யட்சன் 6

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 days ago
Messages: 10
Thread starter  

அத்தியாயம்: 6

 

சிவப்பிரசாத் கட்டிக் கொண்டிருக்கும் அந்த பெரிய மாளிகையின் முக்கால் வாசி வேலைகள் முடிவடைந்ததும் சித்ரலேகாவை அவனுடன் அழைத்துக் கொள்ள.. 

 

இப்பொழுது அவள் வந்து

இந்த இரண்டு மாதங்களில் இன்டீரியர் அவன் எதிர்பார்த்தது போலவே அவ்வளவு அழகாக நேர்த்தியோடு கலைநயத்தோடு செய்து கொண்டிருந்தாள். 

 

அந்த வீடுகளின் மாதிரியை பல சார்டுகளில் வரைந்து அங்கங்கே வைத்து அதற்கு என்ன மாதிரி உள்ளமைப்பு டிசைன் வர்ணம் கொடுக்கலாம் என்று இவளது கற்பனையை அதில் காட்டுவாள். அதில் எது நன்றாக வருகிறதோ.. அதை அந்த பகுதியில் செய்து விடுவாள்.

 

சில சமயம் இம்மாதிரி பேப்பரில் விளையாடும் அவளது நளின கைவிரல்கள்.. பல சமயம் கணினியின் திரையில் தனது கற்பனைகளை சிதற விடும்.

 

அவ்வப்போது இவர்கள் செய்யும் வேலையை எல்லாம் படம் எடுத்து அண்ணனுக்கு மெயில் அனுப்பி விடுவான் பொறுப்புள்ள தம்பியாக சிவப்பிரசாத் இல்லை என்றால் அங்கிருந்தே ஆட்டி வைத்து விடுவானே "அண்ணையா எனும் அரக்கன்!" அந்த பயம் அவனுக்குள் இருக்கும்.

 

அன்றும் அதுபோல மாஸ்டர் பெட்ரூமோடு இணைந்து இருக்கும் ஒரு அழகிய பால்கனி அதனை அடுத்து உள்ள நீராலி மண்டபம் போன்று இடம் என்று பார்த்து பார்த்து அவள் வடிவமைத்துக் கொண்டு இருந்தாள்.

 

ஆனால் முந்தைய நாள் இரவு சரியாக தூக்கம் இல்லாதது அவள் கண்களை கட்டியது சரியாக பார்க்க முடியாமல் சுழட்டியது கண்களை அவளுக்கு.

 

தூக்கம்னு சாதாரணமா சொல்கிறோம். ஆனால் அந்த தூக்கம் தான் ஒருவனின் மனநிலையை மட்டுமல்லாமல் அவன் வாழ்க்கையையும் பெரும் சமயம் நிர்ணயிக்கிறது போல.. இங்கே இவளும் அரை தூக்கக் கலக்கத்தில் அந்த நீராலி மண்டப போன்ற அமைப்பு சரியாக செய்ய முடியாமல் அதிலேயே கையை வைத்து தூங்கி வழிய…

 

அவள் தூக்கத்தை கெடுத்த அந்த யட்சனின் மறு உருவமாய் வந்து நின்றான் அவன் விஷ்ராவணன்!

 

அடிக்கடி தன் பெரியம்மாவிடம் அவள் சொல்வது போல ஹயிட்டா.. ஒயிட்டா.. வெயிட்டா..!

 

ம்க்கும் என்று அவன் தொண்டையை கணைத்தப்படி அவனின் இரும்பையொத்த வஜ்ர உரம் கொண்டு கைகளை மார்பக குறுக்காக கட்டியபடி அவளைத்தான் பார்த்து இருந்தான்.

 

அவளோ கண்களை விரிக்க முடியாமல் அரைகுறையாக அவனை பார்த்து விட்டு "திரும்பவும் வந்துட்டியா டா என்னை தூக்கிட்டு போக.. அவ்வளவு சீக்கிரம் எல்லாம் என்னை தூக்க முடியாது தெரியுமா?" என்று தூக்கத்தில் உளறினாள்.

