை இதுல? ஆனா.. உயிர்ப்பில்ல..!" என்ற பிரஷை வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் வைத்து சுற்றிக்கொண்டு இடது கையால் தாடையை தடவியவாறு யோசித்துப் கொண்டிருந்தவளின் அருகே ஆண்மை வனப்பு கொண்ட திரண்ட புஜங்கள் அவளது கையோடு கை கோர்த்தது. பின் அந்த ஓவியத்தில் விடுபட்ட இடங்களை மிக அழகாக தெளிவாக வரைந்தது.
அவள் பின்னங்கழுத்தில் அவனது மூச்சுக்காற்று உரச விழிகள் ஒரு கணம் மூடி பயத்தில் உறைந்து நின்றாள் சித்ரா.
அவனிடமிருந்து விலகி ஒரு அடி முன்னே செல்ல இவனும் இரண்டடி சேர்ந்து "டோன்ட் மூவ்" என்று அதிகாரமாக உரைத்து இன்னும் அவளது இடையோடு மற்றொரு கையையும் நுழைத்து அவள் தோளிலேயே தன் தாடையை பதித்து மிக மிக உன்னிப்பாக அந்த ஓவியத்தை வரைந்து கொண்டு இருந்தான்.
"ப்பாவ்வா…" என்று திணறி அவனை தள்ளி வைக்க அவள் முயற்சிக்க, அவனோ அவளை பொருட்டே செய்யாமல் அந்த ஓவியத்திலேயே தன் பார்வை கவனத்தை வைத்திருந்தான்.
அவனது நெருக்கம்.. காதோரத்தில் படரும் அவன் மூச்சுக்காற்று.. அவனின் ஆண் வாசம்.. பெண்ணின் பெண்மைக்குள் ஏதேதோ நினைவுகளை திரிதூண்டி தூண்டிக் கொண்டிருந்தது.
"அவனை தள்ளிவிடு சித்து" என்று அறிவு உணர்த்திய அனைத்துமே அவளால் செயல்படுத்த முடியாமல் "ப்பாவ்வா.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள் அவனிடம்.
"ஹே.. டோண்ட் மூவ். கோயிங் டூ ஃப்னீஷ்" என்றவனின் மென்மையான வார்த்தைகள் பெண்மைக்குள் தீ பற்ற வைத்தது.
இன்று பார்த்தா புடவை கட்டிக் கொண்டு வர வேண்டும்? இடுப்பு வளைவில் அவளது வலுவலுப்பான இடையில் அவனது வன்கரம் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்க, அவளுக்கு ஏதேதோ உணர்வுகள் உள்ளூற.. பதைப்பதைத்து போனாள் பேதை சித்ரா.
"என்ன சித்ரா பண்ற நீ? அவனை தள்ளிவிடு! அவன் அந்நியன். அதுவும் உன் அக்கா பிரியப்பட்டு திருமணம் செய்து கொண்ட ஆண்மகன். அவன்தான் ஏதோ ஒரு நிலையில் உன்னை ஒட்டிக் கொண்டு நிற்கிறான் என்றால் நீயும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், பக்கம் வா என்று குழைந்து கொண்டு இருக்கிறாய் ச்சீ.. உன்னை உன் அம்மா இப்படியா வளர்த்தார்கள்? அவர்களின் வளர்ப்பை கொச்சைப்படுத்தாதே சித்ரா. விலகி செல் சித்ரா" என்று அறிவு அறிவுறுத்த சட்டென்று அவனின் கையை தன் இடையில் இருந்து எடுத்து விலகி அவனிடமிருந்து தள்ளி செல்ல முயல… நிலை கொள்ளாமல் கீழே விழ இருந்தவளின் இடையைப் பற்றியது வன்கரம் அழுத்தமாக…
அழுத்தமாக பற்றிருந்த கரம் இப்பொழுது மென்மையாக அவளது இடையினை வருட… அவளோ பேச்சற்று சிலையாய் நிற்க… இருவருமே பேச்சற்ற நிலையில் அந்த கணத்தில் உறைந்திருந்தனர்.
அப்போது "சித்து.." என்ற அழைப்போடு சிவப்பிரசாத் வர.. சடுதியில் அவளை விலக்கியவன், ஓவியத்தை பார்ப்பது போல அவளை நிற்க வைத்
து விட்டு சிவப்பிரசாத்தை எதிர்கொள்ள சென்றான் இராவணன்.
தொடரும்