 

"ஏன் அவ்வளவு வெயிட்டவா இருப்ப" என்று நக்கல் தொணியில் அவன் கேட்டான்.

 

"ஐ அம் ஜஸ்ட் 70கேஜி தான் தெரியுமா? நான் இங்கே செம பாதுகாப்புல இருக்கேன் நான். எங்க அண்ணன் யாரு தெரியுமா ஆகாஷ்.. இங்கிருந்தே கூப்பிட்டேனா கூட அந்த சத்தத்தை புடிச்சிகிட்டே ஓடி வந்துருவான். அடுத்து எங்க பெரியப்பா ரங்கராஜன். அவர் யார் தெரியுமா பெரிய பிசினஸ் மேன். இதுக்கு மேல எங்க அக்கா பிரிண்ட் கம் கொளுந்தனார் சிவப்பிரசாத். அவன் எவ்ளோ பெரிய ஃபேமிலி தெரியுமா?" என்று ஏதோ அவள் பேசிக்கொண்டு இருக்க.. ராவணனுக்கு கொஞ்சம் கொஞ்சமா சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏற.. அவள் கை வைத்திருந்த டேபிளில் தன் உள்ளங்கையால் ஓங்கி ஒரு தட்டு தட்டினான்.

 

அதில் அதிர்ந்தது அவள் மட்டுமல்ல அதில் வைத்திருந்த பொருட்கள் கூட அந்த அதிர்வை தாங்க முடியாமல் மேலே எழும்பி மீண்டும் அதில் அமர.. இவளோ தூக்கி வாரி போட்டு விழித்து திரு திரு என்று அவனை பார்த்தாள்.

 

"ஒரு வேலைக்கு வந்திருக்கிறோம்னா வேலை ஒழுங்கா பார்க்காம என்ன தூக்கம் வேண்டி இருக்கு உனக்கு?" என்று கர்ஜித்தான்.

 

தூக்கமா அது எப்பவோ ராகுல்பிண்டி எக்ஸ்பிரஸ் பிடித்து ஓடிப்போய்விட்டது. எதிரில் இருப்பவனை எவ்வாறு அழைப்பது என்று தான் இப்போது அவளுக்கு பெரும் குழப்பம்.

 

தங்கள் முறையில் அக்கா கணவனை அய்த்தான் அத்தான் இல்லை மாமா என்று அழைப்பதா அல்லது அவனது முறையில் பாவா என்று அழைப்பதா என இவள் யோசனையோடு நின்றிருந்தாள்.

 

"என்ன?" என்று மீண்டும் ஒரு கர்ஜனை அவனிடமிருந்து… 

 

"இல்ல அத்தான்.. ச்ச அய்யத்தான்.. இல்ல இல்ல மாமா.." என்று அவள் உளறி கொட்ட, அவளது அதிர்ந்த முக பாவனைகளும் திக்கித் திணறிய பேச்சிலும் என்ன நினைத்தானோ இந்த ராவணனுக்குள்ளும் சிறு அன்பு பிறந்தது போல "பாவான்னு கூப்பிடு!" என்றான் அழுத்தமாக.

 

"சரி.. சரிங்க பாவா" என்று அவள்  வேக வேகமாக தலையை ஆட்டினாள்.

 

அவள் முன் இருந்த பேப்பரை எல்லாம் பார்த்தவன் அந்த நீராலி மண்டபத்தை வரைந்த பேப்பரை கைகளில் எடுத்து பார்த்தான். அப்படி ஒரு ஆழ்ந்த பார்வை அதில். அவளுக்கோ தன் முன் இருக்கும் இந்த பிரம்மாண்ட ராட்சசனை கண்டு உதறல் எடுத்தது.

 

"எங்க போய் தொலைந்தார் இந்த சிவப்பிரசாத்? சரியான நேரத்தில் என்னை மாட்டிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டாரே… இவரை பார்த்தாலே எனக்கு உடல் எல்லாம் நடுங்குது. எப்படித்தான் தேவிகா இவரோடு குடும்பம் நடத்துகிறாளோ.." அதுவும் அவன் கைகளை பார்க்க அத்தனை அவளை மிரட்டியது.

 

அதிலும் இறுக்கமான அரை கை சட்டையை அவன் அணிந்திருக்க முன்னால் இரண்டு மூன்று பட்டன்களை திறந்து விட்டிருக்க "என்ன இப்படி ப்ரீ ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் இந்த தேவி அக்கா கொஞ்சம் கூட கேட்க மாட்டாளா? முதல்ல வீட்டுக்கு போய் அவளை ரெண்டு திட்டு திட்டனும்" என்று தன்னுள்ளே பேசியப்படி அவனை வெறுத்தி பார்த்தபடி இவள் நின்று கொண்டிருக்க அவள்  முன் சொடுக்கு போட்டான்.

 

அப்பொழுதும் அவள் தன்னிலை திரும்பாமல் இருப்பதை பார்த்து "லேகா" என்று சத்தமாக கூப்பிட… "ஹான்.. ஹான்.. என்னங்க மா.. இல்ல இல்ல பாவா" என்று திக்கி திணறி‌ கேட்டாள்.

 

"முதல்ல உக்காந்துட்டு தூங்குன இப்ப நின்னுகிட்டு தூங்குறியா? என்ன மாதிரி ஆட்டிடியூட் இதெல்லாம்.. இந்த இடத்துக்கு என்ன கூட்டிட்டு போ" என்றான் சரி என்று தலையாட்டியவள் அவ்விடத்திற்கு அழைத்து செல்ல கையில் வைத்திருந்த பேப்பரையும் அந்த இடத்தையும் பார்த்தவன் பின்பு தனக்குள் ஏதோ கணக்கிட்டு "இதில் சில மாற்றம் செய்யணும்" என்று அந்த நீராலி மண்டபத்தில் சிங்கமுக அமைப்பு ஒன்றை சடுதியில் வரைந்து அதிலிருந்து தண்ணீர் ஊற்றும் படி செய்தான்.

 

'இந்த எண்ணம் நமக்கு வரவே இல்லையே?' என்று அவள் பார்த்து இருக்க.. அவள் கையை பிடித்து அதை திணித்தவன் "எங்க அந்த அறிவு கெட்டவன்?" என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

 

'இவருக்கு சாதாரணமாக பேச தெரியாதா? எப்பொழுதும் இப்படித்தான் அரட்டி மிரட்டுவரா? என்ற நினைத்தவள் "லஞ்சுக்கு போயிருக்காரு" என்றாள்.

 

அதற்கு பதிலாய் தலையை மட்டும் ஆட்டியவன் முன்னே வேகம் நடையோடு செல்ல இவளௌ அதே இடத்தில் ஆணி அடித்ததை போல் நின்றதை பார்த்தவன் திரும்பி அவளை ஒரு பார்வை தான் பார்த்தான் அவளோ குடுகுடுவென்று அவன் பின்னே ஓடி வந்தாள் அவன் நடைக்கு ஈடு கட்டி.

 

மீண்டும் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன் இவன் ஒய்யாரமாக அந்த கணினி முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவள் வரைந்து இருந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து 'இது ஏன் இப்படி? 'அது ஏன் அப்படி இருக்கு? 'இது ஏன் இப்படி இருக்கு?' என்று அத்தனை கேள்வி கேட்க பதில் சொல்வதற்குள் திக்கித் திணறி ஒரு வழியாகினாள் சித்ரலேகா.

 

மதிய உணவு முடித்து சாதாரணமாக வந்த சிவப்பிரசாத் கண்டதோ கணினியின் முன்னே ராவணன் அமர்ந்திருப்பதும் அவனிடம் குனிந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கும் சித்ரலேகாவை தான்.

 

"கெட்டது குடி! அண்ணையா எப்

போ வந்தார்?" என்று‌ பயத்துடன் இராவணனை நெருங்கினான் சிவப்பிரசாத்.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top